Search

இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Chargeman பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய கடலோர காவல்படை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:

Chargeman பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Indian Coast Guard வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 6 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

Indian Coast Guard தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Flipkart நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!

 

Flipkart நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!

Flipkart நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Data Scientist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Flipkart பணியிடங்கள்:

Data Scientist பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Scientist கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் B Tech, M Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Scientist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TRB - Assistant Professor - Maths - Algebra Study Materials

 

IMG_20241101_194726

TRB - Assistant Professor - Maths ( Unit 1 ) Algebra Study Materials - 

👇👇👇👇

 Download here

By

Srimaan Coaching Centre 

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம்

 



பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெறும் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெயரை மாற்றிக்கொள்ள முடியும். அரசு கெஜட்டில் உங்கள் பெயர் மாறிவிடும். இதை ஆவணமாக எங்குவேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம்


பிறப்பு சான்றிதழ்களில் தவறுகளை எளிதாக சரி செய்ய முடியும். பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், அந்த பிழையை உடனடியாக திருத்திவிடுவது நல்லது.. இதற்கு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுக வேண்டும்.


நீங்கள் உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று ஒரு மனுவை விஏஓ அல்லது சுகாதார ஆய்வாளரிடம் தரவேண்டும். பிறகு, குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தந்தால் போதும். அவைகளை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தி தருவார்கள். இதை உடனே செய்வது நல்லது.


ஒரு வேளை பெயரை திருத்தாமல் விட்டுவிட்டீர்கள். பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது முழு பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் அதற்கும் வழிகள் உள்ளது. உங்கள் பெயரை அரசாங்க கெஜட்டில் முழுமையாக மாற்றிக்கொள்ள முடியும். www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முழு தகவல்கள் இருக்கிறது. அதனை இப்போது பார்ப்போம்..


பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால் (குழந்தை என்றால்) தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின் கீழ் உறவின் முறையை (Capital Letter-ல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.


மனுதாரர் ஆவணங்களில் சுய சான்றொப்பம் இடவேண்டும். பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.


பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். 5. பெயர் மாற்றக் கட்டணம்: ரூ.750/ மட்டும். இணையதள செலுத்துச்சீட்டு மூலமாக மட்டுமே பிரசுரக் கட்டணம் ஏற்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் Creation / Payment என்ற Tab-யினை தேர்வு செய்து அவற்றில் நட்சத்திரக் குறியிடப்பட்டுள்ள கலங்களில் கோரியுள்ள தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணத்தை வங்கியில் Online / Offline மூலம் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டினை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பவர்களிடமிருந்து பிரசுரக் கட்டணம் வங்கி கேட்பு வரைவோலையாகவோ/காசோலையாகவோ/அஞ்சல்


ஆணையாகவோ/பணவிடைத்தாளாகவோ ஏற்கப்படமாட்டாது. 01-07-2023 முதல் இணையதள செலுத்துச்சீட்டு மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


எனவே விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் Challan Creation | Payment என்ற Tab-யினை தேர்வு செய்து அவற்றில் நட்சத்திரக் குறியிடப்பட்டுள்ள கலங்களில் கோரியுள்ள தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணத்தை உரிய வங்கியில் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டினை தபாலில் பெயர்மாற்ற விண்ணப்ப படிவத்துடன் இணைத்தனுப்புதல் வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி இணையதள செலுத்துச்சீட்டு இத்துறையின் வலைதளத்தில் (www.stationeryprinting.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர் பழைய பெயரில் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவு பெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி இணையதள செலுத்துச்சீட்டு இத்துறையின் வலைதளத்தில் (www.stationeryprinting.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்மாதிரி இணையதள செலுத்துச்சீட்டின்படி சரியாகப் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணம் செலுத்தியவர்களின் செலுத்துச்சீட்டு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


அரசு கிளை அச்சகங்களுக்கான DDO Code கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் அரசு கிளை அச்சகங்களுக்குரிய DDO Code-னை இணையதள செலுத்துச்சீட்டில் சரியாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.


