Search

பள்ளிக் கல்வித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025

 IMG_20240624_121643


பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025

 மானியக் கோரிக்கை எண் 43

 அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

School Education Policy Note -Tamil-Date 24.06.2024 👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளிக் கல்வித் துறை - மானியக் கோரிக்கை எண் - 43 அறிவிப்புகள் 2024-2025

 IMG_20240624_151712

பள்ளிக் கல்வித் துறை - மானியக் கோரிக்கை எண் - 43 அறிவிப்புகள் 2024-2025

SE-Arivippukal 2024-25 - Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு: குரூப் 1 தேர்வுக்கான மாதிரி தேர்வு

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் எழுத்துத் தேர்வு 13.07.2024. அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 11.06.2024 முதல் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் நோக்கில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 24.06.202427.06.202402.07.2024 மற்றும் 05.07.2024 ஆகிய தேதிகளில் சிறந்த வல்லுனர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி தரத்தில் நடத்தப்படவுள்ளது.

தேர்வர்கள் இத்தேர்வுக்கு வரும்போது டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல் மற்றும் போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இம்முழுமாதிரி தேர்வில் பங்குபெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 63792 68661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து, பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

EMIS New Update - Schemes Delivered Photo Upload

 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு  விலையில்லா வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TNSED App - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா பொருட்கள் விவரத்தினை ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது இதற்கான ஆப்ஷன்ஸ் தற்போது TNSED App - ல் கொடுக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே Yes என்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது புதிதாக ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு விலையில்லா பொருட்களுக்கும் புகைப்படம் எடுத்து அதனை அப்லோட் செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் - 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் - பள்ளிக் கல்வித் துறை

 

1268714

அரசுப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அனைத்து செயல்பாடுகளும் மானிட்டரில் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் 2022-2023, 2023-24-ம் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class) ஏற்படுத்தவும் மற்றும் 2021-22, 2022-23, 2023-24-ம் கல்வியாண்டுகளில் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HiTech Lab) அமைப்பதற்குமான பணிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.


தொடர்ந்து டிஜிட்டல் வடிவிலான கற்றல் கற்பித்தல் (Digital Contem) வளங்களை தயாரித்து திறன்மிகு வகுப்பறைகள் மூலம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்குவதுடன், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வகுப்பறையில் சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாகவும் இருக்கும்.


இதற்கிடையே, நடப்பு கல்வியாண்டில் (2024-25) முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள 493 பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், ஆரம்பப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் நடப்பு கல்வியாண்டில் இருந்து முறையாக செயல்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பு செய்வதற்கும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.


அதன்படி திறன்மிகு வகுப்பறையை கையாள பள்ளிக்கு ஒரு ஆசிரியரை சார்ந்த தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக மட்டுமே திறன்மிகு வகுப்பறையை தினமும் பயன்படுத்த வேண்டும். பொறுப்பாசிரியர் இல்லாமல் திறன்மிகு வகுப்பறையை மாணவர்கள் கையாளுவதை தவிர்க்க வேண்டும்.


தினமும் ஒரு மணி நேரம் திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்துவதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். மேலும், டிஜிட்டல் பாடப்பொருட்கள் காணொலிகளாக தனித்தனியே இடம் பெற்றிருக்கும். அதேநேரம் பாதுகாப்புக்காக கணினியில் உள்ள யுஎஸ்பி போர்ட்கள் (USB Port) முடக்கப்பட்டுள்ளன. எனவே கணினியில் பென் டிரைவ் போன்ற எந்த தகவல் சேமிப்பானையும் இணைக்கக்கூடாது. பணியாளர்கள் தங்கள் சொந்த செயல்பாடுகளுக்கு கணினி மற்றும் இணையதள வசதியை பயன்படுத்தக் கூடாது.


அனைத்து செயல்பாடுகளும் 24 மணி நேரமும் மானிட்டரில் பதிவு செய்யப்படும். அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் நாற்காலி, மேஜைகள் போன்ற பொருட்கள் சேதமடையக்கூடாது. ஆய்வகத்துக்குள் எந்தவொரு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவோ, அங்கு வைத்து சாப்பிடவோ அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்படும்.


ரூ.7500 கோடியில் 16 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,487 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் உள்பட 3603 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.


3,601 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 அரசு / பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி தொடக்கப்பள்ளி / நடுநிலைப் பள்ளிகள் - பள்ளி வங்கிகணக்குகள் -ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



8th pay Commission - ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு

 



எட்டாவது ஊதியக்குழு, ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91. 2.28, 3.0 என பலவித கருத்துகள் இருந்தாலும், ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.

01.01.2026 அன்று ஒருவர் 100 பைசா அடிப்படை ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தேதியில் அகவிலைப்படி சுமார் 66% ஆக இருக்கலாம்.



