உண்மையில் குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு குழந்தையை சிறப்பாக வளர்க்கதாய் மற்றும் தந்தை இருவருக்குமே குறிப்பிடத்தக்க அளவு நேரம், ஆற்றல் மற்றும் உணர்ச்சி வலிமை தேவைப்படுகிறது.
வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் மட்டும் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்தே குழந்தைகள் வளர்வார்கள் என்பதால் நாம் அவர்கள் முன் என்ன செய்கிறோம் மற்றும் என்ன பேசுகிறோம் என்பதில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் குழந்தைகள் தினமும் காலையில் கேட்க வேண்டிய 7 விஷயங்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.
குழந்தைகளின் நாளை சரியாக தொடங்குங்கள்… ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மற்றும் சமூக கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் பெற்றோரின் வார்த்தைகள் மகத்தான சக்தியை கொண்டுள்ளன. தினசரி காலை நேரத்தில் நாம் அவர்களிடம் பேசும் வார்த்தைகள் மற்றும் கூறும் விஷயங்கள் குழந்தையின் மனநிலை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும். எனவே அவர்கள் தினமும் காலை நேரத்தில் கேட்க வேண்டிய விஷயங்களை இப்போது பார்க்கலாம்…
நீங்கள் உங்களின் அன்றைய தின பணிகளில் மூழ்குவதற்கு முன், உங்கள் குழந்தையை உண்மையான அரவணைப்புடனும் பாசத்துடனும் வாழ்த்த மற்றும் அவர்களை உற்சாகப்படுத்த ஒரு குட் மார்னிங் போதும். அவர்களை அணைத்து கொண்டோ அல்லது ஒரு சிரிப்புடனோ அவர்களுக்கு காலை வணக்கம் சொல்வது நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும், இது அன்றைய நாளை நேர்மறையாக அவர்களுக்கு துவக்கி வைக்கும்.
காலை எழுந்ததும் உங்களுக்கு பல வேலைகள் இருக்கலாம். அதை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்கள் குழந்தையுடன் அமர்ந்து சிரித்து நேரம் பேசி கொண்டிருக்கலாம். தினசரி காலை இதற்கென்றே சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். இந்த எளிய விஷயம் உங்கள் குழந்தைக்கு, அவர்களை நீங்கள் மதிப்புமிக்கவர்களாக, நேசத்துக்குரியவர்களாக பார்க்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறது.
ஒரு குழந்தையின் ஆழ் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் வடிகால்களாக அவர்களின் லட்சியங்கள் அல்லது கனவுகள் இருக்கலாம். அவர்களின் கனவுகளை பகிர்ந்து கொள்ளும் போது ஆர்வம் காட்டுவது அல்லது நீங்களாகவே அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது உங்கள் குழந்தை உங்களிடம் பேசுவதையும், தகவல் தொடர்பையும் அவர்களுக்கு எளிதாக்குகிறது. தவிர இந்த பழக்கம் அவர்கள் அனுபவிக்கும் சிக்கல்கள் அல்லது கவலைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
உங்கள் குழந்தைக்கு அவர்கள் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் மகிழ்ச்சியை, உங்கள் அன்பையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதன் மூலம் அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். உதாரணமாக “காலையில் எழுந்ததும் உன் இனிய முகத்தை முதலில் பார்க்க விரும்புகிறேன்” என்பது போன்ற எளிய வார்த்தை அவர்களின் சுயமரியாதையை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் நிபந்தனையின்றி நேசிக்கப்படுவதை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை உருவாக்கும்.
காலை எழுந்ததும் அவர்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது அல்லது விளையாடுவதாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு விருப்பமான செயலாக இருந்தாலும் சரி, அல்லது புதிதாக ஏதாவது கற்று கொள்ள விரும்புவதாக இருந்தாலும் சரி அன்றைய நாளுக்கான அவர்களின் பிளான்கள் என்ன அல்லது அவர்களது ஆசைகள் பற்றிக் கேட்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகத்துடன் அந்த நாளைத் தொடங்க அவர்களுக்கு உதவுங்கள்.
எவ்வளவு வேலை அல்லது பிசியாக இருந்தாலும் உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிட உங்கள் ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகிறது. காலை எழுந்ததும் அவர்களுடன் சிறிது நேரம் ஒன்றாக விளையாடுவது, நடைபயிற்சி செய்வது அல்லது கதை சொல்வது என எதுவாக இருந்தாலும், நீங்கள் அவர்களுடன் ஒன்றாக நேரம் செலவழிப்பதன் மூலம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தெரியப்படுத்துங்கள்.
சிறுவயதிலிருந்தே உங்கள் குழந்தைக்கு பொறுமை, அமைதி மற்றும் சுய பாதுகாப்பு உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை சொல்லி கொடுங்கள். மேலும் இதற்கு உதாரணமாக தினசரி காலை அவர்களை அவசர அவசரமாக எதிலும் ஈடுபட வைக்காமல் அவர்கள் தங்களின் எண்ணங்களை சேகரிக்க அல்லது அமைதியான செயலில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கவும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group