Search

சென்னை ESIC நிறுவனத்தில் நேர்காணல் – 26 காலியிடங்கள் || ரூ.1,43,864/- மாத ஊதியம்!

 

சென்னை ESIC நிறுவனத்தில் நேர்காணல் – 26 காலியிடங்கள் || ரூ.1,43,864/- மாத ஊதியம்!

சென்னை ESIC நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Resident பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறவும்.

ESIC காலிப்பணியிடங்கள்:

Senior Resident பணிக்கென 26 பணியிடங்கள் ESIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Senior Resident கல்வி தகுதி:

M.Sc (Medical), MD, MS, DNB பட்டத்தை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Senior Resident வயது வரம்பு:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Senior Resident சம்பளம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level -11 படி, ரூ.67,700/- முதல் ரூ.1,43,864/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ESIC தேர்வு செய்யும் விதம்:

Senior Resident பணிக்கு தகுதியான நபர்கள் 16.11.2023 மற்றும் 17.11.2023 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Women / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.500/-

ESIC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வருமான வரித்துறையில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

 

வருமான வரித்துறையில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

Young Professionals, Legal Consultants, Consultant (Retired Government Officials) ஆகிய பணிகளுக்கு என வருமான வரித்துறையின் இயக்குநரகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வருமான வரித்துறை பணியிடங்கள்:

வருமான வரித்துறையின் இயக்குநரகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Young Professionals – 08 பணியிடங்கள்
  • Legal Consultants – 08 பணியிடங்கள்
  • Consultant (Retired Government Officials) – 04 பணியிடங்கள்
Income Tax Department பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Young Professionals – Law பாடப்பிரிவில் Graduate Degree (LLB)
  • Legal Consultants – Law பாடப்பிரிவில் Graduate Degree (LLB)
  • Consultant (Retired Government Officials) – மத்திய அரசு நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 10 / 11 / 12 / 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்
Income Tax Department பணிக்கான வயது:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Young Professionals – அதிகபட்சம் 30 வயது
  • Legal Consultants – அதிகபட்சம் 35 வயது
  • Consultant (Retired Government Officials) – அதிகபட்சம் 65 வயது
வருமான வரித்துறை மாத சம்பளம்:
  • Young Professionals பணிக்கு ரூ.40,000/- என்றும்,
  • Legal Consultants பணிக்கு ரூ.80,000/- என்றும்,
  • Consultant (Retired Government Officials) பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் கொடுக்கப்படும்.
வருமான வரித்துறையின் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

வருமான வரித்துறைக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் delhi.ito.lr.admin@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (17.11.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form 1

Download Notification & Application Form 2

Download Notification & Application Form 3 


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SDAT தமிழக விளையாட்டு துறையில் ரூ.1.35 லட்சம் ஊதியமாக பெற வாய்ப்பு – விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

 

SDAT தமிழக விளையாட்டு துறையில் ரூ.1.35 லட்சம் ஊதியமாக பெற வாய்ப்பு – விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Expert Coach பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் 01 முதல் 03 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SDAT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், SDAT நிறுவனத்தில் Expert Coach பணிக்கென 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Expert Coach பணிக்கான தகுதி:
  • Expert Coach பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ஒலிம்பிக், World Championship அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவராக, கலந்து கொண்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Level – 3 Course / A License / Pro License முடித்தவராகவும் இருக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Expert Coach வயது விவரம்:
இந்த விளையாட்டு துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Expert Coach சம்பள விவரம்:

Expert Coach பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,35,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

SDAT தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDAT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தமிழக விளையாட்டு துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து establishment.sdat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.11.2023 அன்றுக்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் Operation Manager வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

Wipro நிறுவனத்தில் Operation Manager வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

முன்னணி தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான Wipro தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Operation Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Wipro பணியிடங்கள்:
Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள Operation Manager பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Operation Manager கல்வி விவரம்:

