Search

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்.... ரூ.50,000 வரை சம்பளம் - இந்து அறநிலையத் துறையில் சூப்பர் வேலை

 தமிழ்நாட்டில் உள்ள இந்து திருக்கோயில்களை அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. அற நிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 46,020 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோயில்கள் உள்ளன. இந்த திருக்கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில்,  திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள  சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2023 மாலை 05.45 மணி வரை ஆகும்.

பணியிடத்தின் பெயர்ஊதிய விகிதம்காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைகல்வித் தகுதி
காவலர்15,900-50,40025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
காவலர் (தொகுப்பூதியம்)10,00025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்;

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்;

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்;

விண்ணப்பத்துடன் முகவரிச் சான்று, பிறந்தநாள் குறித்த சான்று, சாதிச் சான்று நகல், கல்வித் தகுதிக்கான சான்றிதல்களின் நகல், அரசு மருத்துவரிடமிருந்த பெறப்பட்ட உடற்தகுதி சான்றிதழ், குற்றவழக்கு ஏதும் இல்லை என்பதற்கான காவல்துறை சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களையும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்;

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் samayapurammariamman.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில், விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், மண்ணச்சநல்லூர் வட்டம்,   திருச்சிராப்பள்ளி மாவட்டம், 621- 112. தொலைபேசி எண் : 04312670460 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரங்கள்:

பதவியின் பெயர்எண்ணிக்கைமாத ஊதியம்தகுதி
பல் மருத்துவர் (Dental Surgeon)134,000இளங்கலை பல் மருத்துவ படிப்பு (பிடிஎஸ் )
பல் மறுத்துவ உதவியாளர் (Dental Assistant)113,80010ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் (Programe Cum Administrative Assistant)112,000ஏதேனும் துறைகளில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் மென்பொருள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அலுவலக மேலாண்மை பணிகளில் ஓராண்டு முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வாளகம்,

விருதுநகர் மாவட்டம்-626001.

இதர விவரங்கள்:

1. விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (SpeedPost) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

2. விண்ணப்ப படிவங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் வட்டார சுகாதார நிலைங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

2. இதற்கான, மின்னஞ்சல் முகவரி vnrnhm@gmail.com

4. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

5.திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்(Program, cum Administrative Assistants) பதவிக்கு வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.1,00,000 மேல் மாத சம்பளம்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு


தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வுக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயர்:  இளநிலை பகுப்பாய்வாளர் (Junior Analyst)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை நாள்: 21.09.2023

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 20.10.2023

கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:-

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது.

தாள் -1  : 05.12.2023  முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.(பட்டப்படிப்பு தரம்) தாள் I-ல் மருந்தாக்கம், மருந்தியல் அறிவியல் மற்றும் வேதியியல் என ஏதேனும் ஒரு பாடப்பிரிவினை தேர்வு செய்து எழுதலால். 3 மணி நேரத்தில் 200 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

தாள் -2 : 05.12.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை

தாள் 2 இரண்டு பகுதிகளைக் கொண்டது.

பகுதி -அ: கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ: பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தாள்-I மற்றும் தாள்-II-பகுதி 'ஆ' வின் வினாத்தாட்கள் மதிப்பீடு செய்யப்படாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry முடித்திருக்க வேண்டும். மருந்து சோதனை துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,400 – 1,15,700

வயதுத் தகுதி: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

தேர்வு முறை: தேர்வு முறை ஒற்றை நிலையினைக் கொண்டது. கணினி வழியிலான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :  இதற்கான கட்டணம் ரூ.100/ ஆகும். பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி:  இணையவழி விண்ணப்பத்தை 20.10.2023 அன்று இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.inஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

பெருங்குடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றுவது நல்லதா..? அடிக்கடி செய்யலாமா..?

 பெருங்குடல் புற்றுநோய் ஆண்கள் மற்றும் பெண்களில் பொதுவாக கண்டறியப்படும் புற்றுநோய்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ? நமது பெருங்குடலில் தங்கும் உணவுகள் கழிவுகள் தான் அது. வாயை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வோம். பெருங்குடலை எப்படி சுத்தம் செய்வது என்று யோசிக்கலாம். அதே போல அது ஆரோக்கியமானதா என்றும் சிந்திக்கலாம். அதற்கான பதில்களை சொல்கிறோம்.

