Agri Info

Adding Green to your Life

December 28, 2021

இந்த புத்தாண்டை சேமிப்புடன் தொடங்குங்கள் !! அரசின் சிறந்த 12 சேமிப்பு திட்டங்கள் !!

December 28, 2021 0

 இந்தியாவினை பொறுத்தவரையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்புண்டு.

ஏனெனில் ரிஸ்கும் குறைவு, பாதுகாப்பான முதலீடு, வரி சலுகை, எல்லாற்றவற்றிற்கும் மேலாக குறைந்த வருவாயானலும், நிலையான கணிசமாக வருவாய் உண்டு.

இப்படி அரசின் சலுகைகளோடு நல்ல லாபம் தரும் சிறந்த 12 திட்டங்களைப் பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கின்றோம். 



சேமிப்பு எதற்காக? 

உங்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய, உங்கள் தற்போதைய வருமானத்தின் ஒரு பகுதியினை ஒதுக்கி வைப்பது தான் சேமிப்பு. இவ்வாறு சேமிக்கப்படும் சேமிப்பு தொகை, பணவீக்கத்தின் காரணமாக முதலீட்டுக்கே பங்கம் வந்து விடக்கூடாது என்பது தான் அனைத்து முதலீட்டாளர்களின் எண்ணம். அரசின் திட்டங்களில் அந்த ஆபத்து இல்லை. அதோடு ஏற்ற இறக்கமானஏற்ற இறக்கமான பங்குச் சந்தைக்கு பாதிக்கப்படுவதில்லை. ஆக உங்களது பணத்தினை சேமிக்க இது தான் சரியான திட்டம்.


இது பாதுகாப்பான முதலீடு?

 ஆபத்து குறைவாகவே உள்ளதே அப்படின்னா? வருமானமும் குறைவாக இருக்குமோ? என்ற உணர்வும் வேண்டாம். இல்லை. நீங்கள் பங்கு சந்தை போன்ற சற்று ரிஸ்க்கான முதலீடுகளில் முதலீடு செய்வதை விட, அரசின் திட்டங்கள் மிக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உங்களின் மூலதனம் மிக முக்கியம். அதோடு சிறந்த வட்டி விகிதம். ஆக வேறென்ன வேண்டும்.

 

 தன்னார்வ வருங்கால வைப்பு நிதி ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF):



 கணக்கில் உங்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமானால், நீங்கள் உங்களது விருப்பப்படி தன்னார்வ வருங்கால வைப்பு நிதியாக (VPF) பங்களிப்பு செய்யலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தினை திட்டமிட ஒரு சிறந்த அம்சமாக இருக்கின்றது. இந்த திட்டத்திற்கு இணைப்பாக, நிறுவனங்களுடன் இருக்கும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது. இந்த இபிஎஃப்க்கு தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 8.50% ஆகும். . ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உங்களது பிஎஃப் தொகைய வித்ட்ரா செய்தால் அதற்கு வரி உண்டு. அதாவது ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடிக்கும் முன்பு நீங்கள் நிதிகளைத் திரும்ப பெற விரும்பினால், சேமித்த தொகை மற்றும் வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.

 

  பொது வருங்கால வைப்பு நிதி :



 நீண்டகால நோக்கங்களுக்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத சிறந்ததொரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியாது. இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளும் தொடங்கிக் கொள்ள முடியும்.தற்போதைய நிலவரப்படி, வட்டி விகிதம் 7.1 % ஆகும்.

 

 அரசின் தேசிய சேமிப்பு பத்திரம் :



 அரசின் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது. அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 6.8% ஆகும்.


  தேசிய ஓய்வூதிய திட்டம்:


 உங்களது ஓய்வு காலத்தினை சுகமாக கழிக்க அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் தான் சிறந்த திட்டமாக இருக்க முடியும். இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் வந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது. இதில் நீங்கள் 1000, 2000, 5000, என்ற முறையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 18 வயது முதல் 60 வயது வரை இணைந்து கொள்ள முடியும். இதில் வரிச்சலுகை உண்டு.

 

 அஞ்சலக சேமிப்பு திட்டம் :


 தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதோடு தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாய் இருந்தால் கூட போதும். இதன் மூலம் செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.

 

 போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்:


 போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் விலக்கு உண்டு. அதே போல இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. எனினும் வருடத்திற்கு ஒருமுறை தான் வாடிக்கையாளர்களுக்கு பலன் வழங்கப்படுகிறது.


