Search

சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி? தமிழக அரசு பயிற்சி

 இண்டர்நெட் யூகத்தில் எல்லாம் விரல் நுனியில் முடிந்து விடுகிறது. ஸ்மார்ட்போன்கள் பல சாகசங்களை சாத்தியமாக்குகின்றன.

யூடியூப் மூலம் பலரும் தங்களது தனித்திறமைகளையும், பல்வேறு தகவல்களை அதில் பகிர்ந்து வருமானம் பார்க்கின்றனர். அப்படி உங்களுக்கும் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு அதற்கு பயிற்சி வழங்குகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ” யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வரும் 22.07.2024 முதல் 24.07.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிடட வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரி:
தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை -600 032.

தொலைபேசி எண்கள்: 04422252081 22252082 / 8668100181 9841336033
முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SGT - State Vacancy List ( 19.07.2024 )

 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக  உள்ள அனைத்து மாவட்ட காலி பணியிடங்கள். 19.07.2024_

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு முடித்த பின்பு உள்ள  காலி பணியிடங்கள்.

SGT - State Vacancy List ( 19.07.2024 )👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IT returns Individual efiling date extended 31-08-24

 

IT returns  Individual efiling date extended 31-08-24

IMG-20240719-WA0010

Problems in functioning of Income Tax Portal and update issues in AIS / TIS & Demand for Extension of Due date for filing of Income Tax Returns for AY 2024 25 from 31s July 2024 to 31 August 2024 .

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

44,228 காலியிடங்கள்: கிராம அஞ்சல் பணியாளர்களின் வேலை என்ன..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

 கிராமின் தக் சேவக்(GDS) எனப்படும் அஞ்சல் துறையின் துறை சாராத பணியாளர்கள் அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை அஞ்சல் அதிகாரிகள் ஆகியோரால் இது செயல்பட்டு வருகிறது. கிளை அஞ்சல் அதிகாரிகள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், துணை அஞ்சல் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். இந்தப் பணியாளர்கள் தங்களது 65 வயது வரை பணியில் இருப்பார்கள். மேலும் கிராம அஞ்சல் பணியாளர்கள் பற்றி பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார் ஓய்வு பெற்ற கிராம அஞ்சல் ஊழியர் கலியமூர்த்தி.


கிராமின் தக் சேவக் தவிர, உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்), கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்) மற்றும் தக் சேவக் ஆகியோரை பணியமர்த்துவதற்கும் இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் பொறுப்பாகும். தக் சேவக் சம்பளம் சராசரி இந்திய சம்பளத்தை விட சற்று குறைவாக உள்ளது. கிராமின் தக் சேவக் சம்பளம் நேரம் தொடர்பான தொடர்ச்சியான கொடுப்பனவு (TRCA) என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வேலைகளைப் போல் இல்லாமல், ஒரு GDS அவர்களின் மாதச் சம்பளத்தைப் பெற 4-5 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுவாக, இந்தியா போஸ்ட் ஜிடிஎஸ் சம்பளம் நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம் ₹10,000 மற்றும் ஐந்து மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ₹12,000. ABPM சம்பளம் GDS சம்பளம் தான். ஆனால், பிபிஎம் தபால் அலுவலக சம்பளம் நான்கு மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு மாதம் ₹12,000 மற்றும் ஐந்து மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ₹14,500. இந்த வேலை மத்திய அரசாங்க வேலையாக இருந்தாலும் தேர்வு எழுதியவர்கள் மெரிட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்கிறார் கலியமூர்த்தி.

கிளை போஸ்ட் மாஸ்டர்: (BPM)

கிராம பஞ்சாயத்தின் முழுமையான அஞ்சல் வலையமைப்பின் பொறுப்பில் பிபிஎம் உள்ளது. அவர்கள் தபால் அலுவலகம் மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் கிளைகளையும் நிர்வகிக்க வேண்டும். கணினிகள், மொபைல் போன்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்கள் வேலை நேரத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். BPM அனைத்து பதிவுகளையும் ஆவணங்களையும் நிர்வகிக்க வேண்டும்.

