Search

Vaasippu Iyakkam - Online Training Guidance - Step by Step Procedure

 💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி

💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். - Step by Step Procedure


Click Here to Download - Vaasippu Iyakkam - Online Training Guidance - Step by Step Procedure - Pdf



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EE - Online Training for Teachers - Quiz & Feedback - Direct Link

 




EE-TERM-2 ONLINE TRAINING




🔰 எண்ணும்  எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ இணையவழி  பயிற்சிக்கான  கட்டகங்கள்


🔅 1 -3 வகுப்புகள்

🔅 4&5 வகுப்புகளுக்கு


தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது


1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ இணையவழி  பயிற்சிக்கான  கட்டகங்கள்   TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இப்பயிற்சியானது 14.10.2024 முதல் 18.10.2024 வரை 


Login to EMIS : Visit your EMIS website using the URL


URL. : https://emis.tnschools.gov.in/auth/login 


Username : Your EMIS ID 

Password : Your EMIS id


என்ற இணையத்தளத்தின் மூலம் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்


a . Login to TNTP using the URL : https://tntp.tnschools.gov.in/login 


b . Username : Your EMIS ID , 

    Password : Your EMIS Password


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Visit, Annual Inspection - 145 BEO - களுக்கு விளக்கம் கோரி இயக்குனர் உத்தரவு

 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளி பார்வை மற்றும் ஆண்டாய்வு மேற்கொள்ளுதல் - தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டமை இதனை சரிவர பின்பற்றாத வட்டார கல்வி அலுவலரிடம் விளக்கம் கோறுதல் சார்பாக

Click Here to Download - BEO's School Visit & Annual Inspection - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EE Training - ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்வதற்கான வழிமுறை

 
EE-TERM-2 ONLINE TRAINING

IMG-20241016-WA0005

🔰 எண்ணும்  எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ இணையவழி  பயிற்சிக்கான  கட்டகங்கள்


🔅 1 -3 வகுப்புகள்

🔅 4&5 வகுப்புகளுக்கு


தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது


🪷 ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்ய வேண்டும்.அதற்கான வழிமுறை

👇👇👇

https://youtu.be/pA73tEOHCa8?si=McVlS4SFAWSmjmik


1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ இணையவழி  பயிற்சிக்கான  கட்டகங்கள்   TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இப்பயிற்சியானது 14.10.2024 முதல் 18.10.2024 வரை 


https://tntp.tnschools.gov.in/login 


என்ற இணையத்தளத்தின் மூலம் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

குறைவாக பள்ளிப் பார்வை மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு - விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 குறைவாக பள்ளிப் பார்வை மேற்கொண்ட வட்டாரக்  கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு - விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

IMG_20241016_102833

குறைவாக பள்ளிப் பார்வை மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DEE - School Visit ,Inspection Guidelines To Beo's -- Dee Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இந்தியர்களுக்கு இரும்பு சத்து, கால்சியம், ஃபோலேட் சத்து குறைவாக உள்ளது.. லான்செட் ஆய்வில் தகவல்!

 வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என பெரும்பாலான இந்தியர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க மிகவும் அவசியமான இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்களில் குறைபாடு காணப்படுகிறது.

லான்செட் இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆய்வாளர்கள் இந்திய மக்கள் போதுமான அளவு இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை உட்கொள்வதில்லை என்று கூறி இருக்கிறார்கள். சுமார் 185 நாடுகளைச் சேர்ந்த மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்த பிறகு, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்களுக்கு சுமார் 15 அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லை என்பதும், இவர்கள் எந்த சப்ளிமென்ட்ஸ்களையும் எடுத்து கொள்ளாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


அதே போல உலகம் முழுவதும் உள்ள சுமார் 5 பில்லியன் மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின், வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்வதில்லை. இந்தியாவை பொறுத்த வரை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்வதில்லை. அதே நேரம் பெண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான ஆண்கள் தங்களுக்கு தேவையான ஜிங்க் மற்றும் மெக்னீசியத்தை போதிய அளவில் எடுத்து கொள்வதில்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

