Search

மாதம் ரூ.750 ஊக்கத்தொகை...இலவச தங்கும் வசதியுடன் தொழிற்பயிற்சி வாய்ப்பு

 

தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: புதிய விண்தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: புதிய விண்ணப்பங்கள் 10.05.2024 முதல் 13.06.224 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இணையதளம் வாயிலாக (www.skilltraining.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.

ஈராண்டு தொழில் பயிற்சிகள்: Fitter (பொருத்துநர்), Electrician (மின்சாரப்பணியாளர்), Mechanic Motor Vehicle (கம்மியர் மோட்டார் வாகனம்), Wireman (கம்மியர்), மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான Mechanic Diesel (கம்மியர் IPசல்), Welder (பற்றவைப்பவர்). Pump Operator cum mechanic (பம்ப் மெக்கானிக்), Advanced CNC Machining Technician NCVT (மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழிற்நுட்ப வல்லுநர்) Mechanic Electric Vehicle NCVT( கம்மியர் மின்சார வாகனம்) ஆகும்.ணப்பங்கள் 10.05.2024 முதல் 13.06.224 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இணையதளம் வாயிலாக (www.skilltraining.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.

ஈராண்டு தொழில் பயிற்சிகள்: Fitter (பொருத்துநர்), Electrician (மின்சாரப்பணியாளர்), Mechanic Motor Vehicle (கம்மியர் மோட்டார் வாகனம்), Wireman (கம்மியர்), மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான Mechanic Diesel (கம்மியர் IPசல்), Welder (பற்றவைப்பவர்). Pump Operator cum mechanic (பம்ப் மெக்கானிக்), Advanced CNC Machining Technician NCVT (மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழிற்நுட்ப வல்லுநர்) Mechanic Electric Vehicle NCVT( கம்மியர் மின்சார வாகனம்) ஆகும்.

ஓராண்டு தொழிற்பிரிவு: Industrial Robotics and Digital Manufacturing Technician NCVT(தொழிற்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்). Manufacturing Process Control and Automation (தொழிற்துறை இயக்க கட்டுப்பாடு மற்றும் தானியக்கம்) ஆகும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 8ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.14 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்: மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் அணுகவும்.

பயிற்சியும் பலன்களும்: பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/- விலையில்லா மதிவண்டி, சீருடைகள், தையல் கூலி, மூடுகாலணிகள், பாடப்புத்தககங்கள் வரைபட கருவிகள், பஸ்பாஸ, சலுகை கட்டண ரெயில் பாஸ், ஆகியன வழங்கப்படும்.

உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்குஅரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி, கடையநல்லூர், மற்றும் வீரகேரளம்புதூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளிகளின் கல்வி மேம்பாட்டை மாதந்தோறும் ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

 
பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை செயலர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியில் விரிவான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு அதன் மூலம் சமூக மேம்பாட்டை உயர்த்தவும், மாவட்டத்துக்குள் கல்வி நிலப்பரப்பை முறையாக மேம்படுத்தவும் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.


அதன்படி மாவட்ட அளவில் பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆராய மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வுக் கூட்டங்களை போல் மாவட்ட கல்வி மதிப்பாய்வும் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும்.


இதன்மூலம் எதிர்காலத்தின் கல்வி தேவைகளை மாற்றியமைக்கும் விதமாக மேம்படுத்துவதை உறுதிசெய்ய முடியும். மதிப்பாய்வு என்பது பள்ளிகளில் தேவையான வசதிகளை உருவாக்குதல், அடிப்படை வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கல்வி தொடர்பான போக்குவரத்து, சத்துணவுத் திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பள்ளிகளில் கற்பித்தல் முறைகள், மாணவர்களின் செயல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


இதுதவிர மாணவர் சேர்க்கை, பள்ளிக்கு மாணவர்களின் வருகை கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும். மேலும், மாவட்டக் கல்வி மதிப்பாய்வை அவ்வப்போது நடத்த வேண்டும். இதன்மூலம் கல்வி முறை மற்றும் அதன் தரம் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க ஜூன் 25 வரை அவகாசம் நீட்டிப்பு

 `இந்து தமிழ் திசை வழங்கும் `இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வரும் 25-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு வழக்கமான பாடங்கள் கற்பிப்பதுடன், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு அவர்களது திறன்களை வளர்த்து, சமூக அக்கறையுடன், நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 15 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, வரும் 25-ம் தேதிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, லெட்சுமிசெராமிக்ஸ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.


தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாக கற்பித்துவரும் தலைமை ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


ஏற்கெனவே அன்பாசிரியர் விருது மற்றும் மாநில, மத்திய அரசுவழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தயவுகூர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம்.


விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் ஆன்லைன் வழியாக நடைபெறும். தங்களது அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் முதல்கட்ட நேர்காணலில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். மண்டலஅளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிக்கட்ட நேர்காணல் நேரில் நடத்தப்படும். ​


விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், கீழே கொடுக்ப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள். அத்துடன் சுயவிவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள். வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.


