Search

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா.. வெளியான லேட்டஸ்ட் தகவல்...

 

தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அரசுப்பணியைப் பெற வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களது கனவாக உள்ளது.

இதற்காகப் பலரும் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து தொடர்ந்து படித்து வருகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பையும் பலரும் உற்றுநோக்கிக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்குத் தோராயமாக 3 மாதங்களிலிருந்து 6 மாத காலமேயாகும். ஆனால் கடைசியாக 2022 ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது சில காரணங்களால் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கு 8 மாதத்திற்கு மேல் கால தாமதங்களாகிவிட்டன.

கடந்த 2014 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். ஆனால் கொரோனா பாதிப்பின் காரணத்தினால் 2020 மற்றும் 2021ல் டிஎன்பிசி தேர்வு நடைபெறவில்லை ஆகையால் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலாகத் தேர்வர்கள் பங்கேற்றனர். அதனால் மும்மடங்கு கூடுதலாக வேலைகள் இருந்ததால் தேர்வு முடிவுகள் வெளியிடக் காலதாமதம் ஆகியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் மகளிருக்கான இடஒதுக்கீடு முறையில் மாற்றத்தை குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் பெயராலும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகின.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவிற்காக 17 லட்சத்திற்கு மேலான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்வு முடிவு தாமதமில்லாமல் விரைவாக வெளியாக வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்பார்த்த தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்த இந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி அதாவது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு அஞ்சல் அலுவலங்களில் 3,789 காலியிடங்கள் ... விண்ணப்பிப்பது எப்படி..?

 இந்தியாவில் உள்ள அரசுத் துறைகளில் முக்கியமான துறைகளில் ஒன்றான அஞ்சல் துறையில் பணி வாய்ப்பு பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாகும். அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இளைஞர்கள் வெகு நாட்களாகக் காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் அஞ்சல் துறையில் உள்ள கிராம் டக் சேவக்ஸ் (Gramin Dak Sevak) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பதாரருக்கான தகுதிகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்…

அஞ்சல் துறையில் பிராஞ் போஸ்ட் மாஸ்டர் (BPM), அசிஸ்டண்ட் போஸ்ட் மாஸ்டர் (ABPM/DakSevak), கிராம் டக் சேவக்ஸ் (GDS) உள்ளிட்ட பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு இல்லாமல் நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கு மொத்தம் 44,228 காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 3,789 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கிளை தபால் அலுவலர் (BPM) பணிக்கு ரூ.12,000 - 29,380 வரையிலும், உதவி கிளை தபால் அலுவலர் பணிக்கு (ABPM/DakSevak) - ரூ.10,000 - 24,470 வரையிலும் சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பொதுப் பிரிவுக்கு ரூ.100, SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், விண்ணப்பிக்கும் நபரின் கையெழுத்து, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 05.08.2024 தேதி கடைசி நாளாகும். இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பெண்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு ... சமூகநலத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ...

 சமூக நலத் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு தகுதியுடைய மதுரையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட (சகி-ஒன் ஸ்டாப் சென்டர்) பெண்களுக்கான கூட்டுதல் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இரண்டு வழக்குப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதிய முறைகள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை பட்டம் படித்து முடித்தவராக இருக்க வேண்டும். வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதல் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறைந்த பட்சம் ஒரு வருடம் கவுன்சிலிங் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்.பயண செலவு திரும்ப பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இந்த பணிக்கு மதுரையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மேலும் பணி ஆனது காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரையும், மதியம் 12 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை என மூன்று சுழற்சி முறைகளில் இருக்கும். இந்த பணிக்கான மாத ஊதியம் ரூபாய் 18,000 ஆகும். விண்ணப்பத்தார்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட படிவத்தில் தங்களது சுய விவரங்களை பூர்த்தி செய்து அத்துடன் தகுதி சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மதுரை 20 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Baseline Assessment முதற்கட்ட மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்வு - SPD செயல்முறைகள்!

 IMG_20240716_170257

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கின்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யாத ஆசிரியர்கள் ஜூலை 15.072024 மற்றும் 16.07.2024 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் . அதன் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் முதற்கட்ட மதிப்பீடு தேர்வில் கலந்துக் கொள்ளாத உயர்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக மதிப்பீடு தேர்வானது ( Phase - II Assessment ) ஜூலை 18.07.2024 மற்றும் 19.07.2024 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு d ள்ளது . எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

11th & 12th std Baseline Student Assessment II Phase - Instructions👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூடுதலாக 1 முதல் 3 பள்ளிகளுக்கு பொறுப்பு - Proceedings

 கிருஷ்ணகிரி மாவட்டம் , ஒரூர் கல்வி மாவட்டம் ( தொடக்கக்கல்வி ) , தனி ஒன்றியம் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டு தகவல் மேலாண்மை முறையை இணையதள வழி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.


 கலந்தாய்வு மூலம் தலைமையாசிரியர் மாறுதலில் சென்றுள்ளதால் கீழ்க்கண்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்ட காரணத்தால் இப்பள்ளிகளுக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி கீழ்க்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு நிதி அதிகாரத்துடன் கூடிய அனைத்து பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது . மேலும் கீழ்க்கண்ட தலைமையாசிரியர்கள் 08.07.2024 முதல் கலம் 4 ல் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாக கூடுதல் பொறுப்புடன் பணிபுரிய ஆணையிடப்படுகிறது.

IMG-20240717-WA0017


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SMC -திருத்தப்பட்ட SPD செயல்முறைகள்

 IMG_20240717_175818

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில திட்ட இயக்குநரின் திருத்தப்பட்ட SMC செயல்முறை. பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம்

Revised Proceedings - SMC Parents Meeting & Reconstitution Schedule-reg Proceedings

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இராணிப்பேட்டை ஒருங்கிணைந்த சேவை மையம் Senior Counsellor, Case Worker வேலைவாய்ப்பு 2024


 
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 3. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்இராணிப்பேட்டை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 23.07.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும்B.Sc, BSW, M.Sc, MSW தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 3

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc, BSW, M.Sc, MSW தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 18,000/- முதல் ரூ. 22,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 35 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (23.07.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
District Social Welfare Office,
4th Floor C-Block Collectorate Campus,
Ranipet-632401.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

23.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்இங்கே பதிவிறக்கம் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே பதிவிறக்கம் செய்யவும்

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்இங்கே பார்க்கவும்



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

 

அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை முதல் விரிவாக்கம்:

 1279420

அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்.15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.


இத்திட்டத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023 ஆக.25-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்வரால் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.


.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதல்வர், நாளை (ஜூலை 15) காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.


இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். முதல்வரால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உலகுக்கே முன்னோடியான திட்டமாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூல் 15 கடைசி நாள்!

 தகுதியான ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ( 2024 ) விண்ணப்பிக்க  ( ஜூல் 15 ) கடைசி நாளாகும்.


 இதற்கு nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆசிரியர்கள் தங்களது சுய பரிந்துரைகளை அனுப்பி விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 ஆண்டுதோறும் தேர்வாகும் 50 ஆசிரியர்களுக்கு , செப் .5 ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கி கெளரவிப்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news