Search

ஐ.நா.சபை அறிவித்த முக்கிய ஆண்டுகள் (2000-2024)

  

ஐ.நா.சபை அறிவித்த முக்கிய ஆண்டுகள் (2000-2024)

🗓2001 – பன்னாட்டு மகளிர் ஆண்டு
(International year of Women’s Empowerment)

🗓2002 – சர்வதேச மலைகள் ஆண்டு
(International Year of Mountains)

🗓2003 – பன்னாட்டு தூய தண்ணீர் ஆண்டு
(International year of fresh water)

🗓2004 – பன்னாட்டு அரிசி ஆண்டு
(International year of rice)

🗓2005 – பன்னாட்டு இயற்பியல் ஆண்டு
(International Year of Physics)

🗓2006 – சர்வதேச பாலைவனங்கள் மற்றும் பாலைவனமாக்கல் ஆண்டு
(International Year of Deserts and Desertification)

🗓2007 – பன்னாட்டு துருவ ஆண்டு
(International Polar Year)

🗓2008 – சர்வதேச மொழிகள் ஆண்டு
(International Year of Languages)

🗓2009 – சர்வதேச வானியல் ஆண்டு
(International Year of Astronomy)

🗓2010 – சர்வதேச இளைஞர் ஆண்டு
(International Year of Youth)

🗓2011 – சர்வதேச காடுகள் மற்றும் வேதியியல் ஆண்டு
(International year of forests and Chemistry)

🗓2012 – பன்னாட்டு கூட்டுறவு ஆண்டு
(International year of Co-Operatives)

🗓2015 – பன்னாட்டு ஒளி மற்றும் ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆண்டு
(International year of Light and Light based Technologies)

🗓2016 – சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டு
(International year of Pulses )

🗓2017 – வளர்ச்சிக்கான நீடித்த சுற்றுலா ஆண்டு
(International year of Sustainable Tourism for Deveolpment)

🗓2019 – சர்வதேச உள்ளூர் மொழிகள் ஆண்டு
(International Year of Indigenous Language)

🗓2020 – சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டு
(International Year of Plant Health)

🗓2021 – சர்வச்தேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு
(International Year of Peace and Trust)

🗓2022 – சர்வதேச மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு ஆண்டு
(International year of Artisanal Fisheries and Aquaculture)

🗓2023 – சர்வதேச சிறு தானியங்கள் (தினை) ஆண்டு
(International Year of Millets)

🗓2024 – சர்வதேச இரட்டை திமில் ஒட்டகங்கள் ஆண்டு
(International Year of Camelids)


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

TNPSC Maths Important Questions PDF

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

எழுத படிக்கத் தெரிந்தால் போதும்...₹ 70,000 வரை சம்பளம்... இந்த வேலைவாய்ப்பை படிங்க

 

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறையில் நகல் பரிசோதகர், முதுகலை கட்டளை நிறைவேற்றுணர், கட்டளை பணியாளர், மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் ஆகிய பதவிகளுக்கான நேரடி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.

பார்வையற்றவர்கள் மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையவர்கள் மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதில் நகல் பரிசோதனைக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆகும் . இதற்கான சம்பளம் ரூபாய் 19,500 இல் இருந்து 71,900 ஆகும் . முதுநிலை கட்டளை நிறைவேற்றனர் பணிக்கான காலி பணியிடங்கள் 6 ஆகும். இதற்கான சம்பள விகிதம் 19,500 ரூபாயிலிருந்து 71,900 ஆகும். கட்டளை பணியாளர் பணியிடத்திற்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 14 ,இந்த பணியிடத்திற்கான சம்பளம் 19,000 முதல் 69,900 வரை ஆகும். இறுதியாக ஒளிபட நகல் எடுப்பவர் இதற்கான காலி பணியிடங்கள் 2 எண்ணிக்கை ஆகும். இதற்கான சம்பளம் 16,600 ரூபாயிலிருந்து 60,800 ரூபாய் வரை ஆகும்.