நாம் வாய் வழியாக சாப்பிடும் உணவு தொண்டையைத் தாண்டியதுமே செரிமான வேலை என்பது தொடங்கிவிடும். அதன் முக்கியப் பணி  பெருங்குடலில் நடக்கும். நாம் உட்கொள்ளும் தண்ணீரை உறிஞ்சுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் இறுதி கட்ட பொறுப்பு  பெருங்குடலுடையது. உங்கள் பெருங்குடலை நன்கு கவனித்துக்கொள்வது முக்கியம்.

ஆனால் எப்படி?

பெருங்குடல் சிகிச்சை, ஹைட்ரோ பெருங்குடல் சிகிச்சை, பெருங்குடல் நீர்  அல்லது பெருங்குடல் நச்சுத்தன்மை நீக்குதல்  என்றும் அழைக்கப்படும் பெருங்குடல் சுத்திகரிப்பு பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். இந்த வகையான சிகிச்சைகள் பெரும்பாலும் நல்ல பெருங்குடல் ஆரோக்கியத்திற்கான ஒரு செயலாக்கமான அணுகுமுறையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஆனால் உண்மையில் இதில் மருத்துவப் பயன்கள் உள்ளதா?

பெருங்குடல் சுத்திகரிப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்து பழக்கத்தில் இருப்பது தான். முதலில் உணவு பொருட்கள் வழியாக செய்யப்பட்டு வந்தது இப்போது கொஞ்சம் ரசாயனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செய்யப்படுகிறது. தவறான மறுத்து அல்லது விஷம் குடித்தவர்களுக்கு எனிமா கொடுத்து வெளியே எடுப்பது ஒரு வகை.

இன்னொரு முறை:  மலக்குடலுக்குள் ஒரு குழாயைச் செருகி அதிக அளவு நீர் குழாய் வழியாக தள்ளுவர். அது பெருங்குடலில் உள்ளதை அள்ளி வெளியே இறைத்துவிடும். இதுவும் பெருங்குடலை முழுமையாக சுத்தப்படுத்த உதவும். இதை மருத்துவத்தில் சிறந்தவர்கள் தான் செய்வர்.

இதனால் நன்மைகள் என்ன?

உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், எடை இழப்புக்கு உதவுதல், செரிமானத்தை மேம்படுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இது தரும் என்கின்றனர்.

ஆனால் இந்த கூற்றுகளில் ஏதேனும் உண்மை உள்ளதா?

இந்த சிகிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் தரும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் சிலருக்கு நன்மைகள் நடந்துள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. உண்மையில், மருத்துவம் அல்லாத அமைப்பில் இந்த சிகிச்சைகளைச் செய்யும்போது உண்மையில் ஆபத்து உள்ளது.

பெருங்குடல் சுத்திகரிப்பு அபாயங்கள் என்ன?

  • நீங்கள் பெருங்குடல் சுத்தப்படுத்த முயற்சிக்கும் முன் பல அபாயங்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
  • நீரிழப்பு: பெருங்குடலில் இருக்கும் அனைத்தையும் வெளியே எடுக்கும்போது, பெருங்குடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்படும். அதனால் நீரிழப்பு ஏற்படும்.
  • அதே போல அசுத்தமான கருவிகள் உள்ளே சென்றால் அதன் மூலம் நோய்த்  தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால் குடல் புண் அல்லது குடல் தொற்றுகள் ஏற்படலாம்.
  • பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில நிரூபிக்கப்பட்ட வழிகள் :

    ஆல்கஹால் மற்றும் சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். புகையிலையைத் தவிர்க்கவும், வாரத்திற்கு குறைந்தது 3 முறை உடற்பயிற்சி செய்யவும், 45 வயதில் தொடங்கும் கொலோனோஸ்கோபிகளுக்கு உங்கள் மருத்துவரை தவறாமல் பார்க்கவும்.

  • பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும், பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீங்கள் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடலாம். பல ஆய்வுகள் நார்ச்சத்து நிறைந்த உணவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.என்று கூறியுள்ளது.


மன அழுத்தம் முதல் சோர்வு வரை... ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற 5 தேநீர் வகைகள்..!

 டீ , காபி என்பது சிலருக்கு எப்போதாவது குடிக்கும் பானங்கள் . ஆனால் ஒருசிலருக்கு அது ஒரு உயிர்நாடி. அது இல்லாமல் நாளே ஓடாது. பசித்தாலும் டீ, பசிக்கவில்லை என்றாலும் டீ, சந்தோசமாக இருந்தாலும் டீ , சோகமானாலும் டீ என்று இருப்பார்கள். அப்படி  மக்களுக்கு ஒரு சுவாரசிய செய்தி. உங்கள் மூட் பொறுத்து நீங்கள் வெவ்வேறு வகையான டீயை அருந்தும் ட்ரிக் தான் சொல்கிறோம்.

