Search

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

 BAN164887

 தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . அதன்படி , டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . தேர்வு முடிந்ததும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் , அதன்பிறகு ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today

 IMG-20241120-WA0100

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் மகிழ் முற்றம் (வீடு அமைப்பு) இலச்சினை சின்னம் இன்று வெளியீடு

IMG-20241120-WA0097

Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today


 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான "மகிழ் முற்றம்" கையேட்டினை வெளியிட்டார்.

இந்நிகழ்வு குறித்த அமைச்சர் அவர்களின் சமூக வலைதளப் பதிவு


2024 - 2025-ஆம் நிதியாண்டிற்கான @tnschoolsedu மானியக் கோரிக்கையின்போது "மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, 'மகிழ் முற்றம்' திட்டம் செயல்படுத்தப்படும்" என அறிவித்தோம்.


அதனைச் செயல்படுத்தும் விதமாக

உலக குழந்தைகள் தினமான இன்று சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் திட்டத்திற்கான இலச்சினையை(Logo) வெளியிட்டு, கையேட்டினை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தோம்.


>>> கையேடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp groupIMG-20220623-WA0000

Ennum Ezhuthum - Formative  Assessment(b) - Assessment 1 - Extension of time

 ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.


 - TN EE MISSION (1-3)


 நான்கு மற்றும் ஐந்தாம்  வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ - மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.


        -  TN EE MISSION (4-5)

மழை காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பதில்...

 மழை காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், தலைமை ஆசிரியரும் முடிவெடுக்கலாம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் பதில்



"மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது"


சென்னையில் 'மகிழ் முற்றம்' என்ற திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CBSE - 10, பிளஸ் 2 பொதுதேர்வு தேதி அறிவிப்பு.. 2025 பிப்ரவரி 15ல் தொடங்கும் தேர்வுகள்.. விபரம்

 

newproject-2024-11-20t231411-033-1732124659

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறுகிறது.

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 2025ம் ஆண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும், மார்ச் 10ம் தேதி கணிதம், மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு என்பது 2025 பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.


சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை பொறுத்தமட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொழிற்கல்வி பாட ( entrepreneurship exam)தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 21ல் இயற்பியல், 24ம் தேதி புவியியல், 27 வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை மாணவ-மாணவிகள் www.cbse.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.


இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 தேர்வை நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுகள் என்பதும் தேர்வு தேதியில் காலையில் நடக்கும். பெரும்பலான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடக்கும். சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET / JEE வினா - விடை வங்கி நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு!

 IMG_20241121_190453



BC / MBC விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET / JEE வினா - விடை வங்கி நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.85 - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்

 t1-1732165726

மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவியது. மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ள நிலையில், 62 ஆக உயர்த்தப்பட்டதாக இந்தியில் சுற்றறிக்கை பரவியதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. அரசு வெளியிட்ட பதிலில், உண்மைத்தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இதனை 62 ஆக உயர்த்தி இருப்பதாக இந்தி மொழியில் அச்சிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.


அந்த சுற்றறிக்கையில், "மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 2 அதிகரிக்கப்பட்டு, 62 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும். அனுபவமிக்க பணியாளர்கள் கூடுதலாக 2 ஆண்டுகள் சேவை செய்வதன் மூலமாக மத்திய அரசுக்கு உதவ இயலும். இந்த திட்டத்தால் அரசு துறைகளில் காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான செலவும் குறையும். பணியாளர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஓய்வூதியம் பெறுவார்கள் என்பதால், அதற்கான செலவும் அரசுக்கு கணிசமாக குறையும்" என்று கூறப்பட்டிருந்தது.


மேலும் அந்த இந்தி சுற்றறிக்கையில், "இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1998-ம் ஆண்டு 61.4 ஆண்டுகள் ஆக இருந்தது. ஆனால் இது 2024-ம் ஆண்டில் 72.24 ஆண்டுகள் ஆக அதிகரித்திருக்கிறது. இதுவும் மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்" என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத்திய அரசு பணியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சுற்றறிக்கை பறந்த சில மணி நேரத்துக்குள் அது போலியானது என்று கூறி மத்திய அரசு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டிருந்த பதிவில், இந்த "மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. மத்திய அரசு இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. உண்மைத்தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

+1 & +2 அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் வெளியீடு.

 

IMG_20241121_194253

+1 & +2 | Internal Mark Instructions & Guidelines - DGE Proceedings 

2024 - 2025 - ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் – வழங்குதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செயல்முறைகள். 

DGE - Internal mark proceedings +1 and +2 | Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc, PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Guest Faculty ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு BDU-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 25.11.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group