Agri Info

Education News, Employment News in tamil

August 15, 2023

உங்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வருகிறதா..? அப்படியென்றால் உங்கள் தலையணை கூட பிரச்சனையாக இருக்கலாம்..!

August 15, 2023 0

 எனக்கு இந்த மாதிரி தலையணை தான் வேண்டும் என ஒவ்வொருவருக்கும் விருப்பம் இருக்கும். சிலருக்கு உறுதியான தலையணையில் படுத்தால் தான் தூக்கம் வரும். வேறு சிலருக்கோ, மென்மையான, பஞ்சு போன்ற தலையணைகளை விரும்புவார்கள்.

எந்த தலையணையை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், அவை உங்களுக்கு எந்த தொந்தரவையும் தராமல் இருக்க வேண்டும். குறிப்பாக தலையணை பயன்படுத்துகையில், உங்கள் தலையும் கழுத்தும், உங்களுடைய முதுகுதண்டோடு நேராக இருக்க வேண்டியது அவசியம். பலரும் போதுமான உயரம் வேண்டும் என்பதற்காக, பல தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருப்பார்கள். இப்படியெல்லாம் அதிகமான தலையணைகளை பயன்படுத்தினால், உங்கள் தூக்கம் மட்டுமின்றி உடல்நலனும் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரவில் தொடர்ந்து உங்களுக்கு கழுத்து வலி ஏற்பட்டால், உடனடியாக உங்கள் தலையணையை மாற்ற வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

தூங்குவதற்கு எத்தனை தலையணைகள் வேண்டும்?

தூங்கும் போது ஒன்றா அல்லது இரண்டு தலையணை பயன்படுத்த வேண்டுமா என பல விவாதங்கள் நடைபெறுகிறது. இது நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு கொஞ்சம் உயரமாக இருந்தால் நன்றாக இருக்கும். வேறு சிலருக்கோ தலையணை இல்லாமல் படுத்தால்தான் நன்றாக இருக்கும். பொதுவாக, ஒரு தலையணை பயன்படுத்துவதே நல்லது. அப்போதுதான் நீங்கள் தூங்கும் போது சுவாசமும் ரத்த ஓட்டமும் நன்றாக இருப்பதோடு காலையில் எழும்போது எந்த உடல் வலியும் இருக்காது. ஒருவேளை உங்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இரண்டு தலையணைகளை பயன்படுத்துவது உங்களுக்கு வசதியாக இருக்கும்.

என்னுடைய தூங்கும் நிலையை பொறுத்து, எத்தைனை தலையணை தேவைப்படும்?

எத்தனை தலையணைகள் பயன்படுத்தலாம் என குழப்பமாக இருக்கிறதா? நீங்கள் எப்படி படுத்து தூங்குவீர்கள் என்பதை பொறுத்து இது மாறுபடும்? சாய்வாகவா அல்லது நேராகவா அல்லது குப்புற படுத்து தூங்குவீர்களா? இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமென்றால், நீங்கள் தூங்கும் நிலையை பொறுத்து தலையணையின் எண்ணிக்கையும் மாறுபடும்.

சாய்வாக சரிந்து படுப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிதமான, அதே சமயத்தில் கொஞ்சம் உறுதியான தலையணை பயன்படுத்தினால், உங்கள் கழுத்தும் தலையும் தோள்களோடு சீராக அமைந்திருக்கும். சாய்வாக படுப்பவர்களின் முழங்கால்கள் எப்போதும் ஒரு காலுக்கு மேல் இன்னொரு கால் சேர்ந்தார்ப் போல் இருக்கும். இவர்கள் தங்கள் கால்களுக்கு இடையே ஒரு தலையணையை பயன்படுத்தும் போது வசதியாக உணர்வார்கள். ஆகவே, சாய்வாக படுப்பவர்களுக்கு தூங்கும் போது இரு தலையணைகள் தேவைப்படும்.
நேராக படுத்து தூங்குபவரா? அப்படியென்றால் மிதமான உறுதித்தன்மை மற்றும் 3-5 இன்ச் தடிமன் கொண்ட ஒரு தலையணை உங்களுக்கு போதும். இந்தளவிற்கு உங்கள் தலையணை தடிமன் இல்லையென்றால், இதே உயரம் வரும் அளவிற்கு இரண்டு தலையணையை பயன்படுத்துங்கள். நேராக படுக்கும் போது இன்னும் வசதி குறைவாக உணர்கிறீர்கள் என்றால் பின்புறமாக முதுகிற்கு பக்கத்தில் உங்களுக்கு ஏற்ற வகையில் இன்னொரு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் குப்புற படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இப்படி படுத்து தூங்கவே கூடாது. சரியான தலையணையை பயன்படுத்தவிட்டால், குப்புற படுத்து தூங்கும் போது அசௌகர்யமாக உணர்வதோடு காலையில் உடல் வலியோடு எழும்புவீர்கள். இப்படி குப்புற படுத்து தூங்குபவர்கள், மெலிதான தலையணையை பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது மிகவும் நல்லது. ஏனென்றால் குப்புற படுக்கும் போது உங்கள் வயிறு நேராக தரை மட்டத்தில் இருக்கிறது. இப்போது நீங்கள் தலையணை பயன்படுத்தினால் உங்கள் கழுத்து மட்டும் சற்று உயரமாக இருக்கும். இதனால் கழுத்து வலி வரக்கூடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்கள் இப்படிதான் இருப்பார்கள்..!