  மாதாந்திர வருமான கணக்கு திட்டம் :

 தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.7 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம். ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

 

அஞ்சலக தொடர் வைப்புக் கணக்கு:



 இது மிகவும் பிரபலமான திட்டம். இன்று வங்கிகளில் காணப்படுகின்ற தொடர்வைப்புக் கணக்கு திட்டங்களுக்கு இதுவே ஒரு முன்னோடி. இந்தத் திட்டத்தில் மாதம் 10 ரூபாய்கூட சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு மாதத்துக்கு வெறும் 50 ரூபாய் செலுத்தி வந்தால், 5 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு வட்டியுடன் சேர்த்து கிடைக்கும்.

 

 அடல் பென்ஷன் யோஜனா :



 மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY). இது கடந்த 2015 - 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. அரசின் இந்த ஓய்வீதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாத வந்துள்ளது எனலாம். அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம்.

 

 சுகன்யா சம்ரிதி யோஜனா:



 மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10வயது வரை எந்த நேரத்திலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2021 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

 

 அரசின் கிசான் விகாஸ் பத்திரம்:

 இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டம் கிசான் விகாஸ் பத்திரம். சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்த திட்டத்தில் சேமிக்கத் தகுதி பெற்றவர்கள் தான். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். மைனர் பெண் அல்லது சிறுவர்களின் பெயரில், அவரது பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் முதலீடு செய்யலாம்.

 

 மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் :

 மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு கால,ம் 5 வருடம். ஆண்டுக்கு 83 % சதவீத லாபத்தினை அளிக்கிறது. இது வயதான காலத்தில் ஒரு பாதுகாப்பினை வழங்குகிறது.

December 27, 2021

சாப்பிட்ட பிறகு 10 நிமிட நடைப்பயிற்சி ஏன் முக்கியம்?

December 27, 2021 0

இந்தியாவில், பலருக்கு தூங்க செல்வதற்கு முன் வாக்கிங் செல்லும் பழக்கம் உள்ளது. பலர் மதிய உணவுக்குப் பிறகும் சிறிது வாக்கிங் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். செரிமானத்தை மேம்படுத்த வேண்டும் என்ர குறிக்கோளுடன் சபபிட்ட பின் வாக்கிங் செல்ல விரும்புகின்றனர்.


நீங்கள் உண்ட பிறகு, உங்கள் உடல் வேலை செய்யத் தொடங்குகிறது. செரிமானத்தின் போது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சபபடுகிறது. செரிமான இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதி சிறுகுடலில் நடைபெறுகிறது. உணவுக்குப் பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றத்திற்கு உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

உங்கள் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த வயிற்றில் ஏற்படும் உப்புசம்,, வாயு மற்றும் அமில தன்மை போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்பு பெரிதளவு குறையும்.  உணவுக்குப் பின் 30 நிமிட நடை, வழக்கமான உடற்பயிற்சியுடன் சேர்ந்து, குடல் செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்பதையும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உணவுக்குப் பிந்தைய வாக்கிங் செரிமானத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வகை-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில், டைப்-2 நீரிழிவு நோயாளிகள், உணவுக்குப் பிறகு நடப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை பெருமளவு குறைகிறது என தெரியவந்துள்ளது

உடல் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது, இது உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும். சாப்பிட்ட பிறகு, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. அதிகரிக்கும் இந்த சர்க்கரையின் அளவை குறைக்க, உடல் இன்சுலினை சுரக்கிறது, இது குளுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் செயல்பாடு பலவீனமகா உள்ளதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த முடியாமல் உள்ளது. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும். உணவுக்குப் பிந்தைய வாக்கிங் காரணமாக, ​​குளுக்கோஸ் உடல் செயல்பாட்டிற்கான ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது.