நன்றாக தூங்க வேண்டுமா? கெமோமில் தேநீர் பருகவும். இரவில் தூங்குவதற்கான போராட்டம் உண்மையில் கொடூரமானது. சில சமயங்களில், நீண்ட நேரம் கடுமையான வேலை செய்த பிறகும் கூட, பலருக்கு நல்ல தூக்கம் கிடைப்பது கடினம். நீங்கள் அடிக்கடி இந்த சிக்கலை எதிர்கொண்டால், ஒரு கப் சூடான கெமோமில் தேநீர் பருகுங்கள். அது தயாரிக்கப்படும் டெய்சி மலர்கள் தூக்கத்தைத் தூண்டுவதோடு மனதை அமைதிப்படுத்தவும் உதவுகின்றன.

ஒரு சுறுசுறுப்பு வேண்டுமா? பிளாக் டீயைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் சமீப காலமாக ஆற்றல் குறைவாக உணர்கிறீர்கள். சோர்வாக இருக்கிறதா?  ஆம் எனில், கொஞ்சம் ப்ளாக் டீயை பருகலாம். மற்ற டீகளுடன் ஒப்பிடும் போது இதில் ஏராளமான காஃபின் உள்ளது. FDA இன் படி, ஒரு கப் பிளாக் டீயில் தோராயமாக 30-50 mg காஃபின் உள்ளது. இது விழிப்புணர்வை மேம்படுத்தி உடனடி ஆற்றல் ஊக்கியாக செயல்பட உதவும்.

மன அழுத்தமாக உணர்கிறீர்களா? பெப்பர்மின்ட் டீ உங்கள் நண்பராக மாறலாம். நீங்கள் மன அழுத்தத்தை உணரும்போது, ​​ஒரு கப் புதினா டீயை குடித்துப்பாருங்க. புதினா இலைகளில் உள்ள மெந்தோல் தசை தளர்த்தியாக செயல்படுகிறது மற்றும் தலைவலியையும் குறைக்க உதவுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் நியூரோ சயின்ஸின் கூற்றுப்படி, புதினா மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதோடு நினைவாற்றல் மற்றும் விழிப்புணர்வையும் அதிகரிக்கும்.

உடல்நலமின்மை  இருக்கிறதா? இஞ்சி டீயை பருகவும். வானிலை மாறும் நாட்களில், அல்லது தொண்டை புண் அல்லது சளி இருக்கும் நாட்களில், ஒரு கப் இஞ்சி டீ உங்கள் உடல் நலத்தை மேம்படுத்த உதவும். இஞ்சியின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அதோடு உடல்நலக்குறைவுகள் விரைவில் குணமடையவும் உதவும்.

சோகமாக உணர்கிறீர்களா? லெமன்கிராஸ் டீயை முயற்சிக்கவும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பேசிக் அண்ட் கிளினிக்கல் பார்மகாலஜியின் படி , எலுமிச்சைப் புல்லில் உள்ள எண்ணெய்கள் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. நிச்சயமாக, மனச்சோர்வு போன்ற மனநல கோளாறுகளை நிர்வகிப்பது சாத்தியமில்லை, ஆனால் நீங்கள் பொதுவாக சோகத்தை அனுபவித்தால், அது நிச்சயமாக உதவியாக இருக்கும்.


உங்கள் பிள்ளைகள் உயரமாக வளர வேண்டுமா..? இந்த 2 விஷயங்கள் சரியாக இருந்தாலே போதும்..!

 பெற்றோர் அனைவருக்கும் தங்களுடைய பிள்ளைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருப்பது மிகவும் இயல்பான நியாயமான ஆசை தான். ஆனால் சில நேரங்களில் மரபணு காரணங்களினாலும் வேறு சில குறைபாடுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக தங்களது குழந்தை சரியான உயரத்துடன் வளர வேண்டும் என்பது பெற்றோர்களின் மிகவும் சாதாரண ஒரு ஆசையாகும். உண்மையில் ஒரு குழந்தையின் உயரமானது அதன் மரபணுவை சார்ந்து இருந்தாலும், மரபணுவை தவிர வேறு சில விஷயங்களும் அவர்களின் உயரத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

