Search

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!

 

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- சம்பளம்|| நேர்காணல் மட்டுமே!

சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow (Siddha), Junior Research Fellow (Chemistry) பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 13.9.2023, 14.9.2023 அன்று நடைபெற உள்ள Walk-in Interview ல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CCRS காலிப்பணியிடங்கள்:

சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Junior Research Fellow (Siddha), Junior Research Fellow (Chemistry) பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BSMS, M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Central Council for Research ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CCRS தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் நபர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CCRS விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.41300/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.41300/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் காலியாக உள்ள Senior Research Fellow, Project Technician – II மற்றும் Data Entry Operator Grade – B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 20.09.2023 அன்றுக்குள் மின்னஞ்சல் முகவரிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JIPMER காலிப்பணியிடங்கள்:
  • Senior Research Fellow – 1 பணியிடம்
  • Project Technician – II – 3 பணியிடங்கள்
  • Data Entry Operator Grade – B – 1 பணியிடம்

என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technician வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS / BDS degree holders/ M.Sc. Epidemiology or Clinical Research with Two years of research experience/ M.Sc. (Life Sciences/Toxicology) with Two years of research experience/ Master Of Public Health (MPH) with Two years of research experience/ Degree/Diploma/Certificate Course in Emergency Medical Technician/ Intermediate or 12″pass தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:
  • Senior Research Fellow – ரூ.41300/-
  • Project Technician – II – ரூ.17000/-
  • Data Entry Operator Grade – ரூ.18000/-
தேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.09.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.16,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

 

பெரியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.16,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Periyar University ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Insect Collector பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு (08.9.2023) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Periyar University ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Insect Collector பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16,000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Periyar University காலிப்பணியிடங்கள்:

பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Insect Collector பணிக்கு என 01 காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Periyar University கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Periyar University சம்பளம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.16,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Periyar University தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் நபர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

Periyar University விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!

 

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!

TVS நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Divisional Manager பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


TVS காலிப்பணியிடங்கள்:

TVS நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Senior Divisional Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TVS அனுபவ விவரம் :

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 14 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TVS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

TVS தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி.. உடனே அப்ளை பண்ணுங்க!

 விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியதாவது, "மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் நிலையில் 2 காலிப் பணியிடங்களும் (கணிதம்-2), பட்டதாரி ஆசிரியர் நிலையில் 3 காலிப்பணியிடங்களும் (அறிவியல்-2, சமூக அறிவியல்-1), இடைநிலை ஆசிரியர் நிலையில் 37 காலிப்பணியிடங்களும் உள்ளன.

இதற்கு மாதாந்திர தொகுப்பூதியமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.18,000, பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15,000, இடைநிலை ஆசிரியர் நிலையில் ரூ.12,000 வழங்கப்படும். மேலும் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்), வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியல் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் வரும் செப்டம்பர் 8(8.9.2023) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது" என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கூறியுள்ளார்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணிவரை நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்த வேலை தேடுபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைதேடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job (www. tnprivatejobs.tn.gov.in)" என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைதேடுபவர்களும், வேலையளிப்போர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


 

தேர்வு, நேர்காணல் இல்லை.. ரயில்வே வேலை காத்திருக்கு.. 2,409 காலியிடங்கள் அறிவிப்பு!

 எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே  வாரியம்  வெளியிட்டுள்ளது. பணிக்கு  எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும்  விண்ணப்பிக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் 2,409 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தெரிவு முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.

கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 28/09/2023 ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 29-08-2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

https://rrccr.com என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 ஏன் அப்ரண்டிஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது:

இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level – 1 recruitment notification முந்தைய Gr. ‘D’ category posts (Grade Pay – Rs.1800/-)) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துவருகிறது. எனவே, பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசு வேலை.. ரூ.95,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்

 

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தில் ( Security Printing and Minding Corporation Of India) ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.18,780 முதல் அதிகபட்சமாக ரூ.95,910 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்த கழகத்தின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன என்ன பதவிகள் காலியாக உள்ளன, யார் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ஜூனியர் டெக்னீசியன்: இந்த பணிக்கு மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லேப் அசிஸ்டென்ட், கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டர், பவுண்டரி மேன், புர்னாஸ் ஆபரேட்டர், மில்ரைட் மெயின்டெனன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், இன்ஸ்ட்ருமெண்டேசன் மெக்கானிக் உள்ளிட்ட பாட பிரிவுகளின் கீழ் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு  ரூ.18,780 முதல் ரூ.67,390 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

சூப்பர்வைசர்: இந்த பணிக்கு மொத்தமாக 7 பேர் தேர்வு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் டிகிரியில் தமிழ் அல்லது ஆங்கிலம் முடித்தவர்கள், டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேசன், பிஇ, பிடெக உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.27,600 முதல் ரூ.95,910 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

