Search

TNPSC குரூப்-4 தேர்வுக்கு தயாராகிறீர்களா? உங்களுக்கான ஈஸி டிப்ஸ் இது...

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 30, 2024 அன்று அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பதவிகள் மற்றும் வயது வரம்பு கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள்..

TNPSC குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வுக்கான வயது வரம்பு:

குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VAO தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி என்ன:

TNPSC VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு தயாராகுவது எப்படி?

குரூப் 4 தேர்விற்கு தயாராகுவது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பயிற்சி ஆசிரியர்கள் அருள்தாஸ் மற்றும் சத்தியசீலன் கூறும் டிப்ஸ்கள் சிலவற்றை பார்க்கலாம்.

1) புத்தகங்களை சேகரித்தல்:

இந்த குரூப் 4 போட்டித் தேர்வில் தேர்வு எழுதும் மாணவர்கள் முதலாவதாக பாடத்திட்டங்களுக்கு ஏற்ப 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை சேகரித்து கொள்வது மிக அவசியமானதாகும்.

2) நேரத் திட்டமிடல்:

தேர்வுக்கு தயாராகும் நேரத்தை திட்டமிடல் மிகுந்த அவசியமானதாகும்.இதில் தமிழ் மற்றும் பொது அறிவு கணிதம் உள்ளிட்ட பாடங்கள் படிப்பதற்கான நேரங்களை திட்டமிட்டு பின்பற்றுதல் முக்கியமானவை.

3) தமிழ் பாடத்தில் முக்கியத்துவம்:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள தமிழ் பாட புத்தகங்களை முழுவதுமாக படிப்பது தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். செய்யுள் பகுதியில் நூல் குறிப்பு, நூல் ஆசிரியர் குறிப்பு, நூல் ஆசிரியரின் பிற நூல்கள் கவனம் செலுத்துவது நல்லது மேலும் தேர்வில் 50 சதவீத வினாக்கள் தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால் அதிக கவனம் தமிழ் பாடத்திற்கு முக்கியமானது.

4) கணித பாடம்:

கணிதத்தில் மாதிரி வினாக்களை பயிற்சி செய்வது பயனுள்ளதாக அமையும் இதில் 25 வினாக்கள் பாடத்திட்டங்கள் மற்றும் முந்தைய வினாக்களில் இருந்து தேர்வில் கேட்கப்படுவதால் தமிழைப் போலவே கணிதத்திற்கு கவனம் முக்கியமானது.

5) மாதிரி தேர்வுகள்:

மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்வது தேர்வு அன்று மிகவும் பயனுள்ளதாக அமையும். வாரத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை மாதிரி தேர்வுகளை எழுதி பார்ப்பது நல்லது. இதனை தொடர்ந்து தேர்வு நேரங்களில் ஓய்வு உடலுக்கு மிகவும் அவசியமானவை.  அதிக நேரம் விழித்திருப்பது சோர்வை ஏற்படுத்தும் ஆகையால் தேர்வுக்கு முந்தைய நாட்களில் ஓய்வு எடுத்துக் கொள்வது தேர்வு அன்று புத்துணர்ச்சி ஏற்பட பயனுள்ளதாக அமையும்.

6)  மாதிரி வினாக்கள்:

கடைசி மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை சேகரித்து அதை மாதிரியாக கொண்டு பாடத்திட்டங்களை படிப்பது பயன் தரும்.

7) கலந்துரையாடல்:

தேர்விற்கு தயாராகும் போது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் வினாக்களில் மீதான கலந்துரையாடல்களை சக போட்டியாளர்களுடன் விவாதிப்பது செய்வது மேலும் பல்வேறு சந்தேகங்களை தீர்க்க வல்லதாக அமையும்.

8) இறுதியான டிப்ஸ்:

மேலும் தினசரி செய்தித்தாள்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். இத்தேர்வில் பாடத்திட்டம் பள்ளி பாடப் புத்தகங்களில் பெரும்பாலும் உள்ளது. அதனால் பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்து கொள்வது காட்டாயம். பள்ளிப் புத்தகங்களை முழுவதுமாகப் படித்து முயற்சி செய்தால் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராகலாம்.

🔻🔻

Click here to join Group4 whatsapp group

குரூப் 4 தேர்வில் பெண்கள் வெற்றி பெற டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்..!!

 தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த குருப் 4 தேர்வு முடிவுகள் அமைய உள்ளது. பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடுடன் வெளியாக உள்ள இந்த தேர்வு முடிவில் பொது பிரிவிலும் பெண்களுக்கான இடம் கிடைக்கும். இதனால் பெண்கள் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ள நிலையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தோராயமாக சுமார் 5 மதிப்பெண்கள் வித்தியாசம் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த தேர்வில் பெண்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு 18 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் எழுதலாம். பொது அறிவு, திறனறித் தேர்வு மற்றும் மாெழிப்பாடத்தில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணிநேரம் தேர்வு நடைபெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண். எளிதாக இருக்கும் தேர்வு தான் இது.

படித்து முடித்து ஒரு 3-4 வருடத்திற்குள் தேர்வு எழுதினால் 150 மதிப்பெண் நிச்சயம் எடுக்கலாம். ஏனெனில் நீங்கள் பள்ளியில் படித்தது தான் இதற்கு மொத்த கேள்விகளும் வரும். தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.6-12 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் நன்றாக படியுங்கள். தினசரி நாளிதழ் படித்தல் அவசியம். அனைவரும் செய்திகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தேர்வு நடைபெறும்.

குரூப் 4தேர்வுக்கு தயார் செய்யும் முறை:

குரூப்-4 தேர்வுக்கு தமிழ் 100 வினாக்கள், கணிதம் 25 வினாக்கள், பொதுஅறிவு 75 வினாக்கள் கேட்கப்படும். பொதுவாக கட்-ஆஃப் மதிப்பெண் தேர்வின் கடினத் தன்மையைப் பொறுத்து மாறும். ஆனால் 180 கேள்விகளுக்கு சரியாக விடை அளிக்கும் பட்சத்தில் வேலை பெறுவது உறுதி. இதற்கு மொழி படத்தில் குறைந்தது 95 வினாக்களுக்கு சரியாக விடையளிக்க வேண்டும். 11 மற்றும் 12 வகுப்பு புத்தகங்கள் படிக்கும் பட்சத்தில் கூடுதலாக 6 முதல் 7 கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.

கணிதத்தைப் பொறுத்தவரை ஆறு முதல் பத்தாம் வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இருந்து மட்டுமே அனைத்து கேள்விகளும் கேட்கப்படும். பொது அறிவு பொருத்தவரை பத்தாம் வகுப்பு வரை படிப்பது போதுமானதே. 11 12ஆம் வகுப்பு புத்தகங்கள் படிக்கும் பட்சத்தில் கூடுதலாக 10 கேள்வி வரை விடை அளிக்க முடியும். அறிவியல் படிப்பதற்கு கடினமாக உணரும் பட்சத்தில், உயிரியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு. வேதியியல் மற்றும் இயற்பியல் முக்கியமான சில பகுதிகளை படித்தால் போதுமானது.

Current affairs பொருத்தவரை தினமும் குறைந்தது ஒரு செய்தித்தாள் கட்டாயமாக படிக்கவேண்டும். இந்து தமிழ் நல்லது. ஒரே புத்தகத்தை பலமுறை படிப்பது சிறந்தது . ஒரு பாடத்திற்கு பல புத்தகங்களை படிப்பது நேரத்தை வீணாக்கும். வாரத்திற்கு குறைந்தது மூன்று மாதிரி தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். இவற்றை பின்பற்றும் பட்சத்தில் கண்டிப்பாக 180 கேள்விகளுக்கு விடையளிக்க முடியும். பள்ளி சமச்சீர் புத்தகங்கள் மட்டுமே போதுமானது.

பெண்கள் வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள்:

குரூப் நான்கு தேர்வில் பெண்கள் வெற்றி பெறுவதன் மூலம் அரசாங்க வேலையுடன் கர்ப்ப காலங்களில் விடுப்புகளும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மணி நேரங்களில் மட்டுமே வேலை செய்தால் போதும் அதிக வேலைப்பளு இருக்காது. நல்ல சம்பளத்துடன் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

TNPSC: குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா... உங்களுக்கான செய்தி இது... மிஸ் பண்ணிடாதீங்க.

 அரசு வேலைக்காக தமிழ்நாடு அரசு சார்பாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘குரூப் - 4’ தேர்வுகளை நடத்தவிருக்கிறது. இதற்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி (TNPSC) ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாள் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும், இப்போட்டி தேர்விற்கு பல்வேறு தரப்பு நபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி (TNPSC)  ‘குரூப் - 4’ தேர்வு எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

தமிழ்நாடு அரசு பணிகளில் சேர விரும்பும் நபர்களுக்காகவே தமிழக அரசன் அரசு சார்த்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. (TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு என்பதையும் நடத்துகிறது.

