Search

அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை முதல் விரிவாக்கம்:

 1279420

அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்.15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.


இத்திட்டத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023 ஆக.25-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்வரால் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.


.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதல்வர், நாளை (ஜூலை 15) காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.


இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். முதல்வரால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உலகுக்கே முன்னோடியான திட்டமாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

MIDDLE SCHOOL HM TRAINING Proceedings & Participant List

 

IMG_20240712_192438

2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண் .8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் முதன்மைக் கருத்தாளர் பயிற்சி மதுரை மாவட்டம் , நாகமலைப்புதுக்கோட்டை , பில்லர் வளாகத்தில் 33- 46 தொகுதிகளுக்கு நடைபெறுதல் - நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

MIDDLE SCHOOL HM TRAINING Proceedings - Download here


MS Participant List_July to October 2024 - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிபுரியும் இடத்திலிருந்து Google Meet மூலம் கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!

 IMG_20240712_165434

அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிபுரியும் இடத்திலிருந்து Google Meet மூலம் கலந்தாய்வு - DSE செயல்முறைகள்!


DSE - Over 3 Years - Google Meet Counseling - Proceedings

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

FA (B) TERM I CLASS 1-3 ENABLED

 
 FA (B) TERM I CLASS 1-3  ENABLED


 🌺 ஒவ்வொரு பாடத்திலும் Assessment-1 இல் இடம் பெறும் Modules & Activities விவரம்


தமிழ் 

📕(Module 2 & 3)


📕ஆங்கிலம் 

(Module 2 & 3)


📕கணக்கு 

(Module 1 & 2)


Video Explanation - Click here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Sainik School-ல் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

 Sainik School-ல் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

Sainik School Nalanda ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Clerk, Lab Assistant, Teachers மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Sainik School காலிப்பணியிடங்கள்:

Clerk, Lab Assistant, Teachers மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Clerk கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / B.Ed / B.P.Ed / B.Sc / BA / BCA / Diploma / M.Ed / M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Sainik School வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18,21 என்றும் அதிகபட்ச வயதானது 35,40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Clerk ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Sainik School தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.07.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Assistant Lecturer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,12,400/-

 

Assistant Lecturer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,12,400/-

Assistant Lecturer, Teaching Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Institute of Hotel Management ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IHM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Lecturer, Teaching Associate பணிக்கென மொத்தம் 5 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Lecturer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IHM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30, 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Lecturer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,000/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IHM தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வங்கியில் வேலை தேடுபவரா? Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு || 540+ காலிப்பணியிடங்கள்!

 வங்கியில் வேலை தேடுபவரா? Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு || 540+ காலிப்பணியிடங்கள்!

Apprentice பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை UCO Bank ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 544 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

UCO Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentice பணிக்கென காலியாக உள்ள 544 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Apprentice கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UCO Bank வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprentice ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

UCO Bank தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ் வளர்ச்சி துறையில் Office Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.58,100/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 தமிழ் வளர்ச்சி துறையில் Office Assistant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.58,100/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

தமிழ் வளர்ச்சி துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant, Cleaner, Gardener பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Office Assistant, Cleaner, Gardener பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 5ம் வகுப்பு / 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32,34 மற்றும் 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.4,100/- முதல் ரூ.58,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 -1500 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

 

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 -1500 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

Apprentice பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentice பணிக்கென மொத்தம் 1500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentice கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apprentice ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இந்தியன் வங்கி விண்ணப்ப கட்டணம்:

General/OBC/EWS – ரூ.500/-

SC/ST/PWBD – கட்டணம் இல்லை.

Apprentice தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.07.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நெய், அரிசி, உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்குமா..? டயட் இருப்போர் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 உடல் பருமனாக இருக்கும் நபர்களுக்கு தங்கள் உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைப்பது எப்போதுமே பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க சிறந்த வழி நீங்கள் உண்ணும் உணவிலும், உடல் செயல்பாடுகளிலும் ஆரோக்கியமான மாற்றங்களை செய்வதே.

