01.10.2024 முதல் 31.12.2024 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!
G.O.Ms.No.325
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
01.10.2024 முதல் 31.12.2024 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!
G.O.Ms.No.325
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவைய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவைய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி பணிகள் தேர்வுக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Local Bank Officer
காலியிடங்கள்: 1,500 (தமிழகத்திற்கு 200 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது)
சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920
வயதுவரம்பு: 13.11.2024 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு பத்து ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மாநில அலுவலக மொழியில் எழுத, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வுக்கான தேதி, இடம் குறித்த விவரம், தேர்வு நுழைவுச் சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் மாநகரங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், நாகர்கோவில், கடலூர், விருதுநகர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175. இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- IV ( தொகுதி- IV பணிகள் ) ன் தேர்வு முடிவுகள் , தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.10.2024 அன்று தேர்வாணைய வெளியிடப்பட்டன.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ( Onscreen Certificate Verification ) மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த தரவரிசை எண் , இட ஒதுக்கீட்டு விதி , காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 07.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட ( 6 ) ஆறு வேலை நாட்களில் இப்பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 09.11.2024 முதல் 21.11.2024 வரை தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறைப் பதிவு பிரிவின் ( One Time Registration Platform ) மூலம் பதிவேற்றம் செய்யலாம் .
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
மத்திய அரசு சார்பில் 10-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி ஐஐடியில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனையைத் தூண்டவும், அறிவியலை சாதாரண மக்களுடன் இணைந்து விஞ்ஞானிகள் கொண்டாடி மகிழவும் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச அறிவியல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவை மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும், மத்திய புவியியல் அமைச்சகமும் இணைந்து நடத்துகின்றன.
அந்த வகையில், 10-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி ஐஐடியில் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொள்கின்றனர்.
இவ்விழாவுக்கான முன்னோட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் இன்று நடந்தது. இதில் அம்மையத்தின் இயக்குநர் என்.ஆனந்தவள்ளி தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக உலக உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை உருவாக்குவது என்ற கருத்தை மையப்படுத்தி இந்த ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் விழா நடத்தப்படுகிறது.
20247-ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். எனவே, அதற்கேற்ப நமது மாணவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யுகத்துக்கு தயார்படுத்த வேண்டும்" என்றார்.
10-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா குறித்து விஞ்ஞான் பாரதி அறிவியல் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கோபால் பார்த்தசாரதி அறிமுகவுரை ஆற்றிப் பேசும்போது, " இந்த அறிவியல் விழாவில், அறிவியல் கிராமம், பெண் சக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஹேக்கத்தான், ஆசிரியர்களுக்கான குருகுலம், விஞ்ஞானிகா, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் என 26 விதமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முழு விவரங்களையும் www.iisf2024.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். பங்கேற்க தேர்வுசெய்யப்படுவோருக்கு தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்” என்றார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், இந்திய சர்வதேச அறிவியல் விழா குறித்து அறிவியல் உரையை நிகழ்த்தினார்.
அப்போது, “2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது இன்றைய மாணவர்கள் கையில் உள்ளது. இதற்கு அவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். ,முன்னதாக, கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி எஸ்.பாஸ்கர் வரவேற்றார். நிறைவாக, முதன்மை விஞ்ஞானி எம்.சரவணன் நன்றி கூறினார்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...
அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத்திற்க்கு.
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மற்றும்
KELTRON HITECH LAB அமைந்துள்ள GHS/GHSS பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள HI TECH LAB - ELECTRIFICATION (மின் இணைப்பு) பணி தொடர்பாக EMIS இல் நாளை EXISTING ELECTRICAL PROVISION என்ற module வந்துவிடும்.
( EMIS login
<school
<infrastructure
>Existing electrical provision )
அதில் 4 கேள்விகள் கேட்கப்படும். 4 கேள்விகளுக்கும் YES/ NO என்று பதிலளிப்பது போல் இருக்கும்.
4 வது கேள்விக்கு மட்டும் No என்று பதில் அளிக்கும் பட்சத்தில் பள்ளியில் உள்ள METER BOX க்கும் HITECH LAB அமையவிருக்கும் இடத்திற்கும் உள்ள DISTANCE METER இல் பதிவிட வேண்டும்.
இந்த நான்கு கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஒரு ELECTRICIAN துணைக் கொண்டு சம்மந்தப்பட்ட பள்ளிகள் EMIS Entry பணியினை இரண்டு நாட்களுக்குள் முடிக்கவேண்டும்.
மேற்கண்ட தகவலினை சம்மந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் AI களுக்கு உடனடியாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படிகிறது.
Schools where Hi-tech labs are going to be established by KELTRON have to fill the following questions with the consultation of local available Electrical Personnel
Availability of 3 Phase supply* - Yes / No
Availability of Plug points with 5 Amps* - Yes / No
Availability of Plug points with 15 Amps* - Yes / No
Availability of 4 Sq. mm wiring* - Yes / No
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Ennum Ezhuthum - Term 2 - ( Unit - 4 ) Lesson Plan
Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 2 - ( Unit - 4 ) Lesson Plan - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
நாளை சனிக்கிழமை 09-11-2024 முழு வேலை நாள்.
இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் , அவர்தம் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள் , பொதுத் துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது , அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 நாளை பணி நாளாகும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Outfit Assistant, Scaffolder பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Outfit Assistant, Scaffolder பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,100/- முதல் ரூ.24,800/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Intern பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
IIITDM காலிப்பணியிடங்கள்:
IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Intern பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Project Intern கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
IIITDM வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Intern ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக (உதவித்தொகை) வழங்கப்படும்.
IIITDM தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 21.11.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
Field Investigator பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Field Investigator கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post graduate / M.Phil./ Ph.D.தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Field Investigator ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் valz2203@pondiuni.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news