விண்ணப்பதாரர்கள்01.07 2024-ஆம் தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். நகல் பரிசோதகர் முதுநிலை, கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை பணியாளர், இவர்களுக்கான கல்வி தகுதி குறைந்தபட்ச பொது கல்வி தகுதி அதாவது, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது உயர்நிலைப் படிப்புகளில் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒளிப்பட நகல் எடுப்பதற்கான கல்வி தகுதி, பொது கல்வி தகுதி அதாவது எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் ஆறு மாதங்களுக்கு குறையாத செய்முறை முன் அனுபவம் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் மற்ற வகுப்பினை சார்ந்தவர்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் ரூபாய் 500 தேர்வு கட்டணம் ஆகும்.ஆதிதிராவிட வகுப்பினர் பழங்குடியினர் ஆகிய வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in இந்த இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . பணிகள் குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.


இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 27.05.2024 ஆகும். தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி தேதி 29.05.2024 ஆகும்

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ₹ 58,000 வரை சம்பளம்... நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு...

 சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட நீதி மன்றத்தில் காலியாக சில பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, சம்பளம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்ட நீதித்துறையின் அறிக்கைப்படி மொத்தமாக 53 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் ( office assistant) - 41 இடங்கள், காவலர் - 5 இடங்கள், இரவு நேர காவலர் - 1 , மால்ஜி - 6 என 53 காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது.

தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

மற்ற பணியிடங்களுக்கு எழுத படிக்க தெரிந்திருந்திருந்தாலே போதும்.

ஊதியம் பொருத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் தோறும் 15000 முதல் 58000 வரை தகுதி அடிப்படையில் வழங்கப்படும். மற்ற பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் 15000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: பி.சி / எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். அதே போல விண்ணப்பதாரர் 1.7.2006 க்கு பின்னர் பிறந்தவராக இருக்க கூடாது. 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.mhc.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் போது பி.சி / எம்.பி.சி பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாயை செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 27 ஆகும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

ICF Jobs; சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 1010 பணியிடங்கள்; தகுதி என்ன?

 சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1010 பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2024

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1010

பயிற்சி விபரங்கள்

CARPENTER 

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 90 (FRESHERS – 40, Ex-ITI - 50)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது CARPENTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

ELECTRICIAN 

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 200 (FRESHERS – 40, Ex-ITI - 160)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ELECTRICIAN பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

FITTER 

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 260 (FRESHERS – 80, Ex-ITI - 180)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது FITTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

MACHINIST

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 90 (FRESHERS – 40, Ex-ITI - 50)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது MACHINIST பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

PAINTER 

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 90 (FRESHERS – 40, Ex-ITI - 50)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது PAINTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS – 2 வருடம், Ex-ITI – 1 வருடம்

WELDER

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 260 (FRESHERS – 80, Ex-ITI - 180)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது WELDER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS – 1 வருடம் மற்றும் 3 மாதங்கள், Ex-ITI – 1 வருடம்

MLT-Radiology

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 5 (FRESHERS)

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம் 3 மாதங்கள்

MLT-Pathology 

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 5 (FRESHERS)

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : 1 வருடம் 3 மாதங்கள்

PASAA 

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 10 (Ex-ITI)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Computer Operator and Programming Asst. பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : Ex-ITI –  1 வருடம் 

வயதுத் தகுதி : 21.06.2024 அன்று 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்

1. Freshers – (class 10th) ரூ. 6000/-  

2. Freshers – (class 12th) ரூ. 7000/-  

3. Ex-ITI – ரூ. 7000/-

தேர்வு செய்யப்படும் முறை : பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pb.icf.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தை பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; ரூ37000 சம்பளம்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2024

Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் UG degree in Science/Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ 37,000 

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.29

 IMG_20240522_073425

TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.29 Date 7.6.24


What's New

*Resource person form changes. Bug fixed


 *App Update  செய்ய Direct link👇


👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

EMIS எண் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? விரிவான தகவல்கள் இதோ !