அதாவது 01.01.2024 ல் 50%, 01.07.2024 ல் 54%, 01.01.2025 ல் 58%, 01.07.2025 ல் 62%, 01.01.2026 ல் 66% என்ற வகையில் அகவிலைப்படி உயரக்கூடும்.

அப்படியென்றால் 01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் 100 பைசா பெறுபவர், 66% அகவிலைப்படியுடன் சேர்த்து 166 பைசா ஊதியம் பெறுவார்.



எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு 15% ஊதியம் கூடுதலாக தருவதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஊதிய நிர்ணயக் காரணி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

ஊதிய நிர்ணயக் காரணி உருவாகும் விதம் :

01.01.2026 அன்று அடிப்படை ஊதியம்

100 பைசா

01.01.2026 அன்று அகவிலைப்படி (66%)

66 பைசா

மொத்த ஊதியம்

166 பைசா

– 1.66 ரூபாய்.

அதாவது, 166 பைசா

எட்டாவது ஊதியக்குழுவில் அரசு தரும் கூடுதல் ஊதியம் 15%

1.66 x 15% = 0.249

இதை அருகில் உள்ள இரண்டு இலக்க எண்ணுக்கு முழுமை படுத்தினால் 0.25 ஆகும். மொத்த ஊதியம் 1.66 ரூபாய் + 15% அரசு தரும் கூடுதல் ஊதியம் 0.25 = 1.91 ரூபாய். இந்த 1.91 தான் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதியம் நிர்ணயம் செய்ய பயன் படுத்தப்படும் ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ஆகும்.

Fitment Factor – 1.91 

தன் அடிப்படையில் ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய ஒரு கணக்கீடு:

ஊதியக்குழு நடைமுறை படுத்தப்படும் முன்பு ஊதியம் : (01.01.2026 ல்)
அடிப்படை ஊதியம்
ரூ.90,000
66% அகவிலைப்படி
ரூ.59,400
மொத்த ஊதியம்
ரூ.1,49,400.

01.01.2026 அன்று நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் :
01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் - ரூ. 90,000
பெருக்குக்காரணி 1.91 மூலம், நிர்ணயம் செய்யப்படும்,

ஊதியம் (ரூ.90,000 × 1.91)
அகவிலைப்படி
மொத்த ஊதியம்
- ரூ.1,71,900
ரூ.0
- ரூ.1,71,900
(01.01.2026 முதல் 30.06.2026 வரை மட்டும் அகவிலைப்படி 0 என கணக்கிடப்படும்.)

வித்தியாசம்( 1,71,900 - 1,49,400) = ரூ.22,500.

(எட்டாவது ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்டதால் ரூ. 22,500 கூடுதலாக கிடைத்தது.)


அரசு தரும் 15% ஊதிய உயர்வு என்பது 01.01.2016 முதல் 31.12.2025 வரை அத்தியாவசிய நுகர்வு பொருள்கள் விலை உயர்வின் சராசரி ஆகும். அரசு தரும் ஊதிய உயர்வு, 15% முதல் 20% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை அரசு 20% ஊதிய உயர்வு அளித்தால், இன்னும் கூடுதல் தொகை ஊதியத்தில் கூடுதலாக கிடைக்கும்.


இது ஒரு மாதிரி கணக்கீடு தான். நிதிநிலை பொறுத்து அரசு தரும் ஊதிய உயர்வு தான் கிடைக்கும் என்றாலும், 15% ஐ விட குறைவாக இதற்கு முன் வழங்கியதில்லை என்பதால், மேற்கண்ட மாதிரி கணக்கீட்டின் அடிப்படையில் ஊதிய உயர்வு கண்டிப்பாக இருக்கும் என நம்பலாம்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடைகைப்படி மற்றும் இதரப்படிகள், அடிப்படை ஊதியத்தில் 10%, 8%, 5% என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள், இதற்கென அமைக்கப்படும் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கும்.


ஆண்டு ஊதிய உயர்வு வழக்கம்போல் 3% ஊதியம் உயர்த்தி வழங்கப்படலாம். இதன் அடிப்படையில் Pay Matrix அட்டவணை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


Click Here to Download - 8th pay Commission - Fitment Factor - Full Calculation - Pdf


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

 

1269202

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் , அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன் வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ/மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் இக்கல்வியாண்டிலும் வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M

 

Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025

Ennum Ezhuthum Empty Format - Download here

Term I Lesson Plan

June - 2024

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4  Std -  Term 1 - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 5th Std -  Term 1 - Full Lesson Plan - Download here

Unit - 3

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M - Download here


Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M - Download here


Unit - 2

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - T/M - Download here


Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - E/M - Download here

Unit - 1

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

Term III Lesson Plan

Std 1,2,3th Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan - Download here




🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news