August 15, 2023 0

 சமூகத்தில் ஒரு சிலர் மிகவும் தனித்துவமாக, நேர்த்தியாக, பார்க்கும் போதே அதிசயிக்கும் விதமாக இருப்பார்கள். இவர்களைப் போல இருக்க வேண்டும் என்று ஒரு சில பெண்களைப் பார்க்கும் போது ஒரு ரோல் மாடலைப் போலக் காண்பார்கள். இவ்வாறு தனித்துவமாக இருக்கும் பெண்களுக்கு என்று ஒரு சில பிரத்யேகமான பழக்கங்கள் மற்றும் குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இவை பொதுவானதாகக் காணப்படுகின்றன. அவ்வாறு தன்னம்பிக்கையுடன் வலம் வரும் பெண்களிடம் காணப்படும் பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

தன்னைத் தானே அறிந்து கொள்வது : உங்களைச் சுற்றி இருப்பதை புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, உங்களைப் புரிந்து கொள்வதும் அதே அளவுக்கு முக்கியம். நீங்கள் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்கள், உங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி ஒரு எழுதலாம். அல்லது உங்களின் ஏற்ற இறக்கமான உணர்வுகளை பற்றி உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிரலாம். இதன் மூலம் உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள உதவும். தன்னுடைய பலவீனங்களை அறிந்தவர்களுக்கு தன்னம்பிக்கை குறையாது.

பாசிடிவ்வாக நினைப்பது : எப்போதுமே நேர்மறையான உணர்வுகள், சிந்தனைகள் தோன்றாது. பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் எண்ணங்கள் நாணயத்தின் இரு பக்கம் போன்றது. ஆனால் அதிக தன்னம்பிக்கைக் கொண்ட பெண்களைப் பார்க்கும் போது, அவர்கள் சவாலான, சிக்கலான சூழ்நிலைகளைக் கூட, அதை எதிர்கொள்வது எப்படி என்று நேர்மறையாக சிந்திப்பார்கள்.
இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவார்கள் : பொதுவாகவே வாழ்வில் முன்னேறுவதற்கு நமக்கு என்று தனிப்பட்ட இலக்குகள் மற்றும் லட்சியங்கள் இருக்க வேண்டும். இலக்குகள் இல்லாமல் தோன்றியதையெல்லாம் செய்து கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் குழப்பம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் பெண்கள் சின்ன சின்னதாக இலக்குகளை நிர்ணயித்து அதை ஒவ்வொன்றாக அடைந்து நிதானமாக முன்னேறிச் செல்வார்கள். இதன் மூலம், மிகப்பெரிய விஷயங்களைக் கூட படிப்படியாக சாதிக்க முடியும்.

கனிவாக இருப்பார்கள், உதவி செய்ய தயங்க மாட்டார்கள் : தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கு நீங்கள் பொதுவாகவே அன்பாகவும் கனிவாகவும் இருக்க வேண்டும் மற்றும் மேலும் தயங்காமல் உங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். இந்த இரண்டு பழக்கமுமே உங்களுடைய தன்னம்பிக்கையை பெரிய அளவில் அதிகரிக்கும். ஸெல்ப் கான்பிடன்ஸ் அதிகமாக இருக்கும் பெண்களிடம் இதை கண்கூடாக பார்க்கலாம்.

