TN MRB Pharmacist வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – சம்பளம்: ரூ.1,30,400/- || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
Pharmacist பணிக்கு என தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN MRB) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் இன்று (28.11.2023) முதல் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
TN MRB பணியிடங்கள்:
Pharmacist பணிக்கு என தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள 28 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Pharmacist (Ayurveda) – 01 பணியிடம்
- Pharmacist (Siddha) – 26 பணியிடங்கள்
- Pharmacist (Unani) – 01 பணியிடம்
TN MRB Pharmacist 2023 கல்வி:
Pharmacist பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TN MRB Pharmacist 2023 வயது:
01.07.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தது 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
TN MRB Pharmacist 2023 ஊதியம்:
இந்த TN MRB சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Pay Matrix Level – 11 படி, ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
TN MRB தேர்வு செய்யும் விதம்:
Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit List என்னும் தேர்வு முறையின் படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TN MRB விண்ணப்ப கட்டணம்:
- SC / SCA / ST / DAP(PH) / MBC / DNC DAP(PH) – ரூ.300/-
- மற்ற நபர்கள் – ரூ.600/-
TN MRB விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 28.11.2023 அன்று முதல் 18.12.2023 அன்று வரை https://www.mrb.tn.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification Link 1
Download Notification Link 2
Download Notification Link 3
Online Application Link
🔻🔻🔻