News18

குறிப்பாக தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 10-30 வயதுடைய ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தேவையானதை விட குறைந்த அளவிலான கால்சியம் உட்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், UC சாண்டா பார்பரா (UCSB) மற்றும் Global Alliance for Improved Nutrition உள்ளிட்டவை இந்த ஆய்வின் மூலம் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் உலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் கர்ப்பத்தில் பாதகமான விளைவுகள், குருட்டுத்தன்மை, தொற்று நோய்களுக்கு எளிதாக மற்றும் அதிகம் பாதிக்கப்படுவது என ஒவ்வொரு குறைபாடும் ஆரோக்கியத்தில் சில குறிப்பிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே UCSB-ன் ஆய்வு இணை-தலைமை ஆசிரியரும் ஆராய்ச்சி பேராசிரியருமான கிறிஸ் ஃப்ரீ பேசுகையில் இந்த ஆய்வு ஒரு பெரிய முன்னேற்றம். ஏனென்றால் இது ஒவ்வொரு நாட்டிலும் வயது மற்றும் பாலினத்தை பொறுத்து 34 குழுக்கள் போதுமான நுண்ணூட்டச்சத்து உட்கொள்கிறார்களா, இல்லையா என மதிப்பிடுவது இதுவே முதல் முறையாகும்.உலகில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் போதுமான அளவு ரிபோஃப்ளேவின், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் பி6 ஆகியவற்றை உட்கொள்வதில்லை. அதே நேரம் உலக மக்களிடையே நியாசின் நுகர்வு போதுமானதாக இருந்தது, உலக மக்கள் தொகையில் 22% மட்டுமே போதிய அளவு நியாசின் எடுத்து கொள்வதில்லை, இதனை தொடர்ந்து தியாமின் (30%) மற்றும் செலினியம் (37%). மக்கள் போதுமான அளவு எடுத்து கொள்ளாமல் உள்ளார்கள்.


பாலின அடிப்படையில் ஒப்பிட்டால் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் மிகவும் வேறுபட்டதாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 10-30 வயதுடைய ஆண்களும் பெண்களும் குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வசிப்போர் குறைந்த கால்சியம் எடுத்து கொள்ளும் அபாயத்தில் இருப்பதாக குறிப்பிட்டனர். தவிர வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலும் கால்சியம் நுகர்வு மக்கள் மத்தியில் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் குறிப்பாக ரிபோஃப்ளேவின், ஃபோலேட், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் போதுமான அளவு உட்கொள்ளல் இல்லாதது அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவிற்காக 2 முட்டைகள் போதுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

 எடை குறைக்கும் முயற்ச்சியில் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க போராடுகிறீர்களா? அப்படி என்றால் குறிப்பாக காலை உணவுக்கு உங்கள் டயட்டில் என்ன சேர்த்து கொள்கிறீர்கள் மற்றும் சாப்பிடுகிறீர்கள் என்பதை சற்று கவனித்து பாருங்கள்.

கொழுப்பை குறைக்க போராடுகிறீர்கள் என்றால் காலை நேரத்தில் 30 கிராமுக்கு குறைவான புரதம் போதுமானதாக இருக்காது என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் சேஸ் சேம்பர்ஸ் “2 முட்டைகள் அதிக ப்ரோட்டீன் கொண்ட காலை உணவு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

*2 முட்டைகள் + 1 கப் முட்டை வெள்ளைக்கரு (அல்லது) *2 முட்டைகள் + 2 சிக்கன் சாசேஜஸ் (அல்லது) *2 முட்டை + 2 கிரீக் யோகர்ட் இந்த மூன்றில் ஒன்று அதிக புரதம் கொண்ட காலை உணவாகும் என்கிறார். சுருக்கமாக சொன்னால் “30 கிராமுக்கு குறைவான புரதம் இருந்தால், அது அதிக புரதம் கொண்ட காலை உணவு அல்ல” என்று சேம்பர்ஸ் கூறுகிறார். மேலும் புரிந்து கொள்ள, மும்பையில் உள்ள ஜினோவா ஷால்பி மருத்துவமனையின் உணவியல் நிபுணரான ஜினல் படேல் கூறி உள்ள கருத்துக்களை பார்க்கலாம்.

ப்ரோட்டீன் நிறைந்த காலை உணவோடு ஒரு நாளை துவக்குவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. காலை நேரத்தில் போதுமான அளவு ப்ரோட்டீன் சேர்த்து கொள்வது ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த மற்றும் கவனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுபோல அதிகாலையில் போதுமான அளவு ப்ரோட்டீனை உண்பவர்கள், அன்றைய நாளின் அடுத்தடுத்த உணவு தேர்வுகளில் ஆரோக்கியமானவற்றை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட தின்பண்டங்களுக்கான பசியை நிர்வகிக்க முடியும் என்கிறார் ஜினல் படேல்.