நேர்த்தியான, பொருத்தமான ஆடை அணுவது : ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகமான தன்னம்பிக்கை என்பது ஒருவருடைய தோற்றத்தில் வெளிப்படும். அதில் நாம் எந்த ஆடைகளை தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். தன்னம்பிக்கை நிறைந்த பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளை நேர்த்தியாக அணிவார்கள். இது டிரெண்டில் இருக்கிறது, இதுதான் இப்போது ஸ்டைல் என்று பொருத்தமில்லாத ஆடைகளை தேர்வு செய்ய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Amazon -chennai நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

August 15, 2023 0

 

சென்னையில் உள்ள Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் BIE, Digital and Emerging Payments பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Amazon காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி BIE, Digital and Emerging Payments பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon கல்வி தகுதி:

பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Amazon ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Amazon தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ
தளத்தில் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

August 15, 2023 0

 

IT துறையில் வேலை வேண்டுமா? Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Performance Tester பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

Performance Tester பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Performance Tester கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors in engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Performance Tester ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 14, 2023

BC Supervisor at Bank of Baroda - Graduates can apply

August 14, 2023 0

 

Bank of Baroda வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.15,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Bank of Baroda (BOB Bank) வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் BC Supervisor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Bank of Baroda பணியிடங்கள்:

Bank of Baroda (BOB Bank) வங்கியில் BC Supervisor பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

BC Supervisor கல்வி விவரம்:

BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, M.Sc, BE, MCA, MBA ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

BC Supervisor அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் PSU வங்கிகள் மற்றும் BOB வங்கியில் பணி சார்ந்த துறைகளில் Chief Manager, Clerk பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

BC Supervisor வயது விவரம்:

இந்த Bank of Baroda வங்கி சார்ந்த பணிக்கு 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

BOB Bank ஊதிய விவரம்:

BC Supervisor பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- + ரூ.10,000 (VC) மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

BOB Bank தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

BOB Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Bank of Baroda வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.08.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Download Application Link


Data Engineer, Head – Testing Services - CSB -Mumbai வங்கியில் வேலைவாய்ப்பு 2023

August 14, 2023 0

 

CSB வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

கத்தோலிக்க சிரியன் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Data Engineer, Head – Testing Services பணிக்கு என மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Catholic Syrian Bank காலிப்பணியிடங்கள்:

கத்தோலிக்க சிரியன் வங்கி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Data Engineer, Head – Testing Services பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Catholic Syrian Bank கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.TECH / B.E / BCA/ B.SC பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Catholic Syrian Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Catholic Syrian Bank தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Catholic Syrian Bank விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF
Download Notification 2 PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 13, 2023

லாபம் தரும் இஞ்சி - பூண்டு பேஸ்ட் தயாரிப்பு தொழில்... முதலீடு முதல் விற்பனை வரை!

August 13, 2023 0

 இந்தியாவில் ஒரு நம்பிக்கைக்குரிய சிறு வணிக யோசனையை நீங்கள் தேடும் நபர் என்றால், இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழில் முயற்சியைத் தொடங்குவது சரியானதாக இருக்கும். குறைந்த தடைகள் கொண்ட இந்த தொழிலானது, அபரிவிதமான வளர்ச்சித் திறனுடன்,தொழில்முனைவோருக்கு பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த முயற்சியின் முக்கிய அம்சங்களை ஆராய்ந்து அதன் முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்வோம்.

சந்தை வாய்ப்பு:

இஞ்சி-பூண்டு பேஸ்ட்டுக்கான இந்திய சந்தை பரந்து விரிந்து வளர்ந்து வருகிறது. இவை நாடு முழுவதும் உள்ள வீடுகளிலும், உணவகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்த தயாராக உள்ள பொருள்களுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், இஞ்சி-பூண்டு பேஸ்ட் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

பதிவு செய்வதற்கான தேவைகள்:

இந்த முயற்சியில் இறங்குவதற்கு முன், உங்கள் வணிகத்திற்கான அத்தியாவசியப் பதிவுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி, MSME/SSI மற்றும் வர்த்தகப் பதிவுகளைப் பெறுவது முக்கியமானதாகும். கூடுதலாக, உணவுப் பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்த FSSAI உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும்.

