Search

1 to 5th - First Term Exam Sep 2024 - CCE Marks Download - Direct Link Available Now

 



கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தேர்வுக்கான மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 


இந்த லிங்கை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண்களை FA(a), FA(b) மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு SA ஆகியவற்றுக்கான மதிப்பெண்களை ஒரே கோப்பாக பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது


🌺 எண்ணும் எழுத்தும் முதல் பருவ மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்


🌷FA(a)

🌷FA(b)

🌷FA (40 Marks)

🌷SA (60 Marks)

🌷Total Marks

🌷Grade

🌷Students Level


Click Here - EE - First Term Exam Sep 2024 - CCE Marks Download - Direct Link


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

FA(b) - வளரறி மதிப்பீட்டின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 ஒரு நேரத்தில் ஒரு மாணவன்/ மாணவிக்கு மட்டுமே மதிப்பீடு நடத்தவும் மாணவர் பதிலளிக்வகுப்புகள் 1-3

மதிப்பீடு 1: 08-18 நவம்பர் 

மதிப்பீடு 2: 06-13 டிசம்பர்


வகுப்புகள் 4&5

மதிப்பீடு 1: 06-20 நவம்பர்

மதிப்பீடு 2: 04-13 டிசம்பர்


க மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த கேள்விக்கு செல்லவும்.

ஒரு மாணவரை மதிப்பீடு செய்யும் போது பிற மாணவர்களை குழு செயல்பாடு அல்லது பயிற்சி புத்தக செயல்பாடுகளில் ஈடுபடுத்தவும்.


ஆங்கில பாடக் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்தல்அல்லது விடை சார்ந்த குறிப்புகளை தவிர்க்கவும்.


மதிப்பீடு செய்தபிறகு எண்ணும் எழுத்தும் மாணவர் பகிர்ந்த பதிலை மட்டுமே செயலியில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யவும்.


முகப்பு பக்கத்திற்குத் திரும்பவும். இது தரவுகளை சர்வருடன் இணைக்க உதவி செய்யும். பருவம் II வளரறி மதிப்பீட்டிற்கான கால அட்டவணை 2024 -25



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6 - 12th Second Mid-Term Test Time Table & Proceedings

 

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாம் இடைப்பருவத்தேர்வு கால அட்டவணை வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் மாற்றுப்பணி ஆணை வழங்குதல் தொடர்பாக CEO செயல்முறைகள்


Click Here to Download - 6 - 12th Second Mid-Term Test Time Table & Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை

 Local%20holiday

மயிலாடுதுறை மாவட்டம் துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் கரைகளில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். இந்த துலா உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரைகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.


அதன்படி இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாதம் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் வரும் 15-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவ. 23-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Plus Two - Commerce 2nd Mid Term Question Paper ( T/M & E/M )

 Plus Two - Commerce 2nd Mid Term Question Paper ( T/M & E/M )


Plus Two - Commerce 2nd Mid Term Question Paper Nov 2024 - T/M - Download here


Plus Two - Commerce 2nd Mid Term Question Paper Nov 2024 - T/M - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வித்யாலட்சுமி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் - திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

 

images(46)

பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று(நவ. 6) ஒப்புதல் அளித்துள்ளது.


கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாதென்ற நோக்கத்தை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து மாணவர்கள் கடன் பெற உத்தரவாதம் ஏதும் அளிக்கத் தேவையில்லை. தாங்கள் சேர்ந்துள்ள படிப்புக்கு தேவைப்படும் முழு தொகையையும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.


இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களில் சேரும் 7 லட்சம் புதிய மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்துக்காக 2024-25 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்துக்கு ரூ. 3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.


பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் சிறப்பம்சங்கள்:


கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 860 நிறுவனங்களில் சேர்ந்து பயில இடம் கிடைத்தால், மேற்கண்ட மாணவர்கள் இத்திட்டத்தில் கல்விக்கடன் பெற்று பயனடையலாம். அதன்படி, ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர்.


மேற்கண்ட மாணவர்களுக்கு பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், 75 சதவிகித மத்திய அரசின் கடன் உத்தரவாதத்துடன் ரூ. 7.50 லட்சம் கடன் வழங்கப்படும்.


குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை இருக்கும் மாணவர்கள், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ், ரூ. 10 லட்சம் வரை கடன் பெற்றால், 3 சதவிகித வட்டிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த மாணவர்கள் கல்விக்காக அளிக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பிற சலுகைகளைப் பெற முடியாது.


பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தில், மாணவர்கள் எளிமையான முறையில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழுக்க முழுக்க வெளிப்படையான முறையில் கடன் தொகை பெறும் நடைமுறை உள்ளது.


மாணவர்களுக்காக பிரத்யேகமாக டிஜிட்டல் முறையில் கடன் பெறும் வசதியும் உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த தளமான “பிஎம்-வித்யாலட்சுமி” தளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை, விதிமுறைகள், பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை வெளியீடு!

 

IMG_20241106_230636

துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் விவரங்களை ஒருமுறைப் பதிவு நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும் . அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக துறைத்தேர்வுக்கான ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவுடன் இணைக்க வேண்டும் . 

பெயர் , தலைப்பெழுத்து , தகப்பனாரின் பெயர் , பிறந்த தேதி , பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் , முதலில் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் . அதன் பின்னர் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பின்னர் தேர்வுக் குறியீட்டெண் / தேர்வு மையம் / பெயர் / தந்தை பெயர் வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே , விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே துறைத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் . பிற வகைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

 விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் நிராகரிக்கப்படும்.

Departmental Exam Dec-2024 | Syllabus & Time Table👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி: மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு

 1335727

பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை (Fellowship) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலர் ஜி.லட்சுமிபிரியா இன்று (நவ.5) வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், பட்ட மேலாய்வாளர் போன்ற இளம் வல்லுநர்களின் திறமைகளை பயன்படுத்தும் வகையில் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டின் மானியக் கோரிக்கையின்போது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.


தமிழகத்தில் இளைஞர்களின் சமுதாய பங்கேற்பை கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைக்கும் வகையில் பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சிக்காக புத்தாய்வு திட்டத்தை நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்த ரூ.150 கோடிக்கு ஒப்புதல் அளிக்க அரசாணை வெளியிடுமாறு பழங்குடியினர் நல இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பின்படியும், இயக்குநரின் கருத்துருவை ஏற்றும், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் மற்றும் பட்ட மேலாய்வாளருக்கு உதவும் வகையில் தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் உருவாக்கப்பட்டு இத்திட்டத்தை நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்த 1 கோடியே 50 லட்சம் மட்டும் ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.


.


இத்திட்டத்தின் கீழ், இறுதி ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்கள் 25 பேருக்கு 6 மாத காலத்துக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரமும், அதேபோல் முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்கள் 45 பேருக்கு 3 ஆண்டு காலத்துக்கு மாதம்தோறும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை சரிபார்க்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

 1335759

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையானது வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ் தளத்தில் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “தமிழகம் முழுவதும் உள்ள அரசு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் எமிஸ் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை 100 சதவீதம் சரியாக இருப்பதை குறுவள மைய அளவில் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையானது வருகைப் பதிவேட்டுக்கும், எமிஸ் தளத்தில் உள்ள பதிவுக்கும் வித்தியாசம் இருப்பின் உடனே அதை சரி செய்ய வேண்டும்.


அதேபோல், மாணவர்கள் யாரேனும் நீண்டகால விடுப்பில் இருந்து வேறு பள்ளிகளில் சேர்ந்து இருப்பின் சார்ந்த தலைமை ஆசிரியர் அவரை எமிஸ் தளத்தில் பொதுப்பகுதிக்கு (Common Pool) அனுப்பிட வேண்டும். தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு இவற்றை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். மேலும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் எமிஸ் இணையதளத்தில் 100 சதவீதம் சரியாக உள்ளது எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

₹20 இலட்சம் செலவில் பசுமைப் பள்ளித் திட்டம் - நிதிகளை பயன்படுத்துவதில் முன்பு வெளியிடப்பட்ட அரசாணைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!

 
₹20 இலட்சம் செலவில் பசுமைப் பள்ளித் திட்டம் - நிதிகளை பயன்படுத்துவதில் முன்பு வெளியிடப்பட்ட அரசாணைகளில் திருத்தம் செய்து  அரசாணை வெளியீடு!

☝️☝️☝️

G.O.Ms.No.188 - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group