Search

Late bloomers English Module: A Journey for Blooming

 Late bloomers English Module: A Journey for Blooming

👉(Alphabets) Letter sound Relationship 

👉Letter Differentiation. 
👉Consonant letter and sounds -CVC Words – Blending of Words. 
👉Consonant Clusters 
👉Consonant Digraphs
👉Vowel Digraphs. 
👉Four Letter Words (Recalling two letter words, three letter words) 
👉Five Letter Words. (Recalling 2, 3, 4, 5 letter words) 
👉Textbook- content words. 
👉Sentence Reading. 
👉Textbook- Content- Reading Practise

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TN CM Talent Serach Examination Results will be Released Tomorrow (06.11.2024)....

 IMG_20241105_170936

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும் , அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 04.08.2024 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,03,756 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.

இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ .10.000 / - வழங்கப்படும் . இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

எனவே 06.11.2024 அன்று இத்தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியல் இவ்விணையதளத்திலே other Examination → TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது . 

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கூடுதல் அறிவுரைகள் - DSE செயல்முறைகள்!

 IMG_20241105_175403

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கூடுதல் அறிவுரைகள் - DSE செயல்முறைகள்!

☝️☝️☝️

DSE - PG Commerce Panel Instructions - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

1 To 5th FA ( b ) Evaluation Schedule - Term 2

 1 To 5th வளரறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை 2024-25 - Term II

IMG-20241105-WA0022_wm
IMG-20241105-WA0020

IMG-20241105-WA0021

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் புதுமைகளை ஊக்குவிக்க TN AI Mission உருவாக்கம் - அரசாணை வெளியீடு!

IMG_20241106_075921

கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் புதுமைகளை ஊக்குவிக்க தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TN AI Mission) உருவாக்கம் -  அரசாணை வெளியீடு!

G O Ms No 25.pdf - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

"முதல்வர் மருந்தகம்" அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

 முதல்வர் மருந்தகங்களை 2025 ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்கள்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm / D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Tablet - Service Centre Name & Address ( All Districts)

அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கு வணக்கம்... 

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள tablet இக்கான service center name and address அனுப்பப்பட்டுள்ளது.... தேவை உள்ள அனைத்து அரசு தொடக்க நிலை (1 to 5 ) ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து பயன்படுத்திக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது

Click Here to Download - Tablet - Service Centre Name & Address ( All Districts) - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

முதல்-அமைச்சர் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம்

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை வரும் 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடந்த உள்ளார். அதனை முன்னிட்டு எனது தலைமையில் பள்ளிக்கல்வி இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டோம்."

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group