திரு. உசைன் போல்ட் அவர்கள் |
பால் :பொருட்பால்
அதிகாரம்: காலம் அறிதல்
குறள் எண்:487
பொள்ளென ஆங்கே புறம் வேரார், காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பொருள்: அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ள மாட்டார்,(வெல்வதற்கு ஏற்ற )காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
A man without money is a bow without an arrow
இரண்டொழுக்க பண்புகள் :
*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .
*எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.
பொன்மொழி :
கற்றலைப் பற்றிய அழகான விடயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. –பி.பி. கிங்
பொது அறிவு :
1. இந்திய கடற்கரையின் நீளம்..
2. தமிழ்நாட்டின் கடற்கரை நீளம்.
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
வேளாண்மை செழிக்க நல்ல மழை, நீர் வளம், நல்ல மண், நல்ல விதைகள் தேவை.
நம் முன்னோர்களின் மழை மானி குறித்து பார்ப்போம்
ஆகஸ்ட் 21
நீதிக்கதை
குரு கற்பித்த வித்தை
சிறுவன் ஒருவன் ஜூடோ பழக விரும்பினான். ஏற்கனவே ஏற்பட்ட விபத்தில் அவன் இடது கையை இழந்து விட்டான். எனினும் இந்த குறையை பொருட்படுத்தாமல் குரு ஒருவர் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் ஆனால் ஒரே ஒரு குத்து வித்தையை மட்டுமே கற்றுக்கொடுத்தார்.
நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான் தொடர்ந்தது. சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டான்.
ஒருநாள் சிறுவன் குருவிடம் கேட்டு விட்டான். ஆனால் அதற்கு குரு "இந்த ஒரே ஒரு குத்து மட்டும் போதும்" என்று கூறினார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனை போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு கை இல்லாமல் போட்டிக்கு வந்த அவனை அனைவரும் அற்பமாய் பார்த்தனர். ஆனால் இறுதியில் சிறுவனே வென்றான். தன்னை எதிர்த்த பலசாலிகள் பலரையும் வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சரியம் சிறுவனுக்கும் தான்.
அப்போது சிறுவன் குருவை பார்த்து, " எப்படி குருவே என்னால் ஒரு கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டுமே பெற்ற என்னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?" என்று கேட்டான்.
அதற்கு குரு " இரண்டு காரணங்கள், ஒன்று நீ பயிற்சி பெற்றது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து பயிற்சி. இரண்டாவது இந்த குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். அது உன்னிடம் இல்லை அல்லவா?அதனால் தான் நீ வெற்றி பெற்றாய்" என்று கூறினார்.
குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.
நீதி: தன்னம்பிக்கையும், முறையான பயிற்சியும் இருந்தால் எவரும் வெற்றி பெறலாம்.
இன்றைய செய்திகள்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news