சாப்பிட்ட உடனேயே நடப்பது அமிலத்தன்மை  மற்றும் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். "உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு 30-45 நிமிட இடைவெளிக்குப் பிறகு நடப்பது மிகவும் சிறந்தது" என்று சிங் கூறுகிறார். உங்கள் உணவுக்குப் பிறகு மிதமான வேகத்தில் நடக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வேகமாக நடப்பது,  செரிமானத்தை பாதித்து, அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

ஆரோக்கிய நன்மைகளுடன், உணவுக்குப் பிந்தைய வாக்கிங் ஒரு நாளைக்கு 10,000  காலடிகள் என்ற அளவினை எட்டவும் உதவும். இத அளவி உடல் பயிற்சி அதிக செய்ய விரும்புவர்கள் நிர்ணயிக்கும் இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் பிட்னஸிற்காகவும் சிறிய வாழ்க்கை முறை மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது.

வயிற்றில் அல்சர் குணமாக இந்த பழத்தை சாப்பிடுங்கள் !!

December 27, 2021 0

 அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப்புண்கள் மிகவும் வலிமிக்கவை. இதில் வயிற்றில் உருவாகும் புண்கள் பெப்டிக் அல்சர் என்றும், சிறுகுடலில் உருவாகும் புண்கள் டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படுகிறது. வயிறு மற்றும் சிறுகுடலில் உருவாவதற்கு காரணம் வயிற்றிற்கு மேலே உள்ள சளியின் அடர்த்தியான லேயர் குறைவது தான். இருப்பினும், ஏற்கனவே சளி லேயர் மெல்லியதாக இருப்பதால், சரியான நேரத்தில் உணவை உண்ணாமல் இருக்கும் போது செரிமான அமிலங்கள் வயிற்றுத் திசுக்களை உண்ண ஆரம்பித்து, அல்சரை உண்டாக்குகின்றன.


ஆய்வுகளானது ஹெலிகோபாக்டர் பைலோரி (எச்.பைலோரி) என்னும் ஒரு பாக்டீரியா தொற்று தான் வயிற்றுப் புண்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகின்றன. எனவே அல்சர் இருக்கும் போது, அதற்கான மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர, ஒரு குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலம் விரைவில் அல்சரை குணப்படுத்தலாம். அதுவும் பழங்களை சாப்பிடுவது இன்னும் நல்லது. ஆகவே அல்சர் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய பழங்கள் என்னவென்பதை இப்போது காண்போம்


ஸ்ட்ராபெர்ரி:


 ஸ்ட்ராபெர்ரி வயிற்றுப் புண்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்

ஆப்பிள்:


 தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் ஆப்பிளில் ஆப்பிளில் எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.

ப்ளூபெர்ரி:


 ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்

முலாம் பழம்:

 முலாம் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சனைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும் முலாம் பழம் உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் 90% நீர் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளதால், இது நெஞ்செரிச்சல் பிரச்சனைகளையும் தடுக்கிறது.

பலாப்பழம்:

 பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. அதோடு இது ஆராக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

சீத்தாப்பழம்:


 சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்

December 26, 2021

நீங்கள் நன்றாக சுவாசிக்க உதவும் 10 உணவுகள் !!! | ஆரோக்கியமான நுரையீரலுக்கான உணவு

December 26, 2021 0

 தற்போது அதிகரித்துவரும் சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியம் குறித்த விவாதங்களில் நுரையீரல் நலன் தற்போது முக்கிய இடத்தை வகிக்கிறது. நீங்கள் புகை பிடிக்காதவர் என்றாலும், பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

இந்தக் கட்டுரையில், நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் சில உணவுகளை நாம் பார்க்கவிருக்கிறோம். இந்த உணவுகள் நுரையீரல் நலனை ஊக்குவிப்பதோடு, காற்று மாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ள, இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

நுரையீரல் நலனுக்கான உணவுகளைப் பற்றி குறிப்பிடும் போது, பின்வரும் நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை சீராக்கும் உணவுகள் ஆகியவற்றை புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுப் பட்டியலில் சேர்க்கலாம். சரி, நுரையீரலை சுத்தப்படுத்தி சுவாசத்தைச் சீராக்கும் இந்த சக்தி வாய்ந்த மற்றும் புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகளை இப்போது பார்க்கலாம்.

