Search

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு

 வேலை இல்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக் கொடுத்து ரூ.11,250 ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மான்யக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (YOUNG WEAVERS INDUCTION AND ENTREPRENEURSHIP PROGRAMME FOR YOUNGSTERS) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

1.இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல்;

2. பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது;3. கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல்;

4. வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளித்தல்;

5. 2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல்;

6. கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல்;

7. இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல்;

8. பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

1. 18 முதல் 30 வயது வரை

2. கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

3. எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. விண்ணப்பம் அளிக்க வேண்டி கடைசி நாள் - 20.9.2023

இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அதிகாலையில் எழுவதற்கான டாப் 12 டிப்ஸ்கள்!

 

”சீக்கிரம் எழுவதற்கான உங்கள் இலக்கைப் பற்றி குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் சொல்லி, உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கும்படி அவர்களிடம் கேளுங்கள்”

அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கும், உங்கள் உற்பத்தித்திறன் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது.

தூக்க அட்டவணையை உருவாக்குங்கள்

வார இறுதி நாட்கள் உட்பட, தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று சரியான நேரத்தில் உறங்க முயற்சி செய்யுங்கள். நிலைத்தன்மை உங்கள் உடல் கடிகாரத்தை ஒழுங்குபடுத்த உதவும்

படிப்படியாக சரிசெய்தல்

நீங்கள் தற்போது நீண்டநேரம் இரவில் விழிக்கும் நபராக இருந்தால் ஒரேயடியாக அதிகாலை எழும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்க வேண்டாம். நீங்கள் விரும்பிய விழிப்பு நேரத்தை அடையும் வரை, ஒவ்வொரு நாளும் 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன்னதாக உங்கள் உறக்க நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை படிப்படியாக சரிசெய்யவும்.

உறக்கத்திற்கு முன் செய்ய வேண்டியவை 

உறங்குவதற்கு முன் அமைதியான ஒரு வழக்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள். வாசிப்பு, சூடான குளியல் அல்லது தியானம் உள்ளிட்ட செயல்கள் போன்ற உடனடியாக தூங்க உதவும்.

வரையறுக்கப்பட்ட திரை நேரம்

உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக செல்போன், கணினி, லேப்டாப், தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தவிர்க்கவும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி உங்கள் தூக்கத்தில் குறுக்கிடலாம்.

ஒரு வசதியான தூக்க சூழலை உருவாக்குங்கள்

உங்கள் படுக்கையறை உறங்குவதற்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் பொருள் ஒரு வசதியான மெத்தை மற்றும் தலையணைகள், அத்துடன் குளிர், இருண்ட மற்றும் அமைதியான அறையாக இருத்தல் நலம்.

தூண்டுதல்களைத் தவிர்க்கவும்

காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதைக் கட்டுப்படுத்தவும் அல்லது தவிர்க்கவும், குறிப்பாக உறங்குவதற்கு முந்தைய மணிநேரங்களில். இந்த பொருட்கள் தூக்க முறைகளை சீர்குலைக்கும்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள், ஆனால் உறங்கும் நேரத்துக்கு அருகில் தீவிரமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.

உணவு முக்கியம்

உறங்குவதற்கு முன் கனமான உணவைத் தவிர்க்கவும். நீங்கள் பசியாக இருந்தால் லேசான ஆரோக்கியமான சிற்றுண்டியை சாப்பிட்டு உறங்க இனிமயான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்தவும்

நீங்கள் விரும்பிய நேரத்தில் எழுந்திருக்க அலாரம் செட் செய்வது அவசியம்.

காலை சூரிய ஒளி

உறங்கும் அறையில் சூரிய ஒளி வரும்படியான கட்டமைப்பை கொண்டிருக்கும் போது விரைவில் எழுவதற்கான சூழல் உருவாகும்.