Operation Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Operation Manager பணியமர்த்தப்படும் இடம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் மும்பையில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Operation Manager ஊதியம்:

இந்த Wipro நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் விதம்:

Operation Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.69,920/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.69,920/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

TNUIFSL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது 13.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Assistant Manager, Officer ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNUIFSL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • TNUIFSL நிறுவனத்தில் Assistant Manager, Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் CMA, CA, BE, B.Tech, MBA, Post Graduate Degree, Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • 01.10.2023 அன்றைய தினத்தின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது, Assistant Manager பணிக்கு 40 எனவும், Officer பணிக்கு 35 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Assistant Manager, Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,979/- முதல் ரூ.69,920/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNUIFSL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த TNUIFSL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் hr@tnuifsl.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (06.11.2023) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்த 7 அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் அதிகமான கவலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..!

 ஒரு சிலரை பார்க்கும் போது அமைதியாக, சாந்தமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அவர்கள் மனதிற்குள் கவலைகளும் பதட்டமும் நிரம்பிக்கிடக்கும். எதனால் ஒருவருக்கு இதுபோன்ற கவலைகள் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணத்தை அவ்வுளவு எளிதில் கூறிவிட முடியாது. ஏனென்றல் இது நபருக்கு நபர் மாறுபடும். கடந்த காலத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள், மன அழுத்தம் நிறைந்த தினசரி வாழ்க்கை, கலாச்சார விதிமுறைகள், சமூக எதிர்பார்ப்புகள், மரபணு, போன்றவை இதற்கு பொதுவான காரணமாக இருக்கலாம்.

ஒருவர் கவலையாக இருக்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. சிலர் கவலையாக இருந்தாலும் வெளியுலகிற்கு சந்தோஷமானவராக காட்டிக் கொள்வார். கவலை என்பது ஒருவித மனநோய். இது நம் தினசரி வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாத்தித்து அவரது அறிவாற்றலை சீரழிக்கும். ஆகவே இவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்த கவலை தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகளை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

News18

கவலை, பதட்டம் போன்றவற்றின் பொதுவான அறிகுறிகள் : 

  • எதிலும் பரிபூரணம்: சிலர் எல்லாவற்றிலும் பரிபூரணமாக இருக்க வேண்டும், எதிலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒருவேளை அப்படி இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாகிறது.

  • அதிகப்படியான யோசனை: எப்போதும் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது எதிர்காலத்தில் எப்படியிருக்கப் போகிறோம் என அடிக்கடி கவலைப்படுவதால் மனச்சோர்வு அதிகமாகிறது.

  • அடிக்கடி கவலைப்படுவது: வாழ்க்கையை பற்றியோ, வேலை, உறவுகள், உடல்நலம் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் பற்றி அடிக்கடி கவலைப்படுவது.

  • உடல்ரீதியான அறிகுறிகள்: தலைவலி, வயிற்று வலி அல்லது தூக்கமின்மை, தசைபிடிப்பு போன்றவை கவலை காரணமாக வரும் உடல்ரீதியான அறிகுறிகளாகும்.

  • புறக்கணித்தல்: உங்களுக்கு கவலை, பதட்டத்தை உண்டாக்கும் சந்தர்ப்பங்களை, மனிதர்களை அல்லது நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது.

  • விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாமை: உங்களை பற்றி யாராவது விமர்சித்தால், அதை தனிப்பட்ட தாக்குதலாக கருதுவது அல்லது அந்த விமர்சனம் குறித்து அதிகப்படியாக சிந்திப்பது.

  • காலம் கடத்தல்: ஒரு விஷயத்தை நம்மால் செய்ய முடியுமா என்ற பயம் அல்லது பதட்டம் காரணமாகவோ அல்லது இதை செய்தால் நாம் தோல்வி அடைந்துவிடுவோமா என ஒரு விஷயத்தை செய்யாமல் தள்ளிப்போடுவது.

