Search

புதுச்சேரியில் மாபெரும் வேலைவாய்ப்புமுகாம்.. 600க்கும் மேற்பட்டோருக்கு கிடைத்தது வேலை!

 புதுச்சேரியில் நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமால் 600க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.

வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீன் தயாள்உபத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் இணைந்து இந்த திட்டம் சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணல் மூலம் முதல் கட்டமாக 600க்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை கடிதமும் வழங்கப்பட்டது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுச்சேரி மற்றும் சென்னை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் காலிப்பணியிடங்கள்: சென்னையிலும் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள 450 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 450 உதவியாளர் பதவி

இதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் , 48 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 64 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதி: 01‐09‐2023  அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி, வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வுமுறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

Sr. No.வகைகட்டணம்தொகை *
1.பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர்அறிவிப்புக் கட்டணம்ரூ.50/-
2.பொதுப் பிரிவினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS)விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம்ரூ.600/-
3.ஆர்பிஐ பணியாளர்கள்விலக்குவிலக்கு

விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in.  மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 04, 2023.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

உடல் எடையை குறைக்கனுமா..? 7 நாட்களுக்கான டயட் பிளான் பட்டியல்..!

 அசைவ உணவுகளில் மட்டுமே அதிகமான ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை நிறைவாக உள்ளன என்ற கண்ணோட்டம் இருக்கிறது. இதை ஒருபக்கம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், சைவ உணவுகள் இதற்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. சைவ உணவுகளில் நம் உடலுக்கு தினசரி தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சைவ உணவுகளை நம் நாவின் தேடலுக்கு ஏற்ப சுவையாக சமைத்து சாப்பிட்டு வந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். சைவ உணவுகளை சமைப்பதும் கூட எளிமையான வேலை தான்.

உடல் எடையை குறைக்கலாம் : தேர்வு செய்யப்படும் காய்கறி உணவுகளை சாப்பிட்டு வந்தால் நம் உடல் எடையை குறைக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலிலும் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு இது உதவிகரமாக அமையும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறி என்ற அளவில் 7 நாட்களுக்கு வெவ்வேறு காய்கறிகளை உட்கொண்டு நம் உடல் எடையை நாம் குறைக்கலாம்.

நாள் 1 : முதல் நாளில் கழிவுகளை வெளியேற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் தொடங்கலாம். அதேபோல காலை உணவுக்கு தயிர், பெர்ரி பழம் மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். திணை அரிசி சோறு, பீன்ஸ் சாலட் போன்றவற்றை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். பகல் பொழுதில் பசி எடுத்தது என்றால் கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டால் வயிறு நிறையும். இரவு உணவாக முழு தானிய கோதுமை ரொட்டி, சோயா தயிர் போன்றவற்றை சாப்பிடலாம்.

நாள் 2 : காலை உணவாக ஒரு கப் அளவு பொறி மற்றும் வேக வைத்த காய்கறிகள் கொஞ்சம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மதிய உணவிற்கு கொண்டக்கடலை சாலட், பருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். பசி எடுக்கும்போது அதை தீர்ப்பதற்கு நட்ஸ் மற்றும் ஆப்பிள் ஆகியவை கை கொடுக்கும். இரவு சிவப்பு அரிசியுடன், காய்கறி சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

நாள் 3 : வழக்கம்போல காலையில் எலுமிச்சை சாறு நீர் அருந்தலாம். ஒரு மணி நேரம் கழித்து பழ ஸ்மூத்தி, கடலை பட்டர் ரொட்டி, மதிய உணவாக வறுக்கப்பட்ட காய்கறிகள், திணை சோறு ஆகியவற்றை சாப்பிடலாம். பசி எடுத்தால் தயிர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை கை கொடுக்கும். இரவில் நூடுல்ஸ், செர்ரி பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 4 : காலையில் பல தானியங்கள் கலந்த ரொட்டி, காய்கறிகள், தயிர் ஆகியவற்றையும், மதியம் உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாலட் போன்றவற்றையும் சாப்பிடலாம். பசி நேரத்திற்கு வேர்கடலை பட்டர் எடுத்துக் கொள்ளலாம். இரவு ஊட்டி மிளகாய் கூட்டு மற்றும் திணை சோறு, காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 5 : காலையில் சியா விதை ஊற வைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் பல தானிய இட்லி, தேங்காய் சட்னி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவாக ரசம் மற்றும் சிவப்பு அரிசி சோறு எடுத்துக் கொள்ளலாம். ஸ்நாக்ஸ் பட்டியலில் நட்ஸ், விதைகள், உலர் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இரவில், முழு தானிய பிரெட், கிரில் செய்யப்பட்ட காளான் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 6 : காலை உணவாக அவகோடா பழம் மற்றும் அவித்த முட்டை ஆகியவற்றையும், மதிய உணவாக கொண்டக்கடலை மற்றும் சிவப்பு அரிசியுடன் வேக வைக்கப்பட்ட காய்கறிகள், பசி நேரத்திற்கு திராட்சை, பேரிக்காய் ஆகியவற்றையும் சாப்பிடலாம். இரவு சிவப்பு அரிசி சோறு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், சோளம் ஆகியவற்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நாள் 7 : காலையில் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இலவங்க பட்டை நீர் அருந்தலாம். காலையில் ஆப்பிள் பழமும், புதினா சட்னி மற்றும் இட்லி ஆகியவற்றையும் சாப்பிடலாம். மதியத்திற்கு பாலக்கீரை, காளான் சாலட் மற்றும் இரவு உணவாக காய்கறிகள், காலிஃபிளவர் ரைஸ் ஆகியவற்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.


உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சுக்கனுமா..? இந்த 5 அறிகுறிகளை கவனிச்சு பாருங்க..!

 

உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் நிறைந்தவர்களை மட்டுமே தாக்கக்கூடும் என எண்ணப்பட்டு வந்த மாரடைப்பு, நெஞ்சுவலி, தமனி செயலிழப்பு போன்ற இருதய நோய்கள் இப்போது இளம் வயதினரையும் அதிக அளவில் தாக்கி வருகின்றனர். இதற்கு மாறி வரும் உணவுப்பழக்கம், அதிகம் நேரம் உட்காந்து கொண்டே வேலை பார்ப்பது, நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் குறைவான உடல் செயல்பாடுகள், மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.


குறிப்பாக இதய நோயின் அறிகுறிகளை கண்டுகொள்ளாமலோ அல்லது தெரியாமலோ இருப்பது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும். பொதுவாக அதிக அழுத்தம், நெஞ்சை வைத்து யாரோ அழுத்துவது போன்ற உணர்வு, எரிச்சல், இறுக்கம், மார்பின் மையப்பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவற்றை நெஞ்செரிச்சல் அல்லது வாயுத் தொல்லை என மக்கள் எளிதாக கடந்து செல்கின்றனர். எனவே தான் மக்கள் தங்களது இருதய ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்...

1. மார்பு வலி: பரபரப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ மார்பில் ஊசி குத்துவது போல் வலி எடுப்பது, நெஞ்சில் அதிக அழுத்தமான உணர்வு போன்ற மார்பு பகுதியில் திடீரென ஏற்படும் அசெளகரியங்கள் மாரடைப்பு ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் சில நிமிடங்கள் வரை நீடித்தால் கூட அது மாரடைப்பு நெருங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2. கைக்கு வலி பரவுதல்: மாரடைப்பு ஏற்படுவதற்கான மிகவும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று, தோள்பட்டையில் இருந்து உடலின் இடது கைக்கு வலி பரவுவதை உணர்வது ஆகும். இதுபோன்ற உணர்வை அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம் ஆகும்.

3. தலைச்சுற்றல் அல்லது லேசான மயக்கம்: நார்மலாக இருக்கும் நபருக்கு திடீரென தலைசுற்றுவது அல்லது மயக்கம் வருவது போல் உணர்வு ஏற்படுவது ரத்தம் அழுத்தம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும். இது குறிப்பிட்ட நபரின் இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் தடுமாறுவதைக் குறிக்கிறது. இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. நேரம் தாழ்த்தாமல், ஆம்புலன்சை வரவழைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்.

4. தொண்டை அல்லது தாடை வலி: தொண்டை அல்லது தாடை வலி இதயத்துடன் தொடர்புடையது அல்ல என்றாலும், மார்பிலிருந்து தொண்டை அல்லது தாடைக்கு பரவும் வலி அல்லது அழுத்தம் இதய பிரச்சனையின் அறிகுறியாக மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.

5. வியர்வை: ஓய்வாக அமர்ந்திருக்கும் போது அல்லது ரீலாக்ஸாக உறங்கிக்கொண்டிருக்கும் போது உடல் முழுவதும் குளிர்ச்சியான வியர்வை வெளியேறுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறியாகும். எனவே திடீரென உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பித்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே உள்ள அறிகுறிகளைத் தவிர, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, வாந்தி, அஜீரணம், கால் வலி அல்லது கை வலி, கணுக்கால் வீக்கம், தீவிர சோர்வு ஆகியவையும் இதய ஆரோக்கியத்தைக் குறிக்கக்கூடிய முக்கிய அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் ஏதுமின்றி கூட திடீரென மாரடைப்பு ஏற்படலாம் என்பதால் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுவதும், சரியான நேரத்தில் பரிசோதனைகளைச் செய்து கொள்வதும் கட்டாயமாகும். குறிப்பாக ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, புகை மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுதல் ஆகியவற்றை கடைபிடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் காலிப்பணியிடங்கள்: சென்னையிலும் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள 450 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 450 உதவியாளர் பதவி

இதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் , 48 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 64 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதி: 01‐09‐2023  அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி, வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வுமுறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

Sr. No.வகைகட்டணம்தொகை *
1.பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர்அறிவிப்புக் கட்டணம்ரூ.50/-
2.பொதுப் பிரிவினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS)விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம்ரூ.600/-
3.ஆர்பிஐ பணியாளர்கள்விலக்குவிலக்கு

விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in.  மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 04, 2023.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பிளஸ் 2 முடித்தால் போதும்.. ராணுவத்தில் வேலை!