உற்பத்தி செய்முறை:

இஞ்சி-பூண்டு பேஸ்ட் தயாரிப்பது ஒப்பீட்டளவில் எளிமையானது. ஏனெனில் இதற்கு இஞ்சி, பூண்டு ஆகிய இரு பொருள்கள் மட்டுமே தேவை. கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு இது மிகவும் எளிமையானதாக இருக்கும். சரியான பேக்கேஜிங், திறனான சந்தைப்படுத்தல் யுத்திகள் மூலம், நீங்கள் இந்த முயற்சியை லாபகரமான மாற்றலாம்.

தொடக்க செலவுகள்:

இந்த வணிகத்திற்கான ஆரம்ப முதலீடு பொதுவாக ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை இருக்கும். இயந்திரங்கள், அத்தியாவசிய கருவிகள், பேக்கேஜிங் பொருள்கள், மூலப்பொருள்கள் ஆகியவற்றின் விலை இதில் அடங்கும். முதலில் சிறிதாகத் தொடங்கி பின்னர் அதை விரிவுபடுத்தினால் போதுமானதாகும். ஆர்டர்கள் பொறுத்து தயாரிப்பினை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

லாபம்:

இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழில் வாயிலாக மாதம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை லாபம் ஈட்டலாம். ஆண்டுக்கு, இது 6 முதல் 7 லட்சம் ரூபாய் எனும் ஈர்க்கக்கூடிய வருமானமாக இருக்கும்.

அரசு உதவி:

ஆர்வமுள்ள தொழில்முனைவோரின் சிறு வணிக முயற்சிகளை ஆதரிக்க பல்வேறு அரசு உதவி திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் நிதி உதவி, பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை அரசு குழுக்கள் வழங்குகின்றன. இது உங்கள் இஞ்சி-பூண்டு பேஸ்ட் வணிகத்திற்கு மதிப்புமிக்க ஊக்கத்தை அளிக்கும்.

வெற்றி என்பது திறமையான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை சார்ந்துள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நுகர்வோர் விருப்பங்களைப் புரிந்துகொண்டு, தரத்தை பராமரிப்பது சந்தையில் உங்கள் தயாரிப்புக்கு என தனிபெயர் பெற்று தரும். உங்களுக்கு சமையல் சந்தோசத்தில் ஆர்வம் இருந்தால் மற்றும் பலனளிக்கும் தொழில் முனைவோர் பயணத்தை மேற்கொள்ள விரும்பினால், இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழிலில் முதலீடு செய்யுங்கள்.


முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக பெற வேண்டுமா? KVP திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

August 13, 2023 0

நம் நாட்டில் பெரும்பான்மையினர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை எந்த வகையான சந்தை அபாயங்களுக்கும் உட்படாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். மேலும் தங்கள் பணத்தை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்க உதவும் திட்டங்களை அதிகம் தேடுகிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தினரின் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல தபால்துறை திட்டங்கள் இருக்கின்றன. பொதுவாக தபால்துறை திட்டங்கள்  மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. ஒரு சில அஞ்சலக திட்டத்தில் நாம் எதிர்பார்ப்பதை விடவும் பல மடங்கு வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் மக்களின் முதலீட்டை இரட்டிப்பாக்க கூடிய திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra - KVP) அஞ்சலக திட்டம்.

கடந்த 1988-ல் இந்தியா போஸ்ட்டால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியது. சமீபத்திய அப்டேட்ஸ்களின் படி இந்த திட்டத்தின் காலம் 115 மாதங்கள் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கான வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.5% என்ற விகிதத்தில் இருக்கும்.

முன்பு இந்த திட்டத்திற்கான மெச்சூரிட்டி பீரியட் 120 மாதங்களாக இருந்தது. தற்போது 115 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் உதாரணமாக ஒருவர் இந்த KVP திட்டத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் முன்பு 120 மாதங்களில் அந்த பணம் இரட்டிப்பாகும். ஆனால் தற்போது முதலீடு செய்யும் ரூ.4 லட்சம், 115 மாதங்கள் கழித்து ரூ.8 லட்சமாக திருப்பி தரப்படும். இந்த KVP திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.1000 ஆகும், அதிகபட்சத் முதலீட்டு தொகைக்கு வரம்பு இல்லை.