 

.com/

பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் போன் செய்து எமிஸ்(EMIS) போர்டல் தளத்தில் உங்களது மகன் அல்லது மகளது விவரங்களை அப்டேட் செய்து வருகிறோம்.


அதற்கு பெற்றோர்களான உங்களது எண்ணை பதிவு செய்ய ஓடிபி தேவைப்படுகிறது. அதை சொல்லுங்கள் என்று கேட்கும் அதிகப்படியான அழைப்புகள் வருகிறது.


இதே போல வங்கிகளில் இருந்து பேசுகாதாக போன் செய்து ஓடிபி கேட்டு மோசடி செய்வதால் பல பெற்றோர்கள் தங்களது ஓடிபிகளை சொல்ல மறுக்கின்றனர். இதற்காக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கல்விக்காக கேட்கப்படுவதாவும் பெற்றோர்கள் ஓடிபி எண்ணை ஆசிரியர்களுக்கு தெரிவித்து. உதவி புரியுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அதற்கான தயக்கங்கள் நீடிக்கின்றன.


எல்லாம் சரி அந்த எமிஸ் போர்டல் என்றால் என்ன? அதன் பலன் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? அதில் ஏன் பதிவு செய்ய வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் நம்மிடையே எழும் அதற்கான பதில்களை எல்லாம் உங்களுக்கு எளிமையாக சொல்கிறோம்.


எமிஸ்(EMIS) என்பதன் விரிவாக்கம் Educational Management Information System - கல்வியியல் மேலாண்மை தகவல் அமைப்பு என்பதாகும். இது கல்வி சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் இதர பணியாளர்கள்,கல்விக் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தைக் குறித்த தகவல்களையும் சேமித்து பாதுகாக்கும் ஒரு அமைப்பாக இருக்கிறது.


பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்களின் தரவுகள் அவ்வப்போது மார்க் சீட்டுகளில், பதிவேடுகளில் பதிவு செய்து கொடுக்கப்படும். அந்த தரவுகளை நீண்ட காலம் பாதுகாப்பது சிரமமாக இருந்து வந்தது. அதற்கு மாற்றாக தான் இந்த அமைப்பு தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு என்ன பலன்?


இந்த எமிஸ் தளத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட எட்டு இலக்க எண் உருவாக்கப்படும். இது அந்த மாணவர் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரையான அனைத்துத் தகவல்களையும் ஒருங்கே கொண்டிருக்கும்.


Pre KG அல்லது முதலாம் வகுப்பில் சேரும்பொழுது ஒரு மாணவருக்கு இந்த தனிப்பட்ட எட்டு இலக்க எமிஸ் எண் வழங்கப்படும். அதன் பின்னர் அவர் எத்தனை பள்ளிகளுக்கு மாறினாலும் அந்த ஒரே ஒரு எமிஸ் எண்ணை கொண்டு அவரது கல்வி தரவுகளை புதிய பள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம் மற்றும் வருங்கால பதிவுகளையும் அதே எண்ணில் சேமித்துக் கொள்ளலாம்.

என்னென்ன தரவுகள் சேமிக்கப்படும்?


ஒரு மாணவரின் பெயர்

பிறந்த தேதி

ஆதார் எண்

பெற்றோர்கள் விபரம்

படிக்கும் பள்ளி

இதற்கு முன்னர் படித்த பள்ளி

தனியார் பள்ளியில் சேர்ந்தால் கல்வி கட்டண விபரங்கள்

மாணவரின் வருகை பதிவு

மாணவரின் மதிப்பெண் பட்டியல்கள் என அனைத்துமே இந்த எம்எஸ்என்னில் சேமித்து வைக்கப்படும். இதை தினசரி ஆசிரியர்கள் அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள்.