தேர்வு முறை :

குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஸ்டேனோ டைபிஸ்ட், கிராம நிர்வாக அலுவலர் (VAO), பில் கலெக்டர், டைபிஸ்ட், ஜூனியர் உதவியாளர், நில அளவையாளர் மற்றும் இவ்வாண்டு முதல், தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணியில் அடங்கிய தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய  ஆகிய பணியிடங்கள் TNPSC குரூப் 4 தேர்வு மூலம் தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும்.

குரூப் 4 தேர்வு எழுத சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, சிறப்பு பிரிவினருக்கு 40 வயது வரை தளர்வு வழங்கப்படும்
TNPSC VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களும் பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு பட்டைய படிப்பு படித்தவர்களும் தேர்வு எழுதலாம் .ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஒரே கட்ட எழுத்து தேர்வு முறை ஆகும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இது, பொது அறிவு (திறனறிவு), பொது ஆங்கிலம் பொது தமிழ், திறனறிவு என 3 பிரிவுகளை கொண்டு வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். Objective முறையில் அனைத்து கேள்விகளும் கேட்கப்படும். குரூப் - 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும். அதில், 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு வினாக்களும் இருக்கும். TNPSC குரூப் 4 தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டது. அதாவது, பொது ஆய்வுகள் - திறன் மற்றும் மனத்திறன் - தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு ஆகிய பிரிவுகளை கொண்டது. அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் System Admin வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

 Full stack developer, System Admin, Database Administrator மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Full stack developer, System Admin, Database Administrator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 23 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

System Admin கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Degree / Master’s Degree / B.E/ B. Tech./ MCA / BCA / Law தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

System Admin ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

தனியார் IT நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 Cognizant ஐடி நிறுவனத்தில் Manager Projects பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Cognizant காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் செயல்படும் வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Cognizant ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Manager Projects பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Science / Engineering graduate முடித்திருக்க வேண்டும்.

 சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் Cognizant இணையதளம் சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.


🔻🔻🔻

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது Project Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Project Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc, M.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து sanjeevslab@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 21.02.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையும் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் System Admin வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

 Full stack developer, System Admin, Database Administrator மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Full stack developer, System Admin, Database Administrator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 23 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

System Admin கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் Degree / Master’s Degree / B.E/ B. Tech./ MCA / BCA / Law தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

System Admin ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

தமிழக சிறார் நீதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

 பெரம்பலூர் சிறார் நீதி வாரியம் ஆனது Social Worker Members  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாகஉள்ளன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து 02/03/2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீதி வாரிய காலிப்பணியிடங்கள்:

சமூக நல உறுப்பினர்கள் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சிறார் நீதி வாரிய கல்வி தகுதி:

குழந்தைகள்‌ தொடர்பான உடல்‌ நலம்‌, கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில்‌ குறைந்தது 7 ஆண்டுகள்‌ முனைப்புடன்‌ ஈடுபாடு கொண்டவர்‌ அல்லது குழந்தை உளவியல்‌ மனநல மருத்துவம்‌, சமூகவியல்‌ அல்லது சட்டம்‌ ஆகியவற்றில்‌ ஏதேனும்‌ பட்டம்‌ பெற்ற தொழில்‌ புரிபவராக இருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

தொலைத்தொடர்பு துறையில் Assistant Director காலிப்பணியிடங்கள் – சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

 Department of Telecommunication ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Director, Junior Telecom Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Department of Telecommunication காலிப்பணியிடங்கள்:

Assistant Director, Junior Telecom Officer பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Director தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.DOT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Director ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு DOT-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

DOT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.03.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

புதுச்சேரி குழந்தைகள் நல வாரிய பதவிகள்; யார் விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன?

 புதுச்சேரி மாநிலக் குழந்தைகள் நலக் குழு தலைவர், உறுப்பினார்கள், சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் 

முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

புதுவை மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் புதுச்சேரி 

உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் செயல்படுகிறது. அதனடிப்படையில், குழந்தைகள் நலக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவிகளுக்கு புதுவையைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் நலக் குழு தலைவர் பதவிக்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஆகிய பிராந்தியங்களில் தலா ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்கள்.

நலக்குழு உறுப்பினா்களாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவற்றுக்கு தலா 4 பேரும், சிறார் நீதி வாரிய உறுப்பினர்களாக 3 பிராந்தியங்களிலும் தலா 2 பேரும் என மொத்தம் 21 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பணிக்காலம் 3 ஆண்டுகள். சம்பந்தப்பட்ட துறை இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மார்ச் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி வாரியம் வளாகம், புது சாரம், முகவரிக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🔻🔻🔻