நீங்கள் ஒரு பெரிய தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், 115 மாதங்களின் முடிவில் அதை இரட்டிப்பாக பெறுவீர்கள். பணமோசடிகளை தடுக்க ரூ.50,000 அல்லது அதற்கு மேல் முதலீடு செய்பவர்கள் ஆதாரமாக தங்களின் PAN கார்டு விவரங்களை சமர்ப்பிப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை முதலீடு செய்பவர்கள் தங்களின் Payslip, வங்கி பணபரிவர்த்தனை மற்றும் ஐடிஆர் டாக்குமென்ட்ஸ் போன்ற வருமான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் விவசாயிகளுக்காக துவக்கப்பட்ட இத்திட்டம் தற்போது அனைவருக்கும் கிடைக்கும்படி வழி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் இந்த திட்டம் உள்ளது. இந்திட்டத்தில் சேர்வதற்கான தகுதி அளவுகோலாக விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர் சார்பாக ஒரு அடல்ட் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார். அதிகபட்சம் ஒரு கிசான் விகாஸ் பத்ரா அக்கவுண்ட்டில் மூன்று பேர் வரை பதிவு செய்யலாம். HUF மற்றும் NRI-க்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.


தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து தெரிஞ்சுக்கோங்க.. சிறப்பு அம்சங்கள் இதுதான்!

August 13, 2023 0

 தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது குறைவான முதலீட்டை கொண்டு நமது ஓய்வு காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்துகின்ற சேமிப்பு திட்டமாகும். நமக்கான வருமானம் நின்று போகின்ற ஓய்வு காலத்தை நாம் பொன்னான வகையில் கழிப்பதற்கு இந்த திட்டம் உதவிகரமாக அமையும்.

ஓய்வு காலத்தில் நமக்கு நிலையான வருமானம் ஏற்படுத்திடும் வகையில் தற்போதையிலிருந்து குறிப்பிட்ட தொகையை தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நாம் முதலீடு செய்ய முடியும். தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது டயர் 1 மற்றும் டயர் 2 என்று இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது.

டயர் 1 திட்டம் என்பது கட்டாய ஓய்வூதிய திட்டமாகும். பணத்தை திரும்ப பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை இது கொண்டுள்ளது. டயர்2 என்பது பணத்தை திரும்ப பெற தளர்வுகளை கொண்ட சேமிப்பு திட்டமாகும். பயனாளிக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததும், ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து முதிர்வு அடைந்த தொகையில் 40 சதவீத பணத்தை கொண்டு, ஏதேனும் ஒரு வாழ்க்கை காப்பீடு நிறுவனத்தில் ஆனுய்டி திட்டத்தில் சேருவது கட்டாயமாகும். எஞ்சியுள்ள 60 சதவீத சேமிப்பு தொகையை வட்டி மற்றும் வரிவிலக்கு ஆகியவற்றுடன் பயனாளிகள் திரும்ப பெற முடியும்.

ஓய்வுபெற்ற 60 வயதில் இந்த தொகையை திரும்ப பெற பயனாளர் விரும்பவில்லை என்றால் 70 வயதில் இதை பெற்றுக் கொள்ள முடியும். இருப்பினும் 40 சதவீத பணத்தை கொண்டு ஆனுய்டி திட்டத்தில் சேருவது கட்டாயமாகும்.

அதேபோல 60 வயதுக்கு முன்பாகவே இந்த திட்டத்தில் இருந்து பயனாளர் விலக வேண்டும் என்று விரும்பினால் சேமிப்பு பணத்தில் 20 சதவீத தொகையை மட்டுமே திரும்ப பெற முடியும். எஞ்சியுள்ள 80 சதவீத பணத்தை கொண்டு ஆனுய்டி திட்டத்தில் சேர வேண்டியிருக்கும். ஓய்வு காலத்தில் இருந்து குறிப்பிட்ட வருமானம் கிடைப்பதை அது உறுதி செய்யும்.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் : 

1. தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிதி மேலாண்மை செலவு கட்டணம் என்பது 0.03 சதவீதம் முதல் 0.09 சதவீதமாக உள்ளது.