 நீலகிரியில் உள்ளா வெலிங்டன் ராணுவ கல்லூரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஸ்டெனோகிராபர் 4, கிளார்க் 7, டிரைவர் 5, தீயணைப்பு வீரர் 16, சமையலர் 3, பிரிண்டிங் மிஷின் ஆபரேட்டர் 1, எம்.டி.எஸ்., 7 உட்பட மொத்தம் 44 இடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

23.09.2023 அடிப்படையில் ஸ்டெனோ, கிளார்க், டிரைவர், தீயணைப்பு வீரர் பணிக்கு 18 - 27, மற்ற பணிக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

dssc.gov.in என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து the commandant, Defence Service Staff college wellington nilgiris 643231 என்ற முகவரிக்கு செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

30,000 வரை சம்பளம்.. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - அரசு வேலைவாய்

 திருவள்ளூர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை யைத்தில்  (One Stop Center - OSC) காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பதவிக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 30.09.2023ற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: 

பதவியின் பெயர்: மைய நிர்வாகி - (Centre Administrator)

காலிப்பணியிடம் - 1

கல்வி தகுதி:  சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிர்வாக அமைப்பில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். அதே அமைப்பில் அல்லது அதற்கு வெளியே குறைந்தபட்சம் 1 வருட ஆலோசனை வழங்கிய அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.30,000/-

வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்:  வழக்கு பணியாளர் (Case Worker)

காலிப்பணியிடம் - 2

கல்வி தகுதி: சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.

அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிர்வாக அமைப்பில் அல்லது அதற்கு வெளியில் (Data Management, Process Documentation and Web-based reporting formats) குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:  ரூ.18,000/-

வயது வரம்பு :  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேற்படி பணியிடங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2ஆம் தனம் என்ற முகவரியினை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

எஸ்பிஐ வங்கியில் 2,000 பேருக்கு வேலை: ₹ 40,000 மேல் சம்பளம் - உடனே அப்ளை பண்ணுங்க!

 நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) புரொபேஷனரி அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:  2000

இதில், பொதுப் பிரிவினருக்கு 810 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 200 இடங்களும் , 300 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 150 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 31.12.2023 தேதிக்கு முன்பாக பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.04.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

எஸ்பிஐ ப்ரோபேஷனரி அதிகாரி  தேர்வு முறை :  முதல் நிலைத்தேர்வு(Prelims Exam), முதன்மைத் தேர்வு(Main Examination), நேர்காணல் (Interview) ஆகிய மூன்று நிலைகளில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும். முதல்நிலைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

தேர்வுக்கான தேதிகள் : முதல் நிலைத் தேர்வானது நவம்பர்  மாதத்திலும், முதன்மைத் தேர்வானது 2023 டிசம்பர்/ 2024 ஜனவரி மாதத்திலும், நேர்காணலுக்கான அழைப்பு 2024 ஜனவரி/பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி : முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS

ADVERTISEMENT NO: CRPD/PO/2023-24/19 ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

₹ 35,000 சம்பளம்.. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலை செய்ய வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்கு தான்

 

திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும், பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் / முன்னுரிமை ஏதும் கோர இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்: 

  • திடக்கழிவு மேலாண்மை & சுகாதாரம் 2 பணியிடங்கள்) - மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
  • திரவக்கழிவு மேலாண்மை  - 1 பணியிடம்) - மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
  • திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் - 1 பணியிடம்; மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
  • தகவல், கல்வி மற்றும் தொடர்பு - 2 பணியிடங்கள்;  மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000
  • கல்வித் தகுதி: முதல் இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் / பொறியியல் (Civil ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    அதேபோன்று, திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் இணைக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது பல்கலைகழகத்தில் B.Tech/MBA/MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    அதேபோன்று, தகவல், கல்வி மற்றும் தொடர்பு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், புகழ்பெற்ற/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மக்கள் தொடர்பு / ஊடக பிரிவில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    சுயவிவரக் குறிப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி என்ற முகவரிக்கு 11.09.2023 முதல் 22.03.2023-க்குள்  அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    பேற்படி பணிகள் மற்றும் இதர சந்தேகங்களை அலுவலக வேலை நாட்களில் திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்யஇந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

     Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முழுவிவரம் இதோ !

 தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை மாதாவரத்தில் உள்ள ஜெய்கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட முன்னனணி நிறுவங்கள் கலந்து கொண்டு 15000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும், இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்களும், பட்டதாரிகளும், ஐ.டி.ஐ தொழிற்கல்வி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் இலவசமாக பங்குபெறலாம். மேலும், இந்த முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 - 24615160 என்ற எண்ணிலோ அல்லது pjpsanthome@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news