  • அடுத்தவர்களின் கவனத்தைக் கோருவது: நமது செயல்களுக்கு அடுத்தவர்களின் பாராட்டை, கவனத்தை எதிர்பார்ப்பது. எல்லாரிடமும் நல்லவராக இருக்க வேண்டும் என உங்கள் உண்மையான தோற்றத்தை அடுத்தவர்களிடம் மறைப்பது

  • முடிவெடுப்பதில் சிரமம்: தவறான முடிவு எடுத்துவிடுவோமோ என்றும் அதற்கான பின்விளைவுகளை நாம்தான் சந்திக்க வேண்டும் என்றும் பயந்து எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படுவது.

  • கவலைகளை குறைக்கும் வழிமுறைகள்:

    1. நீங்கள் கவலைப்படுவதால், எந்தளவிற்கு உங்கள் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகிறது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    2. ஆரோக்கியமான சிந்தனைகளை எப்படி வளர்த்துக்கொள்வது மற்றும் கவலைகள், பதட்டங்களில் இருந்து எப்படி வெளியேறுவது போன்றவற்றை தெரிந்துகொள்ள அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

    3. சரிவிகித உணவுப்பழக்கம் மற்றும் சீரான உடற்பயிற்சி உங்களின் கவலையை குறைத்து புத்துணர்ச்சியை உண்டாக்கும்.

    4. ஒரே நேரத்தில் அதிகப்படியான வேலையை செய்யாமல், அதற்கென நேரம் ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக முடியுங்கள். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் வீணான பதட்டத்தை குறைக்க முடியும்.

🔻 🔻 🔻 

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா..? தெரிந்துகொள்ள உடனே இதை செஞ்சு பாருங்க..!

 இன்றைக்கு மாறி வரும் கலாச்சாரங்கள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. யாருக்கு எப்போது என்ன நேரிடும்? என்று சொல்ல முடியாத அளவிற்கு இன்றைய நிலை உள்ளது.

இந்த சூழலில் நாம் எவ்வளவு காலம் வாழ போகிறோம்? என்று தெரிந்துக்கொள்ள முயல்வது அனைவருக்கும் ஆர்வமாக தான் இருக்கும். இதற்காகவே எஸ்ஆர்டி எனப்படும் sit and rise test உங்களுக்கு உதவியாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் மரபணு நோய் மற்றும் பிற உடல் நலப்பாதிப்பு உள்ளவர்களைக் கவனத்தில் கொள்ள முடியாது.

மேலும் இந்த சோதனை துல்லியமான கணிப்பைக் கொடுக்கவில்லை என்றாலும், உங்களின் ஆயுட்காலம் பற்றிய யோசனையை உங்களுக்கு அளிக்க உதவியாக இருக்கும். எனவே இந்த சோதனை குறித்த முழு விபரங்களையும் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்.

News18

எஸ்ஆர்டி சோதனை(Sit and rise Test) :

அமெரிக்காவில் நடைபெற்ற டுடே ஷோவில் பங்கேற்ற மருத்துவர் நடாலி அசார், சிட் ரைசிங் டெஸ்ட் அதாவது எஸ்.ஆர்.டி என அழைக்கப்படும் சிட் டு ஸ்டாண்ட் டெஸ்ட் சோதனைக் குறித்து விளக்கம் அளித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 2,002 பங்கேற்றனர். இதில் 68 சதவீதம் ஆண்களாக இருந்துள்ளனர். இவர்களிடம் தொடர்ச்சியாக எஸ்ஆர்டி சோதனையை மேற்கொண்டுள்ளனர். .இதில் மிகக்குறைவான புள்ளிகளைப் பெற்றவர்கள் அதாவது பூஜ்ஜியத்திலிருந்து 3 வரை புள்ளிகளைப் பெற்றவர்கள், அதிக மதிப்பெண்களைப் (8 முதல் 10 புள்ளிகளை) பெற்றவர்களைக் காட்டிலும் இறப்பதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகம் உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. இவர்களில் 40 சதவீதம் பேர் 11 ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டனர் என எக்ஸ்பிரஸ் யுகே தெரிவித்துள்ளது.

