12 ஆம் வகுப்பு மாணவர்களால் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, படிப்பை முடித்த பிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் உள்ளது. அதில் ஒன்று, விரைவாக முடிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பைத் தொடரலாம். இது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை கிக்ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கிறது.
மாற்றாக, மாணவர்கள் இளங்கலை பொறியியல், மருத்துவம், டிசைனிங், மேலாண்மை மற்றும் பல இளங்கலை படிப்புகளை தேர்வு செய்யலாம். இந்தத் துறைகள் மாணவர்கள் தேர்வு செய்ய ஏராளமான படிப்புகளை வழங்குகின்றன. முதலில் மாணவர்களுக்கு பிடித்தமான படிப்பு என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும், அதன் பிறகு எந்த கல்லூரியில் சேரலாம் என தேர்வு செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார் கல்வியாளர் காங்கேயன்..
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலில் தீர்மானம் செய்வது என்னவென்றால், நாம் எந்த கல்லூரியில் சேர வேண்டும். அதன் பிறகு அது அரசு கல்லூரியா? தனியார் கல்லூரியா? என தேர்வு செய்ய வேண்டும். தற்போது மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 7.5% கோட்டா உள்ளது. நீட் தேர்வு போன்ற தேர்வுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதுவே பொறியியல் கல்லூரி என்றால் சென்ற ஆண்டு 77.5% தரத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டது.
அதுபோன்று மாணவர்கள் இன்ஜினியரிங் முடித்து கலெக்டர் ஆவதற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு படிக்கலாம், வழக்கறிஞர் படிப்புக்கு படிக்கலாம், ஃபேஷன் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஃபிஷரிங்,போன்ற எண்ணற்ற படிப்புகள் உள்ளது.
குறிப்பாக அதிக அளவில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு அதாவது (Bsc.Computer science, IT, B.tech ) அதிக வரவேற்பு உள்ளது என சர்வே தெரிவித்துள்ளது. அதுபோல இன்ஜினியரிங் எடுத்துக்கொண்டால் ECE, EECE, MECH போன்ற படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதேபோல், பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால், நர்சிங் போன்ற படிப்புகளில் பல துணை பாடப்பிரிவுகள் அமைந்துள்ளது. அதனை தேர்வு செய்து படிக்கலாம். தொழில் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தால் நிச்சயமாக அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என கல்வியாளர் காங்கேயன் தெரிவித்தார்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group