வெறும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் என்று இல்லாமல் குழந்தையின் மன நலனும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உங்களது குழந்தை ஆரோக்கியமாகவும் சரியான உயரத்துடனும் வளர என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

குழந்தைகளின் உயரத்தில் மன ஆரோக்கியத்தின் பங்கு: குழந்தைகளின் உயரமானது அவர்கள் மனதளவில் எந்த அளவிற்கு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்பதை பொருத்து அமைவதாக உயிரியல் மானுடவியலாளரான பேராசிரியர் பேரி போகின் குறிப்பிட்டுள்ளார். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களின் வளர்ச்சியை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன ஆரோக்கியம் ஹார்மோன்கள் மற்றும் உயரம்: பேராசிரியரை பொறுத்தவரை பிள்ளைகள் எப்போதும் தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும், தனக்கு மிகவும் பிடித்தவர்களிடமிருந்தும் அன்பை அதிகம் எதிர்பார்க்கும். ஒருவேளை தான் எதிர்பார்த்த அன்பு கிடைக்கவில்லை எனில் இது மனதளவில் மிகப்பெரும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். இவை நேரடியாக உடல் வளர்ச்சியிலும் பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக உடல் வளர்ச்சி மற்றும் உயரத்திற்கு காரணமான ஹார்மோன்கள் சுரப்பதில் தடையை ஏற்படுத்துகிறது. இவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் போன்ற காரணிகளும் சேர்ந்து குழந்தை உயரமாக வளர்வதை பாதிக்கின்றது.

மரபணுவின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது : பிள்ளைகளின் மன ஆரோக்கியம் அவர்களின் உயரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், அவர்களின் மரபணு பற்றிய விஷயத்தை நாம் முழுவதுமாக ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் பிள்ளைகளின் உயரம் பெரும்பாலும் அவர்களது மரபணுவை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் மொத்தமாக மரபணு மட்டும் காரணம் என்றோ அல்லது ஒட்டுமொத்தமாக மனநலம் மட்டுமே காரணம் என்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

பிள்ளைகளை அன்புடன் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள வேண்டும் : பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் தேவையான நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக குடும்பமாக சேர்ந்து மகிழ்ச்சியாக நேரம் செலவழிப்பது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த உதவும். மேலும் பிள்ளைகளின் முயற்சியையும் அவர்களின் சாதனைகளையும் பெற்றோர் பாராட்ட வேண்டும் இவை அவர்களின் மனதில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கி தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.

பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான சூழலை உண்டாக்க வேண்டும் : பிள்ளைகள் உணர்வு ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியான ஒரு சூழலை பெற்றோர்கள் உண்டாக்க வேண்டும். குறிப்பாக அவர்களது அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஆகியவற்றை சரியாக அளிப்பதின் மூலம் பிள்ளைகள் அவற்றைப் பற்றி கவலை கொள்ள தேவையற்ற நிலை உண்டாகிறது. அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தாலே அவர்களின் எண்ணங்களும், உணர்வுகளும் சீராக இருக்கும். இதனால் பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பதுடன் விரைவாக விஷயங்களை கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும் முடியும்.



இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி..? டிப்ஸ் இதோ...

 ஒவ்வொரு மனிதருக்கும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆனது சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஹீமோகுளோபின் அளவுக்கதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் கடத்தி செல்லும் முக்கியமான பணியை ஹீமோகுளோபின் செய்கிறது. ஹீமோகுளோபின் குறைபாடு குறிப்பாக பெண்களுக்காக அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் காலங்களில் போது ஏற்படும் இரத்தப்போக்கு இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.


இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான கல்லீரல், பச்சை காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால் இவை உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உதவுகிறது.

குறிப்பாக வைட்டமின் சி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் தான் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக் கொள்ளும். எனவே உடலின் இரும்புச்சத்தை அதிகரிப்பதற்கு முதலில் நாம் வைட்டமின் சி நமது ரத்தத்தில் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நம் உண்ணும் உணவில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிரிய தோள், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். ஒரு வேலை உங்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

ஃபாலிக் எனப்படும் வைட்டமின் பி9 ஆனது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த சிவப்பு அணுக்கள் சரியாக இருந்தால் தான் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கும். இதற்கு பச்சை காய்கறிகளையும், பருப்பு வகைகளையும் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் பி12 இறைச்சிகள் மற்றும் பால் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது எனவே இறைச்சியையும் பால் பொருட்களையும் நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சமையலின் போது கனமான அடி பகுதியை கொண்ட இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதும் உணவில் உள்ள இரும்பு சத்தின் அளவை அதிகரிக்க உதவும்.

