Search

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்குதல் - SPD செயல்முறைகள்

 

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்குதல் - SPD செயல்முறைகள் 

பொருள் 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-600006 மாநிலத்திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர்: திருமதி மாஆர்த்திஇஆப., நக.எண்: 1292/ஆ2/நா.மு-26/ஒபக/2024, நாள்:09.11.2024 : 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 20242025 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி தொடங்கும் செயல்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து, 

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும். மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடு: தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர் பொறுப்புகள்: எனவே, 2024 2025 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்குவதற்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிட அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்கக் காணொளி இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. > மாணவர்களுக்கு புதியதாக தொடங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை EMIS இணைய தளத்தில் பதிவிடுதல் வேண்டும். மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்: மின்னஞ்சலை உருவாக்கிய பின், மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது, மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும். > அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சலின் கடவுச் சொல்லை (PASS WORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும் மற்றவர்களுக்கு பகிரக் கூடாது எனவும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் வழிக…

இச்செயல்பாட்டினை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை உயர்தொழில் நுட்ப ஆய்வகத்தினை (Hi.Tech Lab) பயண்படுத்தி மேற்கொள்ளுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட செயல்பாடு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ESIC ஆணையத்தில் ரூ. 2,49,561/-சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

 

ESIC ஆணையத்தில் ரூ. 2,49,561/-சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

Professor, Associate Professor, Assistant Professor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ESIC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC காலிப்பணியிடங்கள்:

Professor, Associate Professor, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 15 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Professor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD, MS, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,49,561/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.11.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

இந்திய விமான நிலைய ஆணையத்தில்(AAI) ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Consultant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

AAI :காலிப்பணியிடங்கள்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Consultant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Consultant கல்வி தகுதி:

E3 / E4 / E5 அளவிலான பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்வையிடவும்.


Junior Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

HAL நிறுவனத்தில் Operator காலிப்பணியிடங்கள் – ரூ.23,000/- மாத ஊதியம் || Diploma தேர்ச்சி போதும்!

 

HAL நிறுவனத்தில் Operator காலிப்பணியிடங்கள் – ரூ.23,000/- மாத ஊதியம் || Diploma தேர்ச்சி போதும்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Diploma Technician, Operator பணிக்கான 57 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

HAL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Diploma Technician, Operator பணிக்கென மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Operator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma / MSc / ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HAL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Operator ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIT Madras-ல் Junior Engineer வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.21,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

IIT Madras-ல் Junior Engineer வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.21,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Engineer பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.21,500/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Engineer பணிக்கென 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Junior Engineer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.21,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆயில் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.70,000/-

 

ஆயில் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.70,000/-

ஆயில் இந்தியா நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. இதில் Geologist பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.70,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Geologist பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. / M.Tech / PhD தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

24 வயது பூர்த்தியான மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 21.11.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு  ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Infra. Technology Specialist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Infra. Technology Specialist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC Group - 2 பணியிடங்கள் அதிகரிப்பு!

 



குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள அரசுப் பணிகளுக்கு பல்வேறு நிலை தேர்வுகளை நடத்தி வருகிறது.


அந்தவகையில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.


குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்களும்


குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.


இந்த பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.


தமிழக முழுவதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 லட்சம் பேர் எழுதினர்.


இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக 213 சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.


முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group