Search

8ம் வகுப்புத் தேர்ச்சியா..? நேர்காணல் மட்டுமே... தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு..!

 

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம் :  1 அலுவலக உதவியாளர்.

Ads by 

இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு அனைத்து வகுப்பினரும் முன்னுரிமையுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 21.6.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி;

தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், எண்: 52, குமரன்கோவில் தெரு, திருவாரூர்- 610 001

21.06.2023 அன்று மாலை 5.30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக  காலியிடம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அரசு பழங்குடியினர் பள்ளிகளில் 38,800 காலியிடங்கள்: முக்கிய அறிவிப்பு இதோ


பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத  பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை விதிமுறைகளை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம் (national education for tribal students) வெளியிட்டுள்ளது.

பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275(1)-ன் கீழ்மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.

Ads by 

2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேற்கூறிய மக்கள் எண்ணிக்கை அடிப்படையில், நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.

இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது.  இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத  பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்கூறிய காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விதிமுறைகளை ( Recruitment Rules) பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம்  வெளியிட்டது. இதில், பதவியின் பெயர், பணியிடம், பணியின் வகைப்பாடு, ஊதிய விகிதம், பணி நிபந்தனை காலம், கல்வித் தகுதி முதலான நிலைகளில் பின்பற்ற வேண்டிய பொறுப்புகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த புதிய விதிமுறையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போதைய, விவரங்களைத் தெரிந்து கொள்ள emrs.tribal.gov.in என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news