சேஸ் சேம்பர்ஸின் கருத்தை சரி என்று ஒப்பு கொண்ட படேல், கிரீக் யோகர்ட், முட்டை அல்லது பருப்புகள் சாப்பிடுவது வயிறு நிறைந்த முழுமை உணர்வை ஊக்குவிப்பதன் மூலம் பசியை நிர்வகிக்க உதவுகிறது என்று கூறினார். அதிக ப்ரோட்டீன் கொண்டிருக்கும் காலை உணவைப் பொறுத்தவரை, 30 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும் என்றாலும், சிறிதளவு ப்ரோட்டீன் கன்டென்ட் கொண்ட எந்த உணவும் போதுமானது என்றும் ஒருபக்கம் நம்பப்படுகிறது என்றும் படேல் கூறுகிறார்.

ஆனால் வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் ப்ரோட்டீன் முக்கிய பங்கு வகிக்கிறது, தவிர காலை உணவில் 30 கிராமுக்கு குறைவாக ப்ரோட்டீன் இருந்தால், உடற்பயிற்சியில் ஈடுபட்டபின்னர் அல்லது தூக்கத்திற்கு பிறகு உடலின் உகந்த செயல்திறனை பெற மற்றும் ரெக்கவரிக்கு போதுமான ஆற்றலை வழங்காது என்றும் படேல் குறிப்பிட்டார். எனவே காலை உணவில் குறைந்தது 40 - 50 கிராம் அளவில் ப்ரோட்டீன் சேர்த்துக் கொள்வது நல்லது.

தனிநபர்கள் தங்களின் காலை உணவுக்கு ஏற்ற புரத அளவு குறித்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம் என்றார். எக்காரணம் கொண்டும் யாரும் காலை உணவை தவிர்க்க வேண்டாம். காலை நேரத்தில் சேர்த்து கொள்ள ஏற்ற புரதச்சத்து அதிகம் உள்ள சரியான உணவுகளை பற்றி நிபுணரிடம் ஆலோசித்து உங்கள் டயட்டை திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவுறுத்தினார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இளைஞர்களிடம் அதிகரிக்கும் இதயநோய் பிரச்சனைகள்.. என்ன காரணம்..? அலசும் நிபுணர்கள்..!

 இரவு உணவுகளை தாமதமாக உட்கொள்வது உயர் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உட்கார்ந்த வாழ்க்கை முறைகள், மோசமான உணவு முறைகள், உடல் பருமன், மனநலப் பிரச்சினைகள், மரபணு முன்கணிப்புகள் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் இல்லாததால் இளைஞர்களிடையே இதயம் தொடர்பான இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த கல்வி, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால தலையீடுகள் மூலம் இந்த காரணிகளை நிவர்த்தி செய்வது இளைஞர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

சமீபத்திய ஆண்டுகளில், இளைஞர்களிடையே இதயம் தொடர்பான இறப்புகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன, இது சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து இதயநோய் நிபுணர் ஒருவர் விளக்கும் போது, ஆரோக்கியமான இளைஞர்களும் தற்போது இதயப் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. சில அடிப்படைக் காரணங்கள் மற்றும் சாத்தியமான தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை நான் அதிகளவில் எதிர்கொள்கிறேன்.


News18


இந்த ஆபத்தான போக்குக்கு பங்களிக்கும் ஒரு முதன்மை காரணி வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம். இன்றைய அதிவேக உலகில், பல இளைஞர்கள் தங்களது வேலையிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி அதிக அளவில் உட்கார்ந்து கொள்ளும் வாழ்க்கை முறையையே கடைபிடிக்கிறார்கள். இதுபோன்று எப்போதும் உட்கார்ந்து கொண்டு இருப்பதும், மோசமான உணவுத் தேர்வுகளும் இதய பிரச்சனைக்கு காரணமாகிறது. குறிப்பாக சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் நிறைந்த அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்றவை இதய பிரச்சனைகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகிறது.

மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களின் நேரடி விளைவாக இளைஞர்கள் அதிகம் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை உடல் பருமன். அதிக உடல் எடை, உயர் இரத்த அழுத்தம் , டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் கொழுப்புகளை உருவாக்கும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது இதய ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதால் இதய நோய் பிரச்சனைக்கு வழி வகுக்கும். கூடுதலாக, நவீன முறையில் தயாரிக்கப்படும் உணவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இல்லை, இதுவே ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.


மற்றொரு முக்கியமான காரணி இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்சனைகள் ஆகும். நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் புகைபிடித்தல் அல்லது அதிகப்படியான மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற வழிமுறைகளுக்கு பங்களிக்கும். இந்த பழக்கங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, தீவிரமான இதய நோய்களுக்கும் வழிவகுக்கும்.

