Search

சோர்வு.. அமைதியின்மை.. அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க.. மூளை கட்டியாக இருக்கலாம்.!

 சோர்வு மற்றும் அமைதியின்மையால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவருக்கு, முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதிர்ச்சிகரமாக பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

உடல் நலம் தொடர்பான சிறிய கவனக்குறைவு, பல நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனையை கொடுத்துவிடும். ஒரு பெண்ணுக்கும் அப்படித்தான் நடந்துள்ளது. முதலில் தொடர்ந்து சோர்வும், அமைதியின்மையாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால், வேலைக்கு லீவு போட்டுவிட்டு, வெகுதூர பயணங்களை மேற்கொண்டார். ஆனாலும், அவருக்கு உற்சாகமும், மன அமைதியும் கிடைக்கவில்லை.

பிறகு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றார். அப்போது மருத்துவரோ, மன அமைதிக்கான சில ஆலோசனைகளை கூறியதோடு, சோர்வை நீக்க சில மருந்துகளையும் பரிந்துரைத்தார். மருத்துவரின் ஆலோசனையை சரியாக பின்பற்றினாலும், அந்த பெண்ணுக்கு பிரச்சனை போகவில்லை. இப்போது, தலைவலியும் சேர்ந்துவிட்டது.

பிரிட்டனை சேர்ந்த அவரது பெயர் மிச்செல் ரிச்சர்ட்ஸ். 55 வயதான இவர், ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடுமுறையை கழித்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பியபோது, விடுமுறைக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதேபோல் சோர்வு மற்றும் மன அமைதியின்மையை எதிர்கொண்டார். தலைவலி ஏற்பட்டதும் மருத்துவரை மீண்டும் அணுகி அதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு பதற்றம் அதிகரித்தது. அதற்கும் சிகிச்சை எடுத்தார். ஆனாலும், அவருக்கு எந்த பிரச்சனையும் சரியாகவில்லை.

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதால், வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தாலும், அவருக்கு எதுவுமே சரியாக இல்லை. அந்த நேரத்தில் அவருக்கு லேசான வலிப்பு ஏற்பட்டதோடு, பக்கவாதத்திற்கான சில அறிகுறிகளும் ஏற்படத் தொடங்கின. எனவே, மருத்துவரின் ஆலோசனையின்படி, முழு உடல் பரிசோதனை மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தபோதுதான், அவரது மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
5 செ.மீ., அளவில் இருந்த அந்த கட்டியை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். இது குறித்து கூறியுள்ள மிச்செல், மூளையில் கட்டி இருந்ததை, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இதை நான் அதிர்ச்சியாக உணருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். எனவே, சிறிய பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


🔻 🔻 🔻 

மாணவர்களுக்காக விரைவில் ஏராளமான புதிய அறிவிப்புகள்” - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.




பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடக்க விழா மற்றும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்ட தொடக்க விழா சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்.நிதி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவர்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு திட்டத்தையும், ஆதார் பதிவு மையத்தையும் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியது:“கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறந்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்க உள்ளது. அதில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன..



மாணவர்கள் இந்த வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் கஷ்டப்பட்டு தங்களைப் படிக்க வைக்கின்றனர் என்பதை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அவர்கள் நல்ல குழந்தைகளாக வளர வேண்டும். மதிப்பெண் என்பது அடுத்ததுதான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு இந்திய மாநிலத்திலும் பள்ளிக் கல்வித் துறைக்கு இவ்வளவு அதிக ஒதுக்கீடு கிடையாது.




அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புதிய திட்டங்கள் படிப்படியாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள் படிப்புடன் விளையாட்டு, என்சிசி, என்எஸ்எஸ், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஒட்டுமொத்த திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயண வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். அந்த வகையில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 25 மாணவர்கள் லண்டன் செல்ல உள்ளனர்” என்று அவர் கூறினார்.




சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “கல்வித் துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் பேசுகையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.



முன்னதாக, பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி வரவேற்றார். நிறைவாக தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நன்றி கூறினார். விழாவில், தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி, அஞ்சலக முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், ஆதார் ஆணையத்தின் திட்ட மேலாளர் தினேஷ் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.







🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

 


பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

School Education Department Guidelines for - conducting District Education Review to improve the educational systems and standards Instructions issued

CS Letter to all District Collectors - Download here




🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஜூன் -12 | குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் -12

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஜூன் -12 ஆம் தேதி 11 மணி அளவில் அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும்...

Screenshot_2024-06-10-20-42-44-29_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

pledge - Pdf Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2024


நீதிக்கதை


 மன்னனும் கடல் அலையும்!


