Balanced Diet : மேலும், மிகவும் பயனளிக்கும் உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவையான அளவிற்கு இல்லாமல் இருப்பதும், (அதனால் தேவையான அளவு நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கிடைப்பதில்லை)
சமீபத்திய லேன்செட் மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் இந்திய உணவில் சரிவிகித சத்தான உணவிற்கு பதிலாக, பால் பொருட்களின் அளவு தேவையின்றி மிக அதிகமாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும் என இருந்தும், அவை குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இத்தகைய தவறான உணவு தேர்வுகளால், பெண்களும், கிராமப்புற மக்களும் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
எது சரிவிகித சத்தான உணவு?
முழு தானியங்கள் (Whole grains) – 32 சதவீதம்
தாவரப்புரதம் (பருப்புவகைகள்) – 23 சதவீதம்
பால் பொருட்கள் – 5 சதவீதம் என்று இருக்க வேண்டும்.
ஆனால், இந்திய உணவில், 25 சதவீதம் பால் பொருட்கள், 23 சதவீதம் தேவையற்ற கொழுப்புகள், 15 சதவீதம் முழுக் தானியங்கள் (உமி நீக்கப் படாதது), 4 சதவீதம் தாவரப்புரதம் என தவறான விகிதத்தில் உள்ளது.
மேலும், மிகவும் பயனளிக்கும் உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவையான அளவிற்கு இல்லாமல் இருப்பதும், (அதனால் தேவையான அளவு நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கிடைப்பதில்லை)
இதில் ஏழைகளைவிட பணக்காரர்கள் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதும் தெரியவந்துள்ளது.
பொதுவாக, காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவாகவும், பால்பொருட்கள், தேவையற்ற கொழுப்புகள் அதிகமாகவும் உணவில் இருப்பது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில், மாவுச்சத்து தேவைக்கு அதிகமாகவும், நகர்ப்புறங்களில், காய்கறிகள் மற்றும் பழங்கள், புரதச்சத்து அதிகமாகவும் உண்ணப்படுவது தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில் முழு தானியங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பது நல்லது. பெண்கள் மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும், ஆண்கள் விலங்கு புரதம் (Nonvegetarian protein) அதிகம் எடுத்துக்கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.