Search

Administrative Instructors / Lab Assistants one day Training - DSE Processing

 IMG_20241113_190348


பள்ளிக்  கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் போட்டித் இரண்டாம் கட்டமாக உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 74 வட்டாரங்களில் ( 14 மாவட்டங்கள் ) விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு ( Administrative Instructors / Lab Assistants ) அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 14.11.2024 அன்று நடைபெறுதல் மூன்றாம் கட்டமாக முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் 21.11.2024 அன்று சார்ந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் பயிற்சி – முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

block level Career Guidance proceedings 11th Nov 2024 - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மகிழ் முற்றம் - HOUSE SYSTEM SCOREBOARD ( pdf )

 

மகிழ் முற்றம் 

 HOUSE SYSTEM SCOREBOARD - Download here

பள்ளிகளை தத்தெடுக்க DIET நிர்வாகத்திற்கு SCERT இயக்குநர் உத்தரவு!

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

 பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சில பள்ளிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் தெரிவு செய்து தத்தெடுத்தல் ( Adoption ) -மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் தொடர்பாக SCERT இயக்குநர் உத்தரவு!

SCERT - School Adoption Proceedings

Download here

மகிழ் முற்றம் விழா ஆவணம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் EMIS PORTALலில் GOOGLE DRIVE LINK யாக UPLOAD செய்யும் வழிமுறை

 EMIS NEW UPDATE மகிழ் முற்றம் விழா ஆவணம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் EMIS PORTALலில் GOOGLE DRIVE LINK யாக UPLOAD செய்யும் வழிமுறை


💁‍♂️Last date for updating Google Drive link on EMIS website is 19/11/2024


https://youtu.be/VMrGz3kH_IQ

Magizh Mutram - House System Launch Agenda

 IMG_20241112_203808

மகிழ் முற்றம் - வீடு அமைப்பு (House System) தொடக்க நிகழ்ச்சி நிரல் 

 Magizh Mutram - House System Launch Agenda - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

‘நம்ம பள்ளி நம்ம ஊரு’ திட்டத்தின் கீழ் ரூ.260 கோடிக்கு பணிகள்: அமைச்சர் தகவல்

 1338564

நம்ம பள்ளி நம்ம ஊரு’ திட்டத்தின் கீழ் ரூ.260 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.


கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மார்டின் குழுமத்தின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய பள்ளிக் கட்டிடத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (நவ.11) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் சுமார் 1.27 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘நம்ம பள்ளி நம்ம ஊரு’ திட்டத்துக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தற்போது இத்திட்டத்தின் நிதி ரூ.380 கோடிக்கு மேல் உள்ளது. இதில் ரூ.260 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 14,109 வகுப்பறை கட்டிடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, 7856 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு ரூ.2,467 கோடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.


கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரூ.171 கோடியில் 141 பள்ளிகளில் உள்ள 754 வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வியையும், சுகாதாரத்தையும் தனது இரண்டு கண்களாக பார்க்கிறார். தமிழ்நாட்டில் சுமார் ரூ.455 கோடியில் 22,931 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 311 பள்ளிகளில் ரூ.19.89 கோடி மதிப்பில் 678 பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ரூ.44,042 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கல்விகுழுத் தலைவர் மாலதி, மண்டலக் குழு தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மார்டின் குழுமம் இயக்குநர் லீமாரோஸ் மார்டின், நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்டின், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் பி.வி.பி.முத்துக்குமார், பள்ளி ஆசிரியர், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி - ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

 

1338562

அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது பெரும்பாலான கல்லூரிகள் சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் (இமெயில்) மூலமாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கு மின்னஞ்சல் முகவரி இருப்பது கட்டாயமாகிறது. இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இமெயில் முகவரியை வகுப்பாசிரியர்கள் உதவியுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


அதன்படி மாணவர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முகவரிகளை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். அதனுடன் மின்னஞ்சலை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்த பணிகளை அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தன்று (14.11.2024) காலையில் நடக்கும் கூட்டத்தில் குழந்தைக்களுக்கு இக்கடிதத்தை வாசித்துக்காட்ட வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

 

.com/

குழந்தைகள் தின விழா வாழ்த்து மடல் – 2024


அன்புத் தம்பி/தங்கையே!