இங்கிலாந்தில் வாழ்ந்த மன்னன் கானுட். இவர் பல நாடுகளை வென்று ஒரு பெரிய ராஜாங்கத்தையே தனக்கு கீழ் நிறுவினார். அதனால் இவருக்கு பெரிய அரியாசனம் கொடுத்து இவரை பெருமையாக பேச ஆரம்பித்தார்கள்.


இவர் அரியாசனம் செல்லும் இடங்கள் எல்லாம் மன்னரை எதிர்க்க ஆள் இல்லாமல் போக ஆரம்பித்தது. அரசரை எதிர்க்க ஆளில்லை என்று பெயர் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்தது. இந்த பெயரால் அரசரின் உடன் இருந்தவர்கள் அவரின் புகழை பாட பாட  மன்னனுக்கு தலைக்கனம் ஏற ஆரம்பித்தது.


தன்னை எதிர்க்க யாராலும் முடியாது என்ற எண்ணம் அதிகமான  மன்னன் ஒருநாள் திரண்டு வரும் கடல் அலை கூட என் அரியாசனத்தை பார்த்தால் நின்று விடும் என சொல்ல சிலர் அவரை உங்களால் முடியும் என்று உசுப்பேத்த அவரும் அரியாசனத்தை தூக்கி கொண்டு கடலுக்கு சென்றார்.





கடல் அலை முன்னால் தனது அரியணையை எடுத்து வைத்தார். கடலுக்கும் அவர் அரியணைக்கும் இடைவெளி இருக்க, அவர் கடல் அலையை பார்த்து நில் என சத்தமாக கத்தினார். கடல் அலை மெதுவாக அடிக்கவும், அரசரும் அவர் அருகில் இருந்தவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது.

உடனே குஷியான மன்னன் இன்னும் சத்தமாக கடல் அலையே நில் என்று சொல்ல கடலும் அதே போல அமைதியாக வீச இப்போது நின்று விடும் என நம்பினார் மன்னர். கடல் அலை சொன்னது போல நிக்குமா, என யோசித்து கொண்டே  மன்னனை பார்த்தார்கள். அவர் அகோரக்ஷமாக இன்னும் கடலை பார்த்து கத்த கடல் அலை அடிக்கவில்லை.


அவ்வளவுதான் எல்லோரும் சந்தோஷத்தில் குதிக்க, மன்னரின் புகழை பாட ஆரம்பித்தார்கள். மன்னனுக்கும் தன்னால் தான் கடல் அலை வீசவில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கடல் அலை சுழட்டி பெரிய அலையாக அடிக்க மன்னரின் அரியனையோடு தூக்கி வீசியது. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை


அரசரின் தலையில் இருந்த தங்க க்ரீடம் அலையில் அடித்து கீழே விழ, அவரால் அதை மற்றவர்கள் முன்னாள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் போனது. இப்போது தான்  மன்னனுக்கு புரிந்தது. நம்மால் எதையுமே நிறுத்த முடியாது, முக்கியமாக இயற்கையை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். அதன் பிறகு அவரால் அரியணையில் ஏறி அமர மனம் வரவில்லை.


மக்களுக்கும் மற்ற ராஜ்ஜியத்திற்கும் அவர் செய்த செயல்கள் அவரை அரியணையில் மீண்டும் அமர விடாமல் தடுத்தது. இவர் செய்த செயல் நாடெங்கும் பரவியது. மன்னனின் தலைக்கனம் நீங்கியது. மீண்டும் அரியணை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் மனம் மாறினான். இருந்தாலும் இவன் கடல் அலையை நிறுத்த போவதாக கூறியது *சரித்திரத்தில்* இடம் பிடித்தது.


இன்றைய செய்திகள் - 11.06.2024


* தமிழக அரசு திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர்கள் உடன் தலைமைச் செயலர் 3 நாள் ஆலோசனை.


* ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை ரத்து செய்தது.


* காசாவில் 80%-ஐ நெருங்கும் வேலையின்மை: மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பு.


* நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்  விளையாடின. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


* தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Today's Headlines


* Tamil Nadu Government Schemes: Chief Secretary was consulting with District Collectors for 3 days.


*  The Public Health Department of the Tamil Nadu Government cancelled the appointment order of 193 doctors who did not join the primary health centers.


 * Unemployment nears 80% in Gaza: People are distressed with financial crisis


*  India and Pakistan teams played in the 'Group-A' match of the ongoing T20 World Cup series.  India won by 6 runs.


 * Tamil Nadu is likely to receive light to moderate rains till  16th, according to the Chennai Meteorological Department.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 















🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 



சென்னை மெட்ரோ ரயிலில் Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Manager, Assistant & General Manager பணிக்கான 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.


CMRL காலிப்பணியிடங்கள்:

Manager, Assistant & General Manager பணிக்கென காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CMRL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30, 38 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,25,000/- ஊதியம் வழங்கப்படும்.

CMRL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.07.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆவின் நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,00,000/- || முழு விவரங்களுடன்!

