தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
Click here for latest employment news
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
Click here for latest employment news
BECIL நிறுவனத்தில் Associate Manager, Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-08-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
BECIL
Associate Manager, Assistant
03
BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் via email / telephone for their Skill Tests / Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
15.08.2023
Official Site: https://www.becil.com/
தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
CSB வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Corporate Salary Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Corporate Salary Officer பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடம் நிரப்ப உள்ளதாக CSB Bank தெரிவித்துள்ளது.
அரசு அலல்து அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
1 முதல் 10 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்த முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CSB வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.03.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Click here for latest employment news
தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Floor planner பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Floor planner பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Commerce தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
Area Credit Manager – Auto Loan காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை HDB Financial Service நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Area Credit Manager – Auto Loanபதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 8 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு HDB Financial Service- நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here for latest employment news
தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, யு.பி.எஸ்.சி. குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்கமாக, கடந்த 7-ந் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் படி, இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 11 முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Click here for latest employment news
IBPS Probationary Officer/ Management Trainee posts: பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Probationary Officer/ Management Trainee posts பணியின் முழு விவரம் இதோ...
பணியின் பெயர் | ப்ரோபேஷனரி ஆபீசர் |
காலியிடங்கள் | 3049 |
இடஒதுக்கீடு | பொதுப் பிரிவினருக்கு 1224 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 829 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 300 இடங்களும் , 462 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 234 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன |
கல்வித் தகுதி | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். |
வயது வரம்பு: | இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். |
எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் தெரிவு முறை | முதல் நிலைத்தேர்வு(Written), முதன்மைத் தேர்வு(Main Examination), நேர்காணல் (Interview) |
தேர்வுக்கான தேதிகள் | முதல் நிலைத் தேர்வானது செப்டமபர்/ அக்டோபர் மாதத்திலும், முதன்மைத் தேர்வானது 2023 நவம்பர் மாதத்திலும் அன்றும், நேர்காணலுக்கான அழைப்பு 2024 ஜனவரி/பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
சம்பளம் | ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம் |
விண்ணப்பக் கட்டணம் | ரூ .750/-பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
விண்ணப்பம் செய்வது எப்படி?
எப்படி விண்ணப்பிப்பது: முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
“Click here to apply online for Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers / Management Trainees in Participating Banks (CRP PO/MT-XIII) ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
Click here for latest employment news
அமெரிக்காவில் உள்ள இண்டியானாவை சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான ஆஷ்லே சம்மர்ஸ் (Ashley Summers), கடந்த மாத இறுதியில் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கடுமையான டிஹைட்ரேஷனை உணர துவங்கி இருக்கிறார். 35 வயதான இவர் தனது கணவர் மற்றும் 2 இளம் மகள்களுடன் லேக் ஃப்ரீமேன் என்ற இடத்தில் வசித்து வந்தார்.
டிஹைட்ரஷனாக உணரும் போதிலும் திருப்தி அடையும் அளவுக்கு தன்னால் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்று தன் குடும்பத்தாரிடம் இவர் கூறியிருக்கிறார். இந்த சூழலில் டிஹைட்ரேஷனை சமாளிக்க மற்றும் தனக்கு ஏற்பட்ட அதீத தாகத்தைத் தணிக்க குறைந்த நேரத்திற்குள் மிக அதிக தண்ணீரை அவர் குடித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் வாட்டர் டாக்ஸிட்டி (water toxicity) எனப்படும் அறிய நிலையால் பாதிக்கப்பட்டு இறுதியில் உயிரிழந்திருக்கிறார். மிக குறுகிய நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதன் காரணமாக ஏற்படும் அரிய மற்றும் ஆபத்தான விளைவு நீர் நச்சுத்தன்மை எனப்படும் வாட்டர் டாக்ஸிட்டி.
20 நிமிடங்களுக்குள் சுமார் 2 லிட்டர்:
water toxicity-ஆல் உயிரிழந்த ஆஷ்லேவின் சகோதரர் டெவோன் மில்லர் கூறுகையில், தாகம் மற்றும் டிஹைட்ரேஷனை தணிக்கும் நோக்கில் 20 நிமிடங்களுக்குள் சுமார் 2 லிட்டர் தண்ணீரை தனது சகோதரி குடித்ததாக கூறி இருக்கிறார். நாளொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க பொதுவாக நிபுணர்கள் பரிந்துரைக்கும் நிலையில், ஒரு நாளுக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு நீரை மிக குறுகிய நேரத்திற்குள் குடித்திருக்கிறார் ஆஷ்லே. இதுவே அவருக்கு எமனாக மாறி இருக்கிறது.
