வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என பெரும்பாலான இந்தியர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க மிகவும் அவசியமான இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்களில் குறைபாடு காணப்படுகிறது.
லான்செட் இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆய்வாளர்கள் இந்திய மக்கள் போதுமான அளவு இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை உட்கொள்வதில்லை என்று கூறி இருக்கிறார்கள். சுமார் 185 நாடுகளைச் சேர்ந்த மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்த பிறகு, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்களுக்கு சுமார் 15 அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லை என்பதும், இவர்கள் எந்த சப்ளிமென்ட்ஸ்களையும் எடுத்து கொள்ளாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே போல உலகம் முழுவதும் உள்ள சுமார் 5 பில்லியன் மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின், வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்வதில்லை. இந்தியாவை பொறுத்த வரை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்வதில்லை. அதே நேரம் பெண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான ஆண்கள் தங்களுக்கு தேவையான ஜிங்க் மற்றும் மெக்னீசியத்தை போதிய அளவில் எடுத்து கொள்வதில்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
குறிப்பாக தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 10-30 வயதுடைய ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தேவையானதை விட குறைந்த அளவிலான கால்சியம் உட்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், UC சாண்டா பார்பரா (UCSB) மற்றும் Global Alliance for Improved Nutrition உள்ளிட்டவை இந்த ஆய்வின் மூலம் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் உலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் கர்ப்பத்தில் பாதகமான விளைவுகள், குருட்டுத்தன்மை, தொற்று நோய்களுக்கு எளிதாக மற்றும் அதிகம் பாதிக்கப்படுவது என ஒவ்வொரு குறைபாடும் ஆரோக்கியத்தில் சில குறிப்பிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே UCSB-ன் ஆய்வு இணை-தலைமை ஆசிரியரும் ஆராய்ச்சி பேராசிரியருமான கிறிஸ் ஃப்ரீ பேசுகையில் இந்த ஆய்வு ஒரு பெரிய முன்னேற்றம். ஏனென்றால் இது ஒவ்வொரு நாட்டிலும் வயது மற்றும் பாலினத்தை பொறுத்து 34 குழுக்கள் போதுமான நுண்ணூட்டச்சத்து உட்கொள்கிறார்களா, இல்லையா என மதிப்பிடுவது இதுவே முதல் முறையாகும்.உலகில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் போதுமான அளவு ரிபோஃப்ளேவின், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவற்றை உட்கொள்வதில்லை. அதே நேரம் உலக மக்களிடையே நியாசின் நுகர்வு போதுமானதாக இருந்தது, உலக மக்கள் தொகையில் 22% மட்டுமே போதிய அளவு நியாசின் எடுத்து கொள்வதில்லை, இதனை தொடர்ந்து தியாமின் (30%) மற்றும் செலினியம் (37%). மக்கள் போதுமான அளவு எடுத்து கொள்ளாமல் உள்ளார்கள்.
பாலின அடிப்படையில் ஒப்பிட்டால் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் மிகவும் வேறுபட்டதாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 10-30 வயதுடைய ஆண்களும் பெண்களும் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வசிப்போர் குறைந்த கால்சியம் எடுத்து கொள்ளும் அபாயத்தில் இருப்பதாக குறிப்பிட்டனர். தவிர வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலும் கால்சியம் நுகர்வு மக்கள் மத்தியில் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் குறிப்பாக ரிபோஃப்ளேவின், ஃபோலேட், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் போதுமான அளவு உட்கொள்ளல் இல்லாதது அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.