இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடியில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் மருத்துவர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 23.04.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
ஆராய்ச்சி அறிவியலாளர்
(Research Scientist – I (Medical))
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 67,000
சுகாதார உதவியாளர்
(Health Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் DMLT படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
கள உதவியாளர் (Field
Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் DMLT படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://main.icmr.nic.in/ என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தின பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.04.2024
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICMR-NIE, Thoothukudi
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://main.icmr.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