ஆஷ்லே அனுபவித்த டிஹைட்ரேஷன் அறிகுறிகள்:
ஆஷ்லே தனது குடும்பத்தினரோடு ஒரு பயணத்தில் இருந்திருக்கிறார். பயணத்தின் கடைசி நாளில் தன்னால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க முடியவில்லை என ஆஷ்லே உணர்ந்திருக்கிறர். லேசான தலைசுற்றல் மற்றும் தீவிர தலைவலி இருப்பதாக தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.இது போன்ற பல அறிகுறிகளோடு பயணத்தை நிறைவு செய்த ஆஷ்லே, தனது கேரேஜ் வந்த பிறகு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், சிகிச்சை அளித்தும் அவர் சுயநினைவிற்கு திரும்பவில்லை. ஒருகட்டத்தில் water toxicity காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
நீர் நச்சுத்தன்மை (Water toxicity) என்றால் என்ன?
Water toxicity என்பது வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் இன்டாக்ஸிகேஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது. மிக குறுகிய நேரத்தில் அதிக தண்ணீர் உட்கொள்ளும் போது அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகள் காரணமாக சிறுநீரகங்கள் அதிக நீரை தக்க வைத்து கொண்டால் Water toxicity பிரசசனை ஏற்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் போவது, தசைப்பிடிப்பு, வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்றவை நீர் நச்சுத்தன்மை சிக்கலின் அறிகுறிகளாகும்.
நீர் நச்சுத்தன்மையால் ஏன் ஒருவர் இறக்கிறார்.?
கொளுத்தும் கோடை வெயில், தொடர்ந்து வெளியிடங்களுக்கு வெயிலில் சென்று வேலை செய்வது அல்லது அடிக்கடி அதிக உடற்பயிற்சி செய்வதால் ஒருவர் டிஹைட்ரேஷனுக்கு ஆளாகலாம். இதனால் தாகத்தை தணிக்க அல்லது இழந்த நீர்ச்சத்தை மீட்க ஒருவர் குறுகிய நேரத்தில் மிக அதிக அளவு தண்ணீர் ஒருவர் குடித்தால், அவர்கள் உடலில் திடீரென அதிக அளவு தண்ணீர் அதிகரிப்பதோடு, போதுமான சோடியம் அவர்களது உடலில் இருக்காது. இதன் காரணமாகவே உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது. ஒருவர் டிஹைட்ரேஷனை எதிர்கொண்டால் எலக்ட்ரோலைட்டுகள், சோடியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட திரவங்களை குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
சமீபத்தில் பதிவான மற்றொரு பாதிப்பு...
75 Hard என்ற சவாலுக்காக 12 நாட்களுக்கு தினமும் 4 லிட்டர் வரை தண்ணீரைக் குடித்த கனடாவைச் சேர்ந்த டிக் டாக்கர், ஒரு கட்டத்தில் நீர் விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாளுக்கு தேவையான தண்ணீரை ஒரு சில மணிநேரங்களில் குடிப்பதால், ஒருவர் குடிக்கும் நீரே அவருக்கு விஷமாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஐ.இ.எஸ் தேர்வு பற்றியும், அதற்கு என்ன பிரான்ச் படிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.
அகில இந்திய குடிமை பணிகள் போலவே, அகில இந்திய பொறியியல் பணிகள் உள்ளன. அதாவது ஐ.ஏ.எஸ் போல் ஐ.இ.எஸ் பணிகள் உண்டு. IES – Indian Engineering Services. ஐ.இ.எஸ் என்பது நாட்டின் உயரிய பொறியியல் சார்ந்த பணியாகும். இதற்கான தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போன்றே கடினமானது. இந்த தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்வை என்ஜினீயரிங் படிப்புகளில் நூற்றுக்கு மேலான பாடப்பிரிவுகள் இருந்தாலும், 4 பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.
