Search

NHPC ஆணையத்தில் Apprentices வேலை – ITI தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

NHPC Limited நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NHPC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentices பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Apprentices கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NHPC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprentices ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு NHPC – யின் நிபந்தனைகளின்படி உதவித்தொகை வழங்கப்படும்.

NHPC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    WIPRO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – Apply Online!!

     WIPRO தனியார் நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய விழையும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    தனியார் காலிப்பணியிடங்கள் :

    Developer பணிக்கு WIPRO நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    WIPRO கல்வித்தகுதி :

    அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    தேவையான திறன்கள்:

    Systems Requirements
    Design and Prototype the SAP
    Archiving Modified Brown Strategy
    Test complex functionality and train

    WIPRO தேர்வு செயல்முறை :

    Written test/ Aptitude/ GD/ HR Interview

    விண்ணப்பிக்கும் முறை :

    ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    WIPRO Developer Job Application 



    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    நவோதயா வித்யாலயா வேலை வாய்ப்பு; 1377 பணியிடங்கள்

     நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உதவி பிரிவு அலுவலர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1377 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2024


    Female Staff Nurse


    காலியிடங்களின் எண்ணிக்கை: 121


    கல்வித் தகுதி: B.Sc Nursing படித்திருக்க வேண்டும்


    வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 44900 - 142400


    Assistant Section Officer


    காலியிடங்களின் எண்ணிக்கை: 5


    கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.


    வயதுத் தகுதி: 23 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 35400 - 112400


    Audit Assistant


    காலியிடங்களின் எண்ணிக்கை: 12


    கல்வித் தகுதி: பி.காம் படித்திருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 35400 - 112400


    Junior Translation Officer


    காலியிடங்களின் எண்ணிக்கை: 4


    கல்வித் தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 35400 - 112400


    Legal Assistant


    காலியிடங்களின் எண்ணிக்கை: 1


    கல்வித் தகுதி: இளங்கலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


    வயதுத் தகுதி: 23 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 35400 - 112400


    Stenographer


    காலியிடங்களின் எண்ணிக்கை: 23


    கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 25500 - 81100


    Computer Operator


    காலியிடங்களின் எண்ணிக்கை: 2


    கல்வித் தகுதி: BCA/B.Sc. (Computer Science/IT)/ BE/B.Tech (Computer Science/IT) படித்திருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 25500 - 81100


    Catering Supervisor


    காலியிடங்களின் எண்ணிக்கை: 78


    கல்வித் தகுதி: Bachelor's Degree in Hotel Management படித்திருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 25500 - 81100


    Junior Secretariat Assistant


    காலியிடங்களின் எண்ணிக்கை: 381


    கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 19900 - 63200


    Electrician Cum Plumber


    காலியிடங்களின் எண்ணிக்கை: 128


    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrician/ Wireman பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 19900 - 63200


    Lab Attendant


    காலியிடங்களின் எண்ணிக்கை: 161


    கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 18000 - 56900


    Mess Helper


    காலியிடங்களின் எண்ணிக்கை: 442


    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 18000 - 56900


    Multi Tasking Staff


    காலியிடங்களின் எண்ணிக்கை: 19


    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


    வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்: ரூ. 18000 – 56900


    வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.


    தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


    விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nvs.ntaonline.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


    விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2024


    இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://exams.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    சட்ட கல்லுாரி சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்

     தமிழக சட்ட பல்கலையின் சீர்மிகு சட்டப்பள்ளி, 14 அரசு சட்ட கல்லுாரிகள் உள்பட, 23 சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.


    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், 14 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும், எட்டு தனியார் சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், 2,043 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.


    தமிழ்நாடு சட்ட பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், சீர்மிகு சட்டப்பள்ளியில், எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில், 624 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐந்தாண்டு படிப்பில் சேர்வதற்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவை, பல்கலையின் துணைவேந்தர் சந்தோஷ் குமார் நேற்று துவக்கி வைத்தார்.


    பல்கலையின், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், வரும், 31ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இதில் விண்ணப்பிக்க முடியும். வயது உச்சவரம்பு கிடையாது. கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும் - அரசு தேர்வுகள் இயக்குனர்

     11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 


    அதே போல் நேற்று முன்தினம் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.


    இந்நிலையில், 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட உள்ளன.




    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    TRANSFER - பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களின் கவனத்திற்கு

     



    🦋 *ஆசிரியர்கள் கவனத்திற்கு!*


    🪷 *பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள்* உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது *EMIS Profile -இல்* உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும்.