எஸ்ஆர்டி சோதனையை எவ்வாறு மேற்கொள்வது?

  • இந்த சோதனையை மேற்கொள்வதற்கு உங்களுக்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை. மாறாக நீங்கள் செய்ய வேண்டியது எந்த பேலன்சும் (பிடிப்பும்) இல்லாமல் நீங்கள் எப்படி உட்கார்ந்து எழுந்திருக்கிறீர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

  • முதலில் நீங்கள் தரையில் உட்கார வேண்டும். பின்னர் கால்களைக் குறுக்காக அல்லது நேராக வைத்து அப்படியே எழ வேண்டும். குறிப்பாக நீங்கள் எதிலும் சாயாமல், முழங்கால்கள், முழங்கைகள், தொடைகள் மற்றும் கைகளால் எதையும் தொடாமல் மீண்டும் உட்கார வேண்டும்.

  • இதோடு எந்த உதவியும் இல்லாமல் மீண்டும் எழுந்து நிற்கவும். இந்த பயிற்சியை சொல்வதற்கு எளிதாக இருப்பது போன்று தோன்றினாலும், சற்று கடினமான பயிற்சியாகத் தான் உங்களுக்கு இருக்கும்.இதே போன்று நீங்கள் எத்தனை முறை செய்கிறீர்கள்?

    என்பதைப் பொறுத்து தான் உங்களின் பாயிண்ட்ஸ்கள் கணக்கிடப்படும். ஒருவேளை நீங்கள் ஏதேனும் ஒன்றை ஆதரவாகப் பயன்படுத்துகிறீர்கள்? என்றால் ஒரு பாயிண்ட்களைக் கழித்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி அல்லது ஏதேனும் உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்காக மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த சோதனை பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.உங்களின் இறப்பு எப்போது என்பதை முழுமையாக இந்த சோதனையில் தெரிந்துக்கொள்ள முடியாது. அதே சமயம் உங்களது உடல் நிலை எந்தளவிற்கு பாதிப்பில் உள்ளது? என்பதை நீங்களே வெறும் 2 நிமிடங்களில் அறிந்துக்கொள்ள முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



🔻 🔻 🔻 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி...!இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்..

 ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் தொடங்க தொழில் மையத்தின் மூலம் இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் தெரிவிக்கையில் ராமநாதபுரம் மாவட்டம் தொழில் மையத்தின் மூலமாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு பெற UYEGP என்கிற தமிழக அரசின் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெறாமல் இதிலிருந்து 25% அல்லது ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிப்பவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், பொதுபிரிவினருக்கு வயது 18 முதல் 45 வரையிலும், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு வயதானது 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இதில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளத்தினை பயன்படுத்தவும், மேலும், இத்திட்டதில் கடன் பெற்று தொழில் தொடங்க விரும்புவோர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தேனியில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி..! விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ ..!

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள 1 சமூகப்பணியாளர் பதவிக்கான பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், சமூக பாதுகாப்புத்துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் (காலிப்பணியிடம்-1) பதவிக்கு மாதம் ரூபாய் 18,536/ தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க இளநிலை (B.A) சமூகப்பணி, சமூகவியல் பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் நலன் / சமூக நலன் சார்புடைய பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஒருவருட ஒப்பந்த அடிப்படையிலான இப்பணியிடம் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேனி மாவட்ட வலைதளத்தின் மூலம் (https://theni.nic.in/) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் –II , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி-625531.
என்ற முகவரிக்கு 15.11.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TRB exam | பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு காத்துக்கிட்டு இருக்கீங்களா? வந்தாச்சு அப்டேட்.. உடனே அப்ளை பண்ணுங்க!

 தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.

வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு, இன்று முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்  என்றும் தமிழ் வழியில் கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின், 1800 425 6753 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தேர்வர்கள் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news