இந்தநிலையில், ஐ.இ.எஸ் தேர்வு மற்றும் அதற்கான பொறியியல் பாடப்பிரிவுகள் குறித்து கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் எதிர்காலத்திற்கு தேவையான படிப்பு தான். ஆனால் இத்தனை பேர் படிக்க வேண்டுமா என்பது தான் கேள்விக்குறி. எலன் மஸ்க் உள்ளிட்ட பெரு நிறுவன தலைவர்கள் உங்கள் துறையில் ஆட்டோமேஷன் சார்ந்து படியுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். இதேநிலை நீடித்தால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவர்கள், ஆட்டோமேஷன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
என்ஜினீயரிங் படித்தவர்கள் மட்டுமே எழுதக்கூடிய ஐ.இ.எஸ் தேர்வு உள்ளது. இதற்கான தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இந்தியாவிலே என்ஜினீயர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பதவி இது தான். இதற்கு கீழ்கண்ட 4 பொறியியல் பாடப்பிரிவை படித்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.
இது தவிர பிற பாடப்பிரிவை படித்தவர்கள் எழுத முடியாது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் எழுத முடியாது. கோர் டிபார்ட்மெண்ட்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே நல்ல கல்லூரிகளில் இதுபோன்ற கோர் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.
ஐ.இ.எஸ் தேர்வு செயல்முறை
முதல் நிலை தேர்வு – 500 மதிப்பெண்கள்
முதன்மை தேர்வு – 600 மதிப்பெண்கள்
நேர்முகத் தேர்வு – 200 மதிப்பெண்கள்
முதல்நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டெடிஸ் என்ஜினீயரிங் ஆப்டிடியூட் மற்றும் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பொறியியல் படிப்புகளில் இருந்து விரிவான விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம்பெறும்.
ஐ.இ.எஸ் தேர்வில் தேர்வாகுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும். எனவே மாணவர்கள் கோர் படிப்புகளுக்கு கவனம் கொடுங்கள்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூம் கம்ப்யூட்டர் சயின்ஸ் தவிர கோர் படிப்புகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நல்ல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) அதன் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (CODE) மூலம் ‘பயிற்சி பொறியாளர்களுக்கான சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்கள்’ (Additive Manufacturing Technologies) என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 20 ஆகும்.
பல்வேறு பொறியியல் மற்றும் பயோமெடிக்கல் கூறுகளை உற்பத்தி செய்வதற்கான கவர்ச்சிகரமான செயல்முறையாக சேர்க்கை உற்பத்தி (AM) உருவாகி வருகிறது. ஐ.ஐ.டி-மெட்ராஸ் அறிவிப்பின்படி, பல்வேறு பொறியியல் மற்றும் பயோமெடிக்கல் பயன்பாடுகளில் சேர்க்கை உற்பத்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு பெரிய சாத்தியம் உள்ளது. குறிப்பிட்ட தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்புகளுடன் சிக்கலான உடல் உள்வைப்புகளை குறைந்த அளவு உற்பத்தி செய்வதற்கான சாத்தியமான, செலவு குறைந்த மற்றும் நிகர-வடிவ உற்பத்தி செயல்முறையாக சேர்க்கை உற்பத்தி ஏற்கனவே வெளிப்பட்டுள்ளது என்று அறிவிப்பு கூறுகிறது.
தகுதிகள்: பொறியியல் அல்லது பயன்பாட்டு அறிவியல் அல்லது அடிப்படை அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஐ.ஐ.டி மெட்ராஸின் உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் முருகையன் அமிர்தலிங்கம் கூறியதாவது: வகுப்பறையில் சேர்க்கை உற்பத்தி குறித்து கற்பிக்கப்படாத பயிற்சி பொறியாளர்கள் மற்றும் நடுத்தர நிலை மேலாளர்களை இலக்காகக் கொண்டு இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த பாடநெறி, சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தங்கள் பணியிடத்தில் பல்வேறு சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்களை செயல்படுத்த விரும்புவோர், இந்தப் படிப்பின் மூலம் பயனடையலாம்.
இந்த பாடநெறி, செயலாக்கத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செயலாக்க முறைகள், சேர்க்கை உற்பத்திக்கான வடிவமைப்பு உத்தி மற்றும் சேர்க்கை உற்பத்தி செயல்முறைகளின் செயல்பாட்டுக் கொள்கைகள் ஆகியவற்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சி பொறியாளர்கள் பல்வேறு சேர்க்கை உற்பத்தி முறைகளை நிர்வகிக்கும் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் கிடைக்கக்கூடிய சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்களின் வணிகப் பொருத்தத்தை மேம்படுத்துவதற்காக வளர்ந்த அறிவு சேவையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்த பாடத்திட்டத்தை முடித்தவுடன், சேர்க்கை உற்பத்தித் துறையில் தங்கள் வேலை வாழ்க்கையைத் தொடங்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் – https://code.iitm.ac.in/additive-manufacturing-technologies-for-practising-engineers