சென்னை (PAO Chennai East) - 43011165

மதுரை (PAO Madurai) - 45010118

சேலம் - 15080031

திருச்சிராப்பள்ளி- 14010018

புதுக்கோட்டை-11010024

விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 02040057



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்

 



முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி தேர்வு பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட உள்ளது. அடுத்த தேர்வு, புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என தெரிகிறது.

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன. 


ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 

பழைய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக முதுகலை ஆசிரியர் தேர்வு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். 


இந்த ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு, ஆகஸ்டில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது. 


அதன்படி, விரைவில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இறுதிசெய்யப்பட உள்ளது. அடுத்த தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Calendar - November 2024

 2024 நவம்பர் மாதம் "ஆசிரியர் டைரி"


01.11.2024 - வெள்ளிக்கிழமை

`அரசு விடுமுறை


09.11.2024 - சனிக்கிழமை

ஈடு செய்யும் வேலை நாள்`

& ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

BEO அலுவலகம்


10.11.2024 - ஞாயிற்றுக்கிழமை

NILP - தேர்வு


11.11.2024 - 20.11.2024

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்


14.11.2024 - வியாழக்கிழமை

ஜவகர்லால் நேரு பிறந்தநாள்

குழந்தைகள் தினம்


15.11.2024 - வெள்ளிக்கிழமை

குருநானக் ஜெயந்தி - RL


16.11.2024 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - DEO அலுவலகம்


19.11.2024 - செவ்வாய்க்கிழமை

3, 6 & 9 NAS - Exam உத்தேச தேதி


23.11.2024 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

CEO அலுவலகம்


29.11.2024 - வெள்ளிக்கிழமை

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்






Click Here to Download - School Calendar - November 2024 - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான லிஸ்ட் ரெடியாகுது! வெளியான அறிவிப்பு!

 



முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டு வருகிகின்றன.

அந்த வகையில் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட முதன்மை  கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2024 டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் விவரங்களையும் மாவட்ட வாரியாக தயார் செய்ய வேண்டும். இதன் பெயர் பட்டியல் மற்றும் கருத்துருக்களை நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது பின்வரும் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.


இளங்கலை மற்றும் முதுகலையில் அந்தந்த பாடத்தில் முதன்மை பாடமும், பிஎட் படிப்பும் படித்திருக்க வேண்டும். வெளிமாநிலச் சான்று எனில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 


2021 ஜன.1-ம் தேதிக்கு பிறகு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை ஆண்டுக்கு தற்காலிகமாக துறந்தவர்கள் மற்றும் ஏற்கெனவே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்களின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் பட்டியலில் இடம்பெறக்கூடாது. இளங்கலை பட்டத்தில் இரட்டை பட்டப்படிப்பு மற்றும் ஒரே ஆண்டில் 2 பட்டங்கள் படித்தவர்களின் பெயரையும் பட்டியலில் சேர்க்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SPD - Kalaithiruvizha 2024 - District Level Competitions - Instructions & Proceedings

 

1 முதல் 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்- சார்ந்து ஒருங்கிணைந்தபள்ளிக்  கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


Click Here to Download - SPD - Kalaithiruvizha 2024 - District Level Competitions Instructions & Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

3 Month's D.A. Arrears and October Salary - ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்

 

மூன்று மாத அகவிலைப்படி நிலுவை மற்றும் அக்டோபர் மாத ஊதியம் குறித்த தகவல்


Information about 3 month's D.A. arrears and October salary 




களஞ்சியம் செயலியில் அவரவர் October மாத Payslip Download செய்து ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும்,


அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான CPS பிடித்தம் மற்றும் வருமானவரி தொகை பிடித்த மாற்றம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.


2024 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையும், அக்டோபர் இம்மாதம் 53℅ அகவிலைப்படியுடன் ஊதியமும் ஒரே தொகையாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது


வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் வரலாம்


 களஞ்சியம் செயலியில் அவரவர் சம்பள பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group