Search

வங்கி வேலை வாய்ப்பு; 3000 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

  

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 142 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை : 3000

கல்வித் தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.03.2024

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.800. SC/ST பிரிவினர் ரூ.600

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

உதவித் தொகையுடன் ஐ.ஐ.டி மெட்ராஸ் பெல்லோஷிப்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிமெட்ராஸ் (IIT Madras) கோடைகால பெல்லோஷிப் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பெல்லோஷிப் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ..டி மெட்ராஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - https://sfp.iitm.ac.in/

 

..டி மெட்ராஸ் சம்மர் பெல்லோஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 31 மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்களுக்கு அவகாசம் உண்டு.

..டி மெட்ராஸின் இந்த கோடைகால பெல்லோஷிப் என்பது இரண்டு மாத கால திட்டமாகும்இது மே 22 அன்று தொடங்கி ஜூலை 212024 இல் முடிவடையும். இருப்பினும்மாணவர்களின் வசதிக்கு ஏற்ப அட்டவணை விருப்பமானதாக இருக்கலாம் என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

தகுதி மற்றும் உதவித்தொகை

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.6000 வழங்கப்படும்.

..டி மாணவர்கள் இந்த கோடைக்கால பெல்லோஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

BE/ BTech/ BSc (பொறியியல்) மூன்றாம் ஆண்டு அல்லது ஒருங்கிணைந்த ME/ MTech திட்டத்தின் மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டு, ME/ MTech/ MSc/ MA, MBA முதலாம் ஆண்டு பயிலும்பல்கலைக்கழகத் தேர்வுகளில் உயர் தரவரிசைகளின் அடிப்படையில் சிறந்த கல்விப் பின்புலம் கொண்ட விண்ணப்பதாரர்கள் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட தாள்கள்செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்பங்கேற்ற வடிவமைப்புப் போட்டிகள்கணித ஒலிம்பியாடில் மதிப்பெண்/ ரேங்க் மற்றும் பெறப்பட்ட வேறு ஏதேனும் விருதுகள்/வேறுபாடுகள் உட்பட அவர்களின் கல்வி செயல்திறன் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தி விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த கோடைகால பெல்லோஷிப் திட்டத்தில் பங்கேற்கும் பொறியியல் துறைகள்: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்பயோ டெக்னாலஜிகெமிக்கல் இன்ஜினியரிங்சிவில் இன்ஜினியரிங்கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங்இன்ஜினியரிங் டிசைன்எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்மெக்கானிக்கல் இன்ஜினியரிங்மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்உலோகவியல் & பொருட்கள் பொறியியல் மற்றும் கடல் பொறியியல்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

திருச்சி இளைஞர்களே வேலைவாய்ப்புக்கான புதிய அப்டேட் இதோ..!!

 

அக்னிவீர் திட்டத்தின்கீழ், இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், பொதுப்பணி, செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர், பெண் ராணுவ போலீஸார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஐ.டி துறையில் வல்லவரா நீங்க... அப்போ உங்களுக்கான வேலைவாய்ப்பு தகவல் இது....

 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமமான கொட்டிவாக்கம் கிராமத்தில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் இடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த ஆட்சேர்ப்பின் கீழ் ஒரே ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும், இந்த பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.மேற்படி மீனவகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.01.01.2024 அன்றையதேதிபடி வயது 35-க்குள் இருக்கவேண்டும். மாதாந்திரஊக்கஊதியம்ரூ.15,000/-வழங்கப்படும்.

கல்வித்தகுதி : மீன்வளஅறிவியல் (Fisheries Science). கடல் உயிரியல்
(Marine Biology) மற்றும் விலங்கியல் (Zoology), பிரிவுகளில் முதுகலை இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாதபட்சத்தில் இயற்பியல் (Physics), Jln (Chemistry), (Microbiology), (Botany உயிர்வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன். தகவல்தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் 29.02.2024 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பிவைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை. A. கிழக்குக்கடற்கரைசாலை, நீலாங்கரை,சென்னை-600 115. Mail id: adfmnkpm@gmail.com, கைப்பேசி எண்: 9840156196 , என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Army Agniveer Recruitment 2024: இளைஞர்களே ராணுவத்தில் பணிபுரிய ஆர்வமா? அக்னிவீரர் திட்டத்தின் கீழ் வேலை... மிஸ் பண்ணிடாதீங்க

 அக்னிவீர் திட்டத்தின்கீழ், இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், பொதுப்பணி, செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர், பெண் ராணுவ போலீஸார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிக்க  வேண்டிய கடைசி தேதி வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்... மாதம் ரூ.600 உதவித்தொகை... அரசு சூப்பர் அறிவிப்பு

 தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். SC/SCA/ST பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், BC/BCM/MBC,OC பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்திரண்டு ஆயிரம்) மிகாமல் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/- வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை(பழையது), மற்றும்இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Online Printout, போன்றவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப்பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை(பழையது/online printout), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்(TC), தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின், அசல் மற்றும்நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியுமாறு கேட்டுககொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சமைக்கத்தெரிந்தால் போதும்.. ரூ.50000 கடனுதவி கொடுக்கும் வங்கி.. கேட்டரிங் தொழிலுக்கான பிளான்!

 

பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா திட்டம். இந்த திட்டம் குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சமூகத்தில் பெண்களில் வளர்ச்சி என்பது மிக முக்கியமாக இருக்கிறது. கல்வியை தொடர்ந்து பெண்கள் பல்வேறு துறைகளில் கால்பதித்து சாதனைப் படைத்து வருகின்றனர். தொழிற்துறையில் பெண்கள் தனித்து செயல்படும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தொழிற்கல்வியை வழங்கி வருகிறது. மேலும் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க கடன் உதவிகளும் செயல்பாட்டில் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா திட்டம். நன்றாக சமைக்க தெரிந்த பெண்கள் தனே சமையல் அதாவது கேட்டரிங் தொழில் தொடங்க இந்த திட்டம் உதவுகிறது.

யாருடைய உதவியும் இன்றி தானாக தொழில் தொடங்க வேண்டும் என கனவு கானும் பல பெண்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கிறது. இந்த திட்டம் மூலம் ரூ.50,000 கடனாக வழங்கப்படுகிறது.

கேட்ரிங் தொழில் தொடங்க தேவையான சமையல் உபகரணங்கள், உணவு பொருட்கள், சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் தேவையான பொருட்களை இந்த பணத்தின் மூலம் ஒருவர் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கி இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரும் கடன் தொகையை 36 மாதங்கள் தவணை முறையில் வங்கிக்கு திரும்பி செலுத்த வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் வட்டி என்பது அப்போதைய சந்தை நிலவரத்தின்படி நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் முழு பயணையும் பெறமுடியும்.
உங்களுக்கு நீண்ட நாட்களாக சமையல் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்தி கொண்டு, உங்களின் கனவை நினைவாக்கி கொள்ளலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BEL நிறுவனத்தில் Trainee Engineer காலிப்பணியிடங்கள் – ரூ.40,000/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

 BEL நிறுவனம் ஆனது Trainee Engineer – I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்..

BEL காலிப்பணியிடங்கள்:

Trainee Engineer – I பணிக்கென மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer – I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer – I ஊதிய விவரம்:

1st Year – Rs. 30,000/-

2nd Year  – Rs. 35,000/-

3rd Year  – Rs. 40,000/-

BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.