BPM கிளையின் தலைவராக இருப்பதால், துணைக் கிளை அலுவலகங்களில் உள்ள அனைத்துப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒப்படைக்கும் பொறுப்பில் உள்ளார். தபால் அலுவலகத்தின் திறமையான செயல்பாடுகளை அவர் உறுதி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்கும், கிளை செயல்படும் பகுதியில் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் அவர்கள் பொறுப்பு. பணம் தொடர்பான ஆவணங்கள், ஸ்பீட் போஸ்ட், புக் போஸ்ட் போன்றவற்றுக்குஅவர்கள் பொறுப்பு. மற்ற மேற்பார்வை அதிகாரிகள், சந்தைப்படுத்தல், மேளா அமைப்பு, வணிக கொள்முதல் போன்ற சில பணிகளை BPM க்கு வழங்கலாம். தபால்காரர்களிடையே அஞ்சல்/பார்சல் விநியோக வலையமைப்பை நிர்வகிப்பதற்கு அவர்கள் பொறுப்பாக உள்ளனர்.

உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்:

தபால் அலுவலகத்தின் திறமையான செயல்பாடுகளில் BPM க்கு ABPM உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்திரைகள் & எழுதுபொருட்கள் விற்பனை மற்றும் தபால்கள் பணம் செலுத்துதல், வைப்புத்தொகை போன்றவற்றைக் கொண்டிருந்தால், அவற்றை வீட்டு வாசலில் டெலிவரி செய்வதை அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் வணிக கொள்முதல், சந்தைப்படுத்தல் மற்றும் உயர் அதிகாரிகளால் ஒதுக்கப்படும் பிற பணிகளில் BPM க்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.BPM இன் கடமைகளைச் செய்யச் சொன்னால் அதைச் செய்வதற்கு ABPM பொறுப்பாகும்.

டக் சேவக்:

கிராமின் தக் சேவக் கிளையின் அனைத்து நடவடிக்கைகளிலும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தபால்களை வழங்குதல், எழுதுபொருட்கள் & முத்திரைகள் விற்பனை அல்லது கிளை அஞ்சல் மாஸ்டர் அல்லது உதவி கிளை அஞ்சல் மாஸ்டர் அறிவுறுத்திய பிற செயல்பாடுகள்.வங்கியின் திறமையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது உதவி கிளை போஸ்ட் மாஸ்டருக்கு அவர்கள் உதவி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வணிக கொள்முதல், சந்தைப்படுத்தல் அல்லது உயர் அதிகாரிகளால் ஒதுக்கப்படும் பிற பணிகளை நடத்துவதற்கு அவர்கள் பொறுப்பு.

GDS: அஞ்சல் வழங்குபவர்/தபால்காரர்கள். பொதுமக்களுக்கு அஞ்சல் விநியோகிப்பது முக்கிய பொறுப்பு.கிளை போஸ்ட் மாஸ்டரிடமிருந்து (பிபிஎம்) தொகுப்புகளின் சேகரிப்பு மற்றும் பொதுமக்களுக்கு தொகுப்பு விநியோகம் ஆகியவற்றை அவர்கள் கையாளுவார்கள். தபால்காரர்கள் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதுடன், சமூகத்தை திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

GDS மெயில் பேக்கர்/கேரியர் பணி விவரம்:

அஞ்சல் சேகரிப்பாளர்களுக்கும் டெலிவரி செய்பவர்களுக்கும் பேக்கர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அஞ்சல் பைகளையும் பேக் செய்வது, அஞ்சல் பைகளைத் திறப்பது மற்றும் டெலிவரி செய்பவர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு அஞ்சல் பைகளை விநியோகிப்பது போன்ற பொறுப்புகளும் உண்டு. அது மட்டுமில்லாமல் கிராம அஞ்சல் பணியாளர்களுக்கு டார்கெட் அச்சீவ்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது, அவர்களுக்கு பென்ஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை போன்ற பல சிரமங்கள் இந்த பணிகளில் உள்ளது எனவும் ஓய்வு பெற்ற கிராம அஞ்சல் ஊழியர் கலியமூர்த்தி தெரிவித்தார்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600 நிதி உதவி: உடனே அப்ளை பண்ணுங்க!