    எனவே, 


    🌷 தங்கள் பிறந்த நாள்,

    🌷 பணியமர்த்தப்பட்ட நாள், 

    🌷 பள்ளியில் சேர்ந்த நாள், 

    🌷 பணிபுரியும் பள்ளி / அலுவலகம், 

    🌷 பதவி, 

    🌷 பாடம், 

    🌷 கைபேசி எண், 

    🌷 IFHRMS ID 


    🪷 போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் *EMIS profile-இல் சரியாக உள்ளதா,?* என்பதை உறுதி செய்து கொள்ளவும்.


    🪷 திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை/ சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி SCHOOL LOGIN இல் சென்று திருத்தங்களை மேற்கொள்ளவும்.




    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    Income Tax - IFHRMS ல் தற்போது Old / New Regime தற்போது தேர்வு செய்து மாற்றம் செய்ய இயலுமா?



    IFHRM ல் ஏற்கனவே old / new தேர்வு செய்தவர்கள் களஞ்சியம் app ல் மாற்றம் செய்ய option வருகிறது என்று old / new மாற்ற முயற்சிக்க வேண்டாம் .pan number கட்டாயம் update செய்ய வேண்டும் - தகவல்*

    களஞ்சியம் app ல் ஏற்கனவே Tax Type தேர்வு செய்ய மறந்தவர்கள் மட்டுமே தற்போது old / new  மாற்றிக்கொள்ள வாய்ப்பு வளங்கப்பட்டுள்ளது. 

    ஆனால் ஏற்கனவே old / new தேர்வு செய்தவர்கள் களஞ்சியம் app ல் மாற்றம் செய்ய option வருகிறது என்று old / new மாற்ற முயற்சிக்க வேண்டாம் . 

    ஏனெனில் அப்படி மாற்றிய சிலருக்கு கீழே உள்ளது போல error வருகிறது . 

    pan number கட்டாயம் update செய்ய வேண்டும் . இல்லையென்றால் 20% special tax என்று தகவல் . 

    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    மாணவர் சேர்க்கை - ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்

     

    கோடை விடுமுறை காலம் என்றாலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்


    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து பிளஸ்1 மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

    பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகள் எந்த குரூப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவர்கள் விரும்பும் பாடத்தின் மீதான ஆர்வத்தை பொறுத்து உள்ளது.


    என்ஜினீயரிங் அல்லது மருத்துவப் படிப்புகளை விரும்புவோர் முதல் குரூப், மருத்துவம் சார்ந்த படிப்புகளை விரும்புவோர் அறிவியல் குரூப், வங்கி, சி.ஏ., ஆடிட்டர், கம்பெணி மேலாளர் படிப்புகளை விரும்புவோர் 3-வது குரூப்பில் சேர ஆர்வமாக உள்ளனர்.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.

    தற்போது கோடை விடுமுறை காலம் என்றாலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை நடைபெற உள்ளது.


    இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் 35 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் திங்கட்கிழமை முதல் மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படும். அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.




    மார்க் அடிப்படையில் மாணவர்களுக்கு குரூப் ஒதுக்கப்படும். வெளியில் படித்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.




    பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தான் மாநகராட்சி பள்ளிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில மாநகராட்சி பள்ளிகளில் சேருவதற்கு கடுமையான போட்டியும் உள்ளது என்றார்.




    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    ‘பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி கட்டாயம்’

      1246290

    பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


    இதுகுறித்து பள்ளிக் கல்விஇயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும்அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன. அதன்படி பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஜூன் 1-ம் தேதியன்று ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்.


    இதுதவிர ஆசிரியர்கள் மாறுதல்விண்ணப்பங்களை மே 13 முதல்17-ம் தேதி வரை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகுமாறுதல், பணிநிரவல் ஆகியவற்றில் எந்த வகை என்பதை உரிய விவரங்களுடன் பதிவுசெய்ய வேண்டும். மனமொத்த மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும்.


    உள்மாவட்டத்துக்குள் பணி: அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் உள்மாவட்டத்துக்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்ற பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் நாளில் வருகை புரியாமலோ, தாமதமாக வந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    IMG-20240512-WA0003


    🔻🔻🔻

    Click here to join TNPSC STUDY whatsapp group

    Click here to join WhatsApp group for Daily employment news

    Click here for latest employment news

    இளநிலை பட்ட மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு முழு கட்டண விபரங்கள்

     இளநிலை பட்ட மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு முழு கட்டண விபரங்கள் :