மாதுளை:



 மாதுளைப் பழங்கள் உடற்கூறுக்குறைகளை நீக்கவல்லவை. மேலும் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. இதன் சாறு பல்வேறு உடல் நலம் தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

வெங்காயம்:


 வெங்காயம் கொஞ்சம் வாடை உள்ளது தான் மறுப்பதற்கில்லை. ஆனால், இதன் மணம் நுரையீரலை சீராக்குவதில் மிகச்சிறந்த ஒன்று. புகைப்பிடிப்போர் கண்டிப்பாக வெங்காயத்தை உண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூண்டு:

தினமும் பூண்டு சாப்பிடுவது நல்லது. அதன் மூலம் நுரையீரலுக்கு போதுமான அளவு அல்லிசின் கிடைக்கும். இது நுரையீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக்கொன்று நோய்த்தொற்றுகளை குறைக்கும். பூண்டுவை அப்படியே சாப்பிடலாம். உலரவைத்தும், நெருப்பில் சுட்டும் உட்கொள்ளலாம். ஊறுகாய் தயாரித்தும் ருசிக்கலாம். ஆனால் அதிகம் பூண்டு சாப்பிடுவது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.


இஞ்சி:

நுரையீரலில் நச்சுக்கள் படியாமல் இருப்பதற்கு இஞ்சி உட்கொள்வது சிறந்த வழியாகும். இது நுரையீரலில் இருக்கும் மாசுக்களை அகற்றும். காற்றுப்பாதையில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் உதவும். கிரீன் டீயுடன் இஞ்சியையும் சேர்த்து ருசிக்கலாம். இஞ்சியை கொதிக்க வைத்த நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் பருகலாம்.


ஆப்பிள்:



 ஆப்பிள்களில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.

நட்ஸ்:



 வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுக் கேட்டைத் தடுப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான உணவாகும்.

மஞ்சள்:



 மஞ்சளில் காணப்படும் கர்குமின் எனப்படும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அழிப்பதுடன் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதையும் தடுக்கிறது.

கேரட்:



 கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் ஒரு ஆச்சரியமான முறையில் உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன.

பச்சை இலை காய்கறிகள்:



பச்சை இலை காய்கறிகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை எளிதாக சமைத்துவிடலாம்.

சிட்ரஸ் பழங்கள்:



ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இவை சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி, சுவாசத்தை மேம்படுத்தக்கூடியவை. இவற்றை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது ஜூஸாகவோ தயாரித்து சுவைக்கலாம்.

நுரையீரலை வலுப்படுத்த சுவாசப் பயிற்சிகள் !! மழை காலம், குளிர்காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி

December 26, 2021 0

 குளிர், மழை காலத்திலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து விடுங்கள். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சிறிய முத்திரை, யோகா, மூச்சுப்பயிற்சி செய்துவிடுங்கள். உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.

பிராணயாமா என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.

பிராணயாமா என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.


உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிராணயாமாவால் கிடைக்கும் உடல் நல பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்

பிராணயாமா பயிற்சியால் கிடைக்கும் உடல் நல பயன்களில் சைனஸ் பிரச்சனையை எதிர்த்து போராடுவதும் முக்கியமான ஒரு பயனாகும். சைனஸ் பிரச்சனையை தவிர்க்க அல்லது சிகிச்சை அளிக்க பாஸ்ட்ரிகா என்ற பிராணயாமா வழிமுறையை பயிற்சி செய்யுங்கள். அதனை முயற்சி செய்து உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். வலது கை பெருவிரலால் வலது நாசியில் அடைக்கவும். இடது மூக்கு துவாரத்தின் வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.


பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

பின் வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை மெதுவாக இழுக்கவும். உடன் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை மெதுவாக வெளிவிடவும். பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.

பின் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து, வலது நாசியில் மூச்சை மெதுவாக இழுத்து உடன் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.




December 25, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உங்கள் வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய 5 தாவரங்கள்

December 25, 2021 0

குளிர்காலத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?

December 25, 2021 0

மூட்டுவலிக்கான மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு குளிர்காலத்தை அனுபவிக்கவும். கீல்வாதம் காரணமாக உங்கள் மூட்டுகளில் தீவிர அசௌகரியத்தை நீங்கள் எதிர்கொண்டால், எலும்பு மற்றும் மூட்டுக்கான நிபுணர்களை அணுகவும்தினை வகைகளில் நார்ச்சத்தும், அமினோ அமிலமும் நிறைந்துள்ளது. குர்செடின் எனும் சேர்மமும் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் இது மூட்டு வலியை குறைத்து உடலை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்க உதவும். தினை வகைகளில் ராகியை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


நெய்:
இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை மூட்டு விறைப்படைவதை குறைக்க உதவுகிறது. மற்றும் மூட்டுகளில் உராய்வு மற்றும் வீக்கத்தை தணிக்க உதவுகிறது.

நட்ஸ் வகைகள்:



பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் இது உதவும். மேலும் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் துணை புரியும்.

பச்சை இலை காய்கறிகள்:

குளிர்காலத்தில் பச்சை இலைக் காய்கறிகள் எளிதாகக் கிடைக்கும். அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தவை. அவற்றில் சல்போராபேன் உள்ளது. இது எலும்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. பச்சை இலை காய்கறிகளை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது நல்லது. சூப்பாக தயாரித்தும் உட்கொள்ளலாம். அது எளிதில் உடலில் உறிஞ்சப்படும்.

எலும்பு சூப்:


ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் எலும்பு பகுதிகளை வேக வைத்து சூப்பாக தயாரித்தும் பருகலாம். இந்த எலும்பு சூப்பில் தாதுக்கள், குளுக்கோசமைன் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும்.

இஞ்சி - பூண்டு:

மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் கிருமி நாசினியாக இவை அறியப்படுகின்றன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டிருக்கின்றன. இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து உணவில் பயன்படுத்தலாம். இஞ்சி டீ பருகலாம்.



December 21, 2021

தக்கலியை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? விலை அதிகரிக்கும் தக்காளி...

December 21, 2021 0

அதிக விலை கொடுத்து தக்காளியை வாங்கி சமைப்பது, பொருளாதார ரீதியாக பலருக்கு சுமையாக இருக்கும். தக்காளியை சிக்கனமாகப் பயன்படுத்தி சமைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம். 

 தினசரி சமையலில் தவறாமல் இடம்பிடிப்பது தக்காளி. இதைக் கொண்டு தக்காளி சாதம், சூப், சட்னி, குழம்பு, குருமா என விதவிதமாக சமைக்கலாம். மழைக் காலங்களில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது இயல்பானது. மற்ற காய்கறிகளை விட தக்காளியின் விலை பல மடங்கு உயரும் என்பது தான் இல்லத்தரசிகளைக் கவலைக்கு உள்ளாக்குவது.


தக்காளிக்கு இணையான புளிப்புச் சுவையைக் கொண்டது எலுமிச்சம்பழம். தக்காளி ரசத்தில் 2 அல்லது 3 தக்காளிகள் போடுவதற்கு பதிலாக, ஒரு தக்காளி மட்டும் பயன்படுத்தி ரசத்தை தயார் செய்யலாம். அடுப்பில் இருந்து இறக்கி வைத்த பின்பு, நீங்கள் விரும்பும் புளிப்பு சுவைக்கு ஏற்ப எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் கலந்தால் போதுமானது. ரசம் சுவையாக இருப்பதோடு தக்காளியின் பயன்பாடும் சிக்கனமான வகையில் இருக்கும்.



தக்காளி குழம்பு வைக்கும் போது, சின்ன வெங்காயத்தை சற்றே கூடுதலாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் 2 தக்காளிகளைக் கொண்டே குழம்பின் சுவை மாறாமல் தயாரிக்கலாம்.


தக்காளி சேர்க்காத குழம்பு வகைகளான கறிவேப்பிலை குழம்பு, வறுத்து அரைத்த குழம்பு, பருப்பு குழம்பு, வற்றல் குழம்பு போன்றவற்றை தயார் செய்வதன் மூலம் தக்காளியின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.


தக்காளிக்கு பதிலாக, மஞ்சள் பூசணிக்காயை வேகவைத்து மசித்து கலந்தால், சரியான பதத்தில் குழம்பு தயாரிக்கலாம். தக்காளிக்கு மாற்றாக புளியைப் பயன்படுத்தி புளி சட்னி, புளிக் குழம்பு, புளி சாதம் போன்றவற்றை அவ்வப்போது செய்யலாம்.



புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி ஆகியவற்றை செய்வதன் மூலம் தக்காளியின் தேவையைத் தவிர்க்கலாம். கீரை வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதன் மூலம், தக்காளியின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். மதிய உணவில் கீரை சமைப்பது சிறந்ததாக இருக்கும்.


தக்காளியின் விலை குறைவாக கிடைக்கும்போது வாங்கி, சுத்தப்படுத்தி, வேகவைத்து அரைத்து குளிர்சாதனப் பெட்டியில் உறைய வைக்கலாம். தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு இந்த 7 உணவுகளை சாப்பிடுங்கள் !!

December 21, 2021 0

 சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதற்கு போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் என்வென்று அறிந்து கொள்ளலாம்.



உடலில் உள்ள நச்சுக்கள், கழிவு பொருட்களை வெளியேற்றுவதில் சிறுநீரகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் மேற்கொள்கிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படுவதற்கு போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. உடலில் உள்ள கழிவுகளில் பெரும்பகுதி சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுவதால் அதன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரகங்களில் நச்சுகள் படிந்து நோய்தொற்று ஏற்படக் கூடும். அதன் காரணமாக சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகி ஒட்டுமொத்த உடல் இயக்கமும் தடை பட்டுவிடும்.


ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு சாப்பிட வேண்டிய7 உணவுகள்:

1. ஆப்பிள்

சிறுநீரகங்களைப் பாதுகாக்க ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிளில் உள்ள அதிக பெக்டின் உள்ளடக்கம் சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவுகிறது.

2. பெர்ரி

பெர்ரி ஆக்ஸிஜனேற்ற மற்றும் பயனுள்ள ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். ஸ்ட்ராபெர்ரி,  போன்ற சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல பெர்ரிகளை உணவில் சேர்க்கலாம்.

செர்ரி பழ வகைகளை சாப்பிட்டு வருவதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் செர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறைய தொடங்கும். இதனை உலர்ந்த பழமாகவும் உட்கொள்ளலாம். சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும்.

3. சிட்ரஸ் பழங்கள்

உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வைட்டமின் சி அதிகமாக இருந்தால் நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் இந்த முக்கிய வைட்டமின் ஏராளமாக உள்ளது. டி.கே பப்ளிகேஷன்ஸின் ஹீலிங் ஃபுட்ஸ் என்ற புத்தகத்தின்படி, "தினமும் நீர்த்த எலுமிச்சை சாற்றை உட்கொள்வது கல் உருவாவதைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது."  எலுமிச்சை, ஆரஞ்சு, முலாம் பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனை ஜூஸாக பருகிவந்தால் சிறுநீரகத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சிறுநீரக கற்கள் படியாமலும் பாதுகாக்கலாம். இவற்றில் ஏதாவது ஒரு ஜூஸை தினமும் பருகுவது நல்லது. உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் பருக வேண்டும்.

4. முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் இயற்கையாகவே சோடியம் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயைத் தடுக்கும் ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது. இது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான பல பயனுள்ள கலவைகள் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ளது. முட்டைக்கோஸ் சாப்பிடுவதற்கான சிறந்த வழி, அதை லேசாக சமைக்க வேண்டும், இதனால் அதன் ஆரோக்கிய நன்மைகளைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

5. சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவு, நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடுவதற்கு சிறந்தது. அவற்றின் அதிக நார்ச்சத்து மேலும் மெதுவாக உடைந்து, எடையைக் குறைக்கவும் ஏற்றதாக அமைகிறது.

6.  கீரை 

கீரைவகைகளையும் தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட், வைட்டமின், தாதுக்கள் போன்றவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுத்துவிடும்.


7. காலிஃபிளவர்



காலிஃபிளவர் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்ட ஒரு பவர் பேக் செய்யப்பட்ட காய்கறி ஆகும். சிறுநீரகத்திற்கான அதிகபட்ச ஆரோக்கிய நலன்களுக்காக இதை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா என்டி கூறுகையில், நீர் நிறைந்த உணவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். செலரி, கக்கடி, வெள்ளரிக்காய், சுரைக்காய் மற்றும் தர்பூசணி ஆகியவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் ஷில்பா அரோரா. நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் மற்றொரு பானம் தேங்காய் நீர். "தேங்காய் நீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரகங்களுக்கு மிகவும் குணமளிக்கிறது மற்றும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது," என்று அரோரா கூறுகிறார். 



குறிப்பு: ஆலோசனை உட்பட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. தகுதி வாய்ந்த மருத்துவக் கருத்துக்கு இது எந்த வகையிலும் மாற்றாக இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் சொந்த மருத்துவரை அணுகவும்.

December 20, 2021

குறைந்த கலோரி காய்கறிகள்: உங்கள் எடை இழப்பு உணவில் சேர்க்க 10 சிறந்த சத்தான குறைந்த கலோரி காய்கறிகள்!!

December 20, 2021 0

 எந்த ஆரோக்கியமான உணவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் இல்லாமல் முழுமையடையாது, இது நமது அன்றாட உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மிகவும் தேவையான அளவு சேர்க்கிறது. குறிப்பாக அனைத்து குறைந்த கலோரி உணவுகளுக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் முற்றிலும் அவசியம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா அல்லது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நிலைகளை சமாளிக்க உடல் எடையை குறைக்க விரும்பினாலும், குறைந்த கலோரி கொண்ட காய்கறிகளை உங்கள் உணவில் சேர்ப்பது மற்றும் பதப்படுத்தப்பட்ட  இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தானியங்களை உட்கொள்வதைக் குறைப்பது ஆகியவை ஒன்றாக இருக்கலாம்.

அனைத்து கலோரி-கட்டுப்படுத்தப்பட்ட உணவுகளிலும் காய்கறிகள் நிறைந்திருக்க வேண்டும், ஏனெனில் புதிய காய்கறிகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சீராக வழங்குவதை உறுதிசெய்யும், மேலும் நீங்கள் நீண்ட நேரம் பசியின்மையால் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்யும். 

அமெரிக்க உணவு வழிகாட்டுதல்களின்படி, ஒருவர் ஆரோக்கியமாக இருக்கவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் தினமும் இரண்டிலிருந்து இரண்டரை கப் காய்கறிகளை சாப்பிட வேண்டும். 

தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பகுதியை அதிகரிப்பது இதய நோய்கள் உட்பட பல நோய்களின் அபாயங்களைக் குறைக்கும் என்று வளர்ந்து வரும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில் காய்கறிகளில் சோடியம், சர்க்கரை, கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. ஆனால் எடை இழப்புக்கு அவை எது பயனுள்ளதாக இருக்கும்.

எடை இழப்புக்கான சிறந்த குறைந்த கலோரி காய்கறிகள் பழங்கள் உட்பட மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது, ​​பெரும்பாலான காய்கறிகளில் கலோரிகள் குறைவு. ஏனென்றால் அவை இயற்கையான சர்க்கரைகள், சோடியம் மற்றும் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. நீங்கள் குறைந்த கலோரி உணவில் இருந்தால், ஆரோக்கியமான வழியில் விரைவான முடிவுகளைப் பெற விரும்பினால், உங்கள் உணவில் பின்வரும் சிறந்த குறைந்த கலோரி காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்:

1. ப்ரோக்கோலி:



 மிகவும் விரும்பப்படும் குறைந்த கலோரி காய்கறிகளில் ஒன்றாகும், ப்ரோக்கோலி சைவ உணவுகளில் ஏராளமாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எந்த இறைச்சி புரதத்துடன் கூட வழங்கப்படுகிறது. க்ரூசிஃபெரஸ் காய்கறியில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் 100 கிராமுக்கு வெறும் 34 கலோரிகள் (USDA தரவுகளின்படி), அதிக அளவு வைட்டமின் சி மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது.

 2. காலிஃபிளவர்:



 குறைந்த கலோரி உணவில் உட்கொள்ளக்கூடிய மற்றொரு  காய்கறி, கெட்டோஜெனிக் உணவு போன்ற குறைந்த கார்ப் உணவுகளில் காலிஃபிளவர் நம்பமுடியாத அளவிற்கு பிரபலமானது. நல்ல அளவு பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி. ஆகியவற்றுடன், காய்கறியில் 100 கிராம் பகுதிக்கு 25 கலோரிகள் மட்டுமே உள்ளன (USDA தரவுகளின்படி). 

 3.முட்டைக்கோஸ்: 



 மகாலிஃபிளவரில் உள்ள அதே அளவு கலோரிகள் மற்றும் முந்தையதை விட நார்ச்சத்து சற்று அதிகமாக உள்ளது. முட்டைக்கோஸை சூப்கள், குழம்புகள் செய்ய சமைக்கலாம் மற்றும் சாண்ட்விச்கள் மற்றும் சாலட்களில் கூட சேர்க்கலாம்.

 4. கேரட் :



 இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் சிறந்த எதிர்மறை கலோரிக் காய்கறிகளில் ஒன்றான கேரட் அல்லது கஜார் ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது, மேலும் சப்ஜிகள் முதல் சூப்கள் வரை ஹல்வாக்கள், பர்ஃபிகள் என எதையும் மாற்றலாம். இதை பச்சையாகவும்/அல்லது உண்ணலாம். சாலட்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 100 கிராமுக்கு 41 கலோரிகள் மட்டுமே உள்ளன (USDA தரவுப்படி). இதில் மிகக் குறைவான கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால், நல்ல அளவு வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் மற்றும் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. 

 5. பலாக்கீரை:



 மிகவும் சத்தான இலை பச்சை காய்கறிகளில் ஒன்றான கீரை எந்த உணவிலும் ஆரோக்கியமான கூடுதலாகும். கீரையில் 100 கிராம் பகுதிக்கு 23 கலோரிகள் மட்டுமே உள்ளன (USDA தரவுகளின்படி) மற்றும் சாலடுகள், சூப்கள், பாஸ்தாக்கள் மற்றும் ஸ்மூத்திகளாகவும் சமைக்கலாம். இதில் புரதம் மற்றும் இரும்புச் சத்தும், முக்கியமான பி வைட்டமின்களும் உள்ளன.

 6. வெள்ளரிக்காய் :


 வெள்ளரிக்காய் பெரும்பாலும் தண்ணீரைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சிறந்த குறைந்த கலோரி காய்கறிகளில் ஒன்றாகும். இது 100 கிராம் (USDA தரவுகளின்படி) ஒரு சிறிய 15 கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் சாலடுகள் அல்லது சாண்ட்விச்கள் வடிவில் உங்கள் உணவில் எளிதாகச் சேர்க்கலாம். இதில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது மற்றும் கோடைக்காலத்தில் சாப்பிடுவதற்கு குறிப்பாக ஆரோக்கியமானது. 

 7. சுரைக்காய்:


 சுரைக்காய் மற்றொரு இந்திய விருப்பமாகும், இது நம்பமுடியாத அளவிற்கு கலோரிகள் மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது. இதில் 100 கிராமுக்கு வெறும் 15 கலோரிகள் (USDA தரவுகளின்படி), கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை, அத்துடன் மிகக் குறைவான சோடியம் உள்ளடக்கம் உள்ளது. 

 8. காளான் :



 தொழில்நுட்ப ரீதியாக காளான்கள் ஒரு பூஞ்சை என்றாலும், அவை காய்கறிகளின் முறையில் சமைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன, மேலும் அவை மிகவும் சத்தானதாக கருதப்படுகின்றன. காளான்கள் ஒவ்வொரு 100 கிராம் பகுதியிலும் வெறும் 22 கலோரிகளைக் கொண்டிருக்கின்றன (USDA தரவுகளின்படி), இதயத்தைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான ஒரு கனிமமான பொட்டாசியம் மிகச் சிறந்த அளவில் உள்ளது. காளானில் நல்ல நார்ச்சத்தும் உள்ளது. 

 9. கேப்சிகம்:  



 குறைந்த கலோரி காய்கறிகள் வரும்போது கேப்சிகம்  குறைத்து மதிப்பிடப்படுகிறது. 100 கிராம் கேப்சிகத்தின் ஒரு பகுதி வெறும் 20 கலோரிகளைக் கொண்டுள்ளது (USDA தரவுகளின்படி)! அதே பகுதியில் அதிக அளவு வைட்டமின் சி. உடன் கிட்டத்தட்ட 5 கிராம் அல்லது நார்ச்சத்து உள்ளது.

 10.லெட்டூஸ் கீரை:



 இந்த சுவையான, மொறுமொறுப்பான இலை காய்கறி சாலடுகள் மற்றும் சாண்ட்விச்களில் சேர்க்கப்படுகிறது. கீரையில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது மற்றும் 100 கிராம் பகுதியில் வெறும் 15 கலோரிகள் உள்ளன (USDA தரவுப்படி)!

 

உடற்பயிற்சிகள் (அல்லது உடற்பயிற்சி) மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே எடை இழப்பை ஆரோக்கியமான முறையில் அடைய முடியும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.


குறிப்பு : ஆலோசனை உட்பட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. தகுதி வாய்ந்த மருத்துவக் கருத்துக்கு இது எந்த வகையிலும் மாற்றாக இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் சொந்த மருத்துவரை அணுகவும்.