திண்டுக்கல் மாவட்டத்தில் அப்ரண்டிஸ்ஷிப் மேளா நடைபெற உள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) 2023 தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம், திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12.06.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இதில் ITI படித்த ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000 முதல் ரூ.12.000 வரைவழங்கப்படும்.