News18

இரவு உணவுகளை தாமதமாக உட்கொள்வது உயர் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இளைஞர்களின் ஆரோக்கியத்தில் மரபணு முன்கணிப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரபியல் மட்டுமே நேரடியாக இதய நோயை ஏற்படுத்தாது என்றாலும், சிறு வயதிலிருந்தே அதிக கொலஸ்ட்ரால் அளவை ஏற்படுத்தும் குடும்ப ஹைபர்கொலஸ்டிரோலீமியா போன்ற நிலைமைகளுக்கு இளைஞர்கள் தள்ளப்படலாம்.

இத்தகைய மரபணு நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. இருப்பினும் கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் வரும் வரை அவற்றை அடையாளம் காண்பது பெரும்பாலும் அரிதானது.

இளைஞர்களிடையே வழக்கமான சுகாதார பரிசோதனைகள் இல்லாததும் மற்றொரு குறிப்பிடத்தக்க காரணியாகும். பல இளைஞர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை, இது கண்டறியப்படாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனை ஆரம்பத்தில் கண்டறியும் பட்சத்தில் அதன் தாக்கத்தை படிப்படியாக குறைக்க முடியும். வழக்கமான பரிசோதனைகள் ஆபத்தான காரணிகள் மற்றும் நிலைமைகள் மிகவும் கடுமையான செல்வதற்கு முன்பாக அவற்றைக் கண்டறிய உதவும்.

முடிவாக, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதயப் பிரச்சனைகள், வாழ்க்கைமுறைக் காரணிகள், மனநலச் சவால்கள், மரபணு முன்கணிப்புகள் மற்றும் வழக்கமான உடல்நலக் கண்காணிப்பு இல்லாமை போன்றவற்றால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான பிரச்சனையாகும்.சிறுவயதிலிருந்தே இதய ஆரோக்கியத்தை பராமரிக்க இதுகுறித்த கல்வி கற்பிப்பது, இதய பிரச்சனைளை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வாதிடுவது மற்றும் சுகாதார சூழலை உருவாக்குவதற்கான வேலையை மேற்கொள்வது இதயநோய் நிபுணர்களான எங்களது பொறுப்பு.
இந்த காரணிகளை நிவர்த்தி செய்வதன் மூலம், இதயம் தொடர்பான இறப்புகளின் நிகழ்வைக் குறைக்கவும், இளைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை மேம்படுத்தவும் உதவலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சாப்பிட்ட உடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கா... இந்த வார்னிங் உங்களுக்குத் தான்...

 இன்றைய கால கட்டத்தில் டீ , காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். காலை, மாலையில் டீ காபி இடம் பெறாத வீடுகளைப் பார்ப்பது கொஞ்சம் அரிதுதான். கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதல் தீவிர உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் வரை வேலைக்கு இடையே கண்டிப்பாக டீ, காபி தான் அருந்துவதைப் பார்க்க முடியும்.

பலருக்கு டீ அல்லது காபி குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள். குளிர்காலமோ, வெயில் காலமோ டீ கடையில் மட்டும் எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும். மதிய நேரத்தில் கூட பலரும் டீ காபி அருந்தும் பழக்கம் கொண்டு இருக்கிறார்கள்.

இளைஞர்கள் பலரும் தங்களுக்குக் காலை உணவே இந்த டீ தான் என்று சொல்லும் அளவுக்குப் பட்டினி கிடந்தால் கூட மறக்காமல் டீ குடிப்பதைப் பார்க்க முடிகிறது. இப்படி இந்தியர்களின் உணவு கலாசாரத்தில் இந்த சூடான பானங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டன.

டீ மற்றும் காபியில் உள்ள காஃபினை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல என்று பல்வேறு ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் டீ காபி அருந்துபவர்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் (ICMR) புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது துணை அமைப்பான தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) இணைந்து
மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை மேம்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

டீ மற்றும் காபியில் காஃபின் கலந்துள்ளது எனவே இது மத்திய நரம்பு மண்டலத்தையும் உடலியல் சார்பு நிலையையும் தூண்டுகிறது 150 மில்லி கப் காபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டண்ட் காபியில் 50-65 மில்லிகிராமும், டீயில் 30-65 மில்லிகிராம் காஃபினும் உள்ளது நாளொன்றுக்கு 300 மில்லி கிராமிற்கு அதிகமாக காஃபினை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல.
அதேபோல சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குப் பின்பும் டீ, காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பானங்களில் டான்னின்ஸ் உள்ளது. இந்த டான்னின்ஸினால் உணவில் . இருந்து உடலுக்கு இரும்பு சத்துக்கள் உறிஞ்சப்படாமல் தடைப்படும். இதனால் அனீமியா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும்.