 

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது Project Manager, Marketing Consultant, Consultant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆவின் காலிப்பணியிடங்கள்:

Project Manager, Marketing Consultant, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E /B.Tech / M.E / M.Tech / MBA / CA /CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை எடுத்து,  பூர்த்தி செய்து  கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை – சம்பளம்: ரூ.10,000/- || நேர்காணல் மட்டுமே!

 மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.


Project Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC குரூப் 4 கட்-ஆப் எவ்வளவு தெரியுமா..? நிபுணர்கள் சொல்வது இதுதான்

 TNPSC Exam Group 4 Cut-off Marks:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 6244 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். கிட்டதட்ட 78% பேர் தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வினாத்தாள் பற்றிய ஒரு பகுப்பாய்வு, தோராய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு இருக்கும்? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

“கடந்த வருடங்களுடைய வினாத்தாளை விட இந்த வருடம் அவ்வளவு சுலபமாக இல்லை எனவும், தமிழைப் பொறுத்தவரை 88லிருந்து 92 வரை மதிப்பெண் எளிதில் பெற முடியும். 95 பெரும் பட்சத்தில் அது நல்ல மதிப்பெண் ஆகவே அமையும் என தனியார் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும், தமிழைப் பொறுத்தவரை இலக்கணத்தில் புதிதாக சில கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்பட்டிருந்தது. இலக்கணம், இலக்கியத்தில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக 25 மதிப்பெண்கள் கணக்கு கேள்விகள் கேட்கப்படும் ஆனால் இந்த ஆண்டு 27 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதில் 20 கேள்விகள் அனைவராலும் பதிலளிக்க கூடியதாக இருந்தது. சில கேள்விகள் நேரம் செலவு செய்து எழுத கூடியதாக இருந்ததாக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார்.

பொது அறிவை பொருத்தவரை சுலபமாக இருந்தாலும், ஒரு பத்து கேள்விகள் தரமாக கேட்கப்பட்டிருந்தது. விடை அளிப்பதற்கு சற்று சிரமமாக இருந்திருக்க கூடும். தற்போதைய நிகழ்வை பொருத்த கேள்விகள் டிஎன்பிசி தரத்தை தாண்டி எஸ் எஸ் சி போன்ற மத்திய அரசு தேர்வில் காண தரத்தில் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நாட்டு நடப்புகளையும், செய்தித்தாள் வாசித்தல் பழக்கம் இருப்பவர்களும் இதனை எளிதில் பதிலளிக்க முடியும் எனரமேஷ் தெரிவித்தார். 170 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும் நிச்சயம் தேர்வில் வெற்றி வாய்ப்பை தரும் என ரமேஷ் தெரிவித்தார்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 


காலாண்டு விடுமுறை குறைப்பு?

 

அரசு பள்ளி ஆசிரியர்களின் வேலை நாட்கள், 217ல் இருந்து, 220 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை, நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.


புதிய கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த, உத்தேச அட்டவணையை, பள்ளி கல்வி இயக்குனரகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு, 217 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் அதிகரித்து, 220 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


காலாண்டு தேர்வு விடுமுறை கடந்த ஆண்டு, ஏழு நாட்களாக இருந்தது. இந்த ஆண்டு, மூன்று நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.



பொதுத்தேர்வு தேதி இல்லை

 கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை


 பாடவேளைகளுக்கான நேரத்தை பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்க கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், 10ம் வகுப்பு வரை, தமிழ் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

2024 - 2025 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வு அட்டவணை விபரம்:


நிகழ்வு தேதிபுதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10முதலாம் பருவ காலாண்டு தேர்வு துவக்கம் செப்., 20காலாண்டு தேர்வு நிறைவு செப்., 28காலாண்டு விடுமுறை துவக்கம் செப்., 29இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு அக்., 3அரையாண்டு தேர்வு துவக்கம் டிச., 16அரையாண்டு தேர்வு நிறைவு டிச., 23அரையாண்டு தேர்வு விடுமுறை துவக்கம் டிச., 24மூன்றாம் பருவம் பள்ளிகள் திறப்பு 2025 ஜன., 2ஆண்டு இறுதி தேர்வு துவக்கம் ஏப்., 9ஆண்டு இறுதி தேர்வு நிறைவு ஏப்., 17மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் ஏப்., 18ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி துவக்கம் ஏப்., 21ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் ஏப்., 28.


பொதுத்தேர்வு

கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை பாடவேளைகளுக்கான நேரத்தை பொறுத்தவரை, காலை 9:00 மணிக்கு பள்ளி வேலை நேரம் துவங்க வேண்டும். முதல், 30 நிமிடங்கள் காலை வணக்க கூட்டம் நடத்தப்படும். காலை 9:30 முதல், 10:10 மணி வரை முதல் பாட வேளையில், 10ம் வகுப்பு வரை, தமிழ் கற்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.








🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News