ஆசிரியர்கள் https://www.htamil.org/AA2023 என்னும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு மு.முருகேசனை 7401329364 என்ற செல்போன் எண் அல்லது murugesan.m@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், விண்ணப்பப் படிவத்தை https://www.htamil.org/AAFORM என்ற லிங்க் மூலம்டவுன்லோட் செய்து, ‘அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை,124, வாலாஜா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு, மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் நகலுடன் வரும்25-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அஞ்சல் வழியாக அனுப்பலாம். அதிகமான தகவல்கள் இருப்பின் தனிக் காகிதத்தில் எழுதி அனுப்பலாம்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை -2024-2025

 

IMG_20240612_110147

2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான பாடநூல்களில் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் சில பத்திகள் / வாக்கியங்கள் / வார்த்தைகள் நீக்கியும் / மாற்றம் செய்தும் இணைப்பில் உள்ள அட்டவணையில் உள்ளவாறு அனுப்பப்படுகிறது . இது சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் திருத்தப் பட்டியலை அனுப்பி மாணவர்களுக்கு சார்ந்த பாடங்கள் கற்பிக்கும்போது , பாட ஆசிரியர்கள் இத்திருத்தங்களை மேற்கொண்டு கற்பிக்க உரிய அறிவுரையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்குமாறு கனிவுடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

 இணைப்பு : வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை

SCERT Proceedings - Download here




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BEO PROMOTION From Middle school HM- COUNCELING ON 14.6.24

 
BEO PROMOTION From Middle school HM- COUNCELING ON 14.6.24 @ 11 a.m onwards.

IMG_20240612_200022


BEO promotion counseling schedule - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அரசுப் பொதுத் தேர்வில் 💯 விழுக்காடு பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுதல் விழா உள்ளிட்ட ஐம்பெரு விழா - 14.06.2024

 

IMG_20240612_201628


அரசுப் பொதுத் தேர்வில் 💯 விழுக்காடு பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுதல் விழா உள்ளிட்ட ஐம்பெரு விழா - 14.06.2024 அன்று சென்னையில் நடைபெறுகிறது - DSE செயல்முறைகள்!

இணைப்பு: பள்ளிகளின் பட்டியல்.

💯% Result for 10th and 12th std CM Function👇

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum Useful Records

 
Ennum Ezhuthum Useful Records


Ennum Ezhuthum - Term 1 - LO Week Wise - Download here

Ennum Ezhuthum - Work Done Register - Download here

Ennum Ezhuthum learning outcomes - Download here

EE - Kit Box Catalogue - Download here

EE - Term 1 - FA ( a ) Activities - Download here

EE - FA(a)  & FA( b ) Records - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025

 Ennum Ezhuthum Empty Format - Download here


Term I Lesson Plan

June - 2024

Unit - 1

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

Term III Lesson Plan

Std 1,2,3th Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 thumb

மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டம் போல் மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.


இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு இன்று மீண்டும் சந்திக்கிறோம். தேர்தல் பணிகளை மிகச்சிறப்பாகக் கையாண்ட உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிகக் கடுமையான இந்தக் கோடை காலத்தில், குடிநீர் பிரச்சினை மற்றும் மின்வெட்டு ஆகியவை ஏற்படாமல் கவனமாக கையாண்ட உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாம் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்து, திட்டங்களின் பயன்கள் தேவையானவர்களுக்குச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.

இதனை மக்களுடன் உரையாடிய எனது நேரடி அனுபவங்களில் இருந்தே சொல்கிறேன். நமது அரசு கொண்டு வரும் திட்டங்களைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய்ச் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இருக்கிறது. இதனை கண்காணித்த மாவட்ட ஆட்சியர்களான உங்களுக்கு என்னுடைய நன்றி. அடுத்து வரப்போகும் நாட்களிலும் இன்னும்பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டம் தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள். இதுபோன்ற திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள்! புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க –


* சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு;

* சிறந்த சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்;

* கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்;

* பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்;


ஆகிய நான்கு குறிக்கோள்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்! இவைதான் நல்லாட்சியின் இலக்கணங்கள்! அத்தகைய நல்லாட்சியைதான் நாம் வழங்கி வருகிறோம்!

ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இது நமது அரசு என்று மக்களை நினைக்க வைத்துள்ளோம். இவை அனைத்தும் தொய்வில்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அதற்கு அடிப்படையாக நீங்கள் முழுக்கவனம் செலுத்த வேண்டியவற்றை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு.


* “மக்களுடன் முதலமைச்சர்” திட்டத்தினை வரும் ஜூலை திங்கள்

15-ஆம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


* “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” மற்றும் “நீங்கள் நலமா?” போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.


* வருவாய்த் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.


* “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் நீங்கள் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.


* அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் “கல்லூரிக் கனவு” “உயர்வுக்குப் படி” போன்ற திட்டங்களை நீங்கள் ஆர்வத்துடனும், முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும்.


* அதேபோல், விரைவில் தொடங்கப்படவிருக்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டமும் மிகவும் முக்கியமான திட்டமாகும். இதுபற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.


* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தையும் நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.


* 2024-25-ஆம் ஆண்டில் தங்கள் மாவட்டங்களில் நடைபெற


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்

 IMG_20240611_112347

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது - உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு .


ஒன்றியத்திற்குள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு 13.06.24 - இயக்குநரின் செயல்முறைகள்👇

Download here


மேற்குறிப்பிட்ட 1862 பணியிடங்களுக்கு முதல் கட்டமாக ஒன்றியத்திற்குள் மட்டுமே பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு 13.06.2024 அன்று நடைபெற உள்ளது . ஒன்றியத்திற்குள் பணிநிரவல் மாறுதல் வழங்கப்பட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு மாண்பைமிகு உச்சநீதிமன்றத்தில் TET சார்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்பட்ட பின்னர் உள்ள காலிபணியிடத்தில் இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்படும் .


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news