Search

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளி பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளி பணிக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித்திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வந்தது. 

கொரோனா காலகட்டத்தில் இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. தொடர்ந்து இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களில் சிலர், ஸ்மார்ட் வகுப்புகள், உயர்தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநர்களாக அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இல்லம் தேடி கல்விதிட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளர்களாக வட்டார அளவில் ஆசிரியர்களை நியமனம் செய்து கண்காணித்து வந்தனர்.இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் மீணடும் பள்ளி பணிக்கு திரும்பும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 

ஒவ்வொரு மாவட்டத்திலும் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு என்று ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்களை நியமனம் செய்தனர். ஆனால் தற்போது இல்லம் தேடி கல்வி திட்டம் மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக்கல்வி வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இல்லை. அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளராக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கும் திறமையான மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்த ஒரு நபரை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தப்படும். வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் வரும் ஜுலை 1ம் தேதி முதல் பள்ளி பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுப்பியுள்ள ஆசிரியர்களில் சில இடங்கள் உபரி பணியிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள். அந்த ஆசிரியர்களை தற்போது நடைபெற உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளினுடைய உபரி ஆசிரியர்களாக இருப்பின் வரும் 27ம் 28ம் தேதிகளில் அரசு பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் நியமனம் செய்திட வேண்டும். மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களாக இருப்பின் அந்தப் பள்ளியில் உபரி பணியிடம் இல்லாமல் இருந்தால் அவர்களை தொடர்ந்து பணிபுரிய வேண்டும். உபரி பணியிடமாக இருந்தால் உடனடியாக மாணவர்களின் தேவை அடிப்படையில் ஒன்றியத்திற்குள் உள்ள அரசு பள்ளிக்கு உடனடியாக நியமனம் செய்கின்ற வகையில் அவர்களுக்கு உரிய கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும். இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் வழங்குகின்ற பட்டியல் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதனை சரி பார்த்து உறுதி செய்து இப்பணிகளை எவ்வித சுணக்கும் இன்றி நன்முறையில் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

IMG_20240626_185330

பள்ளிக் கல்வி - பொது சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி / மாநகராட்சி ( சென்னை , மதுரை , கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளிகள் நீங்கலாக ) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.141 Lab Asst Deployment - Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு!

 இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு!

👇👇👇👇

SGT Within State Seniority Panel pdf - Download here

SGT Within State Seniority Panel xlsx - Download here

எளிதாக உங்கள் seniority. வரிசையை தெரிந்து கொள்ள Google Sheets App மூலம் Open செய்து அதன் வலது புற மூன்று புள்ளிகளை Touch செய்து அதில் Find and replace option- யை கிளிக் செய்யவும்.அதன் பிறகு மேலே Find என ஒரு களம் Type செய்யும் வகையில் காணப்படும்.அதில் உங்களது 8DIGIT Teacher Id -யை Enter செய்து எளிதாக கண்டறியலாம்

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகள் பராமரிப்பு: தொடக்கக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

1270221

அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகள் பராமரிப்பு தொடர்பாக தொடக்கக் கல்வித் துறையின் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 'தமிழகம் முழுவதும் உள்ள 31, 336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு செலவினங்களை மேற்கொள்வதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பள்ளிகள் பராமரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நிர்வாக சிக்கல்களை தவிர்ப்பதற்காக வங்கி கணக்குகளை பராமரிப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டங்களுக்கு தனியாக வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், பொதுவான பள்ளி பயன்பாட்டுக்கு தனியாக வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்விரு வங்கிக் கணக்குகள் தவிர்த்து வேறு இருப்பின் அவற்றை முடிவுக்கு கொண்டு வந்து அதில் உள்ள நிதியை பள்ளி பொதுவான வங்கிக்கணக்கில் வரவு வைத்து பராமரிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

துவக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்.

 IMG_20240627_122320

துவக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்.

1 to 12 Students Teachers ratio. PDF👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - Term 1 - Training Module - Class 1, 2, 3 - Maths செயல்பாட்டு பகுப்பாய்வு படிவம்

2024 - 25 ஆம் ஆண்டிற்கான "எண்ணும் எழுத்தும்" முதல் பருவ பயிற்சிக்கான Modules கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சியின்போது ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Click Here to Download - EE - Term 1 - Training - Maths செயல்பாட்டு பகுப்பாய்வு படிவம் - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - Term 1 - Training Module - தமிழ் குழு பிரிதல்

 2024 - 25 ஆம் ஆண்டிற்கான "எண்ணும் எழுத்தும்" முதல் பருவ பயிற்சிக்கான Modules கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சியின்போது ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Click Here to Download - EE - Term 1 - Training Module - தமிழ் குழு பிரிதல் - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - Term 1 - Training Module - Class 1, 2, 3 - Maths (2)

2024 - 25 ஆம் ஆண்டிற்கான "எண்ணும் எழுத்தும்" முதல் பருவ பயிற்சிக்கான Modules கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சியின்போது ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Click Here to Download - EE - Term 1 - Training Module - Class 1, 2, 3 - Maths (2) - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - Term 1 - Training Module - Science

 2024 - 25 ஆம் ஆண்டிற்கான "எண்ணும் எழுத்தும்" முதல் பருவ பயிற்சிக்கான Modules கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சியின்போது ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Click Here to Download - EE - Term 1 - Training Module - Science - Pdf

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news