Search

சென்னை DRDO – CVRDE நிறுவனத்தில் 60 காலியிடங்கள் – ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

 DRDO – CVRDE நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் IT Apprentices பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென, மொத்தமாக 60 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO – CVRDE காலியிடங்கள்:

DRDO – CVRDE நிறுவனத்தில் IT Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 60 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Carpenter – 02 பணியிடங்கள்

Computer Operator & Programming Assistant – 08 பணியிடங்கள்

Draughtsman – 04 பணியிடங்கள்

Electrician – 06 பணியிடங்கள்

Electronics – 04 பணியிடங்கள்

Fitter – 15 பணியிடங்கள்

Machinist – 10 பணியிடங்கள்

Mechanic – 03 பணியிடங்கள்

Turner – 05 பணியிடங்கள்

Welder – 03 பணியிடங்கள்

IT Apprentices கல்வி:

IT Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

IT Apprentices வயது:

01.12.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

IT Apprentices ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

DRDO – CVRDE தேர்வு செய்யும் விதம்:

IT Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Screening Test மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO – CVRDE விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DRDO – CVRDE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://rac.gov.in என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

 Guest Lecturer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு MKU-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Guest Lecturer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
    • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு MKU-ன் நிபந்தைங்களின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.02.2024 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது.

நிலக்கரி சுரங்கத்தில் 630+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || Diploma தேர்ச்சி போதும்!

 NLC ஆனது Graduate & Technician (Diploma) Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 632 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate & Technician (Diploma) Apprentice பணிக்கென காலியாக உள்ள  632 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,028/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.02.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அறிவிப்பு!

 தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 10ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

வேலையில்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களின் வாட்டத்தை போக்க தமிழக அரசால் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ரோவர் கல்வி நிர்வாகம் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இம்முகாமில் 08ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்து கொண்டு பயன் அடையலாம். இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த MRF நிறுவனம் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களில் காலியாக 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும் இம்முகாமில் வெளிநாட்டு நிறுவனங்கள், சுயதொழில் செய்வது, அரசு கடனுதவி பெறுவது போன்றவை பற்றியும் கலந்துரையாடப்பட உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது ஆதார் அட்டை, சுயவிவர பட்டியல் (CV), தேவையான சான்றிதழ்களின் நகலுடன் 10.09.2024 அன்று காலை 9.00 மணிக்கு முதல் மதியம் 3.00 மணி வரை ரோவர் மேல்நிலைப்பள்ளி மைய வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது ஆதார் அட்டை., பான் கார்டு, GST எண்ணுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவலை 9499055913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


🔻🔻🔻

இந்திய கடலோர காவல்படை Navik வேலைவாய்ப்பு 2024 – 260 காலிப்பணியிடங்கள்!

 இந்திய கடலோர காவல்படையானது கடலோர காவல்படையில் பதிவுசெய்யப்பட்ட பணியாளர் தேர்வு (CGEPT) மூலம் 260 Navik (பொது கடமை) ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://joinindiancoastguard.cdac.in/ இல் 13.02.2024 @ 11.00 AM முதல் 27.02.2024 @ 05.30 PM வரை  செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:

வடக்கு – 79 பணியிடங்கள்
மேற்கு – 66 பணியிடங்கள்
வடகிழக்கு – 68 பணியிடங்கள்
கிழக்கு – 33 பணியிடங்கள்
வட மேற்கு -12 பணியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் – 03 பணியிடங்கள்

என மொத்தம் 260 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

பள்ளிக் கல்விக்கான கவுன்சில் (COBSE) அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் கணிதம் மற்றும் இயற்பியலுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Navik வயது வரம்பு:

Navik (GD) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01 செப்டம்பர் 2002 முதல் 31 ஆகஸ்ட் 2006 வரை (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கி) பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 க்குள் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அறிவிப்பு!

சம்பள விவரம்:

Navik (GD)பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Stage- I (Computer Based Examination)
Stage – II (Assessment/Adaptability Test, Physical Fitness Test, Document Verification & Recruitment Medical Examination)
Stage – III (Document Verification, Pre-enrolment Medicals at INS Chilka)
Stage – IV (Training at INS Chilka)

 விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 13.02.2024 முதல், இந்திய கடலோர காவல்படை இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில், அதாவது https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் 27.02.2024 @ 05.30 PM வரை மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

Central Bank of India-வில் Faculty வேலை – ஊதியம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!

 Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Faculty, Watchman/Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.


Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Faculty, Watchman/Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்கள் நிரப்ப  உள்ளது.

Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 7ம் வகுப்பு / Graduate / Post-graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Central Bank of India வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.02.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

PGIMER பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 PGIMER பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Field Investigator, Data Scientist, Database Programmer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER பணியிடங்கள்:

PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator, Data Scientist, Database Programmer பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

PGIMER கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Field Investigator – MPH

Data Scientist – Post Graduate Degree, Ph.D (Statistics / Biostatistics)

Database Programmer – B.Tech, M.Tech, Ph.D

PGIMER அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

PGIMER ஊதிய விவரம்:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

PGIMER தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER விண்ணப்பிக்கும் வழிமுறை:

Database Programmer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 15.02.2024 என்ற இறுதி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 15.02.2024 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை (CV) saltfortificationpgi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.56,000/- || நேர்காணல் மட்டுமே!

 

ICMR NIIRNCD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Research Scientist-I, Project Technical Support-III பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.33,040/- மாத ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist-I, Project Technical Support-III பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Technical Support-III கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Master’s degree / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Technical Support-III ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.56,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.02.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻

NRCB திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-

 

NRCB திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது. எனவே, தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NRCB திருச்சி காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

SRF வயது வரம்பு:

தேசிய வாழை ஆராய்ச்சி மைய அறிவிப்பின் படி,  ஆண்களுக்கான அதிகபட்சம் 35 வயது மற்றும் பெண்களுக்கான அதிகபட்ச வயது 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்துM.Sc/PhD in Plant Pathology or Microbiology or Biotechnology or Life Science முடித்திருக்க வேண்டும்.

SRF தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2024-க்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரூ.7,000/- ஊக்கத்தொகையில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் University Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 12.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் University Research Fellow பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

 University Research Fellow கல்வி தகுதி:

University Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Physics, Material Science பாடப்பிரிவில் PG Degree, Ph.D முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

University Research Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

 University Research Fellow ஊக்கத்தொகை:

University Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

University of Madras தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் 15.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

University of Madras விண்ணப்பிக்கும் முறை:

University Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் ரூ.200/- ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்திய ரசீதையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 12.02.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.


🔻🔻🔻