மேலும் சில சமயங்களில் எந்த வகை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை விட என்னென்ன விதமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக உடலின் இரும்புச்சத்து கிரகிப்பு தன்மையை குறைக்கும் தன்மை கொண்ட உணவுகளை நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது உதாரணத்திற்கு டீ, காபி மற்றும் கால்சியம் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த வெஜிடபிள் ஜூஸ் போதும்..!



உலகம் முழுவதும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள் அல்லது அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்டவை கொலஸ்ட்ரால் லெவலை அதிகரிக்க செய்து இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கலாம்.

நீங்கள் ஹை கொலஸ்ட்ரால் லெவலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான எளிய இயற்கை வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது. அது ஒரு வெஜிடபிள் ஜூஸ் தான். இந்த வெஜிடபிள் ஜூஸை தொடர்ந்து 3 - 4 மாதங்கள் குடித்து வருவதுடன், சமச்சீரான டயட்டை பின்பற்றி வந்தாலே போதும், கெட்ட கொலஸ்ட்ரால் லெவலை கணிசமாக குறைக்கலாம்.

அது என்ன ஜூஸ் என்று கேட்கிறீர்களா? bottle gourd என்று குறிப்பிடக்கூடிய சுரைக்காய் ஜூஸ் தான் அது. சுரைக்காய் ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதுடன் கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

டயட்ரி ஃபைபர்: டயட்ரி ஃபைபரின் சிறந்த மூலமாக சுரைக்காய் இருக்கிறது. இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்க உதவுகிறது. சுரைக்காயில் இருக்கும் டயட்டரி ஃபைபர் செரிமான மண்டலத்தில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகளுடன் bind-ஆகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றை அகற்ற உதவுகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த கெட்ட கொலஸ்ட்ரால் absorption குறைகிறது.

சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு: சுரைக்காயில் இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த ஒரு காயாக சுரைக்காய் இருக்கிறது. நீங்கள் உங்களது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க விரும்பினால் சுரைக்காயை டயட்டில் சேர்த்து கொள்வதோடு, இந்த காயின் ஜூஸை பருகலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்: சுரைக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது. நாள்பட்ட அழற்சி (Chronic inflammation) இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக இருக்கிறது. சுரைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் இதை எதிர்த்து போராட உதவுகின்றன.

ஹைட்ரேஷன்: சுரைக்காய் பெரும்பாலும் தண்ணீரால் நிரம்பி இருக்கிறது. நீர்சத்து நிறைந்த காயாக இது இருக்கிறது. இதை ஆரோக்கியத்திற்கு நம் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பது முக்கியம். ஏனென்றால் சரியான அளவில் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது ரத்த அளவை பராமரிக்க உதவுகிறது, தவிர இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை எளிதாக்குகிறது. தவிர ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை சிறப்பாக வைக்கிறது.

பொட்டாசியம்: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பொட்டாசியம் சுரைக்காயில் அதிகம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. பொதுவாக பொட்டாசியம் நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தில் சோடியத்தின் விளைவுகளை எதிர்க்க உதவுகிறது. அந்த வகையில் பொட்டாசியம் நிறைந்த சுரைக்காய் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

உங்களுக்கு ஹை கொலஸ்ட்ரால் மற்றும் பிற இதய பிரச்சினைகள் இருக்கிறது என்றால், உங்கள் டயட்டில் சுரைக்காய் அல்லது சுரைக்காய் ஜூஸ் சேர்ப்பதகு முன் உங்கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் டாப் 10 வேலைகள் இவைதான்!!

 இந்தியாவில் அதிக ஊதியம், உற்சாகமான தொழில் வாய்ப்புகளை வழங்கும் பல வேலைகள் உள்ளன. எப்போதும் இந்த அதிக வேலைகள் விரும்பப்படும் தேர்வுகளாக தனித்து நிற்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் முதல் 10 அதிக சம்பளம் தரும் வேலைகள் எவை என விரிவாகப் பார்க்கலாம்.

