தொழிலாளர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Professor, Associate Professor, Assistant Professor ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ESIC காலிப்பணியிடங்கள்:
ESIC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Professor – 09 பணியிடங்கள்
- Associate Professor – 20 பணியிடங்கள்
- Assistant Professor – 22 பணியிடங்கள்
ESIC கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் NMC விதிமுறைப்படி பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ESIC வயது வரம்பு:
இந்த ESIC பணிகளுக்கான நேர்காணலில் 11.01.2024 அன்றைய தினத்தின் படி, 67 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
ESIC ஊதியம்:
- Professor பணிக்கு ரூ.2,22,543/- என்றும்,
- Associate Professor பணிக்கு ரூ.1,47,986/- என்றும்,
- Assistant Professor பணிக்கு ரூ.1,27,141/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
ESIC தேர்வு முறை:
இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 11.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ESIC விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PWBD / Female / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.225/-
ESIC விண்ணப்பிக்கும் முறை:
இந்த ESIC பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து 11.01.2024 அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்குள் நேர்காணல் நடைபெறவுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.