நான் உங்கள் மாவட்ட ஆட்சியர் பேசுகிறேன், நம் மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தை செல்வங்களாகிய உங்களுடன் நேரில் பேசிட ஆவல் ஆனால் அதற்கான அவகாசம் இல்லாத காரணத்தால் இக்கடிதம் மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சிடைகிறேன். இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பு உரிமை, மற்றும் பங்கேற்க்கும் உரிமை உள்ளன,

நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்ற செயல்களை தடுக்கும் வகையில் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்க உள்ளேன்.  குறிப்பாக உன்னை எப்படி உன்னாலே பாதுகாக்க முடியும் என்பது அது. யாராவது உன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக செயல்பட முயற்சித்தால் தொடவிடாதே! எதிர்த்து நில்! சத்தமாக கூச்சலிடு! நிறுத்து எனக்கு பிடிக்கவில்லை! உன்னைப்பற்றி சொல்லிவிடுவேன் என்று தைரியமாக சொல்!! உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடு!!. அப்படி யாரேனும் உன்னிடம் தவறாக நடந்தால் உனக்கு நம்பிக்கைக்குரிய பெற்றோரிடமோ, ஆசிரியிரிடமோ, அல்லது நண்பர்களிடமோ சொல்லி உதவி கேள்! அல்லது உங்களுக்கென்று உதவி செய்ய உருவாக்கப்பட்ட நம் சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற இலவச அவசர தொலைபேசி எண் மூலம் அந்த தகவலை கூறி உதவி கேள், உங்களின் விவரம் ரகசியமாக பாதுகாப்பத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும். குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் மீது சட்ட  ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், அதுமட்டுமல்லாமல் அக்குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்பட்டால் விடுதி வசதியும் ஏற்படுத்தி தரப்படும். குழந்தைகளாகிய நீங்கள் நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்வது  மிக அவசியமான ஒன்றாகும் அதன்படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படுவது,  நடத்த ஏற்பாடு செய்வது,  வற்புறுத்துவது போன்ற செயல்கள் இந்திய குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006 படி தண்டனைக்குரிய செயலாகும் எனவே உங்களை பாதுகாத்துக்கொள்ள இதுப்பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தாலோ இந்த கொடுஞ்செயல் உங்களுக்கு நடக்க இருந்தாலோ குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச அவசர தொலைபேசியான சைல்டு லைன் 1098 க்கு தகவல் தெரிவித்து உதவிக் கேட்கலாம்.

தற்போதைய சூழலில் போதைக்கு அடிமையாகும் நபர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் நீங்கள் எப்பொழுதும் எந்த விதமான போதைக்கும் அடிமையாக கூடாது. போதை "எனக்கு வேண்டாம் நமக்கும் வேண்டாம்" என்ற உறுதியோடு செயல்பட வேண்டும். உங்கள் உடலை உறுதியாக ஆரோக்கியமான வைத்துக்கொள்ள உடல்பயிற்சி செய்யுங்கள். 

 இந்த உலகம் அனைவருக்குமானது எனவே உங்கள் வகுப்பை சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவமிக்க வகுப்பறையாக மேம்படுத்தவேண்டும்.

நம் (மாவட்டத்தின் பெயர்) மாவட்டதில் உங்களுக்காக ஓடோடி வந்து உதவி செய்ய நானும் மற்ற குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அதிகாரிகளும் தயாராகக் இருக்கிறோம் இந்த தகவலை நீங்கள் தவறாமல் உங்களின் நண்பர்களுக்கும் தெரிவிப்பாய் என்று நம்பிகின்றேன். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் மாவட்டத்தை குழுந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலமிக்க மாவட்டமாக உருவாக்கிடுவோம்.


இப்படிக்கு தங்கள் அன்புள்ள

மாவட்ட ஆட்சியர் 




குறிப்பு : இந்த கடிதத்தை அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினத்தன்று (14.11.2024) காலையில் நடக்கும் கூட்டத்தில் குழந்தைக்களுக்கு வாசித்துக்காட்ட வேண்டும் 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது?

 

C6s8uNqMWbtGIHUtv3cq

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) விரைவில் 2025 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆதாரங்களின்படி, சி.பி.எஸ்.இ வாரியம் நவம்பர் 28, 2024 க்குள் அல்லது டிசம்பர் 2024 முதல் வாரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தியரி தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 முதல் தொடங்கும். அதற்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2025 இல் தொடங்கும், மேலும் சி.பி.எஸ்.இ குளிர்காலப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 5 முதல் டிசம்பர் 5, 2024 வரை தொடங்கும். 


2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வது தேர்வு முடிவுகளை வெளியிடும்போது, அடுத்த ஆண்டுக்கான தேர்வு 2025 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் என்று சி.பி.எஸ்.இ வாரியம் உறுதிப்படுத்தியது.


சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை 2025 வெளியான பிறகு, அது சி.பி.எஸ்.இ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது cbse.gov.in இல் வெளியிடப்படும். 


சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்களுக்கு வாரியத் தேர்வுகள் நடத்தப்படும். சி.பி.எஸ்.இ போர்டு தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் 75% வருகைப் பதிவு பெற்றிருக்க வேண்டும்.


சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு முடிவுகள் 2024, முந்தைய கல்வி அமர்வின் போது, பிப்ரவரி 15 முதல் மார்ச் 13, 2024 வரை நடத்தப்பட்டது, முடிவுகள் மே 13, 2024 அன்று வாரியத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group