டேட்டா விஞ்ஞானி: தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற சிக்கலான தரவுத் தொகுப்புகளை அவர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 10-15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்கள்: AI தொடர்ந்து பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தி வருவதால், AI பொறியாளர்கள் அறிவார்ந்த இணைய டூல்களை வடிவமைத்து செயல்படுத்துகின்றனர். அனைத்து தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் தேவை இருந்து வருவதால், வேலை வாய்ப்புகள் அதிகளவில் இதற்கு உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 10-12 லட்சம் ரூபாய் வரை இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது வெறும் சராசரி அளவு தான். இதே துறையில் சிலர் 20 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுகின்றனர்.

பிளாக்செயின் டெவலப்பர்: பிளாக்செயின் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் எழுந்துள்ளதால், பல துறைகளில் இது வளர்ச்சி கண்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 8-12 லட்சம் ரூபாய் சம்பளம் பெறக்கூடிய திறமையான டெவலப்பர்களுக்கான தேவையை இந்த வேலை உருவாக்குகிறது.

மேலாண்மை ஆலோசகர்கள்: வணிகங்களின் செயல்திறன் மற்றும் உத்திகளை மேம்படுத்துவதில் நிபுணத்துவத்தை மேலாண்மை ஆலோசகர்கள் வழங்குகிறார்கள். அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பொறுத்து சராசரியாக ரூ.10 முதல் 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடச் சம்பளத்தைப் பெறுவார்கள்.

முதலீட்டு வங்கியாளர்கள்: சிக்கலான நிதி பரிவர்த்தனைகளைக் கையாளும் பொறுப்பு, முதலீட்டு வங்கியாளர்கள் கையில் தான் உள்ளது. இவர்களது சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 முதல் ரூ.15 லட்சம் என உள்ளது.

ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ்: ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ் சிக்கலான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு உயர் நிலை கட்டமைப்புகளை வடிவமைக்கின்றனர். மேலும் அவர்களின் நிபுணத்துவம் பொறுத்து ஆண்டுக்கு சராசரியாக 8 முதல் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் / மருத்துவ நிபுணர்கள்: சுகாதாரத் துறையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் / மருத்துவ நிபுணர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க நல்ல சம்பளத்தைப் பெறுகிறார்கள். சில நிபுணர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.

தரவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள்: நிறுவனங்களுக்கு இணையப் பாதுகாப்பு முக்கியமானதாக இருப்பதால், தரவுப் பாதுகாப்பு ஆய்வாளர்களிடம் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, ஆண்டுக்கு சராசரியாக 7-10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

பெட்ரோலிய பொறியாளர்கள்: இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுடன், பெட்ரோலிய பொறியாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு சராசரியாக 8-15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.

பட்டயக் கணக்காளர்கள் (Chartered Accountant): இவர்கள் நிதி தொடர்பான காரியங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள். பட்டயக் கணக்காளர்கள் ஆண்டுக்கு சராசரியாக 6-10 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர்.


இந்தத் தொழில்கள் அதிக வருவாய் ஈட்டும் திறனை வழங்கினாலும், அவர்களுக்கு பெரும்பாலும் சிறப்புக் கல்வி, பயிற்சி மற்றும் நிபுணத்துவம் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் திறமையான நிபுணர்களுக்கான தேவை பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இந்த முதல் 10 அதிக ஊதியம் பெறும் வேலைகள் நிறைவான மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறக்கிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்தியாவில் முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்.. அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்..

 இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் ஐபோன்களின் பெரும்பங்கினை தயாரித்து வழங்குகிறது. இந்த சூழலில் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் நாட்டில் தனது முதலீட்டை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.

ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஐபோன் தொழிற்சாலையில் தற்போது 40 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் 600 மில்லியன் டாலர் அளவுக்கு நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதில் இரண்டு தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஐபோன் தயாரிக்கவும், மற்றொன்று மைக்ரோ சிப்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.

உலகின் புதிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக மாறுவதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவில் பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். சீனாவை விட இந்தியாவில் விநியோகச் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாகக் கூறினார். இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மின்சார வாகன உற்பத்தி மையங்களை அமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரீசிலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி வரும் பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களையும் அனுப்பி வருகிறது.

சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த ஐபோன் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தற்போது கிடைத்த தகவல்கள் உறுதி செய்துள்ளன. இதேபோன்று நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன்களையும் ஃபாக்ஸ்கான் சென்னை உற்பத்தி ஆலை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி என்று வரும்போது இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையில் ஒரு பரஸ்பர பந்தம் வளர்ந்து வருவதை தன்னால் உணர முடிவதாக ஃபாக்ஸ்கான் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்சார வாகனங்களின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பு கூடுதல் வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news