Search

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை தகவல்

 

12006121-chennai-03

6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.


பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கல்வியாண்டு நாட்காட்டியில் 220 வேலை நாட்கள் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை 210 ஆக குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டியையும் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்டது.


இந்த நிலையில் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவித்தபடி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் தொடங்கியுள்ளது. பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கு நேற்று தொடங்கிய நிலையில், 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு தொடங்க உள்ளது.


மொத்தத்தில் வருகிற 27-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Quarterly Exam 2024 - Questions with Answer

 6th,7th,8th,9th10th Tamil Quarterly Exam 2024 Questions with Answer




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EMIS New Update - First Term & Quarterly Exam Mark Entry

 💁‍♂️TN EMIS NEW UPDATE ENNUM EZHUTHUM  SUMMATIVE ASSESSMENT MARK ENTRY 1 TO 5TH STANDARD IN QUARTERLY EXAM 2024


💁‍♂️ஒன்று  முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் ஆசிரியர்கள் காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை EMIS ல் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதற்கான வழிமுறை 

👇👇👇👇

https://youtu.be/wS4FbMcsYa4

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Assistant cum Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,240

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1ம் வீதி, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622002

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pudukkottai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2024


Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.E Power Systems Engg. (Or) M.E Power Electronics and Drives (Or) M.E Control and Instrumentation (Or) M.E Instrumentation Engg. (Or) M.E/M Tech Electrical Engineering(Or) M.E/M Tech Electrical and Electronics Engineering(Or) M Tech in Power and Energy Systems(Or) M Tech Power Electronics and Control(Or) M Tech Power Electronics and Control for EV படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 32,500

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B. E in EEE படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Dr. S.V. Anbuselvi, Team Coordinator, RUSA 2.0 PO3, Department of Electrical and Electronics Engineering, Anna University, Chennai -25

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group