வடகிழக்கு பருவமழையின் போது அனைத்து தரப்பில் இருந்தும் ஒரு கேள்வி வரும் ; அது என்னவென்றால் எப்போது பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்பது தான் எந்தெந்த மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்கிறதோ அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து தேவைப்படும்போது விடுமுறை அறிவிப்பார்கள் மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.
அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற 31-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 20 சதவிகிதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், நிரந்தர ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400 முதல் அதிகபட்சமாக ரூ. 16,800 வரை போனஸ் தொகையாக பெறுவார்கள்.
தமிழக பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.75 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ. 369.65 கோடி கருணைத் தொகையை போனஸாக பெறவுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 3,000 கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான வானவில் மன்ற செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் . வானவில் மன்ற போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகள். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய குழுக்கள் மற்றும் போட்டிக்கான நெறிமுறைகள் ஆகியன குறிந்து தெரிவிக்கப்பட்டுள்ளது . போட்டிக்கான தேதிகள் கீழ்காணும் அட்டவணைப்படி மாற்றியமைக்கப்படுகிறது.
மேலும் போட்டியில் பள்வி அளவில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்கள் பள்ளியின் EMIS தலத்தில் ( School login ) 25.10.2024 முதல் பதிவேற்றம் செய்யலாம்.
2024-25ம் கல்வியாண்டில் அரசு ( நகராட்சி / மாநகராட்சி / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை / வனத்துறை / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கள்ளர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகள் ) .
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு மற்றும் சீருடை தேவை குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளி வாரியாக உரிய விவரங்களை பதிவு செய்து அனுப்பி வைத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவ . மாணவியர்களின் பெற்றோர்களிடம் இப்பொருள்சார்ந்து விருப்பம் குறித்து ஏற்கனவே கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் விவரங்கள் தொகுக்கப்பட்டுவரும் நிலையில். விடுபட்ட பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று அவ்விவரங்களை எதிர்வரும் 18.10.2024 - க்குள் நிறைவு செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசிப்பு திறனை அதிகரிக்க தமிழக அரசின் சார்பாக மூன்று இதழ்கள் வெளியிடப்பட்டது. ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் இதழும் வெளியானது. வாசிப்பில் பெரும் அசைவினை ஏற்படுத்தும். சிறார் இலக்கியத்திலும் ஒரு மைல்கல்லாக இருக்கும். இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!