லெபாரட்டரி அசிஸ்டென்ட் குரூப் 2: இந்த பணிக்கு மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.21,540 முதல் ரூ.77,160 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

எங்க்ராவர்: எங்கராவர் என்றால் மெட்டல் வொர்க்ஸ் என்று பொருள். இந்த பணிக்கு ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்பில் பைன் ஆர்ட்ஸ் (மெட்டல் வொர்க்ஸ்) முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.29.910 முதல் ரூ.85,570 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

செக்ரடரியல் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்களாக கருதப்படுகின்றனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு  ரூ.23, 910 முதல் ரூ.85,570 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு : இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் igmhyderabad.spmcil.com இணையதளம் மூலம் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணம் ரூ.650 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பதார்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆவின் பாலகம் தொடங்க வேண்டுமா..? ரூ.30000 டெபாசிட் செய்தால் போதும்..

 

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 இலட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் (Aavin Franchise Parlour) என்பது ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய ஆவின் விற்பனை நிலையமாகும். இவ்வகையான பாலகம் அமைக்க குறைந்தபட்சம் 64 சதுர அடி முதல் 225 சதுர அடி வரையிலான இடம் மட்டுமே போதுமானது.

புதிய சில்லறை விற்பனை நிலைய பாலகம் அமைப்பதற்கு அதன் பரப்பளவு மற்றும் வடிவமைப்புக்கு ஏற்றார்போல் சுமார் 1.50 லட்சம் முதல் 6 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும், ஆவின் நிறுவனத்திற்கு ரூ.30,000/- மட்டுமே வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டமும் மற்றும் பாலகம் அமைக்கும் இடத்தை பொறுத்து,  மாதந்தோறும் சுமார் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை விற்பனையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பாலகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் 48 மணி நேரத்திற்கு முன்பே ஆவின் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட பொருட்கள் ஆவின் நிறுவன வாகனம் அல்லது மொத்த விற்பனையாளர் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன பால் உபபொருட்களுக்கு குறைந்தபட்சம் 8% முதல் 18% வரை கமிஷன் வழங்கப்படும். இப்பாலகத்தில் ஆவின் பால் உபபொருட்களை கொண்டு மில்க்ஷேக், லஸ்ஸி, சுடுபால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், 'தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் இல்லம், 3A,பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 600 035 , தமிழ்நாடு' என்று முகவரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள 9043099905, 9790773955, 9566860286 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. நீலகிரி ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலை

 தமிழகத்தில் உள்ள வெலிங்டன், ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இளநிலை எழுத்தர் (Lower Division Clerk), பன்னோக்கு பணியாளர் (Multi tasking staff), வாகன ஓட்டுநர் (Civilain Motor Driver) , சமையலர் (Cook), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Attendant) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 

 

கல்வித் தகுதி:

இளநிலை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் (அல்லது) இந்தியில் வினாடிக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு அடிக்கும் திறன் வேண்டும்.

வாகன ஓட்டுநர் பதவிக்கு (Civil Motor Driver) விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்புத் தேர்ச்சியுடன், கனரக வாகனங்கள் இயக்குவதில் 2 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பன்னோக்குப் பணியாளர் பதவிக்கு (Multi Tasking staff) விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தீயணைப்பாளர் (Firemen)  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10ம் வகுப்புத் தேர்ச்சியுடன், கனரக வாகன உரிமை வைத்திருக்க வேண்டும், முதலுதவி பிரிவில் குறைந்தது 6 மாத காலம் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Sukhani பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்,  12ம் வகுப்புத் தேர்ச்சியுடன் நீச்சல் பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் குறைந்தது 2 ஆண்டுகள்  முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தட்டச்சுப் (Stenographer) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பிரிண்டிங் மெஷின் துறையில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தட்டச்சுப் பணியாளர் பதவிக்கு ரூ. 25,500-81, 100 வரையிலான சம்பளமும் (நிலை -4) , பன்னோக்குப் பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு 18,000 முதல் 56,900 வரையிலான சம்பளமும் (நிலை -2 ) இதர பதவிகளுக்கு 19,900 முதல் 63,200 வரையிலான  (நிலை - 2) சம்பளமும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28.10.2022 அன்று 18-க்கு மேலும், 27-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

விண்ணப்பங்களை dssc.gov.in  என்ற வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்கள் அனுப்பி வேண்டிய முகவரி The Admiral

Superintendent {for Manager Personnel}, Naval Dockyard, Visakhapatnam – 530014  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

23.09.2023 தேதிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே திறனறிவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news