நோக்கம் கொண்டிருங்கள்

சீக்கிரம் எழுந்திருக்க ஒரு கட்டாயக் காரணம் இருப்பது ஊக்கமளிக்கும். காலைப் பயிற்சியாக இருந்தாலும் சரி, அமைதியான நேரமாக இருந்தாலும் சரி, தியானமாக இருந்தாலும் சரி, அல்லது முக்கியமான பணிகளைச் சமாளிப்பது என எதுவாக இருந்தாலும், ஒரு நோக்கத்தைக் கொண்டிருப்பது அதிகாலையில் எழுவதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றும்.

பொறுப்புடன் இருங்கள்

சீக்கிரம் எழுவதற்கான உங்கள் இலக்கைப் பற்றி குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் சொல்லி, உங்கள் முன்னேற்றத்தைப் பார்க்கும்படி அவர்களிடம் கேளுங்கள். இது உந்துதல் மற்றும் பொறுப்புணர்வை வழங்க முடியும்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

 

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Retired Officers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு (14.9.2023) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Retired Officers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணி சார்ந்த துறையில் Scale II, Scale III or Scale IV ஊதியளவின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/-சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிபுரிய விரும்பும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை :

    விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் (14.09.2023) உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    Tamilnad Mercantile Bank Ltd விண்ணப்பிக்கும் முறை :

    விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    Download Notification PDF
    Apply Online Link 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

 

BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

Bharat Heavy Electricals Limited எனப்படும் BHEL நிறுவனம் ஆனது Part Time Medical Consultant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


BHEL காலிப்பணியிடங்கள்:

Part Time Medical Consultant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Part Time Medical Consultant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

BHEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Part Time Medical Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- ஊதியம் வழங்கப்படும்.

Part Time Medical Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- ஊதியம் வழங்கப்படும்.

BHEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபடாது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICMR –NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000/-சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

 

ICMR –NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000/-சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

ICMR – NIN ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Senior Research Fellow பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி 19.09.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – NIN தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Senior Research Fellow பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Senior Research Fellow வயது வரம்பு:

பதிவு செய்யும் நபர்களின் வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICMR – NIN கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MSC பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICMR நிறுவன ஊதிய விவரம் ;

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR – NIN விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 19.09.2023 அன்று நடைபெறும் Walk in Interview ல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மசாலா வாரியத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

 

மசாலா வாரியத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Software Engineer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Spices Board ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Spices Board காலிப்பணியிடங்கள்:

Software Engineer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Software Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board வயது வரம்பு:

40 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Software Engineer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- (1st Year), ரூ.27,000/- (2nd Year) மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spices Board தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.09.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online ல் எளிய முறையில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

 

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online ல் எளிய முறையில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள JDE Service Management Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(30.09.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி JDE Service Management Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor degree பெற்றிருக்க வேண்டும்.

TCS அனுபவ விவரம் :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

TCS தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் (30.09.2023) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் ’இன்சுலின்’ உற்பத்தி அதிகரிக்குமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 பச்சை வெங்காயத்தை நாடு முழுவதும் பலர் உணவோடு சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானதா? அது உடலுக்கு என்ன செய்யும்? ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் பார்க்கலாம்.

பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஆர்கானிக் சல்பர் உள்ளது. இது உடலில் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நீரிழிவு நோயாளிகளும் வெங்காயத்தை சாப்பிடலாம்.

வெங்காயத்தில் ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் சற்று கடுமையான வாசனையுடன் இருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.

வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 , ஃபோலேட் பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். வெங்காயத்தை வழக்கமாக உட்கொள்வது நரம்பியல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

வெங்காயம் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இருப்பினும், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளன. வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

Click here for more Health Tip

புற்றுநோய் வர காரணமாக இருக்கும் உணவுகள்... சுவைத்து பார்க்கக்கூட தொடாதீங்க..!

