Search

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

 1254528

தமிழகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் இருந்து, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் பெற்று வருகிறது.


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்கால சூழலில், கட்டிட வசதி ஏற்படுத்த போதிய நிதியாதாரம் இல்லாத நிலையில், அந்தந்த பகுதி முக்கிய நபர்களின் பங்களிப்போடு பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டன. அந்தப் பள்ளிகள் பிற்காலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாறின. அதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் நியமனமும் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளும் அனுமதி அரசால் வழங்கப்பட்டது. அந்தஅனுமதி இதுநாள் வரையில் தொடர்கிறது.


அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிக்கு நிகராகவே இருந்து வந்தது. காலப் போக்கில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தததால் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும், அவ்வாறு குறைந்த எண்ணிகையில் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒதுக்கீடு அளவு குறையவில்லை.


இதனால் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் மாறுபட்டு, 90 மாணவர்கள் பயிலும் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலை உள்ளது. இதை சரி செய்யும்நோக்கில், எந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெறுகிறாரோ அதுகுறித்த தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தினர். ஆனாலும், இது நாள் வரை ஓய்வுபெறும் தகவல் குறித்து தெரிவிக்காமல், தொடர்ந்து ஆசிரியர் நியமனத்தை செய்து வருவதாக தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் அவர்கள் கூறும் போது,“ஒரு பள்ளியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 2,000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

OTP Verify செய்யாமல் TC வழங்கப்பட்டு Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கு OTP Verify செய்ய வழிமுறைகள்

OTP Verify செய்யாமல் TC வழங்கப்பட்டு Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கு OTP Verify செய்ய வழிமுறைகள்


📌 In School EMIS Login

➡️ Select Student List

➡️ Select Classes one by One

➡️ Select AY (2023-24) Student List 

➡️ Select Verify Option 

➡️ in the Relation Drop-down option Select the correct option _(If the mobile has to be changed, use the option Change Mobile Number, If it is correct click Send OTP option)_ 

➡️ Contact the Parent & ask for the OTP received and Enter.




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

கலந்தாய்வு அவசர சுற்றறிக்கை

 கலந்தாய்வு தென்காசி CEO அவசர சுற்றறிக்கை :

IMG_20240526_183454

அன்பார்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ,


 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு EMIS இணைய தளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 25.05.2024 அன்றுடன் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் , பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இதுவரை சமர்ப்பிக்காத ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 27.05.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

அதன்பின்னர் விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில் , அவற்றுக்கு EMIS இணைய தளத்தில் ஒப்புதல் அளித்திட இயலாது என்கிற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.


 மேலும் கலந்தாய்வுக்கான Seniority Panel வெளியாகும்போது , அதில் தங்களுடைய விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னுரிமை விவரங்கள் இடம்பெறாத பட்சத்தில் , அதன் விவரத்தினை EMIS இணைய தளத்தில் தத்தமது User & Password- ஐ பயன்படுத்தி Challenge Option மூலம் உள்ளீடு செய்திடவும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum Class 4,5th | 2024 - 2025 Term 1 - Teachers Hand Book Download

 IMG_20240526_184737

Ennum Ezhuthum Class 4th & 5th | 2024 - 2025 Term 1 - Teachers Hand Book 


Tamil THB - Download here


English THB - Download here


Maths T/M - THB - Download here


Maths E/M - THB - Download here


Science  T/M - THB - Download here


Science  E/M - THB - Download here


Social  T/M - THB - Download here


Social  E/M - THB - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

ஆசிரியர் கலந்தாய்வு திருத்தப்பட்ட அட்டவணை எப்போது வெளியிடப்படும் ?

தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் சனிக்கிழமை உடன் நிறைவுடைந்த நிலையில் அடுத்த வாரம் புதிய திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்...






பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், ஆண்டு இறுதித்தேர்வுகளும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படும்போது, பள்ளிகள் திறப்பு தள்ளப்போகும். நடப்பாண்டு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி வெளியாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரம் வரையில் தள்ளிபோக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில், தமிழகத்தில் 2024-2025-ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகள் திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், பள்ளிகளில் திறந்தவெளி கிணறு இருக்கக்கூடாது. மின் சாதன பழுதுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகள் இருந்தால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். வகுப்பறைகள் கற்றல் சூழலுக்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ennum Ezhuthum Class 1,2,3 | 2024 - 2025 Term 1 - Teachers Hand Book Download


Ennum Ezhuthum Class 1,2,3 | 2024 - 2025 Term 1 - Teachers Hand Book 


Tamil THB - Download here


English THB - Download here


Maths T/M - THB - Download here


Maths E/M - THB - Download here

EMIS - ல் ( Campaign Students ) 2024-25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை செய்வதற்கான வழிமுறை வீடியோ!!

 EMIS%20LOGO

STUDENTS ADMISSION AY 2024-25 | Add Admission Campaign Students

EMIS இணையத்தில் 2024-25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை செய்வதற்கான வழிமுறை வீடியோ👇

Video Link - Click here



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி

 An Update Regarding Parent Mobile Number OTP Verification


அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு


📌 பெற்றோர் செல் எண்ணிற்கு OTP அனுப்பிய பின்னர் உடனே OTP பெற்று Submit கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி உள்ளார்கள்.


 📌 பெற்றோர்கள் தங்கள் அலைபேசிகளுக்கு பெறப்படும் OTP-ஆனது 3 நாட்கள் வரை செல்லத் தகுந்ததாகும்.  


📌 OTP அனுப்பிய மூன்று நாட்களுக்குள் பள்ளிகள் உரிய பெற்றோரை தொடர்பு கொண்டு OTP நம்பரை பெற்று உரிய மாணவரின் EMIS Student List-இல் பதிவிடவும்.


📌 TC வழங்கப்பட்டு ஏற்கனவே Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கும் தற்பொழுது OTP Verify செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளும் இப்பணியினை காலதாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.


-மு.க.அ., தஞ்சாவூர்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு

 

1253104

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. | படம் : எ ஸ்.சத்தியசீலன் |

சென்னை: பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: புத்தகங்கள், நோட்டுகள் மே 31-க்குள் விநியோக மையங்களில்இருந்து பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும். மேலும், புத்தகங்கள், நோட்டுகள் தேவையான அளவில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். அ


தேபோல், தங்கள் மாவட்டத்துக்கு தேவையான பாடநூல்கள், நோட்டுகள் பெறப்படவில்லை எனில்,முதன்மை கல்வி அலுவலர்கள், அருகே உள்ள மாவட்டத்தில் கூடுதலாக இருந்தால், அவற்றை பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவற்றை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News