Search

கனமழை எதிரொலி: நாளை (27.11.2024) விடுமுறை அறிவிப்பு.

 கனமழை - நாளை (27.11.2024) விடுமுறை :

நாகை ( பள்ளி,  கல்லூரி )

மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி )

கடலூர் ( பள்ளி,  கல்லூரி )

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு 2024 - 2025

IMG_20241126_094209

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு 2024 - 2025

👇👇👇👇

School Safety Module - Download here



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - இன்று ( 26.11.2024 ) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - இன்று ( 26.11.2024 ) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி



CM Breakfast Scheme - TNSED SCHOOLS செயலியில் UPDATE செய்வதற்கான வழிமுறை

 CM BREAKFAST SCHEME TNSED SCHOOLS APP

முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை


TNSED SCHOOLS செயலியில் UPDATE செய்வதற்கான வழிமுறை

👇👇👇👇

https://youtube.com/shorts/CnLWXUQ0p8Y?feature=share

நவ. 26ல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, நவ. 26ம் தேதி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ed


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசு கணினி சான்றிதழ் தேர்வுமுறையில் மாற்றம்: தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வுகள் புதிதாக சேர்ப்பு

 1340846

அரசு கணினி சான்​றிதழ் தேர்​வு​ முறை​யில் மாற்றம் கொண்டு​வரப்பட உள்ளது. அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்​வுகள் புதிதாக சேர்க்​கப்​பட​உள்ளன. தமிழ்​நாட்​டில் தட்டச்சு, சுருக்​கெழுத்து, கணக்​கியல் தேர்​வு​களும் கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்​றிதழ் தேர்​வும் (Certificate course in Computer on Office Automation) ஆண்டுக்கு 2 முறை (பிப்​ர​வரி, ஆகஸ்ட்) நடத்​தப்​பட்டு வருகின்றன. இத்தொழில்​நுட்ப தேர்​வுகளை மாநில தொழில்​நுட்பக் கல்வி இயக்​ககம் நடத்துகிறது.


தமிழக அரசு துறை​களில் தட்டச்​சர், சுருக்​கெழுத்து தட்டச்சர் பணியில் சேரவும், அதேபோல், தலைமைச் செயலக நிருபர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதவிக்​கும் அரசு கணினி சான்​றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். இருப்​பினும், இந்த பணிகளுக்காக நடத்​தப்​படும் டிஎன்​பிஎஸ்சி போட்​டித் தேர்​வில் இத்தகுதி இல்லாமலும் கலந்​து​கொள்​ளலாம். அதேநேரம் தேர்​வில் தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறும் பட்சத்​தில் தகுதி​காண் பருவத்​துக்​குள் கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும்.


அப்போது​தான் பணிவரன்​முறை செய்​யப்​படும். டிஎன்​பிஎஸ்சி நடத்​தும் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) தேர்வு மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் தேர்​வுக்கு ஆன்லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்கே அரசு கணினி சான்​றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பது குறிப்​பிடத்​தக்​கது. தற்போதைய தேர்​வு​முறை​யின்​படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் அல்லது ஆங்கிலம் தட்டச்சு தேர்​வில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்​றவர்கள் கணினி சான்​றிதழ் தேர்வை எழுதலாம். முதல் தாள் தியரி மற்றும் 2-வது தாள் செய்​முறைத்​தேர்​வுக்கு தலா 100 மதிப்​பெண் வழங்​கப்​படு​கிறது.

இந்நிலை​யில், கணினி சான்​றிதழ் தேர்​வு​முறை​யில் மாற்றம் கொண்டு​வரப்பட உள்ளது. அதன்​படி, தமிழ், மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்​வுகள் புதிதாக சேர்க்​கப்​படு​கின்றன. தேர்​வில் மொத்த தாள்​களின் எண்ணிக்கை 2-லிருந்து 4 ஆக உயர்த்​தப்​படு​கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்​கல்​வித்​துறை செயலர் கே.கோபால் வெளி​யிட்​டுள்ள ஓர் அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தொழில்​நுட்​பக்​கல்வி இயக்​ககத்​தால் நடத்​தப்​படும் கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்​றிதழ் தேர்​வில் புதிய முறையை நடைமுறைப்​படுத்த அரசு அனுமதி அளித்​துள்ளது. இத்தேர்​வுக்கான குறைந்​த​பட்ச கல்வித்​தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தேர்​வில் மொத்தம் 4 தாள்கள் இடம்​பெறும். முதல் தாள் கணினி தொடர்பான கருத்​தியல் (தியரி) தாள். இதற்கு 50 மதிப்​பெண், தேர்வு நேரம் 60 நிமிடங்​கள். 2-வது தாள் ஆங்கில தட்டச்சு தாள் (ஒரு நிமிடத்​தில் 30 வார்த்​தைகள் தட்டச்சு செய்ய வேண்​டும்). இதற்கு 50 மதிப்​பெண். தேர்வு நேரம் 10 நிமிடங்​கள்.

3-வது தாள் தமிழ் தட்டச்சு தாள் (ஒரு நிமிடத்​தில் 30 வார்த்​தைகள் தட்டச்சு செய்ய வேண்​டும்). 50 மதிப்​பெண். தேர்வு நேரம் 10 நிமிடங்​கள். 4-வது தாள் கணினி மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் தொடர்பான செய்​முறைத்​தேர்வு. இதற்கு 50 மதிப்​பெண். தேர்வு நேரம் 60 நிமிடங்​கள். தேர்​வில் தேர்ச்​சிபெற வேண்​டு​மானால் ஒவ்வொரு தாளி​லும் குறைந்​த​பட்சம் 40 சதவீத மதிப்​பெண் பெற வேண்​டும். அதோடு ஒட்டுமொத்த சராசரி மதிப்​பெண் குறைந்​த​பட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தவறான பாதையில் செல்லும் மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளி கல்வித் துறை தகவல்

 தவறான பாதையில் செல்லும் மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் மதுமதி தெரிவித்தார்.


குழந்தைகள் உரிமைகளும் மற்றும் நீங்களும் (CRY) என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளின் கல்விக்கான விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடனம் உட்பட பல்வேறு செயல்பாடுகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது,


அதன்பின்னர் பள்ளிக் கல்வித் துறை செயலர் சோ.மதுமதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி குழந்தைகள் உயர்கல்வி பயில்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் அனைவரும் மேற்படிப்புக்கு செல்ல வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம். இதற்காகவே புதுமைப் பெண், நான் முதல்வன் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்பலனாக தேசியளவில் தமிழகத்தில்தான் உயர்கல்வி செல்லும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஓரிடங்களில் ஆசிரியர் மீதான தாக்குதலை வைத்து பரவலாக உள்ளது என்று கூற முடியாது. தற்போது மட்டுமின்றி எல்லா காலக்கட்டங்களிம் ஒரு சில மாணவர்கள் இதுபோன்ற தவறான செயல்களை செய்கின்றனர். அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு சரிசெய்வது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இன்றைக்கு ஆசிரியர்கள் நிராயுதபாணியாகதான் வேலை செய்து வருகிறார்கள். எனவே, மாணவர்களை அன்பால்தான் ஆசிரியர்கள் அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து மாணவர்களுக்கு போட்டி: வெற்றி பெறுவோர் பிரதமரை சந்திக்க வாய்ப்பு

 வரும் 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தங்களது திட்டங்கள், யோசனைகளை தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுவோர் பிரதமர் முன்பு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.


மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சார்பில் ‘வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்’ என்ற போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் செந்தில்குமார், நாட்டு நலப்பணி திட்டத்தின் மண்டல இயக்குநர் சி.சாமுவேல் செல்லையா, தெற்கு ரயில்வே உதவி விளையாட்டு அதிகாரி வி.தேவராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ‘வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்’ நிகழ்ச்சி போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்கள் யோசனைகள், திட்டங்களை, கருத்துகளை பிரதமர் முன்பாக சொல்வதற்கான வாய்ப்பாக இந்த போட்டிகள் அமையும். என்எஸ்எஸ் மாணவர்கள், கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 15 - 29 வயதுக்கு உட்பட்ட அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம்.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 25-ம் தேதி (இன்று) https://mybharat.gov.in என்ற இணையதளத்தில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஆன்லைன் விநாடி-வினா போட்டி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக 10 தலைப்புகளில் டிஜிட்டல் கட்டுரை போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களில், ஒவ்வொரு தலைப்புக்கும் 100 பேர் என மொத்தம் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் விளக்கக்காட்சி (பிபிடி) தயார் செய்து சென்னையில் நடுவர்கள் முன்பு சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் என 40 பேர் தமிழகம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லியில் 2025 ஜனவரி 11-ம் தேதி நடக்கும் பிபிடி விளக்கவுரை போட்டியில் பங்குபெறுவார்கள்.

அதில் வெற்றி பெறுவோர், சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி முன்பு தங்களது பிபிடிகளை சமர்ப்பித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெற்று பிரதமரை சந்திப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு (District Coordinators) கூறுகள் (Components) ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 

IMG_20241123_184628


மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு (District Coordinators) கூறுகள் (Components) ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

SPD - EMIS Component Allocation Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் (One Health & Climate Hub) நிறுவுதல் - அரசாணை வெளியீடு

 ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் (One Health & Climate Hub) நிறுவுதல் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.385 - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group