 இன்றைய காலத்தில் அனைவருமே துரித உணவுகளையும் பாக்கெடில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட உணவுகளையே அதிகமும் சாப்பிடுகிறார்கள். இது சுவையாக இருந்தாலும் நம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியது. இதனால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் : நாளுக்குநாள் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறலாம். மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது, மோசமான உணவுப் பழக்கம், பால் சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், தினமும் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, ரசாயன மாசுபாடு, மலச்சிக்கல், உடற்பயிற்சி செய்யாமை என புற்றுநோய்க்கான காரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.

குடல்வால் புற்றுநோய்க்கான காரணம் : பெருங்குடல் வாய்ப்பகுதியில் வால் போன்று உறுப்பு ஒட்டிக் கொண்டு இருப்பதே அப்பெண்டிக்ஸ் எனும் குடல் வால் நோய் ஆகும். இதுதான் புற்றுநோய் வளர்வதற்கு காரணமாக இருக்கும். அப்பெண்டிக்ஸ் உருவாகும் கட்டி ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் நமக்கு தெரியப்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் குமட்டல், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இறுகிய மலம், உடல் எடை குறைதல் மற்றும் அடிவயிற்றின் வலது ஓரத்தில் வலி உண்டாகும். புற்றுநோய் பரவத் தொடங்கினால் குடலிறக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், பசியின்மை, மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

ஆரோக்கியமற்ற உணவுகள் : சிவப்பு இறைச்சி, அதிகப்படியான குடிப்பழக்கம், அதிகளவு பதப்படுத்தப்பட உணவுகளை சாப்பிடுவது போன்ற காரணங்களால் புற்றுநோய் வரும் ஆபத்து 45% அதிகரிக்கிறது. ஆகவே நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தாலே புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். உதாரணமாக மோசமான உணவுப்பழக்கத்தை கைவிடுங்கள், உடல் எடையை குறையுங்கள், நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் : சாசேஜ், ஹாட் டாக், சலாமி, பேகன், ஹாம், பீஃப் ஜெர்கி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உப்பு மற்றும் புகை சேர்த்தே பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். இந்த இறைச்சிகளை பதப்படுத்தும் போது நைட்ரேட்டை சேர்க்கிறார்கள். இது கார்சினோஜெனை உருவாக்கும். சில சமயங்களில் ரசாயனம் கலக்காத இறைச்சியே கூட பாலிசைலிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் என்ற கார்சினோஜெனை உருவாக்கும். இந்த கார்சினோஜென் புற்றுநோயை வரவழைக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய காரணிகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் : பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், நொறுக்கு தீணிகள், க்ரீம் சீஸ், இனிப்புகள், குக்கீஸ், சோடா, சாக்லேட், துரித உணவுகளான பீட்ஸா, பர்கர், வறுத்த சிக்கன் ஆகியவற்றில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கவும் பல ரசாயன சேர்க்கைப் பொருளை சேர்ப்பார்கள். இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்கரை, உப்பு, கொழுப்பு, ரசாயனங்கள் ஆகியவை அதிகளவு இருக்கும். மேலும் இந்த உணவுகளில் வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து அகியவை குறைவாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை கூடுவதோடு புற்றுநோய் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கும்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் : ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள், புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள், சீரான உடற்பயிற்சி, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டி ஆக்ஸிடெண்ட், நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுகள் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் : பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு இல்லாத புரதம் ஆகியவற்றை உங்கள் டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சீரான உடற்பயிற்சி அவசியம் தேவை : தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இரவு நேரத்தில் குறைந்தது ஏழு மணி நேரமாவது நன்றாக தூங்குங்கள். உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மது அருந்துவது, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றே கைவிடுங்கள்.


