Search

Madras High Court வேலைவாய்ப்பு 2024 – மாத சம்பளம்: ரூ.71,900/- || முழு விவரங்களுடன்!!

 

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Typist, Telephone Operator, Cashier, Xerox Operator பணிக்கான 33 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

Typist, Telephone Operator, Cashier, Xerox Operator பணிக்கென காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Typist தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:

  • SC /SC(A) /ST / MBC & DC / BC / BCM – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Others / Unreserved categories – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • In-Service candidates – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Typist ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

  • Typist – ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை
  • Telephone Operator – ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை
  • Cashier – ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை
  • Xerox Operator – ரூ.16,600/– முதல் ரூ.60,800/- வரை

மெட்ராஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப கட்டணம்:

Examination fee – ரூ.500/- (SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு)

Typist தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Examination, Skill Test, Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும்  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அதற்கான இணைய முகவரியை கீழே வழங்கியுள்ளோம்.

🔻🔻🔻

100% வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: தாட்கோ அறிவிப்பு

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு,  NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் துறை பயிற்சியை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பட்டயப் படிப்பு / பொறியியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி (Industrial Automation) மற்றும் டிஜிட்டல் உற்பத்தியில் (Digital Manufacturing) திறன் மேம்பாட்டு பயிற்சியை,  NTTF  மூலம் வழங்கவும், புகழ் பெற்ற தனியார் தொழில் சாலைகளில் வேலை வாய்ப்பு பெற்றுதரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News18

மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பட்டயப்படிப்பு/ பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

ரூ.2.25 லட்சம் வரை மானியம்: பலருக்கும் தெரியாத அரசின் திட்டம்... வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆதிதிராவிட / பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

இதில்,  இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் (Self Employment Programme for Youth (SEPY) கீழ் படித்த, வேலையற்ற இளைஞர்கள் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து ரூ.2.25 லட்சம் வரை தொழில் மானியம் பெற்று வருவாய்  ஈட்டும் தொழிலை மேற்கொள்ளலாம்.இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்:  படித்த, வேலையற்ற அல்லது குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஆதி திராவிட இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த விருப்பமான தொழிலில் மானியம் மற்றும் கடன் உதவி பெற்று வருவாய் ஈட்டி பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் பொருட்டு இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் இருக்க வேண்டும்; வயது 18-க்கு மேல் 35-வயதிற்குள்ளாகவும் இருக்கவேண்டும்; கடன் மற்றும் மானியம் கோரும் தொழிலை பற்றி அறிந்தவராகவோ அனுபவம் உள்ளவராகவோ இருக்க வேண்டும்; விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது; தாட்கோ, மாநில அல்லது மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களின் தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

திட்டமதிப்பீட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 30% அல்லது ரூ.2.25 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன் விடுவிப்பு மானியமாக (Front End Subsidy) இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் கீழ்கண்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: - துவங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும்; இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே - பதிவு செய்யப்பட வேண்டும்; விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும்.


விண்ணப்பம் பெறும் முறை:- விண்ணப்பம் இலவசமாக மாவட்ட மேலாளர்கள் அலுவலகத்தில் வழங்கப்படும் அல்லது தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.tn.gov.in) உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யலாம். இணையதளத்தில்  Self Employment Programme for Youth என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (2 நகல்களில்) விண்ணப்பதாரரின் புகைப்படம் ஓட்டப்பட்டு கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைத்து மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சாதி சான்று; குடும்ப ஆண்டு வருமானச் சான்று; குடும்ப அட்டை நகல் / வட்டாட்சியர் கையொப்பமிடப்பட்ட இருப்பிட சான்று; விலைப்புள்ளி டின் எண்னுடன் (Quotation with TIN No.); ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் (வாகன கடனுக்கு மட்டும்); முன் அனுபவச் சான்றிதழ்; மாவட்ட மேலாளர் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள்


திட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சொத்து உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதியளித்து விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதார்களைத் தெரிவு செய்யும் முறை: மாவட்ட மேலாளர்களால் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து மாவட்ட அளவிலான கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட தேர்வுக் குழு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்.மாவட்ட மேலாளர் தலைவர்/ மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் உறுப்பினர்/ பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் - உறுப்பினர் ஆகியாரைக் கொண்ட தேர்வு குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தாட்கோ மானியத் தொகைக்கான பரிந்துரையுடன் வங்கிக்கு அனுப்பப்படும்.

நிதி விடுவிக்கும் முறை:- வங்கிகடன் தொகை அளிப்பதற்கான ஒப்புதல் கடிதம் (Form III) பெறப்பட்டவுடன் தாட்கோ மானியம் மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைப்படி வங்கிக்கு நேரடியாக விடுவிக்கப்படும். வங்கி மேலாளர், திட்ட மதிப்பீட்டின்படி சொத்து உருவாக்குவதற்கான தொகையினை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கு தொழில் புரியத் தேவையான பொருட்கள் / வாகனங்கள் வாங்குவதற்காக நேரடியாக விடுவிப்பார்.


🔻🔻🔻

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... ₹20000 வரை சம்பளம்... ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

 வடசென்னையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஆலோசகர் (Senior Counsellor) (காலிப்பணியிடம் - 1)

கல்வித் தகுதி: சமூகப் பணி, ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology or Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் முதுகலை பட்டம் M.S.W (Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது 1 வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது வெளியிலோ பணிபுரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம் ரூ,20.000/- ஆகும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் - 1 )

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 14.02.2024 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாகவும், மின்னஞ்சல் (oscnorthchennai@gmail.com) மூலமாகவும் விண்ணப்பம் செய்திடலாம். விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்

🔻🔻🔻

Day 60 | Geography | Part 7 | Rivers

 Day 60 | Geography | Part 7 | Rivers 

Click here to download pdf file



Day 60 | சமய முன்னோடிகள் MCQ மற்றும் திருக்குறள்

 Day 60 | சமய முன்னோடிகள் MCQ மற்றும் திருக்குறள்

Click here to download pdf file





NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.67000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.67000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பின்வரும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. General Manager (Land Acquisition & Estate Management) பதவிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09.02.2024 க்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NHAI காலிப்பணியிடங்கள்:

General Manager (Land Acquisition & Estate Management) பதவிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

NHAI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ..37400-67000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.nhai.gov.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த மத்திய அரசு பணிக்கு 09.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf
Apply Online



🔻🔻🔻

ASRB-யில் ரூ.1,44,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

 

ASRB-யில் ரூ.1,44,200/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

Research Management (Director / Joint Director) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Agricultural Scientists Recruitment Board (ASRB) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Doctoral degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Research Management (Director / Joint Director) பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Doctoral degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Level 14 அளவில் (Rs.1,44,200 – Rs.2,18,200) ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC,ST,PwBD, பெண்கள் தவிர மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.01.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

TNHRCE யில் மாதம் ரூ.62,000/- சம்பளத்தில் வேலை – தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNHRCE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.16750/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Executive Engineer  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு ஒரு பணியிடம்  காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 23.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:

Executive Engineer பதவிக்கு 1 பணியிடம்  காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree or equivalent in Mechanical/ Electrical/ Electronics & Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engineer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Executive Engineer பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,750-300-16750/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.02.2024  க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