Search

திருச்சியில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:

Project Assistant & Associate பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சம்பள விவரம்:

Project Associate – ரூ. 35,000/-
Project Assistant – ரூ.  15,000/-

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  ME/M.Tech, Post Graduation Degree படித்தவர்கள் Project Associate பதவிக்கும், BE/B.Tech, Degree, Diploma படித்தவர்கள் Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், சிவில் இன்ஜினியரிங் துறை, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி-620015-ல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, உரிய சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள், தரம்/மதிப்பெண்கள், கேட், பயோடேட்டா போன்றவற்றின் அசல் மற்றும் புகைப்பட நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.


🔻🔻🔻

சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.20800/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Deputy Chief Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு 2 பணியிடங்கள்  காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:

Deputy Chief Engineer பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engineer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.160000 – 400 – 20800 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுக பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  28.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – சம்பளம்: ரூ.21,000/-

 அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Research Assistant பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 26.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகம் காலியிடங்கள்:

Research Assistant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Research Assistant கல்வி:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, MCA, ME, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Research Assistant வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Research Assistant மாத ஊதியம்:

Research Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.21,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Research Assistant தேர்வு செய்யும் விதம்:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Anna University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் src@auist.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

சென்னை TCS நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

 தனியார் IT நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Business Analyst பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.TCS பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Business Analyst பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Business Analyst கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / கல்வி வாரியங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Business Analyst அனுபவ விவரம்:

Business Analyst பணிக்கு 06 முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Business Analyst பிற தகுதி:

  • Core Java
  • Functional programming
  • Strong Business Analysis

TCS தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 18.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

தமிழக KVK நிறுவன வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.56100/-

 அரியலூர் க்ரிஷி விக்யான் கேந்திரா, ஆனது காலியாக உள்ள  அனைத்து பதவிகளுக்கும் ஆன வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, SMS (Animal Science) மற்றும்  Stenographer (Grade –III) ஆகிய பதவிகளுக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.KVK காலிப்பணியிடங்கள்:

SMS (Animal Science) மற்றும்  Stenographer (Grade –III) ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து SMS (Animal Science) பதவிக்கு Master’s degree யும் Stenographer (Grade –III) பதவிக்கு 12 ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

KVKசம்பள விவரம்:

SMS (Animal Science) – ரூ.56100/- (Level 10)
Stenographer (Grade –III) – ரூ. 25500/- (Level 4)

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
General விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் வேலை வாய்ப்பு; 300 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 300 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 32 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 300

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் 

இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், 

வயது சலுகை உண்டு.

சம்பளம்: 37,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு 

என இரண்டு படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 

இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் 

கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். 

இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் 

என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. 

முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு 

அழைக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். 

முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 

250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 

இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) என மொத்தம் 250 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibpsonline.ibps.in/niacljan24/ என்ற இணையதள பக்கத்தில்

 விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2024

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS 

பிரிவினருக்கு ரூ.850. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 

https://www.newindia.co.in/assets/docs/recruitment/RECRUITMENT-OF-ADMINISTRATIVE-OFFICERS2023/DETAILED%20ENGLISH%20ADVERTISEMENT%20-%20ASSISTANT%20RECRUITMENT%202023.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

தென்காசி இளைஞர்களுக்கான நற்செய்தி..!! சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!!

 தென்காசியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சியில் 17.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் 2 .00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100- க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8- வகுப்பு முதல் முதுகலை பட்டதாரி வரை (B.E, Diploma, Nursing, ITI( படித்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivate jobs.tn.gov.in என்ற தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram channelல் இணையவும். உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு TENKASI EMPLOYMENT OFFICE என search செய்தால் எங்கள் அலுவலக Channel தோன்றும். அதன் உள் நுழைந்து Join என்பதனை click செய்து எளிதில் Channel-ல் இணையலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

🔻🔻🔻



🔻🔻🔻

தேனி மாவட்ட ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு... விண்ணப்பிக்கும் முறை இதோ...

 தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு :

தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 17 ஆண்கள் மற்றும் 08 பெண்கள் மற்றும் இதர காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த நபர்களிடமிருந்தும் , 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது .

ஊர்க்காவல்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள தேனி அனைத்து மகளின் காவல் நிலையம் முதல் தளத்தில் செயல்படும் ஊர்க்காவல்படை அலுவலகத்தை அணுகி 14.02.2024 & 15.02.2024 ஆகிய இரண்டு நாட்களில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றுக்கொண்ட விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து 17.02.2024-க்குள் நேரில் அல்லது தபால், பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும். பின்பு விண்ணப்பதாரர்களை வரவழைத்து பின்னர் அறிவிக்கப்படும் நாளில் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில் 05 நாட்கள் பணி வழங்கப்படும். இந்த 05 நாட்கள் பணிக்கு நாளொன்றுக்கு ரூ.560/- வீதம் படித்தொகையா ரூபாய் 2800 வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பும் நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால் பதிவுத்தபால் மூலம் வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் - முதல் தளம்,தேனி, தேனி மாவட்டம்-625531. என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பலாம்.

🔻🔻🔻

UPSC IFS தேர்வு அறிவிப்பு 2024 – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

UPSC IFS தேர்வு அறிவிப்பு 2024 – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வனத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக புது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இந்திய வன சேவைகள் – IFS ல் பல்வேறு பதவிகளுக்கு என்று 150 காலியிடங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC IFS காலிப்பணியிடங்கள்:

இந்திய வன சேவை தேர்வின் மூலம் மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

IFS கல்வி தகுதி:

இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டம் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 இன் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகமாகக் கருதப்படும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியைப் பெற்றுள்ள பிற கல்வி நிறுவனங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.08.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 32 வயதை எட்டாமல் இருக்க வேண்டும். அதாவது, அவர் 02.08.1992 முதல் 01.08.2003 க்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

UPSC IFS தேர்வு செயல் முறை:

Indian Forest Service (Preliminary) Examination (Objective type)

Indian Forest Service (Main) Examination (Written and Interview)

Interview/Personality Test

விண்ணப்பக் கட்டணம்:

பெண்/SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது

மற்ற அனைவருக்கும் – ரூ.100/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் UPSC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://upsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 14.02.2024 முதல் 05.03.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 Pdf

Apply Online

🔻🔻🔻

JIPMER ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.67,000/- || உடனே விரையுங்கள்!

 Legal Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.58,000/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Associate பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / BDS / BHMS / BAMS / BSMS / MSc Nursing / MPT (Neuro) / Diploma in Clinical Trials or Clinical Research / Diploma in Epidemiology / MPH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.58,000/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல்(21.02.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் jipmer.hbsr@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.