அசிடிட்டி Vs மாரடைப்பு... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..? அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

 நோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே இதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையாக கருதப்படுகிறது. ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு சிலர் அசிடிட்டி அல்லது கேஸ்ட்ரிக் பிரச்சனையாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டு மருத்துவரின் உதவியை நாடாமல், கை வைத்தியம் செய்து, மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது பல்வேறு பிற காரணிகளுடன் இணைந்து ஒரு ஆண்டுக்கு 18 மில்லியன் நபர்கள் இதயம் சார்ந்த நோய்கள் காரணமாக இறந்து போகின்றனர். நெஞ்சில் ஒருவித எரிச்சல் உணர்வை அனுபவிக்கும் பொழுது உடனடியாக நாம் கடைசியாக சாப்பிட்ட உணவுடன் அதனை தொடர்புப்படுத்தி பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் அதற்கு வேறு காரணமாக இருந்தால் என்ன செய்வது?

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்கும் அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக் : அசிடிட்டி என்பது நமது நெஞ்சு பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஹார்ட் அட்டாக் சமயத்திலும் இதே போன்ற உணர்வு ஏற்படும். இந்த இரண்டு நோய்களுக்கான அறிகுறிகளில் ஒன்று தவிர்க்க கூடியதாகவும், மற்றொன்று மிகவும் மோசமானதாகவும் இருப்பதால் இவை இரண்டிற்கான வேறுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. அசிடிட்டியை பொருத்தவரை நெஞ்சு பகுதியில் ஏற்படுகின்ற அசௌகரியம் குறிப்பாக மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அதன் பிறகு வாயில் புளிப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான கசப்பு சுவை உண்டாகும். மேலும் அசிடிட்டி பிரச்சினையில் இறுதியாக நம் வயிற்றில் இருக்கக்கூடிய உணவில் சிறிதளவு மீண்டும் வாய்க்கு வந்து சேரும்.

இதுவே ஹார்ட் அட்டாக்கை பொறுத்தவரை நெஞ்சை யாரோ பிழிவது போல ஒரு வித வலி அல்லது நெஞ்சு பகுதியில் அதிக அழுத்தத்துடன் கூடிய வலி உண்டாகும். நெஞ்சு பகுதியில் தொடங்கிய வலியானது கழுத்து, தாடை மற்றும் முதுகு போன்றவற்றிற்கு பரவுவது ஹார்ட் அட்டாக்கின் முக்கியமான ஒரு அறிகுறி. வயிறு வலி, மூச்சு விடுவதில் சிரமம், குளிர்ந்த வியர்வை மற்றும் மயக்கம் போன்றவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான பிற அறிகுறிகள். இதயத்திற்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காததால் நெஞ்சில் ஒருவித இறுக்கம் மற்றும் வலி ஏற்படுவது ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படக்கூடிய நெஞ்சு வலி பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் காரணமாக ஏற்படலாம்.

ஹார்ட் அட்டாக்கை போல தோன்றக்கூடிய பிற நெஞ்சு அசௌகரியங்கள் : அசிடிட்டி தவிர உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு வித தசை சுளுக்கு காரணமாகவும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்படலாம். பித்தப்பையில் நோய்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு ஏற்படும் வலி ஹார்ட் அட்டாக் போன்ற உணர்வை கொடுக்கலாம்.

எப்பொழுது விரைவாக செயல்பட வேண்டும்? : உடற்பயிற்சி அல்லது மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு உங்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். நெஞ்சில் தொடங்கிய வலியானது கைகள், வாய் மற்றும் முதுகு பகுதிக்கு நகரும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு மருத்துவ உதவி தேவை. இதைத்தவிர உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலி என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.

நெஞ்சு வலி ஏற்படும் பொழுது இது அசிடிட்டியாக தான் இருக்கும் என்று நீங்களாக ஒரு முடிவுக்கு வராமல் மருத்துவரை அணுகி ECG மற்றும் கார்டியோ கன்சல்டேஷன் பெறுவது கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகிய இரண்டிற்குமான அறிகுறிகள் இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. இவற்றை முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதனை தெளிவுப்படுத்திக்கொள்ள மருத்துவரை அணுகுவதில் தப்பு ஏதும் கிடையாது.