அதிகமாகக் காபி, டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் கலக்காத டீ குடிப்பது இரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதோடு, கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்றுப் புற்று நோய் ஆகிய அபாயத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினசரி காலை ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிச்சு பாருங்க.. உடல் ஆரோக்கியத்தை நீங்களே உணருவீங்க..!

 தினசரி காலை நேரத்தில் ஃபிரெஷ்ஷான ஆரஞ்சு பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து பருகுவது உங்கள் காலை டயட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டசத்துக்களை பெற உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

இனிப்பு மற்றும் லேசான புளிப்பு சுவை கொண்ட ஆரஞ்சு ஜூஸை ஒரு கிளாஸ் பருகுவது புத்துணர்ச்சி அளிப்பதோடு நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது மற்றும் உடனடி ஆற்றலை வழங்குகிறது. தவிர இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக கற்களில் இருந்தும் ஆரஞ்சு ஜூஸ் நம்மை பாதுகாக்கும்.

எனினும் கடைகளில் விற்கப்படும் ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகள் மற்றும் பிற கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை வாணி பருகாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவை இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

News18

இயற்கையான மற்றும் ஃபிரெஷ்ஷான ஆரஞ்சு ஜூஸ் பருகுவதால் கிடைக்கும் சில அற்புத நன்மைகள் இங்கே…

- தினசரி காலையில் ஒரு கிளாஸ் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் நமக்கு போதுமான வைட்டமின் சி-யை வழங்கலாம், மேலும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க மற்றும் ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். வைட்டமின் சி நிறைந்துள்ள காரணத்தால் ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு தொற்றுக்களை எதிர்த்து போராடுவதன் மூலமும் காயங்களைக் குணப்படுத்துவதன் மூலமும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

- வழக்கமான அடிப்படையில் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வருவது ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவது மற்றும் HDL கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிப்பதுடன் தொடர்புடையது. இவை இரண்டுமே இதய நோய்க்கான ஆபத்து காரணிகளாகும்.

- 1 கிளாஸ் ஆரஞ்சு ஜூஸில் சுமார் 88% தண்ணீர் உள்ளது, எனவே இந்த ஜூஸ் நம்மி ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். தவிர, இதில் பொட்டாசியம், வைட்டமின்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை உடல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கும்.

- ஆரஞ்சு ஜூஸில் குறிப்பாக pulpy வெரைட்டிகளில் டயட்ரி ஃபைபர் உள்ளது, இது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

- அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஆய்வின்படி, ஆரஞ்சு ஜூஸ் சர்க்கரை அளவை மேம்படுத்தும், இதனால் நம் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் மேலும் இந்த ஜூஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இவை மன அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் விரைவாக ஆற்றலை அளிக்கிறது.

- வழக்கமாக ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் பெரியவர்கள் சிறந்த நினைவாற்றல், விரைவாக பதில் அளிக்கும் தன்மை போன்ற சிறந்த அறிவாற்றல் செயல்பாடுகளை கொண்டிருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் ஆரஞ்சு ஜூஸானது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே போல ஜூஸ்களின் ஊட்டச்சத்து மதிப்பு பழங்களை விட குறைவாக இருக்கும். இதனால் பல வைட்டமின்ஸ் மற்றும் டயட்தி ஃபைபரை இழக்க நேரிடலாம். எனவே பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிட்டால் இன்னும் நல்லது.

- இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது உடலின் இரும்பு உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தும், இது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்தது.

- ஆரஞ்சு பழ ஜூஸில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவாக பராமரிக்க முக்கியமானது.

- ஆரஞ்சு பழ ஜூஸில் உள்ள ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் பிற கலவைகள் உடலில் ஏற்படும் அழற்சி/வீக்கத்தை குறைக்க உதவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

- நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு ஜூஸை விட ஆரஞ்சு பழத்தை அப்படியே சாப்பிட கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆரஞ்சு ஜூஸ் 100-க்கு 66-76 கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது, இது அதிகமாக கருதப்படுகிறது. தவிர ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கும்.

- ஒரு கிளாஸ் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸை பிழியும் போது, ​​நீங்கள் அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டாம், அதன் இயற்கை இனிப்போடு பருகுங்கள்.

- ஜூஸ் ரெடி செய்த உடனேயே பருகுங்கள், ஜூஸை நீண்ட நேரம் வைத்திருப்பது ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும். சில பழ விதைகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் ஜூஸை தயாரிக்கும் போது விதைகளை அகற்றி விடுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip