Search

இன்ஜினியரிங் படிப்பில் பெரிய மாற்றம்; மாணவர்களுக்கு குட் நியூஸ் ஆக மாறும் AICTE பரிந்துரை

 தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு அதிக மாணவர்களைக் கொண்டு வரக்கூடிய நடவடிக்கையாக2024-25 முதல் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்களின் உச்சவரம்பை நீக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது, ஒரு பொறியியல் கல்லூரியில் ஒரு பாடப்பிரிவில் அதிகபட்சமாக 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இந்தநிலையில் இந்த உச்ச வரம்பை நீக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் மொத்த சேர்க்கை விகிதத்தை மேம்படுத்துவதற்கான தேசத்தின் முன்முயற்சியின்படிதற்போதுள்ள கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்லூரிகள்/ படிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பை நீக்க கவுன்சில் முன்மொழிகிறது,” என்று AICTE தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும் என்று கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. உச்ச வரம்பை அதிகரிப்புக்கு அனுமதி வழங்குவதற்கு முன் நிபுணர் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒரு கல்வி நிறுவனம் ஏற்கனவே முக்கிய பாடப்பிரிவுகளில் (Core Branches) குறைந்தது மூன்று படிப்புகளை வழங்கினால் மட்டுமே இடங்கள் அதிகரிக்க அனுமதிக்கப்படும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

சிறந்த பொறியியல் கல்லூரிகள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன. தரமான கல்வியை வழங்கும் கல்லூரிகள் இந்த நடவடிக்கையின் மூலம் தங்கள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும்வளாகங்களை விரிவுபடுத்தவும் முடியும். கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்று அந்த கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சராசரி மாணவர் எண்ணிக்கை 30,000 முதல் 40,000 வரை இருப்பதாகவும்அதே சமயம் இந்தியாவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கைதரமான கல்வியை வழங்கும் இடைநிலைக் கல்லூரிகளில் சேர்க்கையை பாதிக்கும் என்று சிலர் கவலைப்படுகின்றனர். முன்மொழியப்பட்ட நடவடிக்கை உயர்நிலைக் கல்லூரிகளுக்கும் இடைநிலைக் கல்லூரிகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சேர்க்கை குறைந்தால் அவர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது, சில நிறுவனங்கள் கூறுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறுகையில்இந்த நடவடிக்கை இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுக்கும். தற்போதைய நிலவரப்படிதமிழகத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் 2.6 லட்சம் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இந்த பரிந்துரைகம்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய என்ஜினீயரிங் துறை படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கமற்ற பாடங்களில் மாணவர் சேர்க்கை குறையும் வாய்ப்பை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 



🔻🔻🔻

SBI CBO 2023; பட்டப்படிப்பு தகுதி; எஸ்.பி.ஐ-ல் 5309 சர்க்கிள் ஆபிசர் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

 வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு சர்க்கிள் ஆபிசர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி. வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வட்ட அளவிலான அதிகாரி (CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 5,309 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CIRCLE BASED OFFICERS

காலியிடங்களின் எண்ணிக்கை: 5,309

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 31.10.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

அடிப்படை சம்பளம்: ரூ. 36,000

தேர்வு செய்யப்படும் முறைஇந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்படுவார்கள். எழுத்து தேர்வு என்பது கணினி வழி தேர்வாகும்.

எழுத்துத் தேர்வு:

எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். அவை கொள்குறி வகை வினாத் தேர்வு (Objective Test) மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு (Descriptive Test) ஆகும்.

கொள்குறி வகை வினாத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language - 30), கணினி திறனறிதல் (Computer Aptitude - 20) வங்கி தொடர்பான கேள்விகள் (Banking Knowledge - 40) மற்றும் பொது அறிவு மற்றும் பொருளாதாரம் (General Awareness / Economy - 30) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 120 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான மொத்த கால அளவு மொத்தம் 2 மணி நேரம். 

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதியான விரிவாக எழுதுதல் தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள்.

நேர்முகத் தேர்வு

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.12.2023

விண்ணப்பக் கட்டணம்இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

இரயில்வே துறையில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – 1100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

 

இரயில்வே துறையில் ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – 1100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

RRC என்னும் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 25.10.2023 அன்று வெளியிட்டுள்ளது. இதில் வடகிழக்கு இரயில்வேயில் (NER) Apprentice பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 1104 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரயில்வே துறை பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Apprentice பணிக்கு என 1104 பணியிடங்கள் வடகிழக்கு இரயில்வேயில் காலியாக உள்ளது.

Apprentice கல்வி விவரம்:

Apprentice பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10ம் / 12ம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Apprentice வயது விவரம்:
  • இந்த வடகிழக்கு இரயில்வே சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25.11.2023 அன்றைய நாளின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், உடல் ஊனமுற்றவர்கள் – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
Apprentice ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் Apprenticeship விதிமுறைப்படி மாத ஊக்கத்தொகை பெறுவார்கள்.

வடகிழக்கு இரயில்வே தேர்வு செய்யும் விதம்:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வடகிழக்கு இரயில்வே விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / EWS / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.100/-
  • வடகிழக்கு இரயில்வே விண்ணப்பிக்கும் விதம்:

    இந்த வடகிழக்கு இரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 24.12.2023 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

    Download Notification Link

    Online Application Link


🔻🔻🔻

மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் PGIMER பல்கலைக்கழக வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் PGIMER பல்கலைக்கழக வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

PGIMER பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Research Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 05.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

PGIMER காலியிடங்கள்:

PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Research Assistant கல்வி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Science, Biotechnology பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

PGIMER வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Research Assistant சம்பளம்:

Research Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

PGIMER தேர்வு முறை:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Research Assistant விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 05.12.2023 அன்றுக்கு பின் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification Link

Online Application Link



🔻🔻🔻

சென்னை HCL நிறுவனத்தில் Technical lead வேலைவாய்ப்பு 2023 – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

சென்னை HCL நிறுவனத்தில் Technical lead வேலைவாய்ப்பு 2023 – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical lead பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HCL நிறுவன காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் படி, Technical lead பதவிக்கு என பணியிடம் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 2.5 முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையலாம்.

HCL Job Notification 1



🔻🔻🔻