மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது SSC CHSL வேலைவாய்ப்பு குறித்த செய்தித்தாள் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் LDC/ DEO பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
SSC CHSL காலிப்பணியிடங்கள்:
Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator ஆகிய பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் தெரிவிக்கப்படும்.
கல்வி தகுதி:
- LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Data Entry Operator (DEO Grade ‘A’) in the Office of Comptroller and Auditor General of India (C&AG): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC CHSL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC CHSL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
- Data Entry Operator (DEO): ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மற்றும் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
- Data Entry Operator, Grade ‘A’: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Tier I (Online Exam), Tier II (Offline Exam – Descriptive), And Tier III (Typing Test or Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC CHSL விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
🔻🔻🔻