Search

உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ முகாம்; செப். 2-ல் தொடக்கம்

 1303150

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்கு படி' சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப்.2-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் முதன்மைக்  கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நிகழ் கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மற்றும் நிகழ் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத பிளஸ் 2 தேர்வெழுதிய, எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்க மே 6 முதல் மே 20-ம் தேதி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.



இதையடுத்து அடுத்த கட்டமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி' முகாம் செப்.2 முதல் அக்.1-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 2022-2023, 2023-2024 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பயின்று இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ‘உயர்வுக்கு படி' முகாம் தொடர்பான விவரங்களையும், உயர்கல்வியில் சேருவதற்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


அடுத்தகட்டமாக உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் நேரடியாக மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று உயர்கல்வி செல்லாததற்கான காரணங்களை கண்டறிந்து மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர்.


இந்த முன்னெடுப்பில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Calendar - September 2024

 செப்டம்பர் -2024  பள்ளி நாள்காட்டி..


05-09-2024 - வியாழன் - ஆசிரியர் தினம்..


சாம உபகர்மா ( RL )


07-09-2024 - சனி - விநாயகர் சதுர்த்தி --  அரசு விடுமுறை..


16-09-2024 - திங்கள் - மிலாடி நபி --- அரசு விடுமுறை.

20-09-2024 முதல் 27-09-2024 வரை முதல் பருவத் தேர்வு.


28-09-2024 முதல் 02-10-2024 வரை முதல் பருவத் தேர்வு விடுமுறை.


செப்டம்பர் 14,21 சனி பள்ளி வேலை நாள் மாறுதலுக்கு உட்பட்டது.


07-09-2024 -சனி - அரசு விடுமுறை.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Hotel vs Motel | ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

 ஹோட்டல் மற்றும் மோட்டல் என்ற இரண்டையும் பற்றி நீங்கள் நிச்சியம் கேள்விப்பட்டிப்பீர்கள். இவை இரண்டும் பயணத்தின் போது உங்களுக்கு தங்கும் வசதியை வழங்குகிறது. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் விடுமுறைக்கு திட்டமிடும்போதோ அல்லது பயணத்திற்குத் தயாராகும்போதோ, சில கேள்விகள் உங்கள் மனதில் முதலில் தோன்றும். எப்படிப் பயணம் செய்யப் போகிறோம்; தங்கும் வசதிகள் எங்கே உள்ளது; எங்கு செல்ல வேண்டும் போன்ற கேள்விகள்தான் அவை… இந்தக் கேள்விகளுடன் இரவு தங்குவது பற்றி நீங்கள் நினைக்கும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது ஹோட்டல்கள்தான்.

நல்ல தங்குமிட ஏற்பாடு இருந்தால், உங்கள் பயணம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஹோட்டல்களைப் பற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதெல்லாம் நீங்கள் பல இடங்களில் மோட்டல்களைக் காணலாம். ஆனால் ஹோட்டலுக்கும் மோட்டலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நாங்கள் சொல்றோம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஹோட்டல் மற்றும் மோட்டல் இரண்டுமே மக்களுக்கு தங்கும் வசதிகளை வழங்குகின்றன. ஆனால் அவர்களின் பெயர்களில் எவ்வளவு நுட்பமான வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்களோ, அதே வித்தியாசத்தை அவர்களின் பணிகளிலும் நீங்கள் காண்பீர்கள். இரண்டுக்கும் உள்ள உண்மையான வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இருப்பிடம்: ஹோட்டல்கள் பொதுவாக நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் அல்லது வணிக மையங்களின் நடுவில் அமைந்துள்ளன. நீங்கள் ஒரு நகரத்திற்குச் செல்ல விரும்பினால், அங்கே தங்குவதற்கு ஹோட்டல்கள் இருக்கும்; ஆனால் மோட்டல்கள் இருக்காது. உண்மையில், நாம் தங்கியிருக்கும் போது வசதியான மற்றும் ஆடம்பர அனுபவத்தைப் பெறும் நோக்கில் ஹோட்டலின் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மோட்டல்கள் நகரின் நடுவில் கட்டப்படாமல் பொதுவாக நெடுஞ்சாலைகள் அல்லது பிரதான சாலைகளின் ஓரங்களில் கட்டப்படுகின்றன. இது பயணம் செய்பவர்களுக்கு ஒரு நாள் இரவில் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. மோட்டல் என்றால் மோட்டார் லாட்ஜ் என்று அர்த்தம். அதாவது, உங்கள் வாகனத்தையும் நிறுத்துவதற்கு சரியான வசதி கிடைக்கும் இடம்.

வசதி மற்றும் சேவை: நீங்கள் ஒரு ஹோட்டலில் பல வகையான சொகுசு வசதிகளைப் பெற்றாலும் ஒரு மோட்டல் உங்களுக்கு இரவைக் கழிப்பதற்கான அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்குகிறது. உணவகம், நீச்சல் குளம், ஸ்பா, ஜிம், வணிக மையம் அல்லது அறை சேவை போன்ற வசதிகள் ஹோட்டலில் கிடைக்கின்றன. மோட்டல்களில் அடிப்படையான அறைகள், இலவச பார்க்கிங் மற்றும் காலை உணவு வசதி போன்ற எளிய வசதிகள் உள்ளன.

தங்குவதற்கான நேரம்: பொதுவாக நாம் ஹோட்டலில் நீண்ட நேரம் தங்கலாம். நீங்கள் நகரத்திற்குச் செல்லும்போதோ அல்லது வணிகக் கூட்டத்திற்குச் செல்லும்போதோ, நீங்கள் ஒரு ஹோட்டலைத் தேர்வு செய்கிறீர்கள். அதேசமயம், மோட்டல்கள் பயனத்தின் இடையில் தங்குவதற்கானவை. மக்கள் தங்கள் பயணத்தின் போது ஓரிரு இரவுகள் இங்கு தங்கியிருப்பார்கள்.

பட்ஜெட்: ஹோட்டல் அறைகள் நிறைய ஆடம்பர வசதியை வழங்குகின்றன. எனவே அவற்றின் வாடகை பெரும்பாலும் அதிகமாக இருக்கும். மோட்டல் அறைகள் ஒப்பீட்டளவில் மலிவானவை. பட்ஜெட்டுக்கு ஏற்ற வசதியை வழங்குவதே இதன் நோக்கம்.





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்களின் இல்லம் சென்று SMC உறுப்பினர்கள் நேரடி சந்திப்பு - தலைமையாசிரியர் பொறுப்புகள் வெளியீடு - SPD Proceedings

 

தமிழ்நாடு, ஒருங்கிணைந்த பள்ளிக்  கல்வி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், பிறப்பிப்பவர் : திருமதி.மா.ஆர்த்தி.இஆய

ந.க.எண்:1292/ஆ2நா.மு 16/ஒபக/2024. நாள்:28.08.2024


பொருள்: பள்ளிக் கல்வி நான் முதல்வன் திட்டம் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வி ஆண்டு - உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்களின் இல்லம் சென்று நேரடி சந்திப்பு உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் களப் பணியில் ஈடுபடுத்துதல் - சார்ந்து


Click Here to Download - Uyarvukku Padi Camp - SMC உறுப்பினர்கள் நேரடி சந்திப்பு - தலைமையாசிரியர் பொறுப்புகள் - SPD Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

31.08.2024 தேதி சனிக்கிழமை முழு வேலை நாள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  

31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்


செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

OPS - CPS - NPS - UPS Pension Schemes Comparison

 *OPS (GPF) -- BEST...* 

#  ஊதிய பிடித்தம்  இல்லை. 

 # பணி கொடை உண்டு. 

 #  பென்ஷன் 50% (30 years). 

# Family pension உண்டு. 

*UPS...... Good*

#  ஊதிய பிடித்தம் 10%(ஊழியர்) 18.5% (அரசு) 

 # பணி கொடை உண்டு. 

 #  பென்ஷன் 50% (25 years). 

# Family Pension உண்டு. 


*NPS... Satisfed*

# ஊதிய பிடித்தம் 10% (ஊழியர்) 14% (அரசு).. 

#  பணி கொடை இல்லை.

#  பென்ஷன் உண்டு. ஆனால் நிலையான தொகை இல்லை. கூடலாம். குறையலாம்.. 

#  Family pension இல்லை. 

*CPS.. Worst*

# ஊதிய பிடித்தம் 10% (ஊழியர்) 10% (அரசு). 

# பணி கொடை இல்லை. 

# பென்ஷன் இல்லை. 

# Family pension இல்லை. 

# பிடித்த பணத்திற்கு குறைந்த வட்டியுடன் திருப்பி கிடைக்கும். 




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு

 

1302642

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group