பெற்றோர்களுக்கு தங்களது குழந்தையை ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு மாற்றும்போது பெற்றோர்கள் அனைத்து சான்றிதழ்களையும் தூக்கிக்கொண்டு அலைய தேவை இல்லை. பழைய பள்ளியில் இருந்து மாணவரின் எமிஸ் எண்ணை மட்டும் கேட்டு புதிய பள்ளியில் தெரிவித்தால் போதுமானது.


அதுபோக கல்வி சார்ந்த ஏதேனும் திட்டங்கள் அல்லது தகவல்களை பெற்றோர்களுக்கு அரசோ அல்லது பள்ளியோ சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் மாணவர்களுடன் ஐடியுடன் இணைக்கப்படும்.

ஒடிபி எப்போதெல்லாம் வேண்டும்?


முதல் முறை மாணவருக்கு எமிஸ் எண் வழங்கப்படும் போது தேவைப்படும்

தற்போது பெற்றோர்களின் எண்களை சரிபார்த்து அப்டேட் செய்யும் போது கேட்கப்படும்

 ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு தரவுகளை மாற்றுவதற்கும் பெற்றோர்களின் தொலைபேசிக்கு வரும் ஓடிபி முக்கியமானது.

அதை வைத்து மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ள தேவைப்படும்.

 அதுமட்டுமில்லாமல் மாணவர்களின் விபரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலும் பெற்றோர்களின் எண்ணிற்கு வரும் ஓடிபி கொண்டு அதை சரி செய்ய இயலும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பள்ளிகளில் அமலுக்கு வரவுள்ள 3 புதிய உத்தரவுகள்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

 1251437

வரும் கல்வி ஆண்டில், பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்த பிறகு வரக்கூடிய ஜூன் மாதம் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் 3 புதிய நடவடிக்கைகள் அமலுக்கு வர இருப்பதாகவும் பள்ளிக்கல்விதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.பள்ளி மாணவர்கள் மத்தியிலும் போதைப்பொருட்கள் பழக்கம் அதிகம் இருப்பதாக ஏற்கனவே அரசு மாதிரி பள்ளிகளுக்கான உறுப்பினர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருந்தார். பள்ளி மாணவர்கள் இடையே போதை பழக்கம் என்பது இருப்பதாகவும் கல்வித்துறைக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் பள்ளி வளாகங்களில் போதை பொருட்கள் நடமாட்டத்தை அதே போன்று மாணவர்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.இரண்டாவதாக தமிழகம் முழுவதும் 1 கோடியே 25 லட்சம் மாணவர்களுடைய பெற்றோர் மொபைல் எண்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் மூலமாக மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 


இது தொடர்பான நடவடிக்கைகளும் ஜூன் மாதம் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது வரை 70 லட்சம் மொபைல் எண்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. மீதம் இருக்கக்கூடிய மொபைல் எண்களும் பள்ளி திறந்ததும் உறுதி செய்யப்பட இருக்கிறது.3வதாக மாணவர்கள் தங்கள் சமூகத்தின் அடையாளங்களை வர்ணக்கயிறுகளாக அணிவதற்கு தடை விதிக்கப்பட இருக்கிறது என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டங்களில் அடிக்கடி மாணவர்கள் மத்தியில் கைகளில் பலவகையான வண்ண கயிறுகளை கட்டுவதால் அவர்களுன் மோதல் ஏற்படுகிறது.


 கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளி கல்லூரிகளில் இது போன்ற மத அடிப்படையிலான செயல்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் அறிக்கை தமிழக அரசுக்கு சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.எனவே இந்த 3 விவகாரங்களும் பள்ளி திறந்த பிறகே அமலுக்கு வரும் என்றும் பள்ளி மாணவர்கள் வண்ண கயிறுகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏற்கனவே உயர் அதிகாரிகள் அளவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


மிக விரைவில் முதல்வருடைய அனுமதியை பெற்று இது தொடர்பான செயல் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News