Search

6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

IMG_20240913_150449

6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT Dir Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் ( 14.09.2024) நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

 2024-25 ஆண்டிற்கான ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் - மனமொத்த மாறுதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

TNPSC : குரூப்-4 க்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பு

 IMG_20240911_222914

பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Addendum - Download here

கிராம நிர்வாக அலுவலர் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 16 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகவுள்ளது.


தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது.


இதற்காக தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், குரூப்-4 மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 480 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் 6,244 பணியிடங்களில் இருந்து 6,704 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வாசிப்பு இயக்கம் - புத்தகங்களின் பட்டியல்

.com/

நுழை,  நட, ஓடு,  பற

வாசிப்பு இயக்கம் - புத்தகங்களின் பட்டியல்-.pdf

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 student

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்க்கலாம் விரிவாக...


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரால் அரங்கேற்றப்பட்டிருக்கும் மோசடிகளும், முறைகேடுகளும் தமிழக கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது...


திருவள்ளூர் மாவட்டம், பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம்..


தலைமை ஆசிரியரான லதா, மாணவர்களின் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து... 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில், 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்...


இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியதும் அம்பலமாகி உள்ளது..


இதோடு இல்லாமல், 220 மாணவர்கள் பெயரில் பள்ளிக்  கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது...


இதனால், அரசுக்கு மிகப்பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்..


இந்த பலே மோசடியும், முறைகேடும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போன தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் , இதனை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வட்டார  கல்வி அலுவலர் மேரி ஜோசப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்..


தொடர்ந்து, தலைமையாசிரியர் லதா மீதும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது...


இந்நிலையில், இதன் எதிரொலியாய்.. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க கல்வித் துறை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மிலாடி நபி விடுமுறை சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20240912_125512

In the Government order reference cited , the Government of Tamil Nadu declares that 17th September , 2024 shall be a Public Holiday on account of Milad - un - Nabi instead of 16th September , 2024. A copy of the Government Order is enclosed herewith for information and necessary action .

DSE - Milad-un-Nabi_Public Holiday Proceedings

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: 3-ம் கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைக்க திட்டம்

 

1309363

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 3-வது கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைத்து வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் ரூ.10 கோடியில் 53 புத்தகங்கள், 90 லட்சத்து 45,018 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை ஒரு கோடியே 31 லட்சத்து 68,048 பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு விநியோகம் செயப்பட்டுள்ளன.


இதைத் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்துக்கு புதிதாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியுள்ள மாணவர்களை நெறிப்படுத்த நூல் வாசிப்பு உதவும். அதனால் வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 124 புத்தகங்கள் 2 கட்டங்களாக அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.


அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு அளிக்கப்பட உள்ளன. இதற்கான புத்தக தயாரிப்பு பணிமனைகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அந்த பணிகள் முடிந்தபின்னர் சுமார் 2.2 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு தரப்படும். நடப்பு கல்வியாண்டிலேயே இந்த செயல்பாடுகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்'' என்றனர்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் - திருத்தப்பட்ட நாட்காட்டியில் அறிவிப்பு

 மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025  (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு!


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதையடுத்து நடப்பு கல்வியாண்டில் 2024-25ம் கல்வியாண்டில் புதிதாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளி நாட்காட்டி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.



அதில் பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதையடுத்து வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.


இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாட்களை குறைத்து, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6th to 10th - Quarterly Exam Syllabus - All Subjects

 Syllabus-2024


காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.


 ஆறு முதல் பத்தாம் வகுப்புக்கான காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மஞ்சள் கலர் லிங்கை கிளிக் செய்யவும்


Click Here to Download - 6th to 10th - Quarterly Exam Syllabus - All Subjects - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிப்பு

 தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது.



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது


இந்நிலையில் காலாண்டு தேர்வு குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்குகிறது. செப்.20ம் தேதி தொடங்கும் தேர்வு 27ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது.

தேர்வு நேரத்தை பொறுத்தவரை, 6ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் 3.15 வரைம், 8ம் வகுப்புகளுக்கு 9.30 முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புகளுக்கு 1.15 முதல் 4.30 மணி வரையும், 10ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 வரையும் தேர்வு நடைபெறும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group