ஆனால் எடை குறைப்பிற்காக சில விஷயங்களை செய்யும் போது சிலர் தங்கள் டயட்டில் பல உணவுகளை நீக்கி மிக கடுமையான உணவுமுறையை பின்பற்றுகிறார்கள். இதில் கொழுப்பு உணவு என்று முத்திரை குத்தப்படும் சில ஆரோக்கியமான உணவுகளும் அடக்கம். மிதமாக எடுத்து கொண்டால் கூட உடலில் கொழுப்பு கூடிவிடும் என எடை இழக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சில உணவுகளை அறவே தவிர்த்து விடுகிறார்கள்.

தங்களின் வெயிட் லாஸ் டயட்டின் போது பலர் தவிர்க்கும் பொதுவான உணவு பொருட்கள் தொடர்பான சில கட்டுக்கதைகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணரான கரிஷ்மா ஷா விவரித்துள்ளார். இது தொடர்பாக தனது சோஷியல் மீடியாவில் ’ எடை குறைப்பிற்காக உங்கள் உணவை மாற்றியமைக்கும் போது, நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டியதில்லை’ என குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு பிடித்த உணவுகள் உங்கள் எடை இழப்பு குறிக்கோளுக்கு தடையாக இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா? சில பொதுவான கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று கேப்ஷன் கொடுத்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவற்றை கீழே பார்ப்போம்…

நெய்:

நெய் கொழுப்பு சத்து அதிகம் என கூறப்பட்டாலும், நம்முடைய வளர்சிதை மாற்றத்தை தூண்டி எடையைக் குறைக்க உதவும் கொழுப்பு அமிலங்களை (fatty acids) கொண்டுள்ளது. எனவே அதிக அளவு நெய் சேர்க்காமல் தினசரி ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்ப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளை அரிசி:

நாம் எப்போதும் வழக்கமாக எடுத்து கொள்ளும் வெள்ளை அரிசியை சாப்பிடுவதால் எடை அதிகரிப்பதாக தவறாக கூறப்படுகிறது. உண்மையில் அரிசி உணவை மிதமான அளவில் சாப்பிடும் போது, தீங்கு விளைவிக்கும் ஆபத்தான கொழுப்புகள் இல்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. எனவே இதன் நன்மைகளை சரியாக பெற வெள்ளை அரிசியை காய்கறிகள் அல்லது லீன் ப்ரோட்டீன்களுடன் சேர்த்து நன்கு சமச்சீரான டயட்டை பின்பற்ற கரிஷ்மா ஷா பரிந்துரைக்கிறார்.

மாம்பழம்:

கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் அனைவருக்கும் பிடித்த பழம். ஆனால் இதில் உள்ள கலோரிகள் காரணமாக எடை குறைப்பு முயற்ச்சியில் இருக்கும் பலரால் தவிர்க்கப்படுகிறது. சுவை கொண்ட பழத்தில் வைட்டமின்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை சிறப்பாக வைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கொழுப்பு கூடும் என்பது ஒரு பொதுவான கட்டுக்கதையாகும். குறிப்பாக இதன் தோலை உரிக்காமல் எடுத்து கொள்ளும் போது உருளைக்கிழங்கில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகளை பெற அவற்றை நன்கு வறுப்பதை தவிர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வாழைப்பழம்:

ஆரோகியமான காலை உணவிற்கான பழம் மட்டுமல்ல, அதிக ஆற்றல், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளவையாக வாழைப்பழங்கள் இருக்கின்றன. இந்த பழங்கள் செரிமானம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தீவிர ஒர்கவுட்டில் ஈடுபடுபவர்கள் இந்த பழத்தால் அதிக பலன் பெறலாம்.

கொண்டைக்கடலை:
கொண்டைக்கடலையில் அதிக ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் சத்து உள்ளது, இதை சாப்பிட்ட உடன் நீண்ட நேரம் வயிற்று நிரம்பிய உணர்வை தரும் மற்றும் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தும். மேலும் இது திறம்பட உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip