Agri Info

Adding Green to your Life

September 17, 2024

ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்மசெயல்முறைகள் ( 02.02.2024 )

September 17, 2024 0

 IMG_20240220_102654

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல் , செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல் , அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் , மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன .

ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Lab Assistant Duties Proceeding 02.02.2024 - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர், 2024 அறிவிப்பு - தகவல் கையேடு வெளியீடு

September 17, 2024 0

 IMG_20240917_220135

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர், 2024 அறிவிப்பு - தகவல் கையேடு வெளியீடு...


 CTET - DECEMBER, 2024 - CENTRAL TEACHER ELIGIBILITY TEST INFORMATION BULLETIN...


CENTRAL TEACHER ELIGIBILITY TEST


Duration of Online Application: 17.09.2024 to 16.10.2024


Last date for submission of online Application: 16.10.2024 (Before 11:59PM) 


Last date for submission of fee: 16.10.2024 (Before11:59PM)


Date of Examination: 01st December, 2024


 Click Here to Download CTET Information Bulletin


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்.

September 17, 2024 0

 தேசிய அளவிலான அடைவுத்தேர்வு NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்.

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Morning Prayer Activities - 18.09.2024

September 17, 2024 0
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: நட்பு

குறள் எண்:787

அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.


பொருள்:அழிவைத்தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.


பழமொழி :

சிறு நுணலும் தன் வாயால் கெடும். 


know when to keep quiet .


இரண்டொழுக்க பண்புகள் :  


 1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன். 


  2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.


பொன்மொழி :


உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும். ---சாக்ரடீஸ்


பொது அறிவு : 


1.எல்லா வகை ரத்தத்தினுடனும் சேரும் ரத்த வகை குரூப் எது? 


 ' ஓ 'பாசிஸிடிவ் - O positive


 2. ஒரு துளி ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? 


 30 கோடி.


English words & meanings :


 impose-துணை,


 obstacle-தடங்கல்


வேளாண்மையும் வாழ்வும் : 


அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..


செப்டம்பர் 18 இன்று


உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.


நீதிக்கதை


 விவசாயி பதில் 


ஒரு வயதான விவசாயி தனது நிலத்தில் பாடுபட்டு சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரிடம் இருந்த குதிரை காணாமல் போய்விட்டது.


உடனே அக்கம் பக்கம் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிஷ்டமான நிலை" என்று விவசாயிக்காக பரிதாபப்பட்டனர் விவசாயி "இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில்  அவர்களின் ஆறுதலுக்கு பதில் கூறினார்.


 அடுத்த நாள் காணாமல் போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்துக் கொண்டு விவசாய நிலத்துக்கு வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் "என்ன ஒரு அதிர்ஷ்டம்" என்று வியந்தனர். அதை கேட்ட விவசாயி அதுக்கும் "இருக்கலாம்" என்று பதில் அளித்தார்.


 ஒரு வாரத்துக்கு பிறகு, விவசாயியின் மகன் குதிரையை ஓட்டி கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் "என்னப்பா இது! ஒரு நல்லது நடந்தால் ஒரு கெட்டது நடக்கிறது பாவம் உன்னுடைய பையனின் கால் உடைந்து விட்டதே"  என்று வருந்தினார்கள். அதற்கும் அந்த விவசாயி பதிலாக "இருக்கலாம்" என்று மட்டுமே  கூறினார்.


 ஒரே வாரத்தில் நாட்டில் போர் சூழல் ஏற்பட்டது. எனவே,நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும்  போர்க்களம் வர உத்தரவிடப்பட்டது


ராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று அங்குள்ள இளைஞர்களை போர்க்களத்திற்கு அழைத்துச்  சென்றனர்.


 ஆனால் விவசாயியின் மகனுக்கு கால் உடைந்து இருந்ததால் அவனை போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லவில்லை அதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் இதையும் புகழ்ந்து கூறினார்கள் அதற்கும் விவசாயி பதிலாக "இருக்கலாம்" என்று  மட்டுமே கூறினார்.


 ஊர் மக்கள் அவரின் பதிலை கேட்டு  ஆச்சரியம் அடைந்தனர்.


 நீதி: நல்லதும் கெட்டதும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. கஷ்டமான சூழ்நிலைகளில் இது நிரந்தரமல்ல நாளை என்று ஒருநாள் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.


இன்றைய செய்திகள் - 18.09.2024


* மாவட்டம் தோறும் நீர்நிலைகளை சிறப்பாக பராமரிப்போருக்கான ‘முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது’ வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


* நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


* தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வழக்கத்தைவிட  7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


* நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பினை அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


* கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.


* செஸ் ஒலிம்பியாட்: 5-வது சுற்றில் இந்திய அணி வெற்றி.


* ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி: 5வது முறையாக கோப்பையை வென்றது இந்தியா.


* ஐ.எஸ்.எல் கால்பந்து: முகமைதன் அணியை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் திரில் வெற்றி.


Today's Headlines


An ordinance has been issued allocating funds to give the 'First Watershed Protector Award' to those who take care of water bodies in every district.


 * All the trade union confederations of the transport companies have insisted that the transport pensioners should be given a subsidized hike based on the court rulings.


* According to the Meteorological Department, the temperature in Tamil Nadu is likely to rise up to 7 degrees Fahrenheit above normal for two days.


 * Union Home Minister Amit Shah has said that the government will soon announce the notification for conducting the country's population census.


*  Central European countries including Austria, Poland, Czech Republic, and Romania have become flooded due to the heavy rains that have been falling for the last 2 days.  Thousands have been displaced from their homes.


* Chess Olympiad: Indian team wins in 5th round.


* Asian Champions Hockey Tournament: India wins trophy for 5th time


 * ISL Football: Northeast United win 3-0 against Mohamadhan.


 Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

கலைத்திருவிழா - பள்ளி அளவிலான போட்டிகள் நடத்திட கால அவகாசம் நீட்டிப்பு

September 17, 2024 0

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கலைத்திருவிழா போட்டிகள் - பள்ளி அளவிலான போட்டிகள் நடத்திட கால அவகாசம் நீட்டிப்பு - சார்ந்து SPD Proceedings

IMG-20240916-WA0020

பார்வை 1 மற்றும் 2 ஆகியவற்றின்படி 2024 -25 ஆம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து , பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்வதற்கு 27.09.2024 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது . இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) அனைத்து மாணவ , மாணவியருக்கும் வாய்ப்பளித்தல் வேண்டும் . இந்த விவரத்தினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 15, 2024

World Suicide Prevention Day 2024 : ஏன் தற்கொலை எண்ணம் வருகிறது? மீள்வது எப்படி? - விளக்கும் உளவியல் ஆலோசகர்

September 15, 2024 0

 2003ம் ஆண்டு முதல் உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு நாள் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஒரு கருப்பொருளுடன் இந்த தினம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘தற்கொலை எண்ணத்தை மாற்றுவது’ ‘உரையாடலை துவங்குவது’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்தும் முன்பே கண்டறிந்து மீள்வது குறித்தும் நியுஸ் 18 தமிழ்நாடு சார்பாக உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்திடம் பேசினோம்.

இந்த வருட கருப்பொருள் மூலம் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?

இதைப் பற்றி வெளியில் பேசுவதே கிடையாது. அதன் காரணமாக பேசுவதை ஊக்கிவிக்கவும், புரிதலை அதிகரிக்கவும், இதைப் பற்றிய பேச்சுகள் அதிகரிக்கவுமே இந்தக் கருப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம், ஒருவருக்கு மற்றொருவர் ஆறுதல் கொடுக்கும் மனப்பாங்கு வரவேண்டும் என்பதும் முன்னெடுக்கப்படுகிறது.

தற்கொலை தொடர்பான எண்ணங்கள் வரும்போது அதில் இருந்து விலகுவதற்காக அரசு உதவி எண் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனையும் தாண்டி அரசு என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்?

ஒருவருக்கு தற்கொலை தொடர்பான எண்ணம் இருக்கிறது என்றால் அது முதலில் வெளியே தெரியாது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து திடீரென ஒரு கட்டத்தில் தவறான முடிவை எடுத்துவிடுவார்கள். ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கிறது என்றாலே அவர்களை மன நலம் பாதித்தவர்களைப் போல் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி இல்லாமல், அந்தப் பார்வையை மாற்ற வேண்டும். உங்களுக்கு தற்கொலை தொடர்பான எண்ணங்கள் வருகிறது என்றாலே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என யாரிடமாவது பேச வேண்டும். தற்கொலை தொடர்பான எண்ணம் வரும்போது நிறைய நபர்கள் என்னிடம் பேசியுள்ளனர். அப்படி பேசியப்பின் அவர்களுக்கு அந்த எண்ணமே மாறியிருக்கிறது. எனவே உங்களுக்கு ஒரு தவறான எண்ணம் வருகிறது என்றால் முதலில் பேச வேண்டும். பேசினாலே சரியாகும்.
இரு விதமாக இதனை பார்க்க வேண்டும். ஒருவருக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறது என்றால் அதனை கண்டறிய அவருக்கும் தெரிய வேண்டும். அவருடன் இருப்பவர்களுக்கும் அதனை கண்டறிய தெரியவேண்டும்.

ஒருவரிடம் எந்த மாதிரியான மாற்றம் வரும் போது நாம் அவர்களுடன் இருக்க வேண்டும்? அல்லது அவர்கள் ஒருவரை அனுக வேண்டும்?

ஒருவருக்கு அப்படியான எண்ணம் இருக்கிறது என்றால் அவரின் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும். அது அவருக்கு தெரிவதற்கு முன்பாக அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு தெரியவரும். அவர்கள் அதனை முறையாக கண்டறிந்தால் அந்த நபரை அதில் இருந்து காத்துவிடலாம். தற்கொலை செய்துக்கொள்ள நினைப்பவர்கள் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தற்கொலை பற்றி பேசுவார்கள். அதனை சாதாரனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது, மாறாக அவர்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். அது அவர்களை அந்த முடிவில் இருந்து மாற வைக்கும்.

தற்கொலை பற்றி பேசுவார்கள், அதீத தூக்கம் அல்லது தூக்கமின்மை என அவர்களது தூங்கும் முறை மாறும். உணவிலும் அதற்கான அறிகுறிகள் தெரியவரும், ஒன்று அதிகம் உண்ணுவார்கள் அல்லது உணவையே தவிர்ப்பார்கள். அதுபோக தங்களை தாங்களே குற்றம் சொல்லிக்கொள்ளுதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக அந்த நேரத்தில் அனைவரின் தொடர்பையும் தவிர்த்துவிட்டு தனித்து இருப்பார்கள். அடுத்து தற்கொலை தொடர்பாக தேட ஆரம்பிப்பார்கள். இந்த சமயத்தில் ஒன்று அவர்களே கொஞ்சம் மனம் மாற்றி யாருடனாவது பேச வேண்டும். அல்லது அந்த நபரை சுற்றி இருப்பவர்கள் இதனைக் கண்டறியும்போது அவர்கள் அந்த நபருடன் பேச வேண்டும்.

தற்கொலை தொடர்பாக ஒருவர் தேடும்போதே அவரை கண்காணித்து அரசு தரப்பில் இருந்து ஏதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் நடைமுறை தற்போது உள்ளதா?

ஒருவர் தற்கொலை தொடர்பாக தேடுகிறார் என்றாலே முதலில் அந்த எண்ணத்தில் இருந்து மீள்வதற்கான உதவி எண் தான் வரும். ஆனால், தனக்கு உதவியே வேண்டாம் மரணிக்கிறேன் எனும் எண்ணத்தில் இருப்பவர்கள் அந்த உதவியையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்குதான் முன்னதாகவே நாம் கண்டறிந்து அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள், நீட் பயிற்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி போன்றவற்றில் படிக்கும் மாணவர்கள் கூட இப்படியான தவறான முடிவை எடுக்கிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனை வழங்குவது?

மாணவர்களை பொறுத்தவரை இப்படியான எண்ணம் ஏன் வருகிறது என்றால் சிறு வயது முதலே ஒரு விஷயம் தான், தன் அடையாளம் என தீர்க்கமாக முடிவு எடுத்துவருவது. உதாரணத்திற்கு அதிக மதிப்பெண் பெற வேண்டும், அல்லது இதில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்துக்கொண்டு அது இல்லை என்றால் வாழ்வே இல்லை என நினைத்துக்கொள்வது. முதலில் ஒருவர் தன்னை தானே காதலிக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்கிறது. அதேசமயம், புற அழுத்தங்களும் அதிகமாக இருக்கிறது அல்லவா? அதில் இருந்து எப்படி மீள்வது?

படிப்பை தாண்டி, மனவலிமை பயிற்சி என்பது மிகவும் முக்கியம். பிரச்சனையை எதிர்க்கொள்ளும் திறன் மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அது மட்டும் தான் நம் அடையாளமா? இல்லை நமக்கு வேறு பல அடையாளங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் விதம் குறித்து பயிற்சி இருக்க வேண்டும்.

பாடத்தை தாண்டி மாணவர்களுக்கு இப்படியான பயிற்சிகளை வழங்குவதற்கு வகுப்புகள் எல்லாம் இல்லையா?

உளவியல் ஆலோசகர் இருக்க வேண்டும் என இருக்கிறது. ஆனால், முழுமையாக நடைமுறையில் இல்லை. அப்படியே அது வந்தாலும் அது ஒரு மாரல் சைன்ஸ் வகுப்புப் போல் இருந்துவிடக்கூடாது. சட்டங்களை போடுபவர்களும் அதனை அமல்படுத்துபவர்களும் வெவ்வேறானவர்கள்.

ஒரு சட்டத்தை இறுதியில் நடைமுறை செய்யும்வரை அரசு முக்கியத்துவம் தரவேண்டும். செயல்படுத்தவில்லை என்றால் அதன் பிரச்சனை என்னவாக இருக்கும். அல்லது செயல்படுத்திய பிறகு அதன் முடிவுகள் என்ன என்பதுவரை கவனிக்க வேண்டும். இதனை கல்வி நிறுவனங்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். அதன் முடிவுகள் என்னவென்றும் கல்வி நிறுவனங்கள் அரசுக்கு அனுப்பவேண்டும். அப்படி அனுப்பவில்லை என்றால் கல்வி நிறுவனம் நடத்துவதற்கான அனுமதியில் பிரச்சனை வரும் என்ற அளவிற்கு அரசு இதனை கொண்டு செல்ல வேண்டும். முதலில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் இதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல, தற்கொலை எண்ணம் வந்தாலோ அல்லது மன அழுத்தம் இருந்தாலோ, அதில் இருந்து மீள்வதற்கு அரசு சுகாதார சேவை உதவி மையம் 104 தொடர்பு கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெங்காயம் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..?

September 15, 2024 0

 தயிர் மற்றும் வெங்காயம் இந்திய உணவுகளில் பிரபலமான தேர்வாக உள்ளது. தயிர்-வெங்காயம் இரண்டையும் ஒன்றாக கலந்து தயார் செய்யப்படும் , தயிர் பச்சடி, ரைதா அல்லது ‘தாஹி-பப்டி சாட்’ என அழைக்கப்படுகிறது. குறிப்பாக தயிர் பச்சடி இல்லாமல் பலர் பிரியாணி சாப்பிடுவதையே விரும்ப மாட்டார்கள். அந்தளவுக்கு தயிர் பச்சடி பிடிக்கும் நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தின் படி தயிர் குளிர்ச்சியானதாகவும், வெங்காயம் உடலில் வெப்பத்தை உண்டாக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.

இந்த கலவையானது பசியைத் தூண்டும் அதே வேளையில், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு உண்மையிலேயே பயனுள்ளதா? அல்லது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்குமா? என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

News18

தயிர் மற்றும் வெங்காயம் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது குறித்து இங்கு காண்போம்.,

  • செரிமான தாக்கம்: தயிரில் லாக்டோஸ் மற்றும் பிற சேர்மங்களை உடைக்க உதவும் புரோபயாடிக்குகள் உள்ளன, அதேசமயம் வெங்காயத்தில் நார்ச்சத்து மற்றும் சல்பர் கலவைகள் உள்ளன. இவை செரிமானத்தை சீர்குலைக்கும். இதனால் தயிர் மற்றும் வெங்காயத்தை ஒன்றாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • வாயு மற்றும் அமிலத்தன்மை: வெங்காயத்தில் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கும் கலவைகள் உள்ளன. மேலும் வெங்காயம் அமிலத்தன்மை கொண்ட தயிருடன் இணைந்தால், இது வீக்கத்தின் அறிகுறிகளை அதிகரிக்கலாம் மற்றும் சிலருக்கு அஜீரணம் அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

  • சுவை : வெங்காயத்தின் காரமான சுவை தயிரின் மென்மையான சுவையை முறியடிக்கும், இது உணவின் ஒட்டுமொத்த சுவையை பாதிக்கிறது.

  • ஊட்டச்சத்து உறிஞ்சுதல்: வெங்காயம் மற்றும் தயிரை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதலில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். வெங்காயத்தில் கந்தகம் உள்ளது, இது தயிரில் இருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது கவனம் தேவை.

ஆயுர்வேதத்தின் படி, வெங்காயம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவது சில நபர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இந்த கலவையை உட்கொள்வதால் எந்த எதிர்மறையான விளைவுகளையும் நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், அதை தொடர்ந்து உட்கொள்வது பாதுகாப்பானது.

வெங்காயம் மற்றும் தயிர் இரண்டும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருந்துள்ளது, அதேபோல தயிர் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் புரோபயாடிக்குகளை வழங்குகிறது. இருப்பினும், அவற்றை இணைப்பது சிலருக்கு செரிமான அசௌகரியம் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே அளவாக சாப்பிடலாம். இதனை அவ்வப்போது சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

10 நிமிடம் போதும்.. உங்க நிம்மதியான தூக்கத்துக்கு கியாரண்டி.. என்ன செய்யனும் தெரியுமா..?

September 15, 2024 0

 படுக்கைக்கு செல்வதற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக இந்த எளிய உடற்பயிற்சியை செய்வதால் நல்ல தூக்கம் கிடைப்பதை பற்றிய விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.

ஓடோரினோலரிஞ்ஜாலஜி மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை ஆலோசகரும், டாக்டருமான ஷீத்தல் ராடியா, போதுமான அளவு இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெற, தூக்கமின்மைக்கான மூல காரணத்தை புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மனித உடலுக்கு தேவையான ஓர் அற்புத சக்தி தூக்கம். யார் ஒருவருக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கிறதோ, அவர்களே தங்களது அன்றாட வேலைகளை நிம்மதியாகவும், சோர்வில்லாமலும் தொடர முடியும். இத்தகைய தூக்கம் கிடைக்காமல் பலரும் இரவில் போராடி வருகின்றனர்./


இரவு தூக்கத்திற்கு ஒவ்வொரு மக்கள் ஒவ்வொரு நுட்பங்களை முயற்சி செய்கிறார்கள். ஒரு சிலர் ஒயிட் நாய்ஸ் கேட்டு உறங்க முயற்சிக்கிறார்கள், வேறு சிலர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளியல் அல்லது தியானம் செய்துவிட்டு உறங்க செல்கிறார்கள். ஆனால், தூங்க செல்வதற்கு முன்பாக நமது கைகளை சிறிது அசைத்து ஆட்டுவதன் மூலம் தூக்கத்தை வர வைக்கலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்றுதான்.

News18

உரிமம் பெற்ற மசாஜ் சிகிச்சையாளரான ஜேம்ஸ் மூரின் கூற்றுப்படி, ஆர்ம் ஸ்விங்ஸ் - படுக்கைக்கு செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக கைகளை ஆட்டி அசைத்துவிட்டு தூங்கும் போது நல்ல நன்றாக உறக்கம் வரும். உடல் ஓய்வுக்கு இந்த ஆர்ம் ஸ்விங்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என்று மூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சியைச் செய்ய, ஒருவர் நேராக நின்று, உடலைத் தளர்த்தி, வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக கைகளை மெதுவாக அசைக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை தூண்டுவதற்கு உதவுகிறது என்று மூர் குறிப்பிட்டுள்ளார், இது ஒருவருக்கு நிம்மதியான தூக்கத்தை தருகிறது.

இதுபற்றி குருகிராமில் உள்ள நாராயண மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஸ்வேதா பன்சால் கூறுகையில், கை ஸ்விங் பயிற்சிகள் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். “இதுபோன்ற இயக்கங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, மன அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் ஓய்வை வழங்கி, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு வழிசெய்கிறது” என்று டாக்டர் பன்சால் கூறினார்.டாக்டர் பன்சலின் கூற்றுப்படி, படுக்கைக்கு முன் கைகளை மெதுவாக அசைப்பது மூச்சை நிதானமாக்கி, தசை பதற்றத்தைப் போக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, தொடர்ச்சியான இயக்கம் ஒரு தியான செய்வது போன்ற நிலையை ஏற்படுத்தி தூக்கத்தை ஊக்குவிக்கிறது. தூக்கத்திற்கு முன்பாக கை ஸ்விங் பயிற்சிகளை மேற்கொள்வது ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு தூங்குவதை எளிதாக்கும் என்றும் டாக்டர் பன்சால் கூறினார்.

எவ்வாறாயினும், மீரா ரோட்டின் வொக்கார்ட் மருத்துவமனையின் ஓடோரினோலரிஞ்ஜாலஜி மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ஷீத்தல் ராடியா, “சிலருக்கு அவர்களின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் உடலின் இணக்கத்தைப் பொறுத்து இந்த நுட்பம் வேலை செய்யலாம் அல்லது வேலை செய்யாமலும் போகலாம்” என்று கூறினார்.

நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் அல்லது ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை, போதுமான மணிநேரம் தடையின்றி தூங்குவதற்கு தூக்கமின்மைக்கான மூல காரணத்தை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராடியா கூறினார்.
தூக்கத்திற்கு முன் காஃபின் கலந்த பானங்களை குடிப்பது, தூக்கத்தை ஊக்குவிக்கும் மருந்துகளை தடுப்பது, அசாதாரண நேரங்களில் தூங்குவது, கடுமையான மன அழுத்தம் அல்லது மனநலப் பிரச்சனைகள், தூக்கக் கோளாறுகள் மற்றும் சில மருந்துகள் என தூக்கமின்மைக்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம். இவற்றை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ராடியா கூறியுள்ளார்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கனுமா..?அப்போ இந்த ஸ்பீட் ஸ்லிம் டயட் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!

September 15, 2024 0

 உடல் எடையை குறைக்க விரும்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக எடை பல நோய்களை உண்டாக்கும். அதாவது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றுக்கு அதிக எடையே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், உடற்பயிற்சியின்மையாலும், உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அத்தகையவர்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்பீட் ஸ்லிம் டயட் வழிமுறைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீட் ஸ்லிம் டயட் முறையானது உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கும் அதே வேளையில் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. இது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கலோரிகளை எரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான உணவில் கவனம் செலுத்துவைத்து பற்றியும் இது உணர்த்துகிறது.

உங்களின் உடல் எடையை குறைக்க எண்ணற்ற உணவு முறைகளையும், உடற்பயிற்சிகளையும் முயற்சி செய்து வெற்றி பெறாமல் இருந்தால், வேறு முறையையை பின்பற்ற வேண்டுயது அவசியமாகும். இந்த ஸ்பீட் ஸ்லிம் டயட் ஆனது உங்கள் உடலை ஊட்டமளிக்கும் அதே வேளையில் உடல் எடையை வேகமாக குறைக்கக்கூடிய படிப்படியான வழிமுறை ஆகும்.


உணவின் சக்தியைப் புரிந்துகொள்வது:


ஸ்பீட் ஸ்லிம் டயட் முறையானது நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பற்றியது மட்டுமல்ல, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பற்றியது. முதலில், உடல் எடையை விரைவில் குறைக்க, சத்தான உணவை உண்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த சத்தான உணவு விரைவில் வயிற்றை நிரப்பும். ஓட்ஸ், பார்லி மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். அவை விரைவாக வயிற்றை நிரப்புகின்றன. இது உங்களை அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் உடல் எடை குறையும்.

News18

ஃபைபர் மந்திரம்

நார்ச்சத்து நமது குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். எடை குறைப்புக்கு, ​​நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முதலிடத்தில் உள்ளது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்க உதவுகின்றன. ஒட்டுமொத்தமாக, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு எடை குறைப்புக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உணவின் அளவை விட தரத்தை தேர்வு செய்யவும்:

எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, அவர்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது ஆகும். நீங்கள் குறைவாக சாப்பிட்டால், நிச்சயமாக உடல் எடையை குறைக்க மாட்டீர்கள், இதனால் அதிக எடை அதிகரிக்கும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எப்படி சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். காலை உணவாக இரண்டு முட்டைகளை சாப்பிடுங்கள். வேகவைத்த இரண்டு முட்டைகளை சாப்பிடுவது, மதியம் வரை பசி எடுப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள், எனினும் எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கவோ அல்லது குறைவாக சாப்பிடவோ கூடாது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group