 
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.07.2024 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.


கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு (தோல்வி). பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.06.2024 அன்றைய தேதியில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும், தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


பயனாளியின் தகுதிகள் : இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். அரசாணை (நிலை) எண்.127. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நாள் 25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200- ம்,பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300 -ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400- ம்,பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600- ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்


இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் : நேரில் செல்ல இல்லாதவர்கள் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.


சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: 01.07.2024 உடன் தொடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2024 ஆகஸ்ட் 31 -ம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை சிறப்பு நேர்வாக மாதந்தோறும் வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது .


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ராயல் லுக்கில் கெத்தாக நிற்கும் தஞ்சாவூர் டைடல் பார்க்... 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு...

 தமிழகத்தில் படித்த இளைஞர்கள் பெண்களுக்கு ஐடி வேலைகளைப் பெற உதவும் வகையிலும் மாநிலம் சமூகப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்காகவும் தஞ்சாவூர், சேலம் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று கடந்த‌ 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே தஞ்சையின் முதல் ஐடி பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் 3.40 ஏக்கரில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைதளம்‌ மற்றும் 3 அடுக்கு மாடிகளுடன், ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு வருடமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒப்பந்தக் காரர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டு வந்தார். தற்போது பூங்காவின் கட்டுமான பணிகள் 95சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் டைடல் பூங்கா திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்டா இளைஞர்களுக்கு வாய்ப்பு: டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு, மும்பையில் ஐடி துறைகளில் வேலை பார்க்கின்றனர். தஞ்சையில் டைடல் பூங்கா திறக்கப்பட்டால். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பூங்காவில் இரு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 நிறுவனங்கள் வர உள்ளன./

இதன்மூலம் தஞ்சாவூர்,திருவாரூர்,பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே போல் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் படித்த பிள்ளைகள் கூட வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த ஐடி பூங்காவால் டெல்டாவில் தொழிற்புரட்சி ஏற்படும். என ஐடி நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் PA பணியிட மாறுதல் -இணை இயக்குநரின் செயல்முறைகள்

 IMG_20240718_224650

மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் PA பணியிட மாறுதல் -இணை இயக்குநரின் செயல்முறைகள்

CEO -PA - over 3 years transfer counselling -reg👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு

 

1281792

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு பணிகளுக்கான கால அட்டவணையில் பள்ளிக் கல்வித் துறை மாற்றம் செய்துள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இதற்கிடையே, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைக் கொண்டு எஸ்எம்சி குழு மறு கட்டமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான கால அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டன.


தற்போது அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் ஜூலை 28-ல் இருந்து ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதில் பங்கேற்க பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ்அப், துண்டு பிரசுரங்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக ஜூலை 31-ம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும். இதையடுத்து, மாநிலம் தழுவிய எஸ்எம்சி மறுகட்டமைப்பு நிகழ்வுக்கான அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது.


அதன்படி நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு 17, 24-ம் தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 31-ம் தேதியிலும் மறுகட்டமைப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

 IMG_20240718_222448

பள்ளிக் கல்வித் துறையில் கலை ( ஓவியம் ) ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர் EMIS இணையதளம் வாயிலாக பெறப்பட்ட மாவட்ட வாரியாக ஓவிய ஆசிரியர்கள் . காலிப் பணியிட விபரங்கள் - ஜூலை -2024 

மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை -772

Drawing vacant list-July2024👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news