Day 25 | பத்துப்பாட்டு நூல்கள், திருக்குறள்-வாய்மை, காலம் | Mr.S.Vijayakumar
Click here to download pdf file
🔻🔻🔻
Day 25 | பத்துப்பாட்டு நூல்கள், திருக்குறள்-வாய்மை, காலம் | Mr.S.Vijayakumar
Click here to download pdf file
🔻🔻🔻
மத்திய அரசின் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் இண்டர்ன்ஷிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Internship
காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித் தகுதி : Postgraduate degree or Bachelor degree in any discipline (3 Years / 4 Years
including Engineering) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத்தொகை : ரூ. 22,500
தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apply.registernow.in/NBA/Registration2023/ என்ற இணையதளப்
பக்கம் மூலமாக ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.12.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://nbaindia.org/uploaded/pdf/bsip.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
NTPC Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
NTPC Limited வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Mining Overman, Magazine Incharge, Mechanical Supervisor, Electrical Supervisor, Vocational Training Instructor, Junior Mine Surveyor, Mining Sridar பணிக்கென காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அலல்து கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Diploma Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Competency Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.12.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
🔻🔻🔻
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது Superintending Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Superintending Engineer பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சியுடன் 9 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,000/- முதல் ரூ.18,250/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
DRDO ஆனது Stores Officer, Administrative Officer, Private Secretary பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 102 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Stores Officer, Administrative Officer, Private Secretary பணிக்கென காலியாக உள்ள 102 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Level 7 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 45 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
மத்திய மின்அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பயிற்சி (எலக்ட்ரீசியன்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 12.12.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: இந்த ஆள்சேர்க்கை மூலம் 203 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், பொதுப் பிரிவினருக்கு 89 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 47 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 18 இடங்களும், பட்டியல் இனத்தவருக்கு 39 இடங்களும், பழங்குடி இனத்தவருக்கு 10 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: எலக்ட்ரீசியன் பாடப்பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டய படிப்பு, பிஇ, பிடெக் உள்ளிட்ட உயர்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயதுக்கான தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் 12.12.2023 அன்று 27 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.
தேர்வு முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer
Based written Test), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ரீதியான தேர்வு (Document Verification & Trade Test) ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த காலிப்பணியிடங்களுக்கான ஊதியங்ங்கள் மற்றும் பணி நிபந்தனைகள், பணியின் தன்மை, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவைஆள்சேர்க்கை அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
🔻🔻🔻
NHPC Limited ஆனது Apprenticeship ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு Degree, Diploma & ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான தகுதி விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Graduate Apprentice, Technician Apprentices மற்றும் Trade Apprentice பதவிக்கு என மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/தொழில்நுட்பக் கல்வி வாரியத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Degree, Diploma & ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும் திறமையும் உள்ள கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 20.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது Administration/Back Office Activities Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31/08/2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Administration/Back Office Activities Assistant பதவிக்கு என 31 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
08/12/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். 08/12/1983 மற்றும் 08/12/2005 அல்லது அதற்கு இடையில் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் மூலம் 31/01/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻
ONGC ஆணையம் ஆனது NAPS-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Domestic Data Entry Operator பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Domestic Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும்.
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Professor, Associate Professor, Assistant Professor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ESIC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 2,39,607/- மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Professor, Associate Professor, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 20 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Teaching Experience கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,39,607/- மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.12.2023, 21.12.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