2. Equity Exposure என்பது வயது தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் 25 சதவீதம் முதல் 75 சதவீதமாக உள்ளது.

3. NAV என்னும் Net Asset மதிப்பை விண்ணப்பித்து அதே நாளில் பெறும் வசதி இருக்கிறது.

4. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

5. ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு போன்ற மாற்று முதலீடுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

6. குறைந்தபட்சம் 3 ஆண்டுகால முதலீடு செய்திருந்து, 60 வயது பூர்த்தி அடைந்தால் ஓய்வூதியம் பெற்று கொள்ளலாம்.

7. நாம் வாழும் நகரம் மற்றும் வேலை செய்யும் நிறுவனம் ஆகியவை மாறும் போது, இந்த திட்டம் ரத்து ஆகிவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் PRAN எண் அடிப்படையில் நாம் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

FD திட்டம் vs NSC திட்டம்: இரண்டில் எது சிறந்தது? லாபம் தரும் முதலீடு எது?

August 13, 2023 0

 பலரும் தங்களுடைய பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். முதலீட்டை பொறுத்தவரை மார்க்கெட்டில் பல விருப்பங்கள் இருக்கின்றன. இவற்றில் சில அபாயங்கள் கொண்டவை என்றாலும், அதிக பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் நம் மக்களின் பெரும்பான்மையோரால் விரும்பப்படும் ஆபத்து இல்லாத 2 முதலீட்டுத் திட்டங்கள் பற்றி இப்போது பார்ப்போம். ஒன்று வங்கிகளால் வழங்கப்படும் எஃப்டி (FD) எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றொன்று போஸ்ட் ஆஃபிஸ் வழங்கும் நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (NSC). இந்த இரண்டு முதலீட்டு திட்டங்களின் அம்சங்கள் மற்றும் வட்டி விகிதங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

முக்கிய வங்கிகளில் FD-க்கான வட்டி விகிதங்கள்:

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI), பொது மக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களை வழங்கி வருகிறது. முதிர்வு காலத்திற்கு ஏற்ப 3.00 சதவீதம் முதல் 6.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை SBI வழங்கி வருகிறது. கூடுதலாக 400 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஒரு ஸ்பெஷல் FD திட்டத்தை SBI வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு 7.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது. நாட்டின் பிரபல தனியார் வங்கியாக இருக்கும் HDFC ,7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.00 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதனிடையே ஐசிஐசிஐ வங்கியானது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 3.00 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, தேசிய சேமிப்பு சான்றிதழ் எனப்படும் NSC, அஞ்சல் அலுவலகம் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஜூலை முதல் செப்டம்பர் வரை 7.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்யலாம், அதிகபட்ச முதலீட்டிற்கான வரம்பு எதுவும் இல்லை. ரூ. 100-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் ஒருவர் முதலீடு செய்யலாம்.

எஃப்டி vs என்எஸ்சி:

வங்கிகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-க்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்கும் நிலையில், NSC திட்டமானது 5 வருட நிலையான முதலீட்டு காலத்தை கொண்டுள்ளது. அதாவது இந்த சேமிப்பு திட்டம் ஐந்து வருட கால அளவு கொண்டது.

வங்கிகள் வழங்கும் FD-க்களில், முதலீடு செய்யப்படும் பணத்திற்கான வட்டி விகிதத்தை ஒருவர் மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை பெறலாம். ஆனால் NSC திட்டத்தில் அஞ்சல் அலுவலகத் திட்டத்தின் விதிகளின்படி, வட்டி ஆண்டு அடிப்படையில் கூட்டப்படுகிறது. முதிர்வு காலம் முடிந்த பிறகு, அதாவது ஐந்து வருடங்கள் கழித்து இது வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்படும்.

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட வங்கி FD-க்களின் மற்றொரு நன்மை என்னவென்றால், அவை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியானவை. இதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். இதேபோல், NSC திட்டமும் 80C துப்பறியும் நன்மைக்கு தகுதி பெறுகிறது. இதே போல NSC திட்டமும் 80C வரி விலக்கு பலனை கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட விவரங்களை கருத்தில் கொண்டு வங்கிகளில் வழங்கும் FD-க்களில் முதலீடு செய்யலாமா அல்லது NSC-யில் முதலீடு செய்யலாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.